04 December 2008

நடுவீடும், கண்ணாடியும்

எப்படி ஆரம்பிக்கறது.

ம், இந்த நடுவீடு இல்ல நடுவீடு, தெரியாதவங்க இங்கன போய் படிச்சிட்டு வாங்க. இதை கழுவி மஞ்சள், குங்குமம் வைப்பது எனக்கு ரொம்ப பிடித்தமாய் இருந்தது. -ஹி ஹி இப்ப் இப்பவும் பிடிக்க்க்க்க்குது.

ஸ்கூல் படிக்கிற கால கட்டத்துல எங்கம்மாவின் கட்டாயத்தின் பேரில் ஆரம்பிச்சது இது. நானும், என் அக்காவின் பெண்ணும் ஒரு வாரம் அவள், ஒரு வாரம் நான் என்று செய்ய வேண்டும்.வியாழன் இரவே பூஜை சாமான்களை புளி போட்டு விளக்கி, பொட்டு வைத்து, அப்படியே நடுவீடு, வாசக்கால் எல்லாத்துக்குமே மஞ்சள் குங்குமம் வைத்துவிட வேண்டும்.
வெள்ளிக்கிழமை வீடு மட்டும் துடைத்துவிட்டால் போதும். பூஜை செய்வதெல்லாம் எங்கம்மா, எங்கக்காவின் வேலை.

இப்படியாய் கட்டாயத்தின் பேரில் ஆரம்பித்த இந்த வியாழக்கிழமை வேலை அப்படியே பிடித்தமாகிவிட்டது.

வாழ்வில் நிறைய விஷயங்கள் இப்படித்தாங்க. பெத்தவங்க, மத்தவங்க சொல்றாங்களேன்னு கேக்க ஆரம்பிச்சு, நாளடைவில் அப்படியே அதுல நாம உள்வாங்கப்பட்டுடறோம். என்னைக்காவது சுனாமி வந்து ஆட்டம் ஆடும்னு வெச்சுக்கோங்க.

பள்ளி, கல்லூரி, ஆபிஸ் செல்லும் வரை அம்மா வீட்டில் இந்த பழக்கமிருந்து வந்தது. கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமும் இதேதான், ஆனா ஒரு மாற்றம். அந்த மாற்றத்தைத்தான் நான் மாத்தவேயில்லை முதல்ல.

அம்மா வீட்டில் நடுவீட்டில் குங்குமத்தை விபூதி பட்டை இடுவது போல் வைத்து, அதை சுற்றி பொட்டுக்கள் இடுவோம். மாமியார் வீட்டில் நாமம் போல் இடுவார்கள், நீட்டு வாக்கில் குங்குமம் வைத்து, நாமக்கட்டியை குழைத்து வி ஷேப்பெல்லாம் போடனும்.

மாமியார் வீட்டிற்கு சென்றபின் வந்த மூன்றாவது வெள்ளிக்கிழமை, அப்போது பார்த்து ஏதோ விஷேச நாள் வேறு.
நான் பூஜைபாத்திரமெல்லாம் தேய்த்து வைத்து விட்டு, நடுவீடு கழுவி எங்கம்மா வீட்டில் செய்வது போலவே செய்து விட்டேன்
(தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க)

நாமம் போடாம பட்டைய போட்டு நடுவீடு ரெடியாயிடுச்சு.

மறுநாள் காலை, கற்பூரம் ஏத்த வந்த என் மாமியார் இதைப் பார்த்து, இது என்னா இது நம்ம வழக்கமில்லா வழக்கமா நடுவீடு இப்படியிருக்குது.
எல்லாம் நம்ம தசாவதாரம் கல்லை மட்டும் கண்டால் அஞ்சும் எட்டும் தான் மேட்டர்.

நான் அப்படியே வெலவெலத்து போனேன். ம். புதுப் பொண்ணாயிற்றே. ஆஹா ஆரம்பிச்சுடுச்சுய்யான்னு யுத்தம்னு நெனச்சேன், நல்ல வேளையா என் மாமனார் என்னைக் காப்பாத்திட்டார்.


இப்படித்தாங்க இந்த கட்டாயத்தின் பேரில் ஆரம்பிக்கும் சில விஷயங்கள், நம்மளுக்கு பழக்கம் இல்லனா கூட நம்மளயே மாத்திடுது, அது நல்ல விஷயமா இருந்த்தாக்கூட..,
நமக்குப் புடிக்காதது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும், இருக்குதே, பாருங்க

உதாரணமா

எனக்கு பூ வைக்க, வளையல் போட பிடிக்காது. எனக்கு கல்யாணம் ஆகும் வரை இந்த ரெண்டு விஷயத்தை நான் செஞ்சதே இல்லை. சில பேரின் கட்டாயத்துக்க அப்ப அப்ப ஆட்பட்டா கூட அப்படியே கழண்டுப்பேன்.

எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் போது என் அத்தைக்கு (அப்பாவின் தங்கை) பயங்கர சிரிப்பு. நான் ரொம்ப கோபமாக அவங்ககிட்ட போய் இப்ப என்ன, ஏன் இப்படி சிரிக்கிற நீ, அப்படின்னு கேட்டேன்.
அதுக்கு அவுங்க நீ எப்படி கல்யாணத்துக்கு ஜடையெல்லாம் தச்சு, பூ வெல்லாம் வெச்சுப்பன்னு நெனச்சி பாத்தேன். அதனால தான் சிரிச்சேன்னாங்க. அப்ப அவங்கள முறைச்சுட்டு வந்துட்டேன்.

ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம்.
வளையல் போட்டு, பூ வெச்சுக்கிட்டு, அதான் சொன்னேனே கட்டாயத்தின் பேரில்.
இப்ப ஆளே மாறியாச்சு.

எப்பவாச்சும் கண்ணாடி முன்னாடி கொஞ்ச நேரம் நின்னா உள்ள இருந்து ஒரு குரல்

அவளா நீய்யீ...

43 comments:

SK said...

me the first.

ithu thaan mothalla

SK said...

புடிக்கலைனா ஏன் செய்யணும் ?? அவ்ளோ கட்டாயமா என்ன ??

சந்தனமுல்லை said...

:-)) பேசிக்கிட்ரிருந்தோம் போட்டூட்டீங்க! சூப்பர்..குத்துவிளக்கே குலமகளே!!

சந்தனமுல்லை said...

//வளையல் போட்டு, பூ வெச்சுக்கிட்டு, அதான் சொன்னேனே கட்டாயத்தின் பேரில்.
இப்ப ஆளே மாறியாச்சு.//

அவங்களா நீங்க???

சந்தனமுல்லை said...

//அம்மா வீட்டில் நடுவீட்டில் குங்குமத்தை விபூதி பட்டை இடுவது போல் வைத்து, அதை சுற்றி பொட்டுக்கள் இடுவோம்.//

நடுவீட்டில் வை நல்ல துது செய்!! அதுதானா இது!

சந்தனமுல்லை said...

//நாளடைவில் அப்படியே அதுல நாம உள்வாங்கப்பட்டுடறோம். என்னைக்காவது சுனாமி வந்து ஆட்டம் ஆடும்னு வெச்சுக்கோங்க.///

இதுதான் அமித்து அம்மா டச்!

சந்தனமுல்லை said...

//எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் போது என் அத்தைக்கு (அப்பாவின் தங்கை) பயங்கர சிரிப்பு. //

எவ்ளோ பேருக்கு காமெடி டைமா இருந்திருக்கீங்க!! சான்ஸே இல்லை! :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா! :) ம்..

இங்க நேர் மாறுங்க..அதை நினைச்சுப்பாருங்க.. கை நிறைய வளையலெங்கே..தலை நிறைய பூவெங்கேன்னு இருக்கேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப சுவாரசியமா எழுதறீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நடுவீட்டில் வை நல்ல துதி செய்யா..ஓ முல்லை .. கரெக்ட் எனக்கும் இன்னிக்குத்தான் இது தெரிஞ்சது...:)

நட்புடன் ஜமால் said...

\\எப்பவாச்சும் கண்ணாடி முன்னாடி கொஞ்ச நேரம் நின்னா உள்ள இருந்து ஒரு குரல்

அவளா நீய்யீ...\\

எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் ...

ஆயில்யன் said...

மீ த 12

ஆயில்யன் said...

ரொம்ப சுவாரசியமா எழுதறீங்க..!

நட்புடன் ஜமால் said...

\\வாழ்வில் நிறைய விஷயங்கள் இப்படித்தாங்க. பெத்தவங்க, மத்தவங்க சொல்றாங்களேன்னு கேக்க ஆரம்பிச்சு, நாளடைவில் அப்படியே அதுல நாம உள்வாங்கப்பட்டுடறோம். என்னைக்காவது சுனாமி வந்து ஆட்டம் ஆடும்னு வெச்சுக்கோங்க.\\

நீங்களாவது உங்க குழந்தைக்களுக்கு இப்படி செய்யாதீங்க.

