15 September 2009

அமித்து அப்டேட்ஸ்

ம்மா குள்ளப்பாட்டு,குள்ளப்பாட்டு என்றாள் பார்பியை கையில் வைத்துக்கொண்டு..

அது என்னம்மா குள்ளப்பாட்டு, அம்மாவுக்கு தெரியாதே... ஏதாவது ரைம்ஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே .. இது அறிவு ஜீவியான நான்.

அதில்லம்மா, ஓப்பு போட்டு குள்ளப்பாட்டு பாபிய,பாவம் பாபி ......

குள்ளப்பாட்டு என்பது குளிப்பாட்டு என்பதன் மழலை என்பதறிந்தேன்.

.........

பல்லுக்கிடையில் ஏதோ நெருட,வாய்க்குள் கையை வைத்துக்கொண்டிருந்தேன்.

ம்மா, ஆய்பக்கம், அத்து ஆய்பக்கம்... (ஆய் பழக்கம், கெட்ட பழக்கம்)

எதும்மா

இத்து இத்து என்றாள் என் வாயில் கைவைத்து நெருடுவதை எடுக்கும் முயற்சியில் சுவாரஸ்யமாய் ஈடுபட்டிருக்கும் என் கையைக் கைகாட்டி.

வெட்கித் தலைகுனிய வைத்தாள்

............

ம்மா, கண்ணம் மூடு, வாய்ல கை வை

வெச்சிட்டம்மா,

இபியில்லம்மா இபி., அவளே எனது கையை வாய்க்கும் கன்னத்துக்குமாய் சரி செய்து விட்டிருந்தாள்

சொல்லு, காப்பாத்து, கிச்சுணா காப்பாத்து

!!!!!!!!!!!

..........

ம்மா, கண்ணம் மூடு

ஏன்ம்மா,

ஓப்பு போடனும், கண்ணு எய்யும், கண்ணம் மூடு

மூடிட்டேம்மா, முகம், கைகாலுக்கும் ஓப்பு போடும் பாவனை முடிந்து, பிறகு என்னை குளிக்க வைத்த் பாவனையும் முடிந்ததென்று
நான் எழ முற்பட, இர்ரு இர்ரு, இர்ம்மா.,

என்னம்மா,

கையிலிருக்கும் சின்ன சின்னப் பாத்திரத்தை வைத்து ச்சுத்தி ச்சுத்தி என்று அவள் தலையை ஆட்டி ஆட்டி பின்னர் கீழே அதைக் கவிழ்த்தவுடன்

ம்மேல்லப் பார்ரு, அபியில்ல..., மேல்ல ஃபேன்னைப் பார்ரு

பார்த்தவுடன், இப்போது கழுத்துக்கிடையில் பவுடர் போடுவது நிஜமாகவே நடந்தது.

இது அடிக்கடி அவள் அப்பாவுடனும், எப்போதாவது என்னுடனும் நடக்கும்.

!!!!!!!!!

.........


சளிபிடித்து தொண்டை கரகரத்துக் கொள்ள, தொண்டையை ஒரு மாதிரி கரகரத்துக்கொண்டேன்.

விளையாடிக்கொண்டிருந்தவள், என்னிடம் வந்து

ஆ காட்டு, அத்தம் எங்கந்து வந்துச்சு, ஆ காட்டூ......

இங்கந்துடா, என்றேன் தொண்டையக் காட்டி..

ச்செய்யி, மீண்டும் செய்தேன், என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள், எங்க காண்ணோம் அத்தம்?

!!!!!!!!

..........

அங்கம், ச்செல்லம், பேத்ரா (பவித்ரா) ச்செல்லம் - இது அவளின் பெரியப்பாவின் சிறிய மகளை அமித்து கொஞ்சும் மொழி

நஞ்சக்கா (சஞ்சு).. அது என்னுது, தொடாத, வுட்டுடு ...... அவளின் பெரியப்பாவின் பெரிய மகள் இவளின் பொம்மைகளை எடுக்கும் போது சொல்வது

.......

ம்மா, இங்க வந்து பார்ரேன், இது என்ன மாதி இர்க்கு சொல்லு .......
(எது மாதிரி இது இருக்கு என்பதைதான் இப்படி கேட்கிறாள் என்பதை உணர நிறைய சந்தர்ப்பங்கள் இது போல தேவைப்பட்டது எனக்கு :)

ம்மா, இங்க வா, ச்சொலித்தா,

இது Egg... முத்தை

இது key .. இல்ல இத்து ச்சாவி

இது kite .. காத்தாடி

என்னை சொல்லித்தர கூப்பிட்டு மேடம் எனக்கு சொல்லித் தந்து, அப்படிய்யே அது விலங்குகள் பக்கம் போய் காந்தாமிக்கம் என்று முடிந்தது :)

.....

