01 April 2009

நீயாகிப் போன நான்

என் கனவுகளின் நிஜம் நீ

திகட்ட திகட்ட காதலித்தும்
இன்னும் திகட்டவுமில்லை
தீரவுமில்லை
மாறாய் பெருகுகிறது
உன் மீதான காதல்

குறைய குறைய
பெருகும்
அட்சயபாத்திரமாய்
வளர்கிறது
உன் மீதான அன்பு

என்
உயிர்த் தோட்டத்தின்
ஒற்றை ரோஜாப்பூ நீ

காலை உன்
கையசைப்பில்
உறைந்து போகும்
எனது உலகம்
மாலை உன்
ஒய்யார ஒற்றைச்சிரிப்பில்
உயிர் பெறுகிறது.

உன் மீதான
என் தீராக் காதலை
உன் மேல் நித்தமும்
வார்த்தைகளாக பொழிகிறேன்
புரிந்தும் புரியாமலும்
ஓடுகிறாய்

உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.

உன் அனைத்து கேள்விகளுக்கும்
நான் ஓயாமல் பதில் தேடுகிறேன்.
என் எல்லா
கேள்விகளுக்கும்
பதிலாய் நீ
ஒற்றைச் சிரிப்பைத் தருகிறாய்.

உன்னை வியப்படைய
செய்ய எத்தனையோ
விளையாட்டு பொம்மைகள்
வாங்குகிறேன்.
நீயோ
உன் ஒரு சின்னஞ்சிறு
செய்கையால்
என்னை
விழி விரிக்க செய்கிறாய்.

என்
அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
உன்னை கவிதையாய்
உருமாற்ற முயல்கிறேன்
நான்.

பிடிக்க முடியாதபடி
ஓடி மறைகிறாய்
என் நெஞ்சகத்துள்.

உன் கால்கொலுசொலி
என் காதுக்குள்.

உனக்கான கனவுகள்
என் கண்ணுக்குள்

உன் சிரிப்பு
இப்போது என் உதட்டுக்குள்.

என் சுவாசமும்
உந்தன் பொருட்டே

நான் என்னும் நான்
இப்போது
நீயாகிப் போய் நிற்கிறேனடி
என் கனவு தேசத்தின்
ராஜகுமாரியே !!!!

32 comments:

சந்தனமுல்லை said...

மீ த ஃபர்ஸ்ட்!

Vidhya Chandrasekaran said...

:)

Unknown said...

அமித்து அழகா?? கவிதை அழகா?? அமித்து தான் அழகு.. :)) அக்கா புகை வர மாதிரி இருக்கு உங்க காதுல...

sindhusubash said...

இந்த தலைமுறையில் அம்மாக்களுக்கு பொண்ணுக மேல தான் ரொம்ப பாசம்னு நினைக்கறேன்.மகிழ்ச்சியா இருக்கு.

குடந்தை அன்புமணி said...

//என்
அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
உன்னை கவிதையாய்
உருமாற்ற முயல்கிறேன்
நான்.//

வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்! உங்கள் எண்ணம்போல் வாழ்க!

சந்தனமுல்லை said...

//
என்
உயிர்த் தோட்டத்தின்
ஒற்றை ரோஜாப்பூ நீ//

மிக ரசித்தேன் இவ்வரிகளை!

சந்தனமுல்லை said...

நல்லா வந்திருக்கு மேடம்! மிக அழகான வரிகள் !கவிதாயினி அமித்து அம்மா!!

narsim said...

வாசகன்னு ஒருத்தர் இருக்காரு வருவாரு

நட்புடன் ஜமால் said...

\\காலை உன்
கையசைப்பில்
உறைந்து போகும்
எனது உலகம்
மாலை உன்
ஒய்யார ஒற்றைச்சிரிப்பில்
உயிர் பெறுகிறது.
\\

அருமை.

நட்புடன் ஜமால் said...

பிடிக்க முடியாதபடி
ஓடி மறைகிறாய்
என் நெஞ்சகத்துள்.

உன் கால்கொலுசொலி
என் காதுக்குள்.

உனக்கான கனவுகள்
என் கண்ணுக்குள்

உன் சிரிப்பு
இப்போது என் உதட்டுக்குள்.


\\

மிகவும் இரசித்தேன் ...

புதியவன் said...

//என்
அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
உன்னை கவிதையாய்
உருமாற்ற முயல்கிறேன்
நான்./

முயற்சியில் வெற்றி பெற்று விட்டீர்கள்...கவிதை அழகு...வாழ்த்துக்கள்...

தமிழ் said...

/உன்னை வியப்படைய
செய்ய எத்தனையோ
விளையாட்டு பொம்மைகள்
வாங்குகிறேன்.
நீயோ
உன் ஒரு சின்னஞ்சிறு
செய்கையால்
என்னை
விழி விரிக்க செய்கிறாய்./

அருமை

S.A. நவாஸுதீன் said...