(நாம எல்லோரும்தான்)

Maddy said...

அடடா!! எப்பிடி இருந்த ஆளு இப்பிடி ஆயிடிங்களே!!

படிக்க ரொம்ப சுவரஷயமா இருந்தது!! அடுத்தவங்க கஷ்டம் நம்ம மாதிரி ஆளுங்களுக்கு அப்பிடி தானே! ஆனாலும் நீங்க ரொம்ப பாவம்!!

""வாழ்வில் நிறைய விஷயங்கள் இப்படித்தாங்க. பெத்தவங்க, மத்தவங்க சொல்றாங்களேன்னு கேக்க ஆரம்பிச்சு, நாளடைவில் அப்படியே அதுல நாம உள்வாங்கப்பட்டுடறோம். என்னைக்காவது சுனாமி வந்து ஆட்டம் ஆடும்னு வெச்சுக்கோங்க.""........அமிர்து குட்டி கண்ணுல இந்த வரிகளை காண்பிக்க வேண்டாம். அவ ரொம்ப சமத்து!!

Thamira said...

உங்களுக்கு பூ வைக்கவே விருப்பமில்லை.

என் வீட்டிலோ வேறு கதை.
பூ.. இன்னும் ரமா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள், நான் தினமும் மறந்துகொண்டுதான் இருக்கிறேன்.. அவளுக்கு விருப்பமில்லாமல் இருந்தால் எப்பிடி இருக்கும்? ம்ம்.. இதைச்சொன்னால் ஆணியாதிக்கவாதி என்பீர்கள்.!

தமிழ் அமுதன் said...

நீங்க மட்டும் உங்க வீட்டு பழக்கம்னு சொல்லி

நடுவீட்டுல பாத்திரகடை வைப்பீங்க?

ஆனா மத்தவங்களுக்காக வளையல்,

போட மாட்டிங்க,பூ வைக்க மாட்டிங்களோ?(ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம் ) ;;;)))) எங்க காணும்னு பார்த்தேன்!

ராமலக்ஷ்மி said...

அழகா விவரித்திருக்கிறீர்கள் அனுபவத்தை.

//எல்லாம் நம்ம தசாவதாரம் கல்லை மட்டும் கண்டால் அஞ்சும் எட்டும் தான் மேட்டர்.//

:))!

இந்த ”அவளா நீய்யீ...” பலருக்கும் உல்டாவாகவும் பொருந்தும்:). பொட்டும் வளையலுமா வளைய வந்தவர்கள் ஜீன்ஸும் ஹீல்ஸுமா கலக்குவாங்க கல்யாணத்துக்கப்பறம். இந்தக் கேள்விதான் ஓடும்:))!

Anonymous said...

உங்க மாமனார் வந்து காப்பாத்தினார்னு சொன்னீங்க, என்ன சொல்லி காப்பாத்தினார்னு சொல்லுங்க.

அமுதா said...

நல்லா எழுதி இருக்கீங்க....

Vidhya Chandrasekaran said...

சூப்பரா எழுதறீங்க அமித்து அம்மா.
\\ SK said...
புடிக்கலைனா ஏன் செய்யணும் ?? அவ்ளோ கட்டாயமா என்ன ??\\

அதானே. எனக்கும் பூ வைப்பது நகைப்போட்டுக்கொள்வது பிடிக்காது. இன்னைக்கும் சேம்திங்க். மாமியாருக்கு நான் நெக்லஸ், ஆரம்னு போட்டுக்கலேயேன்னு பெரிய வருத்தம். அவங்க மனசு நோகாத மாதிரி மறுக்கறது என் ஸ்டைல்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி எஸ்.கே.
புடிக்கலைனா ஏன் செய்யணும் ?? அவ்ளோ கட்டாயமா என்ன ??
:)))))

ஆமாம் முல்லை.
அவங்களா நீங்க??? ஆமாம், தெரியாதா உங்களுக்கு.
நடுவீட்டில் வை நல்ல துதி செய்!! அதுதானா இது! ம்.
இதுதான் அமித்து அம்மா டச்!
நன்றி
எவ்ளோ பேருக்கு காமெடி டைமா இருந்திருக்கீங்க!! சான்ஸே இல்லை! :-))
இந்த காமெடி டைம் இப்பவும் தொடருது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஆபிஸர் புன்னகைத்தமைக்கு.

நன்றி முத்துக்கயல் //
ம். opinion differs. இப்படிதான் சொல்லமுடியும்.

