ரிங்கா ரிங்கா ரோச்சஸ்
பாக்கெட் புல்லா ரோச்சச்
அஸ்கா புஸ்கா, ஆளப்பாரு டவுன்
பா பா ப்ளாக்சீப் ஆ ஊ எனி உல்
எச் சார் எச் சார் தீ பேக் குல்
ஆப்பி பர்த்த டே டூ ய்யூ
மே கா பளஸ் சூர்யா (யூ ஆல் என்ற வார்த்தை மருவி சூர்யா வாக இருப்பதாக அறிகிறேன்)
மேடத்தின் படிப்பார்வம் தாளமுடியாததாய் இருக்கிறது. உச்சமாய் சில சமயங்களில்,
ஏப் பச்சங்களா, படிங்க. நாந்தான் லத்தா மிச்சு.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
(லதா மிஸ்!, அனேகமாய் கார்த்தியின் வகுப்பாசிரியை பெயராக இருக்கலாம்)
......
ஒரு காக்கா பந்து வந்துச்சாம். அதுக்கு தண்ணி தாகமா எத்துச்சாம். அபியே உக்காந்துச்சாம். கல்லு எத்து எத்து போட்டுச்சாம். தண்ணி அபியே மேல வந்துச்சாம். குச்சீட்டு அபியே சந்தோச்சமா பந்து போயிச்சாம்.
இந்த சந்தோச்சமா பந்து போயிச்சாம் பினிஷிங்க், மேடம் சொல்லும் எல்லா மிக்ஸிங்க் கதைகளிலும் உண்டு.
.....
நான் சொல்ற பேச்சையே நீ கேட்க மாட்டன்ற வர்ஷா. சும்மா சும்மா உன்னை தூக்க சொல்லாத. என்னால முடியாது.
கொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு.
.........
அம்மா, ஒர் நாள்ளு நான் சாப்ட்டு, டிவி பாத்துட்டு தூங்கிட்டு இந்தனா, அப்போ ஒரு பூச்சிக்காரன் வந்து அம்ப வீட்டு கதுவ தட்டனான்.
நான் கொம்ப எத்து அவன ஏப் போ, போ அபி சொன்னேன். ஏ, எங்க வீட்டுக்கு வராத, நா ப்போலீச்கார் பொண்ணு, உன்ன அச்சீர்வேன் அபி சொன்னேன்.
அவன், அவன், அபியே பயுந்து ஓட்டான். ஹாஹ்ஹாஆஆ.
அடடே ஆச்சர்யக்குறி.
...........
அவள் விருப்பத்திற்கு மாறாய் நடக்கும் சமயங்களில்,
ஏ, நீ லாம் அம்மாதான்ன, அபிலாம் செய்யக்கூடாது. நான் பாப்பா இல்ல.
மேடத்திடமிருந்து வரும் மிரட்டலெல்லாம் அதிபயங்கரமாக இருக்கிறது.
ந்நீ என்கிட்ட செம்ம அடிதான் வாங்கப்போற ஆய்யா. கொம்ப எத்து.........
இது அவளின் ஆயா மிரட்டல்களை சமாளிப்பதற்காய், அமித்து சொல்வது.
.....
அம்மா, என் காத்தாடிய அக்கா வந்து தூக்கிட்டு போயிட்டா, எனுக்கு வாங்கிக்குடு.
என் பொம்மைய காணோம், அவன் எத்துன்னு போயிட்டான்.
இங்கதாம்மா இருக்கு, டேபிள் மேல,
கண்ணைத் திறக்காமலே சில சமயம், அந்த பொம்ம இல்ல, வேற பொம்ம.
என் ச்சேக்கிள் ஒஞ்சிப்போச்சி, ஒச்சிட்டாங்க. கதுவ தெற, நான் வெளிய்ய போனோம்.
இது போன்ற புகார்களை நாங்கள் கேட்கும் நேரம்,தீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.
(புகார் பிறகு பரீசீலிக்கப்படும் என்ற எங்களின் கோரிக்கை சில சமயம் மேடத்தால் நிராகரிக்கப்பட்டு, தொடர் அழுகைக்கு ஆயத்தமாவார்கள்.)
.......
கீழே தனியாக போகக்கூடாது என்ற அறிவுரைக்குப்பிறகு, அமித்துவிடமிருந்து வந்த வடிவேலு பாணி டயலாக் (அவள் வடிவேலுக்கு வைத்திருக்கும் பெயர்: ஆதித்யா)
நான் கீழ்ழ போறன், கீழ்ழ போறன், கீழ்ழ போறன்.
......
ம்மா, கதச் சொல்லும்மா, டால்பின் கத, ஜீப்ரா கத சொல்லு.
சரி..............
ஆவ்வ்வ்., கொட்டாவி விட்டபடியே. எனுக்கு தூக்கம் வருது, நீ கதல்லாம் ச்சொல்லாத. ச்சாப் (ஸ்டாப்)
.................
