14 July 2009

காலையில்.......

இன்றைய பொழுது இனிதே விடிந்தது 6.17க்கு. வழமை போல இல்லாமல் காலநிலையும் கொஞ்சம் கூலாக் இருந்து.சுலபமாக சமையல் முடிந்தது, அது சுவையாக இருக்குமா என்பதன் ரிசல்ட் மதியம் தான் வரும்.:)))

எந்த டென்ஷனுமில்லாமல், இன்று 9.05 லேடிஸ் ஸ்பெசலை குறி வைத்து வீட்டிலிருந்து கிளம்பியது, அமித்துவையும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கூட்டி வந்தது என்பவை
போனஸ்கள். ஜன்னலோர இருக்கை கிடைத்தது போனஸோ போனஸ், ஐபாடில் இவ்வளவு நாளும் வைத்திருந்தாலும், இன்று நான் செலக்ட் செய்யாமலேயே பூமாலையே தோள் சேரவா! என்ற இளையராஜாவின் இனிய பாடலை கேட்க நேர்ந்தது என எல்லாமே கூடுதல் போனஸ்கள்.

சரி எதுக்கு இதெல்லாம் என்று கேட்பவர்களுக்கு, வழமையான ஆபிஸ் இத்யாதிகளை முடித்துவிட்டு, ப்லாக் கமெண்ட்டை பப்ளிஷ் செய்ய வந்தால்

திரு. செந்தழல் ரவி அவர்கள் இப்படி ஒரு கமெண்ட் இட்டிருந்தார். அதாகப்பட்டது, இதுதான், இதுதான், இஃதேதான்.

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!

http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html

ஆச்சரியமாக இருந்தது, லிங்க்கை க்ளிக்கிப்பார்த்தேன், ஆறு பேருக்கு கொடுத்திருந்தார். அதில் நானு(ம்) இருந்தேன் . நன்றிகள் திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு.

இந்த சுவாரஸ்ய விருதின் விதிப்படி, இதை “நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...விருதை வலைப்பதிவில் போட்டுக்கலாம்”

விருதை வலைப்பதிவில் போட்டாச்சு, இப்ப விருது வழங்கும் விழா.

மனதை வருடும் எழுத்துக்கு சொந்தக்காரரான திருமதி. உமாஷக்தி

எனக்கு இல்லை பருக்கை, தரையோரக் கனவுகளில் நான் என எதிர் கவுஜ / பதிவு புகழ் திரு. ஆயில்யன்

எனக்கு குழந்தை வளர்ப்பை அறிமுகப்படுத்திய + அம்மாக்கள் ப்லாகை துவங்கிய பப்பு புகழ் ஆச்சி திருமதி. சந்தனமுல்லை

பிறந்த குழந்தை துள்ளி குதித்து ஓடினால் ? என அரிய பெரிய கற்பனைகளும், குடித்ததில் பிடித்தது என கலந்து கட்டி எழுதும் எழுத்தாளர் பைரவன் புகழ் திரு.கண்ணாடி ஜீவன்

ஜூன் 10 சில ஞாபகக் குறிப்புகள், கறையான்கள் அரித்த கதவுகள் என அசத்தலாக எழுதும் திரு. அ.மு. செய்யது.

கவிதை எழுதி, அதைத் தொடர்ந்து இப்போது தொடர்கதை எழுத ஆரம்பித்திருக்கும் திரு. நட்புடன் ஜமால். (எலக்‌ஷன் பகுதி ரொம்ப சுவாரசியம் நண்பரே)

நீங்களும் எல்லோருக்கும் இந்த விருதை பகிர்ந்துகொள்ளுங்கள், முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.

இது போன்ற ஒரு மனமகிழ்வுக்கு காரணமாய் இருந்த என் எழுத்துக்கு சொந்தக்காரியான என் மகள் அமித்துவுக்கு நன்றிகள்.

பார் மகளே பார், உன் அம்மா உனக்காக கட்டிய இந்த எழுத்துக் குடிலை நீ வளர்ந்து பார் மகளே பார்.

நன்றிகளுடன், அளவில்லா மகிழ்ச்சியுடனும்
அமித்து அம்மா.

33 comments:

anujanya said...

வாழ்த்துகள். ரொம்ப நாட்கள் ஆச்சு இங்க வந்து. தொடர்ந்து சுவாரஸ்யமாக எழுதுங்கள்.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

வாழ்த்துகள்

Unknown said...

வாழ்த்துகள் அமித்தும்மா...உங்களின் அன்பிற்கு எப்படி நான் நன்றி சொல்ல முடியும். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் ஆழமான வாசிப்பானுபவம் தருகின்ற எழுத்துக்களை படைப்பதற்கு பெரும் தூண்டுதலாக இது போன்ற உற்சாக டானிக் அமைகிறது. நம்மை நாமே பாராட்டிக்கொள்வதைப் போல....அமித்துக்கும் அமித்தும்மாவிற்கும் நன்றி.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

Vidhoosh said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

குடந்தை அன்புமணி said...

காலையிலேயே நானும் ரசி சாரின் பிளாக்கை படித்தேன். வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு வந்தேன். மீண்டும் தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்குள் நீங்களும் விருதை அளித்துவிட்டீர்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும்

நட்புடன் ஜமால் said...

முதற்கண் தங்களுக்கு வாழ்த்துகள்.

போனஸுகள் தினம் கிடைக்க பிரார்த்தனைகள்.

விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

(ஜீவன் அண்ணாவை இந்த முறையாவது விட்டு தந்திருக்களாம்)


அட நானுமா!

மிக்க சந்தோஷம் சகோ!

சந்தனமுல்லை said...