ரொம்ப சுவாரசியமா எழுதறீங்க..//
நன்றிங்க.

நடுவீட்டில் வை நல்ல துதி செய்.ஓ முல்லை .. கரெக்ட் எனக்கும் இன்னிக்குத்தான் இது தெரிஞ்சது...:)
:)))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜமால் சரியா சொன்னதுக்கு

நன்றி ஆயில்ஸ் அண்ணா, 12க்கு,

அமிர்து குட்டி கண்ணுல இந்த வரிகளை காண்பிக்க வேண்டாம். அவ ரொம்ப சமத்து!!
வாங்க மேடி, அமித்து ரொம்ப சமத்து
ஹை ரைமிங்கா அசத்தறீங்களே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமிரா said...
நன்றி தாமிரா உங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

உங்களுக்கு பூ வைக்கவே விருப்பமில்லை.
ம், ஆமாம்

என் வீட்டிலோ வேறு கதை.
பூ.. இன்னும் ரமா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள், நான் தினமும் மறந்துகொண்டுதான் இருக்கிறேன்.. அவளுக்கு விருப்பமில்லாமல் இருந்தால் எப்பிடி இருக்கும்?
நல்லாத்தான் இருக்கும் உங்களுக்கு

ம்ம்.. இதைச்சொன்னால் ஆணியாதிக்கவாதி என்பீர்கள்.!
அப்படியெல்லாம் சொல்லமாட்டோங்க.
அதுக்கும் மேல ஏதாவது இருக்கான்னு டிக்‌ஷனரியில தேடுவோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜீவன் said...
நீங்க மட்டும் உங்க வீட்டு பழக்கம்னு சொல்லி நடுவீட்டுல பாத்திரகடை வைப்பீங்க?
ஆனா மத்தவங்களுக்காக வளையல்,
போட மாட்டிங்க,பூ வைக்க மாட்டிங்களோ? //

பழக்கம் வேறு, விருப்பம் வேறு ஜீவன்.
பழக்கத்தை கட்டாயத்தின் பேரில் செய்யலாம்.
ஆனால் நம் விருப்பத்தை மற்றவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மாற்றும்போதுதான் ...........

(ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம் ) ;;;)))) எங்க காணும்னு பார்த்தேன்!
:)))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகா விவரித்திருக்கிறீர்கள் அனுபவத்தை.

//எல்லாம் நம்ம தசாவதாரம் கல்லை மட்டும் கண்டால் அஞ்சும் எட்டும் தான் மேட்டர்.//

:))!

நன்றி ராம் மேடம், கரெக்ட்டா பாயிண்டை பிடிச்சிட்டீங்க.

இந்த ”அவளா நீய்யீ...” பலருக்கும் உல்டாவாகவும் பொருந்தும்:). பொட்டும் வளையலுமா வளைய வந்தவர்கள் ஜீன்ஸும் ஹீல்ஸுமா கலக்குவாங்க கல்யாணத்துக்கப்பறம். இந்தக் கேள்விதான் ஓடும்:))!

likes and dislikes differs from person to person.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்ன அம்மிணி said...
உங்க மாமனார் வந்து காப்பாத்தினார்னு சொன்னீங்க, என்ன சொல்லி காப்பாத்தினார்னு சொல்லுங்க.

என்ன நீட்டா போடுற கோட்டை குறுக்கால போட்டுட்டா, விடு இன்னைக்கு இப்படியே சாமி கும்பிடலாம்னு சொன்னார்.
he is always great.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூப்பரா எழுதறீங்க அமித்து அம்மா.
நன்றி வித்யா

\\ SK said...
புடிக்கலைனா ஏன் செய்யணும் ?? அவ்ளோ கட்டாயமா என்ன ??\\
அதானே. எனக்கும் பூ வைப்பது நகைப்போட்டுக்கொள்வது பிடிக்காது. இன்னைக்கும் சேம்திங்க். மாமியாருக்கு நான் நெக்லஸ், ஆரம்னு போட்டுக்கலேயேன்னு பெரிய வருத்தம். அவங்க மனசு நோகாத மாதிரி மறுக்கறது என் ஸ்டைல்:)

:)))))))

தாரணி பிரியா said...

ஆஹா நானும் உங்களை மாதிரிதான் அமித்து அம்மா எனக்கு இன்னிக்கும் பூ, வளையல் ரெண்டும் பிடிக்காது. காலையில ஆபிஸ் போகும் போது போட்டுட்டு போற வளையலை எங்க வீட்டுக்கு உள்ளாற நுழையும் போது கழட்ட ஆரம்பிச்சுடுவேன். பூவுல ரோஜாக்கு மட்டும்தான் என்னோட வோட்டு.