அமித்துவுக்கு தலைக்கு குளிப்பாட்டிவிட்டு, துவட்டிக்கொண்டிருக்கும் போது
அம்மா, என்ன தூக்கிட்டே தொட.
யாராச்சும் தூக்கிட்டே துடைப்பாங்களா. நீ சரியா இப்டி நில்லு, நான் சீக்கிரம் துடைச்சிடுவேன்.
அந்த, அந்த பாப்பா ஆங்க அம்மா தூக்கிட்டே தொச்சாங்கல்ல.
எந்த பாப்பாவோட அம்மா?
அதான், அம்ப சாப்புட போம்போது பாத்தமே, தம்பிப் பாப்பா ஆங்க அம்மா தூக்குனாங்களே. அபியே தொச்சாங்களே. நீ என்னத் தூக்கு.
(அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும் போது எதிர்வீட்டில் இருக்கும் ஒருவயதுக்குழந்தையை குளிப்பாட்டி, இடுப்பில் உட்காரவைத்து தலை துவட்டிவிட்டிக்கொண்டிருந்தார்கள் அந்தக்குழந்தையின் அம்மா)
பெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.?
......
சைக்கிள் ஓட்டிக்கொண்டே இருப்பாள், சில சமயம் நிறுத்திவிட்டு இறங்கி டயர் பக்கமாய் ஏதோ செய்வாள்.
என்னமா செய்ற?
சிக்,சிக், சிக் (பேக்ரவுண்ட் ம்யூசிக்கோடு) பெட்ரோல் போர்றம்மா.
(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :)
30 comments:
//(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :) //
அதானே நாங்கெல்லாம் ஆரு.. :)))
//அடடே ஆச்சர்யக்குறி./
பாஸ் இது மொத்தபதிவுக்கும் இது கொடுக்கலாம்.
கவிதை
//தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.
(புகார் பிறகு பரீசீலிக்கப்படும் என்ற எங்களின் கோரிக்கை சில சமயம் மேடத்தால் நிராகரிக்கப்பட்டு, தொடர் அழுகைக்கு ஆயத்தமாவார்கள்.//
பாஸ் அதான் ஆபிஸ்ல தூங்குறீங்களே.. அப்புறம் என்ன?
//
நான் கீழ்ழ போறன், கீழ்ழ போறன், கீழ்ழ போறன்.//
ரவுடி :))
:)) அருமைங்க.
கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போன கதைகளும் உண்டு.
"தாட்டி!! அம்மா தூங்கிட்டா.." என்ற குரல் கேட்டுதான் எழுந்து கொள்வேன் :))
தாட்டி, தாத்தாவின் பெண்பாலாம் :))
படிப்பு சொல்லித் தரேன்னு பாட்டியையும் தாத்தாவையும் அப்பாவையும் முதுகில் படீர் படீர் என்று அடிக்கும் போது "கண்ணு ஸ்கூல்ல அடிப்பாங்களாம்மா"ன்னு நான் கேட்ட போது மூன்று பேரும் என்னோட சண்டைக்கு வந்துட்டாங்க.. "எங்கள இந்த அடி அடிக்கறா.. அதைப் பத்தி கேக்காம் ...அப்டீன்னு. :))
///,தீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.///
முன்னல்லாம் குழந்தைக்கு கனவுல கிருஷ்ணர் பூ மட்டும்தான் காண்பிச்சு கொண்டிருந்தார் இல்லையாங்க.. :))
-வித்யா
கொடுத்து வைத்த சூர்யா
/நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல /
போச்சுரா!!! சைக்கிளுக்கெல்லாம் பெற்றோல் போட முடியுமா விக்கிறே விலையிலே??????
சூர்யா..::-))) இப்போவேவா!
/
கொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு./
அதானே...சொன்ன பேச்சை கேட்கறேன்னு சொல்றாங்க இல்லே..;-)))
/. ஏ, எங்க வீட்டுக்கு வராத, நா ப்போலீச்கார் பொண்ணு, உன்ன அச்சீர்வேன் /
அது!!! நீங்க முதல்முதல்ல கொடுத்த அறுசுவை லிங்க்தான் ஞாபகத்துக்கு வருது....;-)
//ஏ, நீ லாம் அம்மாதான்ன, அபிலாம் செய்யக்கூடாது. நான் பாப்பா இல்ல.// அதானே?!
//என் ச்சேக்கிள் ஒஞ்சிப்போச்சி, ஒச்சிட்டாங்க. கதுவ தெற, நான் வெளிய்ய போனோம்.
இது போன்ற புகார்களை நாங்கள் கேட்கும் நேரம்,தீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.//
ஆஹா.. படிக்கும் போதே கிர்ர்ர்ங்குது!
//அஸ்கா புஸ்கா, ஆளப்பாரு டவுன்
ஆப்பி பர்த்த டே டூ ய்யூ
மே கா பளஸ் சூர்யா// :)) ச்சோஓஒ ச்வீட்! கேக்கணும் போல இருக்கு.
