13 July 2009

அமித்து அப்டேட்ஸ்

வந்திட்டான்யா, வந்தீட்டான்யா, இது அமித்து கார்த்தி எங்கள் வீட்டுக்கு விளையாட வரும்போது சொல்லும் வார்த்தை, இது நீண்டு இப்போது அவள் அப்பா வீட்டுக்கு வரும்போது,காக்கா வந்து உக்காரும்போது, பூனை வரும்போது என நீண்டுவிட்டது. வந்திட்டாயா காக்கா வந்தீட்டான்யா.

ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு என்று நாம் கை வைத்து விளையாட ஆரம்பிக்கும் போதே, கொய்யாஆஆஆஅ என்று கத்தி மேடம் ஆட்டத்தை அத்தோடு நிறுத்திவிடுவார்கள். இந்த கொய்யா என்ற வார்த்தை அமித்துவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல, ரொம்ப ஜாலியா இருந்தாலும், இல்லை கோபமாக இருந்தாலும் சொல்லுகிறாள். அன்று தண்ணியில் விளையாடியதற்காக, அவளின் தாத்தா அவளை லேசாகத்தான் தட்டினார், இந்தம்மா உடனே, போடா கொய்யா என்று வேகமாக சொல்லிவிட்டு அழுதுகொண்டே ஓடிவந்துவிட்டாள்.

கடந்த மாதத்தில் ஒரு நாள் நாங்கள் வண்டலூர் போனோம். அங்கு அமித்து நிறையவே எஞ்சாய் செய்தாள்.

குரங்கு என்பதை கோங்கு என சொல்லக்கற்றுக்கொண்டாள்

புலியைப் பார்க்கப்போகும் போது, ஒரு புலி உலவிக்கொண்டிருந்தது. அவளின் அப்பா, அங்க பார் புலி என்றதுதான் தாமதம், ம்மா, ப்புல்லி பாரேன், அக்கா பாரேன் என ஒரே குஷி.
கொஞ்ச நேரம் உலவிய புலி,சற்று தள்ளிப்போய் உட்கார்ந்துகொண்டது. எல்லோரும் கலையத்தொடங்கினோம். திடிர்னு அமித்து, ம்மா இங்க பாரேன் ப்புல்லி, எங்கம்மா, த்தோ பேப்பேல்ல, அங்கே ஒரு புலியின் ஃபோட்டோ போட்டு அதற்கடியில் அதனைப்பற்றிய விவரங்கள் சொல்லியிருந்தார்கள்.

அதற்கடுத்து சிங்கம், முதலை என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வந்தோம். சட்டென சிங்கமோ, புலியோ கர்ஜிக்கும் ஓசை கேட்டதால், அமித்து அப்பா, புலி கத்துது பத்தியா என்றார்.
புச்சில்லாமா, புச்சில்லாமா, எதைம்மா, ப்புல்லிய. சரிதாம்மா என்றேன் நான்.

எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்துவிட்டு, கடைசியாய் வரும்போது நாங்கள் நடந்து நடந்து செம டயர்ட்.
எல்லோரும் வரிக்குதிரைப் பார்க்கப்போய் வந்தார்கள். நாங்கள் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டோம், கண்ணுக்கு தெரியாததால் கடந்துவிட்டோம்.
திடீரென அமித்து, ம்மா, குதுர பார்ரேன் குதுர பார்ரேன் என சவுண்டு, அவள் கைகாட்டிய இடத்தைப் பார்த்தால் அங்கே ஒரு வரிக்குதிரை தலையை வைத்து, அதற்குள் குடிதண்ணீர் குழாய் வைத்து தண்ணீர் வருமாறு செட் செய்திருந்தார்கள்.

கடைசியாய், யானை. நாங்கள் போன போது யானையை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். யான குளிரான் யான குளிரான் என அமித்து ஒரே குதியாட்டம்.

கடைசியாய் யானை சவாரி போவதற்கு யானைகளை நிறுத்தி, அதன்மேல் உட்காருவதற்கான அமைப்பை செய்திருந்தார்கள்.
அப்பா, உக்கார்லாமா, உக்கார்லாமா, எங்கம்மா, யான ம்மேல. :)))

அடுத்தவாரம் கிண்டி பார்க், வாசலிலேயே பெரிய டைனோசர் உருவம் வைத்திருந்தார்கள், கண்ணு பாரேன், பல்லு பாரேன் என போகும் போதே பாரேன் ஆரம்பித்துவிட்டது.
அங்கு போய் மான், மீன் எல்லாம் பார்த்தாலும் அமித்துவுக்கு கோங்கை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம், நல்லவேளையாய் ரொம்ப நடக்க வைக்காமல் கிட்டத்திலேயே குரங்கை கூண்டுக்குள் வைத்திருந்தது வசதியாய்போய்விட்டது. அதற்கு முன்னர் தான் ஒரு குரங்கு வடிவ குப்பைத்தொட்டியை கோங்கு என காட்டினேன். நீருக்குள் இருக்கும் நீர்நாய் வெளியே வருவதும், உள்ளே குதிப்பதுமாய் இருக்க, அங்கேயும், ம்மா, ஜூ ஜ்ஜூ குளிரான் என்று அங்கேயும் ஆரம்பிச்சாச்சு.

