13 August 2009

சின்னக் கண்ணா

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த ஒரு மாலைப்பொழுது, அம்மா பக்கத்துவீட்டுல க்ருஷ்ணன் பாதமெல்லாம் வெச்சு க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாடறாங்கம்மா, நம்ம வீட்டுலயும் அதே மாதிரி செய்யலாம்மா.

நம்ம வீட்டுல அதெல்லாம் செய்யுற பழக்கமில்ல. போய் படிக்கிற வேலையப்பாரு.

ஏம்மா செய்யமாட்டோம்.

ம்ம், அதெல்லாம் மாடு கன்னு வெச்சிருக்கவங்கதான் செய்வாங்க. போ.

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் உள்ள போய், ம்மா, நம்ம வீட்டுலயும் ஊர்ல பெரிய மாமா, மாடு கன்னு எல்லாம் வெச்சிருக்குல்ல. நாமளும் செய்லாம்மா.

நீ ஒத வாங்கப்போறன்னு நெனைக்கிறேன்.வேணும்னா அடுத்த பஸ்ல ஊருக்கு ஏத்தி அனுப்புறேன்,போய்ட்டு வரியா. ப்போ, போயி ஒழுங்கா படிக்கிற வேலையைப்பாரு.

அப்போதிலிருந்து எனக்கு சின்ன சின்ன க்ருஷ்ணர் பாதங்கள் வைத்து கொண்டாடும் க்ருஷ்ண ஜெயந்தியின் மீது ஆவலும், ஈடுபாடும்.

எங்கள் வீட்டில் கொண்டாட முடியாவிட்டாலும், பள்ளியில் வருடந்தோறும் கொண்டாடுவார்கள், முந்தைய அலுவலகத்தில் சக ஊழியர்களில் சிலர் கொண்டாடி விட்டு முறுக்கு சீடையெல்லாம் தருவார்கள். பலகாரங்களை வாங்கும் போதே, க்ருஷ்ணன் பாதம் வெச்சீங்களா மேடம் / சார்னு கேட்டுக்கொண்டே அதன் கற்பனையோடும்தான் அவர்களிடமிருந்து வாங்குவேன்.

திருமணமாகி வந்தபிறகு, ஒரு நாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்த மாலை, சஞ்சுவின் பாதங்களால் க்ருஷ்ணர் பாதமெல்லாம் வைத்து க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் வீட்டிலிருப்பவர்கள் ஈடுபாட செம குஷி. அம்மாவுக்கு போன் செய்து இன்னைக்கு எங்க வீட்டுல க்ருஷ்ணஜெயந்தி செய்றோமே என்று சொல்ல, சரியாத்தான் பேரு வெச்சிருக்கேன் உனக்கு யசோதா என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள். அதற்கடுத்தவருடம் ஒரு நெருங்கிய உறவினரின் மரணத்தால் கொண்டாட முடியவில்லை.

இதோ இந்த வருடம், இன்று வர்ஷினியின் சின்ன சின்னப் பாதங்களை அச்சாக வைத்து க்ருஷ்ணன் பாதம் வைக்கவேண்டும். முறுக்கு, சீடை என்று பெருமுயற்சியிலெல்லாம் ஈடுபடாமல், நம்மால் முடிந்தவரைக்கும் பாலும் பழமும் வைத்து சின்னக்கண்ணனை எங்களின் கூட்டிற்கு கூப்பிடவேண்டும்.
நீல நிறத்தில், உருண்டை முகமும், பக்கத்தில் வெண்ணெய் பானை கவிழ்ந்து கிடக்க, புல்லாங்குழலை ஒரு கையின் பிடித்துக்கொண்டு, மயிற்பீலி தரையைத்தொடுமாறு ஒரு பக்கம் சாய்ந்தவாறு கடைவாய் சிரிப்போடு நம்மைப் பார்க்கும் சின்னக் கண்ணனின் படத்தைப் பார்க்க பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் வருகிறது.

கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது. அதை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்.

அனைவருக்கும் கோகுலாஷ்டமி (கிருஷ்ணஜெயந்தி) வாழ்த்துக்கள்.

23 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்ட்!? கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :))))

ஆயில்யன் said...

//நீ ஒத வாங்கப்போறன்னு நெனைக்கிறேன்.//

சொல்லிக்கிட்டே மட்டும்தான் இருந்திருக்காங்க போல :(

butterfly Surya said...

வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

அவசியம் முறுக்கு செய்யனும்

முதக்கா வந்திருக்காரே அவருக்கு கொடுக்கனும்...

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு உங்க இடுகை!

Raghav said...

நல்லா சொல்லிருக்கீங்க..வீட்டுக்குள் கண்ணன் வருவதை புகைப்படம் எடுத்துப் போடுவீங்க தானே.

உங்க வீட்டுக்கு கண்ணன் வந்தவுடனே என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லிருங்க

வல்லிசிம்ஹன் said...

