08 April 2009

எங்கம்மா போற................

இந்த 10 வயதுக்குள், நம்ம கண்ணுல மண்ண தூவிட்டு இந்த அம்மாக்கள் எல்லாம் வெளியில போறது, அதான் சினிமாவோ, இல்ல வேற எங்கயாச்சோ, குறைந்த பட்சம் ஏதாவது அக்கம் பக்கத்துல நடக்கும் சின்ன விழாக்களுக்கு போனா கூட நமக்கு தெரிய வந்திடுச்சின்னு வெச்சிக்கோங்க.கதை கந்தலோ கந்தல்.

அம்மா வெளிய கிளம்பும் ஆயத்தம் அவரின் செயலிலும்,பேச்சிலுமே தெரிந்துவிடும். மக்கு அம்மா.......... சமையல் சீக்கிரமா முடிப்பது, அடிக்கடி எதிர்த்த வீட்டிலோ, பக்கத்து வீட்டுக்காரவுங்க வீட்டுக்குப் போய்
இல்ல அவங்க நம்ம வீட்டுக்கு வந்து ஏதாச்சும் குசுகுசுன்னு பேசுவது. நம்மள படி, படி ந்னு நச்சரிப்பது, இல்லனா அன்னைக்குன்னு பார்த்து ஒரு நாலணா, எட்டணா கொடுத்து நாம கேட்காததெல்லாம்
வாங்கிக்கோ, வாங்கிக்கோ என்று அதிக பிரியத்தை வெளிப்படுத்துவது இப்படியென.

நமக்கா, நல்லா புரிஞ்சிடும், ஆஹா, அம்மா எங்கயோ போறாங்க, அம்மா, எங்கம்மா, வெளிய போறியா, அவுங்க வந்திருந்தாங்களே அவுங்க வீட்டுக்கா, இல்ல இவுங்க வந்திருந்தாங்களே இவுங்க கூடவா போற. ஒரு முக மாற்றத்தோடு, இல்லை பல்லை கடித்துக்கொண்டோ, ம், டாக்டர் வீட்டுக்கு போறோம், அந்தக்கா வந்தாங்க இல்ல, அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம், அவுங்கள கூட்டிக்கிட்டு போகனும், பாரு அவுங்க கூட அவுங்க பொண்ண வீட்டுல விட்டுட்டுதான் போறாங்களாம். நீயும், அந்தப் பொண்ணோட வெளையாடிக்கிட்டு இரு. நாமோ நேரங்காலம் தெரியாமல், நீதான் சொல்லுவியே அடிக்கடி, அந்தப் பொண்ணு கூட சேரக்கூடாது, இப்ப மட்டும், அந்தப் பொண்ணோட இரு அப்டின்னு. இதுவரைக்கு இருந்த சாதாப் பார்வை அப்படியே அக்னிப் பார்வையா மாறும். இந்த நொட்டை கேள்வியெல்லாம் கேளு, படிக்காத, மாசமானா வாங்கிட்டு வா, 20, 30 ந்னு (மார்க்).. நம்மளை ஆஃப் பண்ண பயன்படுத்தும் ஆயுதம். அப்படியே அடக்கி வாசிப்போம், ஆனால் அவர்களைச் சுற்றி சுற்றியே பார்வை போகும்.

அப்புறம் அந்தக்கா வரும், முகமெல்லாம் பவுடர் அப்பிக்கொண்டும், புதுசா புடவை உடுத்திக்கொண்டு, உள்ளே குரல் கொடுக்கும், க்கா, நான் போய்கிட்டே இருக்கேன், வந்துடறியா, உள்ளருந்து ஏதாவது சைகை வந்திருக்க வேண்டும். வெளியிலிருக்கும் நமக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே டாக்டர் வீட்டுக்குத்தான......................,, தோ, நானும் புடவை மாத்திக்கிட்டு வர்ரேன், நீ உன் பொண்ண வீட்டுல தான விட்டுட்டு வர, நானும் இவள விட்டுட்டு தான் வரன். நீ முன்னாடி போய்கிட்டு இரு. குரல் அழுத்தமாய் கேட்கும். இங்கே நமக்கோ இது எல்லாமோ வெட்ட வெளிச்சமாய் புரிபடும், போவது டாக்டர் வீட்டுக்கில்லை, வேறெங்கோ என்று. குரலை உயர்த்தி உயர்த்தி பேசிய இருவரும், சில சமயம் கிசுகிசுப்பார்கள். இன்னார் முன்னாடியே போயாச்சு என்று. சரி நீ போ, நான் வரேன். அம்மா புடவை கட்டி, வெளிய வந்து, நம்மகிட்ட, படிச்சிகிட்டிரு, அம்மா வந்துடறேன். ம்ஹூம், கண்ணில் நீர் முட்டிக்கொண்டு ம்மா, எங்கம்மா போற.

கோபத்தில், இதெல்லாம் நல்லாத் தெரியும், போகும்போது அழுதுகிட்டு, எங்கம்மா போறியாம், எங்கம்மா போற.. போறேன் சீமைக்கு என்று தொடர்ச்சியாக வசவுகள் என்று காலை செருப்பில் மாட்டும்போது,
ஓங்காரமாய் அழுது ஆகாத்தியம் பண்ணி, முதுகில் ரெண்டு வாங்கி, தலையை மேல்படியாகவே வாரிக்கொண்டு, வீட்டுக்கு போட்டுக்கொண்டிருக்கும் கவுனோடவே இழுத்துக்கொண்டு போவார்கள்.
அம்மாவின் வாயில் வசவு வழியெல்லாம் விழுந்துக்கொண்டே வரும், நமக்கோ வெளியில் செல்வதை சாதித்த புன்னகை, அழுகையூடே.

