26 February 2010

அமித்து அப்டேட்ஸ்

எச்சோ, அம்மா, சித்தி, மாம்மி இதெல்லாம் போய் இப்போது ஆன்ட்டியம்மா” வாக அவதரித்திருக்கிறேன், வர்ஷினியின் வாயால்.

......

உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த போது, அமித்து என்னிடம்

ம்மா, உன்க்கு ஓம்புச் சரில்லயா?

ம், ஆமாண்டா.

நான்னு ஊசி ப்போட்டா?

வேணாண்டா, டாக்டர்கிட்ட போலாம்.

ஆஆஆஆஆ - இது நான்.

நான் திரும்பி படுத்திருந்த நேரத்தில், பின் கையில் ஊசி போட்டு முடித்தாயிற்று. அவள் ஊசியாகப் பயன்படுத்தியது டெஸ்ட்டரை.

ஊசி போட்டு முடித்தபின், பெய்ய ஊச்சி போட்டாச்சு, சர்யா போய்ரும் - இது அமித்து.

அந்த என் அலறலுக்குப் பின், இப்போதெல்லாம் மேடம் இப்படித்தான் ப்ளாக்மெயில் செய்கிறார்கள். ம்மா, பெய்ய ஊச்சி போட்டுர்வேன் என்ற நமுட்டுச்சிரிப்போடு.

.......

அம்மா, நான்னு உன்க்கு மாத்திர எத்து தர்ட்டா?

வேணாம்மா, நானே எடுத்துக்கறேன்,

சரி, நான்னு உனுக்கு மாத்திர ஏதி (எழுதி) த்தர்ரேன், பேப்பரையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு கிறுக்கித் தள்ளியாகிறது.

…………

நான்னு நல்லா ட்டாயிங்க் (ட்ராயிங்க்) வரைவேனே.

எங்க மிச்சு எனுக்கு எட்டு மார்க்கு குத்தாங்க

எதுக்கு?

ஒர்நாளு நான்னு ஏ, ப்பீ, ச்சீ ஏதுனன்ல்ல அதுக்குத்தான்.

......

A அம்மா, A அப்பா,

A, B, C, வர்ச்சினி

அப்பா, அங்க ப்பார்ரேன் முங்க (முருங்கை) மரம்.

அது முருங்கை மரம் இல்லம்மா, புளியமரம் (அவளின் அத்தை ஊரில்)

அபியா……….., இங்கீச்ல என்னப்பா?

.......

எதையாவது கேட்டுவிட்டு இதுக்கு இன்னோர் பேர்ரு என்னம்மா? என்று கேட்பது வழக்கமாகிவிட்டது

........

பென்சிலால் நோட்டில் கிறுக்கிவிட்டு, அவளின் மாமாவை கூப்பிட்டு, மாம்மா, இத்து என்னா ச்சொல்லு?

தெரியலியேம்மா?

எல்லி (எலி)

ஓ, எலியா?

ஆம்மாம், இத்து சாம்மி எல்லி, நம்பள கய்க்காது (கடிக்காது) சர்யா?

நீ சொன்னா சரிதாம்மா.

.......

பவித்ரா எதையாவது எடுத்து கிழித்தோ, கொட்டியோ விடுவாள்.

அமித்து (நல்ல மூடில் இருந்தால்) அவளிடம் போய், அதெல்லாம் எக்கக்கூடாதும்மா, கீக்கக்கூடாதும்மா, அக்காதும்மா, அப்றம் அக்கா அழுவம்மா...

........

அம்மா, நான் போய்யி அந்தச் ச்சேர்ர (chair) எத்து வர்ரேன்.

சரிம்மா.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடிரென்று, நீய்யே ப்போய் எத்து வா அம்மா, நான்னு சின்னப்பாப்பா இல்ல, த்தூக்க முய்யாது, அதான்.

சரிம்மா, எடுத்துட்டு வந்து தரேன்.

........

அமித்துவும் சேர்ந்து தண்ணியில் விளையாடியிருப்பாள், ஆனால் பவித்ராவை நோக்கி, தண்ணீல்ல வெளாடக்கூடாதும்மா, அம்மா வந்தா டம்மால், டம்மால்னு அச்சீர்வாங்க.

ஊருக்கு தான் உபதேசம் :)))

....

ரொம்ப அடம் பிடிக்க நேரும்போது, அவளை மிரட்டினாலோ, இல்லை அடிப்பது போல் கையை ஓங்கினாலோ,

அமித்துவிடமிருந்து வரும் பதில், நான்னு சின்னப்பாப்பா தான்னே, ஏன் என்ன அக்கிற?

அமித்துவிடம் கொஞ்சம் மிரட்டும் தொனியில் பேசினால், ஏன் எச்சோ, என்கிட்ட கோச்சிக்கிற?

......

ஒர்நாள்ளு, ஒர்நாள்ளு ஒஜ்ஜாரி (ரொசாரியோ) என்ன அச்சிட்டான், கீழ்ழ தள்ளிட்டான்.