Naanum varen. muRukku koduppeengaLA.:)
HAPPY BIRTHDAY KIRUSHNA.

Deepa said...

அழகு! அழகு! உங்கள் பதிவும் படமும்!

என் அம்மா கூட என்னையும் இந்த ஆண்டு ஏதோ எனக்குத் தெரிந்த வகையில் இப்பண்டிகையைக் கட்டாயம் கொண்டாடுமாறு சொன்னார்கள்.
உங்கள் ஐடியாவை நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி!

நாஞ்சில் நாதம் said...

கோகுலாஷ்டமி (கிருஷ்ணஜெயந்தி) வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

வாழ்த்துக்கள் அமித்தம்மா.
சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்ளும்
பண்டிகைகள் பெரிய்ய ரெப்ரஷர்.

அ.மு.செய்யது said...

முறுக்கு சீடை பால் பழம் எல்லாம் எங்களுக்கு பார்சல் வேணும்.

கொரியர் பண்ணிருங்க..!!

Sanjai Gandhi said...

இதெல்லாம் அழுகுணி ஆட்டம். முறுக்கு சீடை எல்லாம் செஞ்சி கோவைக்கு ஒரு பார்சல் அனுப்புங்க. :)

பா.ராஜாராம் said...

அழகு ததும்பும் பதிவு அமித்து அம்மா,//கடவுளை குழந்தையாய் பாவிக்கும்//சிலீரென சொடுக்கிய வரிகள்...அமித்தின் பாத கோலம் காட்சியாக விரிகிறது.எழுத்தை காட்சி படுத்த வாய்க்கிறது அமித்தம்மா உங்களுக்கு.கோகுலாஷ்ட்டமி வாழ்த்தும்!

Malini's Signature said...

கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :)

எனக்கும் சின்ன வயதில் (இப்பவும்)கிருஷ்ணர் பாதம் ரொம்ப பிடிக்கும்...உங்கள் பதிவை படித்ததும் மலரும் நினைவுகள்.

Thamira said...

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருப்பினும் இந்தப்பதிவு ரசனையானது.


கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது.// உண்மை.

அப்புறம் சஞ்சு யாரு? வீட்டில் உள்ள குழந்தையா? இல்லை கணவரா? ரமாவும் முதல் வருடத்தில் உங்களை மாதிரி ஆசைப்பட நான் வேணா நடந்துவரவாம்மா என்று கேட்ட போது என்ன நடந்திருக்கும்னு நினைக்கிறீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் நேரமின்மையைக் காரணம் காட்டி வீட்டில் எடுத்த வெண்ணை குடுத்தென் கண்ணனுக்கு.. நீங்க சொன்ன மாதிரியே எனக்கும் கிருஷ்ணனையும் குழந்தை ஏசுவையும் ரொம்ப பிடிக்கும்.. :))

எப்பயும் பதிவின் முடிவில் ஒரு சூப்பர் கருத்து சொல்லி முடிக்கிறீங்க.. :)

sakthi said...

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் உள்ள போய், ம்மா, நம்ம வீட்டுலயும் ஊர்ல பெரிய மாமா, மாடு கன்னு எல்லாம் வெச்சிருக்குல்ல. நாமளும் செய்லாம்மா.

என் சின்ன வயதில் அம்மாவிடம் நான் அடிக்கடி கேட்பது இதே வரிகளே

அருமை அமித்து அம்மா

அமுதா said...

/*நம்ம வீட்டுல அதெல்லாம் செய்யுற பழக்கமில்ல. போய் படிக்கிற வேலையப்பாரு.*/
நிறைய விஷ்யங்களுக்கு நானும் இதையே கேட்டிருக்கேன்.

/*கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்*/
பண்டிகைகள் நல்ல மனப்பக்குவத்துடன் பார்த்தால் வீட்டில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்பது உண்மை.

அகல்விளக்கு said...

//கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது. அதை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்//

நிச்சயம் நன்றி சொல்வோம்.
:-)

அகல்விளக்கு said...

//கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது. அதை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்//

நிச்சயம் நன்றி சொல்வோம். :)

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற கொண்டாட்டங்களைக் கொண்டாடியதும் இல்லை; கொண்டாடியதைப் பார்த்ததுமில்லை. என்னையும் அழைத்திருக்கலாம் :-)

Malini's Signature said...

அன்பு அமித்து அம்மா உங்களுக்கு நான் அளித்த விருது ஏத்துக்குங்க பிளிஸ் :-)
http://kathampamtamil.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

Malini's Signature said...

என் பிளாக்கை பார்த்து உங்கள் கருத்துக்கு நன்றி அமித்து அம்மா... எனக்கு பிடித்த என் கை வண்ணங்கள் தான் :-)
நானும் உங்க பதிவுகளை அதிலும் அமித்து செய்யும் எல்லா விசயங்களையும் ரசித்து உள்ளேன் ...உங்கள் எழுத்து நடையும் நன்றாக உள்ளது.