23 comments:

Unknown said...

உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு
முகுந்த்நாகராஜன்(veenaapponavan.blogspot.com) கவிதை ஞாபகம்
வந்தது.


தலைப்பு:பிரிவைக் குறித்து

கதவு
பிரிவைக் குறிக்கிறது
குழந்தைக்கு.
கதவு அருகே போனாலே
அழ ஆரம்பித்து விடுகிறது.
அதனால் தினமும்
சுவர் வழியாக வெளியேறி
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.

உங்கள் பதிவில் அம்மா சுவர் எகிறி குதித்து ஒசைப் படாமல் போக முடியாமல் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

Raju said...

தன் வினை தன்னைச் சுடும் அக்கா!
என்ன சுடுதா?

வல்லிசிம்ஹன் said...

ஆ....அமித்து அம்மா. இப்படி ஒரு சொரூபமா உங்களுக்கு உள்ள.சாமீ.

நானும் அடம் பிடிச்ச்சிருக்கேன்.. ஆனா. நடக்காது. அம்ம்மா ஏன்னை விட்ட்டுட்டு சினிமாவே போக மாட்டாங்க்கா.ஒரே ஒரு தரம் அவங்க சினேகிதியோடப் போனதுக்கு மூணு நாள் மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருந்தேன்.
எப்போ 14 வயசில:)


அருமையா இருந்ததுப்பா.

எம்.எம்.அப்துல்லா said...

நல்லாருக்கு கொழந்த.

:)

Vidhya Chandrasekaran said...

எங்கம்மா என்னை விட்டுட்டு போகமாட்டாங்க. போனதா நினைவேயில்லை:)

Sasirekha Ramachandran said...

//நமக்கோ வெளியில் செல்வதை சாதித்த புன்னகை, அழுகையூடே.//


இந்த சீன் ஐ கற்பனை பண்ணி பார்த்தால் அடடா..........செம comedya இருக்கு!!

சந்தனமுல்லை said...

சினிமாக்குத்தானே..;-) இல்ல ஷாப்பிங்கா?!!

நட்புடன் ஜமால் said...

\\படிக்காத, மாசமானா வாங்கிட்டு வா, 20, 30 ந்னு (மார்க்).. நம்மளை ஆஃப் பண்ண பயன்படுத்தும் ஆயுதம். அப்படியே அடக்கி வாசிப்போம்\\

எதார்த்தம்.

குடுகுடுப்பை said...

ஒரே பெண்கள் புராணமா இருக்கே, இங்கே ஆண்கள் பின்னூட்டம் போடலாமா?

நட்புடன் ஜமால் said...

\\நமக்கோ வெளியில் செல்வதை சாதித்த புன்னகை, அழுகையூடே.\\

ஆஹா!

அப்பத்தலேர்ந்தேவா!

அமுதா said...

/*இதுவரைக்கு இருந்த சாதாப் பார்வை அப்படியே அக்னிப் பார்வையா மாறும்.*/
:-))

தாரணி பிரியா said...

//இதுவரைக்கு இருந்த சாதாப் பார்வை அப்படியே அக்னிப் பார்வையா மாறும். இந்த நொட்டை கேள்வியெல்லாம் கேளு, படிக்காத, மாசமானா வாங்கிட்டு வா, 20, 30 ந்னு (மார்க்).. நம்மளை ஆஃப் பண்ண பயன்படுத்தும் ஆயுதம். //

ரசிச்சு வரிகள் அமித்து அம்மா.

தாரணி பிரியா said...

இது போல அனுபவம் எனக்கு இல்லவே இல்லை. எங்கம்மா எங்களை விட்டுட்டு போனதே இல்லை. ஒவ்வொரு வரியையும் ரசிச்சு படிச்சேன். எங்கம்மாகிட்ட இதை படிக்க சொல்லி காட்டணும் :)

Dii said...

நான் இது மாதிரி நெம்ப தடவை சாதிச்சிருக்கேன்...அப்படியே எங்க கதை மாதிரி இருக்கு :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

;))

சந்தனமுல்லை said...

என் பின்னூட்டம் எங்கே?????!!!!

Dhiyana said...

எங்க அம்மா எங்களை விட்டு வெளியே எங்கும் போனதில்லை அமித்து அம்மா. நல்லா எழுதியிருக்கீங்க.. கற்பனை செய்து பார்க்க நல்லாயிருந்தது.

Deepa said...

:-)) romba romba rasithen!

Anonymous said...

என்னை விட்டுட்டுப்போய் பழக்கீட்டாங்க அம்மா. அம்மா இல்லைன்னு நான் அழுததா ஞாபகமில்லை. :)

"உழவன்" "Uzhavan" said...

ம்ம்ம்.. எல்லா ஊரு அம்மாக்களும் இப்படித்தானா? :-)

கார்க்கிபவா said...

ரசிச்சு படிக்கலாம். வரவ்ர உங்கள் எழுத்து எங்களை எளிதில் உள்ளே இழுத்து செல்கிறது. வாழ்த்துகள்

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா கண்ணுக்கு முன்னாடி வர்ற மாதிரி எழுதிருக்கீங்க. ஆனா, எனக்கு அந்த அனுபவம் இல்ல. Perfect writing.

பட்டாம்பூச்சி said...

என்னோட தங்கை இந்த அழிச்சாட்டியத்தில் எல்லாம் எக்ஸ்பர்ட் :).