தினமும் சாயங்காலம் நான் போனபின்னர், அமித்துவைப் பற்றிய குற்றப்பத்திரிக்கை அவளின் பாட்டி மூலமாக என்னிடம் வாசிக்கப்படும்

பாத்ரூம்ல போய் தண்ணிய தெறந்துவிட்டுட்டு நிக்கறா, மாடிப்படிய எறங்கிடறா, எத வெளையாட கொடுத்தாலும் அக்கு வேற ஆணி வேற. மை டப்பா தெறந்து மையெல்லாம் எடுத்து வெளிய பூசிடறா என இத்யாதிகள்...

இதைக் கவனித்துக்கொண்டே வந்த அமித்து ஒருநாள் அவள் ஆயா என் எதிரே உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருக்க, எங்களிடையில் வந்து நின்று கொண்டு

ஒல்லாத்த, ஆய்யா ஒல்லாத என்று அதட்டும் தொனியிலும், க்கேக்காத, ம்மா, க்கேக்காத என்று என்னிடமும்..

பிறகெங்கே பஞ்சாயத்து..? எல்லாம் ஒரு சிரிப்புக்குள் ஒளிந்து ஓடி மறைந்துவிட்டது.

.......


கடந்தவாரத்தில் ஒரு மதியம் நான் ஆபிஸுல் இருந்த போது, அவளின் தாத்தா எனக்கு போன் செய்ய..

ஃபோனை வாங்கி, ம்மா, நல்லாக்கியா, ஆப்ட்டியா... என்று கேட்டுவிட்டு ஃபோனை அவளின் தாத்தாவிடம் தந்துவிட்டாள்

அப்புறம் அவளின் தாத்தா பேசியதொன்றும் காதில் விழவில்லை, கண்ணீர் தான் கீபோர்ட் மீது விழுந்தது.

......

ஒரு நாள் நடு இரவில், ம்மா, எச்சோ த்தண்ணி..

இந்தாம்மா தண்ணி

ச்சுடத் தண்ணி ஏனும்..

சுடத் தண்ணிதான், ஆறிப்போச்சு, குடி.

குடித்து முடித்தபின்.. இல்ல இத்து ஆய் தண்ணி..

இல்லம்மா நல்ல தண்ணிம்மா...

இல்ல இத்து ஆய் தண்ணி..

அம்மா ஒனக்கு ஆய் தண்ணி தருவனாம்மா ?

இல்லம்மா, ஆய் தண்ணிம்மா என்று சிணுங்கலோடவே உறக்கத்தில் சொல்லியவளை நான் எந்தமொழிக்கொண்டு வாதிட்டு சொல்ல...


இப்படி ஒவ்வொரு தருணத்திலும் என்னை வென்றுக்கொண்டே சிரிப்புடனும் சினேகத்துடனும் சில சமயம் ஏக்கத்துடனும் ஆக்ரமித்துக்கொண்டே வருகிறாள் யாதுமாகி நின்ற காளி, என் செல்ல மாகாளி :)

32 comments:

☀நான் ஆதவன்☀ said...

சில இடங்களில் புன்னகை, சில இடங்களில் கண்ணீர், சில இடங்களில் ஆச்சர்யம் என எல்லாம் கலந்த ஒரு காக்டெயில் எனக்கு தந்தது இந்த பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் மகளின் செயல்கள் நினைவுக்கு வந்தது. அவளும் இப்படித்தான் என்னை குளிப்பாட்டி தலைசீவின்னு அக்கறையா விளையாடுவா.. பையன் இப்ப உஹூம்.. :(

ஆயில்யன் said...

//பல்லுக்கிடையில் ஏதோ நெருட,வாய்க்குள் கையை வைத்துக்கொண்டிருந்தேன்.

ம்மா, ஆய்பக்கம், அத்து ஆய்பக்கம்... (ஆய் பழக்கம், கெட்ட பழக்கம்)///


நோ கமெண்ட்ஸ் !

கல்யாண்குமார் said...

குழலினிதுயாழினிது என்பர்-தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார் என்று வள்ளுவர் எவ்வளவு ரசித்துச் சொல்லியிருக்கிறார். அமித்துவின் மழலைச் சொற்களை ஒரு கவிதைத் தொகுப்பாகவே நீங்கள் வெளியிடலாம் போலிருக்கே!

pudugaithendral said...

தலைகுளித்து முடித்ததும் இருக்கும் ஈரத்தலைக்குள் கைவிட்டு அம்ர்தா தன் சட்டை கொண்டு துடைத்து ஈரம் போக்கியது நினைவுக்கு வருது.

மகளா? தாயா?? குழப்பம் தொடர்கிறது.

அருமையான பகரிவு. குட்டிம்மாவுக்கு வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

//பிறகெங்கே பஞ்சாயத்து..? எல்லாம் ஒரு சிரிப்புக்குள் ஒளிந்து ஓடி மறைந்துவிட்டது

//

:)

Thamira said...