வீட்டுக்கு திரும்பும் போது அக்கா (பப்பு, நந்து எங்க), அப்பு எங்க (ஜூனியர்), பாப்பா எங்க (நேஹா) என விசாரிப்புகள் வழி நெடுகிலும் வந்த வண்ணம் இருந்தது. வீட்டுக்கு போனவுடன் தட்டை அவளின் தாத்தாவிடம் காட்டி அக்கா, அக்கா, குத்தாங்க என்றாள். பாருங்க் அமுதா, க்ரெடிட்ஸ் எல்லாம் யாழுக்கு போய்டுச்சு. :))))

ஜூலை முதல் வாரம் எங்களின் திருமண நாள் வந்தது, அதற்கு முன் நாள் அமித்துவிடம்,
வர்ஷினிம்மா, நாளைக்கு அம்மாவுக்கும், அப்பாவுக்கு கை கொடுப்பியா,
என் பர்ஸை நோண்டிக்கொண்டே. ம், குட்ப்பேன்.
காசு குடுப்பியாம்மா, ம் குட்ப்பேன்,
எவ்ளம்மா குடுப்ப, பத்துவாஆ

அம்மா மம்மி, அம்மா மம்மி இதுபோல கொஞ்ச நாட்கள் என்னை அழைத்துக்கொண்டிருந்தாள், யார் மம்மி என்று சொன்னார்களென்று தெரியவில்லை. அவளின் அப்பாவையும் டாடி, டாடி என்று. இப்போ குறைஞ்சு போச்சு இப்படி சொல்றது.

கார்த்தியிடம் விளாடலாமா, விளாடலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாள். எதையாவது காட்டினால், பாக்கலாம்மா, பாக்கலாம்மா என்று கேள்வி வருகிறது.

ஓமித்தா, ஓமித்தா - இது வேறொன்றுமில்லை, எதிர் வீட்டு மோஹிதாவை வர்ஷினி இப்படித்தான் அழைக்கிறாள்.மோஹிதா தண்ணீரை தீர்த்தம் என்று சொல்வாள். அதைப் பார்த்தபின் ம்மா, தண்ணி தீத்தம் கொய்ங்க இது அமித்து.

இரண்டு வாரங்களுக்கு முன் அமித்துவுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருந்து என்றாலே அவளுக்கு அலர்ஜி.அவளை உள்ளே உட்காரவைத்துவிட்டு வெளியே வைந்து மருந்தை அளந்து எடுத்துக்கொண்டிருந்தேன். வெளியே வந்து இதைப் பார்த்த அமித்து.

மருந்து வேணாம்மா.

உனக்கு இல்லம்மா, பார்பிக்கு.

பார்பிக்கா ?

ம், ஆமாம்மா, பார்பிக்கு ஓடம்பு சரியில்ல இல்ல.

கொஞ்ச நேரம் போல யோசித்துவிட்டு, பாவம் என்றாள்.

யாரும்மா பாவம்.

பாபி பாவம்.

ஏன்ம்மா பாவம்.

மந்து (மருந்து) குடிரான். பாவம் :(


காலையில் நாங்கள் மூவரும் ரெயில்வே ஸ்டேசனுக்கு வந்துகொண்டிருந்தோம். மேடம், இன்று தலைக்கு குளித்திருந்தால், முடி பறந்து அவளின் முகத்திற்கு நேராய் மோதியது. சும்மாவே குத்துது, குத்துது என்பாள், எதிர் காற்று வேறு, முன்னாடி உட்கார்ந்து கொண்டு, அப்பா, முடி, முடி என்று குரலெழுப்பிக்கொண்டிருந்தாள். அவரோ, இரண்டு பக்கமும் சேர்த்து இப்படி புடிச்சுக்கோ என்றார். இறங்கும் போது பார்க்கிறேன்.அவர் சொன்னார் போலவே அவள் கை தலைமுடியையே பிடித்துக்கொண்டிருந்தது. நான் அவரைப் பார்க்க, அவரோ நான் சொன்ன நேரத்துல இருந்து இங்க வர வரைக்கும் அவ தலைல இருந்து கைய எடுக்கல என்றார். என்ன சொல்ல.

சில பல செய்கைகளின் மூலமாக குழந்தைகள் எப்போதும் பெரியவர்களாகிவிடுகிறார்கள். நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது போல.
வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.

