12 August 2009

புதுசு கண்ணம்மா புதுசு

புது ட்ரஸ், புது சைக்கிள், புது டூ வீலர், புது கார் அப்படின்னு ஏதாவது புதுசா ஒன்னு அமைஞ்சிட்டா கொஞ்ச பெரிய சந்தோஷமா இருக்கும்ல முத முதல்ல அதை தொடும்போது, அதுல போகும்போது அப்படின்னு அது மாதிரிதான் இருந்துச்சு எனக்கும் / எங்களுக்கும் புதுசே புதுசா ஒரு லேடிஸ் ஸ்பெசல் 9 கார் (எல்லாமே பெண்கள் பெட்டிகள்) தாம்பரம் டூ சென்னை பீச் ட்ரெயின்ல ஏறும்போது.

வழக்கம்போல சாயம் போன சிகப்பு இல்லன்னா பச்சை மஞ்சள் பெட்டிகளா இல்லாம, புதுசா பெயிண்ட்டு, பூ மாலை, கலர் பேப்பர்லாம் ஒட்டி, flagging off of Ladies Special by Shri. P. Chidambaram அப்படின்ற வாசகங்களை தாங்கிய ஒரு மஞ்சள் அட்டையை தாங்கிட்டு வந்த ட்ரெயினைப் பார்த்து எல்லோருக்கும் வாயெல்லாம் பல். அதுவரைக்கும் ட்ரெயின் லேட்டுன்னு புலம்புனவங்கள்ளாம் ஓடி ஒடி ஏறுனாங்க. என்ன எடம்தான் இல்ல. வழக்கம்போல ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடிதடி. எப்படியோ ஒட்டி ஒரசி ஏறுனாக்க முன்னாடியே ஏறி அடுத்த ஸ்டேசனுக்கு இறங்க நின்னுக்கிட்டிருந்த ஒருத்தவங்க, ச்சே, இதுங்களுக்கு எத்தனை ட்ரெயின் விட்டாலும் பத்தாதுன்னு ஒரு கமெண்ட். கூடவே நெறைய கோரஸ் நல்லா சொன்னீங்க அப்படின்னு.

உள்ள ஒருத்தவங்க மட்டும்,இன்னைக்கு முத நாள் அப்படின்றதனால ட்ரெயின் லேட்டா வந்துச்சு,அதான் இவ்ளோ கூட்டம், நாளைல கரெக்ட் டைமுக்கு வந்துடும் (வந்துட்ட்டாலும்) இவ்ளோ கூட்டம் இருக்காது அப்படின்னு. என்னவோ இந்த டைம் விவகாரம் மட்டும் அந்த ட்ரெயின் ட்ரைவருக்குத்தான் வெளிச்சம்.

அடுத்தடுத்த ஸ்டேசன்ல நிக்கும்போது, இது கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்னு பெண் குரலை இங்கிலீஸ்ல, இந்தில, தமிழ்ல ந்னு அறிவிப்பை ஸ்பீக்கர் மூலமா ஒலிக்கவிட்டுருந்தாங்க.

எல்லா ஸ்டேசன்லியும் இந்த ட்ரெயினை மட்டும் எல்லாரும் ஒரு செகண்ட் திரும்பி வேடிக்கைப் பார்த்துட்டுதான் போனாங்க. எக்மோர்ல ஒருத்தர் இன்னொருவரிடம் பார்ரா, பார்ரா, இதை அப்படின்னு கமெண்ட். எறுறவங்க இறங்கறவங்க அப்படின்னு எல்லார் முகத்துலயும் ஒரு வெற்றிப் புன்னகை.
கார்ட் கூட லேடி தான் போல இருக்கு, ஒரு அம்மா வெள்ளை சுடிதார்ல கடைசி பெட்டில நின்னுக்கிட்டு இருந்தாங்க. லேடி போலீஸ் தான் காவலுக்கு (?) எல்லா பெட்டிகளிலும்.

எக்மோர் இறங்கி ஒரு முறை ட்ரெயினை நல்லா வேடிக்கைப் பார்த்தேன். பூ மாலையெல்லாம் தொங்கப்போட்டு, பெரிசா லேடீஸ் ஸ்பெசல்னு எழுதி புதுசா நல்லாத்தான் இருந்துச்சு. வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்ரெயினை போகவிட்டு பின்னாடி நின்னு பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் அப்படிங்கறா மாதிரி ஒரு ஸ்னேகப்புன்னகை தானா வந்துச்சு.

19 comments:

சந்தனமுல்லை said...

:-)) புது ட்ரெயின்லே....வந்த சந்தோஷம் ஒவ்வொரு வாஎத்தையிலெயும் தெரியுது அமித்து அம்மா! வாழ்த்துகள்!!

Dhiyana said...