ரசனை.!

ஆகாய நதி said...

super updates :)))))))))))

ur chellama kaali updates :)

சந்தனமுல்லை said...

மிக அழகு!! நல்லாருக்கு அமித்து அம்மா :-) ரசித்தேன்!!

Unknown said...

//பல்லுக்கிடையில் ஏதோ நெருட,வாய்க்குள் கையை வைத்துக்கொண்டிருந்தேன்.

ம்மா, ஆய்பக்கம், அத்து ஆய்பக்கம்... (ஆய் பழக்கம், கெட்ட பழக்கம்)

எதும்மா

இத்து இத்து என்றாள் என் வாயில் கைவைத்து நெருடுவதை எடுக்கும் முயற்சியில் சுவாரஸ்யமாய் ஈடுபட்டிருக்கும் என் கையைக் கைகாட்டி.

வெட்கித் தலைகுனிய வைத்தாள்//

குட்டிம்மா ச்சோ ஸ்வீட். அம்மாவுக்கு கத்துக்கொடுத்த மாதிரி கொஞ்சம் நிலாவுக்கும் சொல்லிக்கொடுடா

Vidhoosh said...

வழக்கமா நான் updates படிச்சிட்டு பேசாம போயிடுவேன்.

//கிச்சுணா காப்பாத்து//
//எங்க காண்ணோம் அத்தம்?//

இது ரெண்டும், அட அட.. For she created me, as her mother!

மாதவராஜ் said...

அடேயப்பா....
திரும்ப திரும்ப படித்தாலும் அலுக்க மாட்டேன்கிறது. குழந்தையின் மொழியில் எவ்வளவு அழகாக உலகம் காட்சியளிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

நானும் என் மனைவியும் குழந்தையுடன் மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தோம். என் குழந்தை மழலையில் பேசியதைக் கண்ட ஒரு பெரியவர் என்னிடம்,‘குழந்தைங்க கிட்ட அடிக்கடி எதைய்வது பேசிக்கிட்டே இருங்க. அப்பதான் சீக்கிரம் பேச்சு வரும் என்று சொல்லிவிட்டுப் போனார். அதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு இன்றளவும் செய்துவருகிறேன். என் மகளின் வயதுதான் உங்கள் மகளின் வயதும். நாட்கள்தான் வித்தியாசப்படுகின்றன என்று நினைக்கிறேன். உங்களுக்கும் அந்த பெரியவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.
மழலையின் சொற்களை அனுபவித்து வரும் மகிழ்வில் நான், எங்கள் இடுகையைப் படித்ததும் வீட்டு ஞாபகம் வந்துவிட்டது....

Karthik said...

மழழையை படிக்கவே ரொம்ப நல்லாருக்கு. க்ரெடிட்ஸ் கோஸ் டு அமித்து! :))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//பல்லுக்கிடையில் ஏதோ நெருட,வாய்க்குள் கையை வைத்துக்கொண்டிருந்தேன்.

ம்மா, ஆய்பக்கம், அத்து ஆய்பக்கம்... (ஆய் பழக்கம், கெட்ட பழக்கம்)///


நோ கமெண்ட்ஸ் !/


ரிப்பீட்டேய்...!

அமுதா said...

அமித்துவின் மொழி அமிழ்து

"உழவன்" "Uzhavan" said...

வர்ஷினி செல்லம்.. அம்மாவை மட்டுமல்ல; எங்களையும் பிரமிக்க வைக்கிறாய் :-))

நட்புடன் ஜமால் said...

குழந்தை என்ற ஒவ்வொரு சொல்லும் ஹாஜரையே நினைவு செய்கின்றது.

எங்கு எந்த குழந்தை பார்த்தாலும் அவர் ஞாபகமே

இதோ எனது மருமகளின் ஒவ்வொரு செய்கையிலும் நான் என் மகளை காண்கிறேன்

மிக அழகாக படம் பிடித்து காட்டுகின்றீர்கள் - முடிந்த அளவு எங்களை அமித்துவோடு வலம் வரச்செய்கின்றீர்கள்.

பப்புவுக்கு பிறகு அதிகம் வலம் வருவது அமித்துவோடுதான்.

அந்த கீ போர்ட் கண்ணீர் -

இங்கே இப்பொழுது ...

தமிழ் அமுதன் said...

அமித்துவின் பெரிய மனுசி தனமும்,தங்களின் குழந்தைத்தனமும் கண்முன்னே காட்சிகளாக விரிகிறது! இரண்டு வயதிற்குள் அமித்துவின் செயல்கள் வியப்பையும் உண்டாக்குகிறது! அமித்து அறிவில் அவங்க அப்பா போலன்னு அடிக்கடி நிருபிக்குது!!

