உன்னை நானும்
என்னை நீயும்
நன்றாக புரிந்துகொண்டோம்
திருமணத்திற்குபிறகு
கண் கெட்ட பிறகு
திசை நோக்கி நமஸ்காரம்
செய்யலாம்
ஆனால்
நாம்
சூரியனையே விழுங்கி விட்டு
அகப்படும்போதெல்லாம்
அனல் கக்கும்
பறவைகளானோம்
அனல் தணிய
மழை பெய்யக்கூடும்.
அதுவரை
ஒடியாதிருக்கட்டும்
நம் சிறகுகள்
இப்படிக்கு காதல்