ஹாஹாஹா... வழக்கம் போல் கரைந்து போனேன் மழலை மொழியில்.
எப்போவாவது ஆஃபிஸ் டென்ஷன் அதிகமாகும் போது, மனசு பாரமாய் இருக்கும் போது அமித்து அப்டேட் வாசித்து சரி செய்து கொள்கிறேன். கொள்ளை முத்தங்கள் அழகுக்கு.
;-))
அடடே!
ஆஆவ் ஸ்டாப் - நிறுத்துங்க ப்ளீஸ் ;)
ஆதித்யா - அழகான பேராயிருக்கே, வடிவேல் கேள்விப்பட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ம்பாரோ
நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் சுவையோடு ...
:))))
அமித்துவே பேசற மாதிரி இருக்கு சாரதா...
கியூட் குட்டிப் பொண்ணு.
இரசித்து இரசித்து படித்தேன். அமித்துவைப் பாராட்டுவதா அழகாகப் பகிரும் உங்களைப் பாராட்டுவதா?
/*பெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.?*/
ஹா...ஹா... அதானே!!!
ஆமாம் கொடுத்து வைத்த சூர்யா,கதை சொல்லி அம்மாவுக்கு பிறந்த, கொடுத்து வைத்த சூர்யா. நலமா அமித்தம்மா.என்னாச்சு
பல நாள் நான், பெட்ரோல் பங்க் காரங்கள விட அதிகமான பெட்ரோல் வித்திருக்கேன் எங்க வீட்டு சைக்கிள் ஓட்டிக்கு.. :)
நான் கீழ போறேன் கீழ போறேன் கீழ போறேன் தான் சூப்பர்.. ஏன்னா நாங்களாம் வடிவேலு ரசிகர் சங்கம் .. ;)
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
நலம், நலமறிய ஆவல் காமராஜ் சார்.
பெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.?
- எத்தன நாளுக்கு தான் நாம ஒப்பிட்டு பேசறது,
அவங்களும் செய்யட்டுமே
அருமையான பதிவு,
:-)))))
வாங்க, அமித்து அம்மா, வாங்க.
அருமை அமித்துக்குட்டி
//(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :) //
ஹா... ஹா அமித்து.. முடியல-)))
:-)))
இது ஒரு நல்ல ஏற்பாடு அமித்தம்மா.
குழந்தைகளின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள்,(அவ்வளவுதான் வாய்க்கும் நம் குடும்பங்களுக்கு.அல்லது உறவினர்கள் திருமணதிற்கு போன இடத்தில்,"ஏப்பா ஒரு போட்டோ எடுத்து கொடேன்.ஸ்டுடியோ வந்து வாங்கிக்கிறேன்") புகைப் படம் எடுத்து சேர்த்து வைத்து குழந்தைகளின் பரிணாமங்களை பார்த்து நிறைந்து கொள்வது போல்.புகைப் படங்களை விட,இது நிறைய பேசும் அமித்தம்மா.
அமித்து அப்டேட்ஸ்,பப்பு டைம்ஸ்,நேகாவின் நேரம்,எல்லாத்தையும் ஆரம்பம் தொட்டு வாசித்து பாருங்களேன்..படிப் படியாக அவர்களின் உச்சரிப்பை..கிளாஸ்!
கொஞ்சம் முன்னாடியே இந்த வலை உலகம் வந்திருக்கலாம் என்று தோனுகிறது.நானும்,"மகா அப்டேட்ஸ்,சசி டைம்ஸ்"என்று தொடங்கி இருப்பேன்தான்.ஊருக்கு போகும் போது லதாவிடம் கேட்கலாம்,"இப்படி ஒரு ஐடியா இருக்கு.சமூகம் என்ன நினைக்கிறீங்க?"என்று.இனிமேல் நமக்கு பிறந்தால் அவர்கள் பேரன்/பேத்தி என்பாள்,பொல்லா சமூகம் :-)
:)
nice.....
ஆகா அருமை அருமை...
வித்தியாசமான நாசூக்கான எழுத்து நடை...
ரொம்ப பிடிச்சிருக்குங்க....
உங்கள் தளத்திற்கு புதியவர் நான்...
வசதி இருக்கும் போது நம்ம பக்கமும் வர முயற்சியுங்களேன்..
//அவன், அவன், அபியே பயுந்து ஓட்டான். ஹாஹ்ஹாஆஆ//
யாரோட புள்ள? அதான்!!
சிர்ப்பு சிர்ப்பா வர்து.... குறும்புக்கார குட்டி பாப்பாக்கு ஒரு ஹாய் சொல்லுங்க...
வெய்டிங் பார் அனதர் அப்டேட்.
சூப்பர் அமித்து அம்மா..
//கொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு//
சூப்பரோ சூப்பர்..
அழகு மழலை
அழகு அப்டேட்ஸ்.
Post a Comment