தாய்ப்பாசம் இங்கே தங்க வரிகளில் தக தகவென மின்னுகிறது.

வியா (Viyaa) said...

alagana kavithai varigal..

"உழவன்" "Uzhavan" said...

//உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.//

மிக அருமையான வரிகள். மெளன மொழிதானே சிறந்தது??

அப்துல்மாலிக் said...

வரிகள் அருமை

அப்துல்மாலிக் said...

//காலை உன்
கையசைப்பில்
உறைந்து போகும்
எனது உலகம்
மாலை உன்
ஒய்யார ஒற்றைச்சிரிப்பில்
உயிர் பெறுகிறது//

பிரிவு

அப்துல்மாலிக் said...

//என்
அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
உன்னை கவிதையாய்
உருமாற்ற முயல்கிறேன்
நான்.
//

நல்ல வரிகள்

வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

அமித்து அம்மாவை இவ்வளவு அழகாக் கவிதை எழுத வைத்து அமித்துச் செல்லமே, நீயும் அம்மாவும் என்னாளும் ஆனந்தமாக இருக்க வேணும்.

SK said...

mmmmmmmmmmmmmmmm

நாணல் said...

ரொம்ப ரொம்ப அழ்கா இருக்கு...படிக்க படிக்க அமித்துவைப் பார்த்த மாதிரி இருந்தது எனக்கு.... நிறைய எழுதுங்கள்...

நாணல் said...

//உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.//

:)) அவங்க மொழியே மொழி தான்...அழகா சொல்லி இருக்கீங்க.....

அமுதா said...

அமித்து அம்மா!!! ஒவ்வொரு வரியும் கலக்கல். வாழ்த்துகள்

ச.முத்துவேல் said...

ரொம்ம்ப நல்லாயிருக்குது, அமித்து அம்மா. கொஞ்ச நாட்களாக மட்டுமே உங்கள் தளத்தை படித்துவந்ததின் அடிப்படையில் ஒரு கருத்து சொல்கிறேன்.
அமித்து பற்றிய உங்கள் படைப்புகளை,எண்ணப்பகிர்வுகளை,ஒரு நூலாகவேப் போடலாம்.

ராம்.CM said...

நான் என்னும் நான்
இப்போது
நீயாகிப் போய் நிற்கிறேனடி
என் கனவு தேசத்தின்
ராஜகுமாரியே !!!! ///

அழகோ அழகு...

ராம்.CM said...

நான் என்னும் நான்
இப்போது
நீயாகிப் போய் நிற்கிறேனடி
என் கனவு தேசத்தின்
ராஜகுமாரியே !!!! ///

அழகோ அழகு...

Thamira said...

முன்பு கட்டுரையை மடக்கி எழுதி கவிதைன்னு சொல்லி கொடுமைப்படுத்துவீங்க.. இப்போ கொஞ்சம் கொஞ்சமாக கவிதை(ன்னு நான் நினைத்துக்கொண்டிருப்பது) வசப்பட ஆரம்பித்திருக்கிறது உங்களிடம். பல வரிகளை ரசித்தேன். இன்னும் நீளம் குறைத்து, தயங்காமல் எடிட் செய்தீர்களானால்.. கிரிஸ்ப்பான கவிதை கிடைக்கும் என நினைக்கிறேன்.

Thamira said...

மற்றபடி உங்கள் ஃபீல் அற்புதமானது..

தமிழ் அமுதன் said...

அமித்து அப்டேட்டில் மீண்டும் ஒரு சிறந்த படைப்பு!

இந்த பதிவுகளையெல்லாம் பாதுகாத்து வையுங்கள்!
அமித்துக்கு விவரம் தெரியும் போது கொஞ்ச கொஞ்சமாக
படிக்க கொடுங்கள்! அம்மாவுக்குள் இருந்து வெளி வந்த பின்னரும்
அம்மாவுக்குள் தான் இருக்கின்றோம் என்ற உணர்வில் எல்லையற்ற
நிறைவு ஏற்படும் அமித்துக்கு!!

இந்த கவிதை விதைகளை,பிற்காலத்தில் அமித்துவின் முகத்தில்
மலர்களாக காணும்போது உங்களுக்கும் நிறைந்த மகிழ்ச்சி உண்டாகும்!!

அன்பு said...

அருமை... அமித்துக்குட்டி இவ்ளோ அழகான கவிதைகொடுத்திருக்கிறாளே!

ஆஹா,
என்ன...
இப்படி
ஆளாளுக்கு
கலக்கறீங்களே! (ஆச்சரியக்குறி:)

Suresh said...

////உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.////

arumai thozhi

நிலாரசிகன் said...

//உன் அனைத்து கேள்விகளுக்கும்
நான் ஓயாமல் பதில் தேடுகிறேன்.
என் எல்லா
கேள்விகளுக்கும்
பதிலாய் நீ
ஒற்றைச் சிரிப்பைத் தருகிறாய்.//

:)Nice lines amma.