இதுவ‌ரை ஒரே ஒரு முறை தான் சென்னை எலெக்ட்ரிக் ட்ரெயினில் போயிருக்கிறேன். எக்மோரிலிருந்து மாம்ப‌ல‌ம் வ‌ரை. ஆளே இல்லை. என் த‌ம்பி பீக் டைமில் ஏற‌வே முடியாது என்றான். உங்க‌ளுடைய‌ ட்ரெயின் ப‌திவுக‌ள் ஏனோ என‌க்கு மிக‌வும் பிடிக்கும்

சென்ஷி said...

:)

butterfly Surya said...

புது ட்ரெயினால ஒரு புது பதிவு.
மகிழ்ச்சி.

கே.என்.சிவராமன் said...

புது எழுத்து நடை, புது டிரெயினு, புது அனுபவம்னு கலக்கறீங்க அமித்து அம்மா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ராமலக்ஷ்மி said...

புதுசு கொடுத்த சந்தோசம் நல்லா இருக்கு:)!

ப்ரியமுடன் வசந்த் said...

சந்தோஷம்தான்...

ஆனால் அந்த ட்ரெயின் செல்லும் இணைபாதை ஒற்றைப்பாதை ஆக முடியாதே...

ஒற்றைப்பாதை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரு. வசந்த்

நீங்கள் எதை உணர்த்த வருகிறீர்கள் என்பது புரிகிறது.

இது ஒரு தற்காலிக சின்ன சந்தோஷம் அவ்வளவே.
மேலும்
அனைத்திலும் இது சாத்தியமல்ல :(

நன்றி உங்களின் மற்றும் அனைவரின் பின்னூட்டத்திற்கும்.

அமுதா said...

மகிழ்ச்சி...

/* வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்ரெயினை போகவிட்டு பின்னாடி நின்னு பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் அப்படிங்கறா மாதிரி ஒரு ஸ்னேகப்புன்னகை தானா வந்துச்சு.*/
உங்கள் மகிழ்ச்சி புரிகிறது

நட்புடன் ஜமால் said...

வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்ரெயினை போகவிட்டு பின்னாடி நின்னு பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் அப்படிங்கறா மாதிரி ஒரு ஸ்னேகப்புன்னகை தானா வந்துச்சு.]]

நானும் சற்றே புன்னகைத்து கொண்டேன்

தாரணி பிரியா said...

புது டிரைன்ல போனதுக்கு டிரீட் எங்க அமித்து அம்மா

Deepa said...

புது ட்ரெயினில் பயணித்த சந்தோஷத்தைச் சின்னக் குழந்தை மாதிரி பகிர்ந்து கொண்டு எங்களையும் உற்சாகப் படுத்திட்டீங்க! சூப்பர் அமித்து அம்மா.
:-)

- இரவீ - said...

:-)) வாழ்த்துகள்!!

Thamira said...

:-))

அன்புடன் அருணா said...

ஓ..பது ரயில் பயணமா???ம்ம்ம்....கலக்குங்க!

அ.மு.செய்யது said...

கலக்குங்க..அது என்னவோ சென்னை மின்சார ரெயில்னவுடனே ஒரு இனம் புரியாத‌
சந்தோஷம்...நெகிழ்வு...

அதுவும் பீச் டூ தாம்பரம் மார்க்கம் ...ம்ஹூம்.....

( இனிமே டிரெயின பத்தி எழுதாதீங்க..பழைய ஞாபகமெல்லாம் வருது...)

குடுகுடுப்பை said...

பெண்களுக்கு வசதி, எங்களைப்போன்ற வாலிபர்கள் இனிமே இன்னா பண்றது.

காமராஜ் said...

அமித்தம்மா வாழ்த்துக்கள்

எங்களுக்கும்
ஸ்நேகப்புன்னகை வரவைக்கிற
பதிவு இது.

குழந்தைகளாக மாறக்
கொடுத்துவைக்கவேண்டுமே தீபா.
உற்சாகப்படுத்துவதற்கும்
ரொம்பாபெரிய மனசுவேண்டும்.

"உழவன்" "Uzhavan" said...

ஓ.. ட்ரெயின் விட்டாச்சா.. ஊருல ஒரு பத்து நாள் இல்லேனா எவ்ளோ மேட்டர் தெரியாம போகுது.
 
//அடுத்தடுத்த ஸ்டேசன்ல நிக்கும்போது, இது கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்னு பெண் குரலை இங்கிலீஸ்ல, இந்தில, தமிழ்ல ந்னு அறிவிப்பை ஸ்பீக்கர் மூலமா ஒலிக்கவிட்டுருந்தாங்க.//
 
இது புதுசா இருக்கே..  தினமும் இந்த அறிவிப்பு இருக்கா?