ஒஜ்ஜாரி, குஜ்ஜாரி

.....

எங்கள் வீட்டிலிருந்து எதிர்வீட்டு மாடியிலிருக்கும் தனம் என்ற சிறுமியிடம் ஒருநாள் காலையில் அமித்து, எட்டி எட்டிப் பார்த்து

தான்னம், தான்னம், நீ ச்சூல் போல்ல, லீவ்வா.. என்று விசாரிப்பு மேற்கொள்ள,

பாவம் தனத்தின் காதில்தான் எதுவும் விழாமல், எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி ஒரே ரியாக்‌ஷனை செய்து கொண்டிருந்தாள்.

…….

அமித்துவிடம் ஒரு பிங்க் நிற பொம்மை இருக்கிறது. அதுதான் அவளின் பாப்பா. சோறூட்டுவது, டாக்டரிடம் அழைத்துப்போவதெல்லாம் அவளைத்தான், அதாவது அந்த பொம்மையைத்தான்.

சஞ்சு, கார்த்திக், பவித்ரா, அமித்து எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்க, அமித்து அந்த பொம்மையை கீழே படுக்க வைத்துவிட்டு,

அக்கா, இங்க பார்ரேன், பாப்பா தூங்கிட்டா, பார்த்துக்கோ, ச்சாப்பாடு ஊட்டு, நான்னு ஆப்பிச் போற்றேன், பை, நான்னு சாங்காலம் வம்போது உனுக்கு செப்பு வாங்கறன். பத்தும்மா பாத்துக்கோ.

சஞ்சு என்னைப்பார்த்து சித்தி என்னாது இது? பாப்பா எப்படி சொல்லுது பார்ரேன்.

நான் இதற்கு எந்த ரியாக்‌ஷன் காட்டுவது என்று தெரியாமல்….

நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.
........

34 comments:

அமுதா said...

அமித்து அப்டேட்ஸை அமித்து மொழியில் அழகாக தரும் உங்களுக்கு ஒரு ஸ்டார். (என் பொண்ணு ஸ்கூல்ல அவங்க மிஸ் ஸ்டார் போடுவாங்க, அவங்க ஏதாவது நல்லா செஞ்சிருந்தால்...).

/*நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்*/
என்ன சொல்வது இதற்கு என்று தெரியவில்லை...

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைகள் உலகம் அழகானது,

நம்முடையது!!!!.. அழுக்கானது..

நட்புடன் ஜமால் said...

நமுட்டு சிரிப்பு - கற்பனை செய்து ஹாஜரில் பார்த்து கொள்கிறேன்

டாக்ட்டர் அமித்து - வாழ்த்துகள் மருமகளே - காசுக்காக மட்டும்ன்னு இல்லாம நல்ல டாக்ட்டரா வரனும்

8 மார்க்கு தானா

சொல்லுங்க சொல்லுங்க இங்கீச்ல என்னா

உங்களுக்கு இன்னோர் பேர் இருக்குதுல்ல - அதான் அவங்க கேக்குறாங்க

ஹை எல்லி

கீக்கக்கூடாது - ச்சோ ச்சூவீட்

சேர் எடுத்து கொடுத்தாச்சா சகோ

நீங்க அடிச்சிருப்பீங்க - அதான் சொல்றாங்க டம்மால்லு அடிச்சிருவாங்கன்னு

ஆமாம் ஏன் சகோ அமித்துகிட்ட கோச்சுகிறீங்க

ச்சூல் போல்ல - நீங்களும் ரெடியாகுங்க அமித்து மருமகளே

உனுக்கு செப்பு வாங்கறேன் - நெகிழ்ந்துட்டேன் சகோ

பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள் - நிதர்சணம்.

சென்ஷி said...

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//

அருமை :)

Anonymous said...

அமித்துவின் பேச்சுக்கள் எல்லாம் ரசனை

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வுக்கு நன்றி!

வருங்கால மருத்துவர் அமித்துவுக்கு வாழ்த்துக்கள்:)!

☀நான் ஆதவன்☀ said...

:)))) ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க அமித்து அப்டேட்ஸ் இட்டதற்கு நன்றி பாஸ்.

//பேப்பரையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு கிறுக்கித் தள்ளியாகிறது.
//

டாக்டர் ஆகுறதுக்கு எல்லா அறிகுறியும் இருக்கே பாஸ் :)

//
ரொம்ப அடம் பிடிக்க நேரும்போது, அவளை மிரட்டினாலோ, இல்லை அடிப்பது போல் கையை ஓங்கினாலோ,//

பாஸ் நாங்கலெல்லாம் இருக்குறது ஞாபகம் இல்லையா உங்களுக்கு..இன்னொரு தடவை கை ஓங்குனா அப்புறம் நடக்குறதே வேற ஆமா.

☀நான் ஆதவன்☀ said...

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//

அழகான வரிகள் பாஸ்.

சந்தனமுல்லை said...

:-))))

அமித்து பேச்சுகள் அனைத்தும் கொள்ளை அழகு...அமித்து அம்மா...