22 comments:

அ.மு.செய்யது said...

//வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.//

கொய்யா....

ரசித்து வாசித்தேன்....கியூட்

நட்புடன் ஜமால் said...

ஜூலை முதல் வாரம் எங்களின் திருமண நாள் வந்தது\\

வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் ...

நட்புடன் ஜமால் said...

அமித்துவோடு ஜூவுக்குள் வந்தது போல் ஒரு உணர்வு தங்கள் வரிகளில்

[[வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.]]

நிதர்சணம்.

Vidhoosh said...

:)..அதே தான். நானும் என் பெண் எனக்கு கொடுத்த பாடங்களை டயரியில் வைத்துள்ளேன். ஏனோ அது எனக்கும், பாஸ்கருக்கும், என் பெண்ணுக்கும் மட்டும் என்று ஒரு possessiveness.

உங்கள் எழுத்துக்களும், அதில் தெரியும் பெண்ணும் ரொம்ப அழகு. ரொம்ப பிடிச்சிருக்கு.

Unknown said...

ஒன்றரை வயசுல இவ்ளோ பேசுறாங்களா!!!!!!!! soooooooooooo cute

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அமித்து அம்மா அப்டேட்ஸ்!
ரசித்தேன்!

//புச்சில்லாமா, புச்சில்லாமா, எதைம்மா, ப்புல்லிய. சரிதாம்மா என்றேன் நான்.//

:-)

சந்தனமுல்லை said...

//இந்தம்மா உடனே, போடா கொய்யா என்று வேகமாக சொல்லிவிட்டு அழுதுகொண்டே ஓடிவந்துவிட்டாள்.//

அவ்வ்வ்வ்வ்! :-)

ஜானி வாக்கர் said...

//அவர் சொன்னார் போலவே அவள் கை தலைமுடியையே பிடித்துக்கொண்டிருந்தது.//

அது தான் குழந்தைகள். அப்பா அம்மா சொல்லே மந்திரம்.

குடந்தை அன்புமணி said...

படிக்க படிக்க இனிக்கிறது...
திருமணநாள் கண்ட தங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... நலம் பல பெற்று வாழ்க வளமுடன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போட கொய்யாவா.. என்னங்க இது..? :(

:))

நாஞ்சில் நாதம் said...

:))))))

அன்புடன் அருணா said...

[[வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.]]
அதுக்குத்தானே மழலைச் செல்வங்கள்!
இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

Karthik said...

வாவ், செம க்யூட்டா இருக்கே!! :)

அமுதா said...

/*வந்திட்டாயா காக்கா வந்தீட்டான்யா.*/
:-))
/*அமுதா, க்ரெடிட்ஸ் எல்லாம் யாழுக்கு போய்டுச்சு. :))))*/
ம்... தேர்வு பண்ணினது நந்து & யாழ். அதனால் சரி தான்

/*ஜூலை முதல் வாரம் எங்களின் திருமண நாள் வந்தது\*/
தாமதமான வாழ்த்துக்கள்.

/*//வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.//*/
உண்மை.

அமித்து குட்டி செல்லக்கட்டி ...

sakthi said...

சில பல செய்கைகளின் மூலமாக குழந்தைகள் எப்போதும் பெரியவர்களாகிவிடுகிறார்கள். நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது போல.
வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.

ஆம் அவர்கள் உலகம் அழகானது அதில் நாம் தான் அதிகம் கற்றுக்கொள்ளவேண்டும்

ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!

http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html

இந்தாங்க சுட்டி...

Anonymous said...

அமித்துவின் பேச்சுக்கள் ரசிக்க கூடியவையாக இருக்கிறது. திருமணநாள் வாழ்த்துக்கள் அமித்து அம்மா

"உழவன்" "Uzhavan" said...

வாவ்.. அழகா பேசுறாளே.. ரொம்ப சந்தோசமாக இருக்கு படிக்கும்போது. எப்ப அமித்த எங்க கண்ணுல காட்ட போறீங்க? :-)

தமிழ் அமுதன் said...

///சில பல செய்கைகளின் மூலமாக குழந்தைகள் எப்போதும் பெரியவர்களாகிவிடுகிறார்கள். நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது போல.///


உண்மை!

Thamira said...

நல்ரசனை.!

கே.என்.சிவராமன் said...

அமித்து அம்மா,

தாமதமான திருமணநாள் வாழ்த்துகள் :-)

'அமித்து அப்டேட்ஸ்' நல்லா இருக்கு. நல்ல அப்சர்வேஷன்.

//வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக//

நச்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

இரசிகை said...

intha blog oru pokkisham..
unga ponnukkaagana puthumai...

santhoshamaa irukkunga:)