மிக்க நன்றிகள் அமித்து அம்மா...:-) மகிழ்ச்சியாக இருக்கிறது!
//இது போன்ற ஒரு மனமகிழ்வுக்கு காரணமாய் இருந்த என் எழுத்துக்கு சொந்தக்காரியான என் மகள் அமித்துவுக்கு நன்றிகள்.

பார் மகளே பார், உன் அம்மா உனக்காக கட்டிய இந்த எழுத்துக் குடிலை நீ வளர்ந்து பார் மகளே பார்.//

அமித்துவுக்கும் நன்றிகள்!

தமிழ் அமுதன் said...

திரு , செந்தழல் ரவி அவர்கள் உங்களுக்கு விருது வழங்கியதற்கு வாழ்த்துக்கள்!
விருது கிடைக்க காரணமாக இருந்த அமித்துவுக்கும் வாழ்த்துக்கள்!

எனக்கு நீங்கள் விருது அளித்தமைக்கு நன்றிகள்!

இப்படிக்கு...... எழுத்தாளர் பைரவன் ;;))

Thamira said...

வாழ்த்துகள்

அகநாழிகை said...

வாழ்த்துக்கள்,
அமிர்தவர்ஷினி அம்மா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

"உழவன்" "Uzhavan" said...

நண்பர் செந்தழல் ரவி அவர்களின் தேர்வு மிகச் சரியானதே. சுவராஸ்யமாக எழுதுவதில் உங்களுக்கு நீங்களேதான் அமித்துமா. மிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் :-)
அதுபோல உங்களிடமிருந்து விருதினைப் பெற்றவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

ரவி said...

சூப்பர்...

விருதுக்காக நீங்க செலக்ட் செய்திருப்பவர்களும் சூப்பர்...!!!

மதியம் ரிசல்ட் சிறப்பாக வர (இந்த நேரம் வந்திருக்குமே ? ) வாழ்த்துக்கள்...

ரவி said...

விருதுக்கு நீங்க தேர்ந்தெடுத்தவங்களோட பதிவின் சுட்டியையும் கொடுத்திருங்களேன்...!!!

SK said...

வாழ்த்துக்கள் உங்களுக்கு இல்லை உங்க பொண்ணுக்கு :-)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
இது புது விருதா, இன்னும் இதை எனக்கு யாராச்சும் பரிதாபப்பட்டு கொடுக்கமாட்டாங்களான்னு காத்துக்கிட்டே இருக்கனுமா:):):)

சூப்பர் அமித்து அம்மா:):):)

Barari said...

ENUNGA UNGALUKKULLEYE IPPADI VIRUTHU KODTHTHU KOLVATHU NALLAAVAA IRUKKU ENNAMO PONGO

Unknown said...

வாழ்த்துகள்!!

// அதில் நானு(ம்) ஒருவள்.//

ஒருவள் - சரியா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சுட்டியதற்கு நன்றி திரு ராஜா, கே.வி. ஆர்.

சுட்டிகளை கொடுக்கிறேன் ரவி சார்.

நன்றிகள் அனைவருக்கும்

ரவி said...

ஒருவள் - சரியா ?

அதானே ? ஒருத்தி என்பது தானே புழங்கும் சொல் ?

எப்படியோ, இந்த எக்ஸ்ப்ரிமெண்ட்ல ஒரு வார்த்தை கிடைச்சது.. >(((

Unknown said...

நான் தேர்ந்தெடுத்த அறுவரில் நீங்களும் ஒருவர் http://kiruthikan.blogspot.com/2009/07/blog-post_14.html

அ.மு.செய்யது said...

இன்ப அதிர்ச்சி !!!

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

உங்க கையால் பெறும் விருதுக்கு மதிப்பு அதிகம் என்பதால் மகிழ்ச்சியோடும்
பெருமையாகவும் உணர்கிறேன்.

விருது பெற்ற நம் மற்ற சகாக்களுக்கும் வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

நானும் என் வாழ்த்தை கூவிக்கிறேன்

அட எனக்கு இந்த விருது கிடைச்சிருக்குப்பா

நன்றி ஜீவாண்ணா

ஜீவா said...

வாழ்த்துக்கள்,
அமிர்தவர்ஷினி அம்மா.

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா,

கொடுத்தாச்சு சுட்டி இங்கே!

http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html

அன்புடன்
முல்லை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி திரு. கீத் குமாரசாமி

என்னைப்பற்றிய சொல்லிய உங்கள் வார்த்தைகள் நெகிழ்ச்சியடைய செய்தன.

(உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முயன்றால் “error on page" என்றே வருகிறது) அதனால் இங்கு என் நன்றிகளை சொல்லிவிடுகிறேன்.

butterfly Surya said...

வாழ்த்துகள்

R.Gopi said...

//சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது //

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

கலக்குங்க......

மென்மேலும் பல விருதுகள், பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்........

(//நான் செலக்ட் செய்யாமலேயே பூமாலையே தோள் சேரவா! என்ற இளையராஜாவின் இனிய பாடலை கேட்க நேர்ந்தது///

ஆ....ஹா.... என்ன ஒரு இனிமையான காலை விடியல்...........)

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

மாதவராஜ் said...

வாழ்த்துகள்

விக்னேஷ்வரி said...

சுலபமாக சமையல் முடிந்தது, அது சுவையாக இருக்குமா என்பதன் ரிசல்ட் மதியம் தான் வரும்.:))) //

ஹாஹாஹா....

வாழ்த்துகள் உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும்.

இரசிகை said...

ithu thaan muthal muraiya ungal valaip pakkam naan varukiren..

amiththu amma- atharkkaana peyar vilakkam ippothaan purinthathu..
pullariththum vittathu:)

vaazhththukkal:)