ஆயில்யன் said...

அமித்து அப்டேட்ஸை அமித்து மொழியில் அழகாக தரும் உங்களுக்கு ஒரு 5 ஸ்டார்.
:)

Dr.Rudhran said...

very pleasant

அண்ணாமலையான் said...

ரொம்ப ஜாலியா இருந்தது....

தமிழ் அமுதன் said...

வழக்கத்தைவிட சற்று கூடுதல் சுவை..!

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.///

எப்படி இப்படியெல்லாம்?

வாழ்த்துக்கள் ..!;;;)))

"உழவன்" "Uzhavan" said...

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//
 
உங்களின் பூரிப்பை உணரமுடிகிறது இவ்வரிகளில் :-)))
வரிஷினிக்கு எப்போதும் எங்களின் அன்பு

Thamiz Priyan said...

அழகா இருக்கு!

க ரா said...

குழந்தைகளால் நம் உலகம் அற்புதமானதாக மாறுகிறது. பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீய்யே ப்போய் எத்து வா அம்மா, நான்னு சின்னப்பாப்பா இல்ல, த்தூக்க முய்யாது, அதான்.//

நாம கூப்பிடாதப்ப ..என்னையேன் கூப்பிடல நான் உனக்கு ஹெல்ப் செய்திருப்பேன்னு சொல்றதும் .. கூப்பிடறப்ப நான் டயர்டா இருக்கேன்னு சொல்றதும்..இதுங்க அட்டகாசம் சொல்லி முடியாது.. இருந்தாலும் நாம அம்மாவாச்சே அதை நாலாயிரம் தடவைன்னாலும் அலுக்காம சொல்லிட்டிருப்போம் :))

ரிஷபன் said...

நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.

இந்த வரி இன்னும் உலுக்குகிறது

அம்பிகா said...

அமித்து அப்டேட்ஸ் அழகு.:-)))))

பா.ராஜாராம் said...

படம் போட்டாச்சா?..சொல்லவே இல்லை.

:-))))

சிரித்துக் கொண்டே இருந்தேன் அமித்து.//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.
........//

படம் விட்டாச்சுன்னு சொன்னாங்க எச்சோ,அம்மா,சித்தி,ஆண்ட்டியம்மா.

:-)

Unknown said...

good very nice . iam first time visit ur blog.neraya post orey muchula patichutan.keep it up.

Unknown said...

மேடம் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டாங்களா? வாழ்த்துகள் :-)

ஹுஸைனம்மா said...

/இதுக்கு இன்னோர் பேர்ரு என்னம்மா?//

இன்னும் கொஞ்ச நாளில் எதையெடுத்தாலும் இதுக்கு இங்கிலீஷ்ல என்னம்மா என்று கேள்வியும் வரும், என்னிடம் ஃபோனுக்கு (சேர், டிவி,... களுக்கும்) இங்கிலீஷில் என்ன என்று என் மகன் கேட்டதுபோல!!

ஆடுமாடு said...

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்//

இப்படிலாம் சொன்னா, அமித்துட்ட புடிச்சுக்குடுத்துடுவேன்.

SK said...

:) :)

Dhiyana said...

அருமை அமித்து அம்மா.. பகிர்வுக்கு நன்றி

Gowripriya said...

இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.

:))

மோனிபுவன் அம்மா said...

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//


வரிகள் அருமை

குழந்தைகள் உலகம் அழகானது

அதில் அவர்களளுடன் நாமும் குழந்தைகளாவது இனிமை


அதில் நீ அழகாக

மோனிபுவன் அம்மா said...

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.//


வரிகள் அருமை

குழந்தைகள் உலகம் அழகானது

அதில் அவர்களளுடன் நாமும் குழந்தைகளாவது இனிமை


அதில் நீ அழகாக

கோமதி அரசு said...

//நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம்,இப்போதைய குழ்ந்தைகள் பெரியவர்களாகத் தான் பால்யத்தையே கடக்கிறார்கள்//

உண்மை,அமித்து அம்மா.

உங்களுக்கு வாழ்த்துக்கள்!!

கலைமகளில் உங்களின் பதிவு பார்த்தேன்,நன்றி ராமலக்ஷ்மி.

Priya said...

குழந்தைகள் உலகம் அழகானது!ரசித்து படித்தேன்!

பின்னோக்கி said...

வழக்கமான அமித்து அப்டேட்ஸ் மாதிரி அருமையாக இருந்தது. உங்கள் குழந்தை போட்ட ஊசியிலேயே உங்கள் வலி போயிருக்கும்

இரசிகை said...

azhagaayirukku.........

கவிதன் said...

ஒர்நாள்ளு, ஒர்நாள்ளு ஒஜ்ஜாரி (ரொசாரியோ) என்ன அச்சிட்டான், கீழ்ழ தள்ளிட்டான்.

ஒஜ்ஜாரி, குஜ்ஜாரி...

ஒரே காமெடியா இருக்கு......!