ப்ரியமுடன் வசந்த் said...

//சொல்லு, காப்பாத்து, கிச்சுணா காப்பாத்து//

எங்க அம்மா சின்ன புள்ளையில சொல்லிக்குடுத்தது ஞாபகம் வருகிறது


அமித்து பிரமிக்க வைக்கிறாள்

ப்ரியமுடன் வசந்த் said...

இந்த குழந்தை மொழிகள் எப்போவுமே கேட்க்க கேட்க்க ரீங்காரமாய்..

Anonymous said...

அமித்து பேச்சு இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.

செந்தில் நாதன் Senthil Nathan said...

எங்க அம்மாட்ட நான் இதல்லாம் செஞ்சேனானு கேக்கணும்!!! அழகு அமித்து அம்மா!!

பா.ராஜாராம் said...

ஒரு புயல் மாதிரி,மின்னல் மாதிரி இந்த குழந்தைகள் சிமிட்டும் நேரத்தில் ஏதாவது செய்து,பதில் எதிர் பார்க்காது அவர்கள் உலகத்திற்குள் போய் விடுகிறார்கள்தான்.//ம்மா,நல்லாக்கியா,ஆப்ட்டியா//ரொம்ப நெகிழ்வு!அமித்து அப்டேட்ஸ் மட்டும்,வாசிப்பதில்லை.ஒளியும் ஒலியும்!பார்க்க/கேட்க்க mudigirathu அமித்தம்மா!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
குழந்தை என்ற ஒவ்வொரு சொல்லும் ஹாஜரையே நினைவு செய்கின்றது.

எங்கு எந்த குழந்தை பார்த்தாலும் அவர் ஞாபகமே
//

இப்படி தத்தம் குழந்தைகளை பிரிந்து வாடும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும்
சற்றே ஆறுதலான பதிவு உங்களுடைய அமித்து அப்டேட்ஸ்..

எழுத்துகளைக்கூட உயிர்ப்பிக்க முடியுமென்பதற்கு உங்கள் பதிவு ஒரு எ.கா.

"மென்டோஸ்" முழுங்கிய மேடத்தை கேட்டதாக செல்லவும் !!!

நாஞ்சில் நாதம் said...

மிக அழகு:))

Bee'morgan said...

மழலைகளின் உலகம் எப்போதும் ஆச்சரியங்களால் நிரம்பியிருக்கிறது.. :)

எங்களையும் கொஞ்சம் ஆச்சரியப்பட வைத்த பகிர்வுக்கு நன்றி அமித்தும்மா :)

ராமலக்ஷ்மி said...

//ஒல்லாத்த, ஆய்யா ஒல்லாத என்று அதட்டும் தொனியிலும், க்கேக்காத, ம்மா, க்கேக்காத என்று என்னிடமும்..//

முந்தைய பஞ்சாயத்துகளால் வந்த பயம் போலிருக்கு:)!

அமித்தின் அப்டேட்ஸ் எல்லாமே அழகோ அழகு.

kanagu said...

romba nalla irundhudu amithuvin updates padika...

kozhandhainga ulagame thani than... :)
endha bayamum illama manasula patatha apdiye solluvanga....

amithu romba cute :))

/*ஃபோனை வாங்கி, ம்மா, நல்லாக்கியா, ஆப்ட்டியா... என்று கேட்டுவிட்டு ஃபோனை அவளின் தாத்தாவிடம் தந்துவிட்டாள்

அப்புறம் அவளின் தாத்தா பேசியதொன்றும் காதில் விழவில்லை, கண்ணீர் தான் கீபோர்ட் மீது விழுந்தது.*/

migavum negizhchiyaga irundhudu :))

Deepa said...

:-)
//சில இடங்களில் புன்னகை, சில இடங்களில் கண்ணீர், சில இடங்களில் ஆச்சர்யம் என எல்லாம் கலந்த ஒரு காக்டெயில் எனக்கு தந்தது இந்த பதிவு.//

எனக்கும்!

Ungalranga said...

//கடந்தவாரத்தில் ஒரு மதியம் நான் ஆபிஸுல் இருந்த போது, அவளின் தாத்தா எனக்கு போன் செய்ய..

ஃபோனை வாங்கி, ம்மா, நல்லாக்கியா, ஆப்ட்டியா... என்று கேட்டுவிட்டு ஃபோனை அவளின் தாத்தாவிடம் தந்துவிட்டாள்

அப்புறம் அவளின் தாத்தா பேசியதொன்றும் காதில் விழவில்லை, கண்ணீர் தான் கீபோர்ட் மீது விழுந்தது.//

என் அம்மா எனை ஒரு நாள் இதே போல கேட்டாள்.. என்னுடைய கீபோர்ட்டும் நனைந்துதான் போனது..
உங்களதுபோல..!!

இரசிகை said...

valanthu perukattum AN....BU