வீட்டுல எல்லோரும நிறைய சொல்லி பார்த்து கடைசியில எப்படியோ போ அப்படின்ற மாதிரி தண்ணி தெளிச்சு விட்டுடாங்க.

மோனிபுவன் அம்மா said...

நல்லா இருக்கு பழக்கங்கள் எல்லாம் வழி வழியாய் கால காலமாய் வருபவை.

மாற்றத்துக்கு வாழ்த்துக்கள்

RAMYA said...

//
ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம்.
//

நீங்கள் கூறுவது 100 சதவிகிதம் உண்மை, அருமையான பழக்க வழக்கங்களை சொல்லி இருக்கிறீர்கள். படித்து ரசித்தேன்.என் நண்பிகளிடமும் படிக்க சொன்னேன். வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

உங்க வீட்டுக்காரருக்கு காதுல பூ வைக்க பிடிக்காதாம், நீங்க கட்டாயப்படுத்தி வெச்சு விடுங்க.

நிஜமா நல்லவன் said...

/ சின்ன அம்மிணி said...

உங்க மாமனார் வந்து காப்பாத்தினார்னு சொன்னீங்க, என்ன சொல்லி காப்பாத்தினார்னு சொல்லுங்க./

நான் கேக்க நினைச்சதை நீங்க கேட்டுட்டீங்க....:)

Poornima Saravana kumar said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
சின்ன அம்மிணி said...
உங்க மாமனார் வந்து காப்பாத்தினார்னு சொன்னீங்க, என்ன சொல்லி காப்பாத்தினார்னு சொல்லுங்க.

என்ன நீட்டா போடுற கோட்டை குறுக்கால போட்டுட்டா, விடு இன்னைக்கு இப்படியே சாமி கும்பிடலாம்னு சொன்னார்.
he is always great.

//

எல்லோர் வீட்டிலும் இப்படி இருந்தால் எப்படி (அழுத்திச் சொல்லவும்) இருக்கும்!!

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.......

எட்டை அஞ்சா மாத்திட்டீங்களா? :-)))))


இந்த பூ இருக்கு பாருங்க. இதுலே நான் பிசாசு. சின்னக்கா கூட அப்படிச் சண்டை போடுவேன். தினமும் எங்க வீட்டுலே பூக்காரம்மா வாடிக்கையா பூ கொண்டுவந்து தருவாங்க. அக்கா, அதை அப்படியே தொடாம வச்சுருக்கணும் நான் ஊரெல்லாம் சுத்தி விளையாடிட்டு வீடு வரும்வரை.
என் கண்ணுமுன்னாலே ரெண்டா சமபாகமாப் பிரிச்சுக் கட் பண்ணுனாத்தான் சரி. மல்லி மலர்ந்துறப்போகுதேன்னு முதல்லேயே வெட்டி, அக்கா தன்னோட பாகத்தைத் தலையிலே வச்சுக்கிட்டா அம்புட்டுதான். பேயாட்டம் ஆடுவேன். சுருக்கத்துலே சுநாமி வந்தாப்புலெதான்.

ரெண்டா வெட்டி சேர்த்துக் கையில் பிடிச்சுப் பார்த்து எது நீளமா ( சரிபாதியா வெட்டுனபிறகும் ஒரு மில்லிமீட்டர் நீளம் கூடுதலா) இருக்கான்னு கவனிச்சு நான் முதல்லே எடுத்துக்குவேன். அப்புறம்தான் அக்கா எடுத்துத் தலையிலே வச்சுக்கமுடியும். அக்கிரம் இதோடு தீர்ந்தாப் பரவாயில்லையே.... ஆடுற ஆட்டத்துலே எல்லாம் உதிர்ந்துபோய் படுக்கும்போது தலையில் வெறும் நார்தான் இருக்கும். அக்கா . தன்னோடதை அழகா எடுத்து ஈரத்துணியில் சுத்தி வைக்கும். மறுநாள் காலையில் அதுலேயும் பங்கு கேட்டு ஆடுவேன். பாவம் எங்க சின்னக்கா.

இப்ப என்னடான்னா..... பூவே வச்சுக்காத ஊர்லே வாழ்க்கை(-:

பின்னூட்டம் நீண்டுபோச்சு. மன்னிக்கனும்

Unknown said...

அமித்து அம்மா, நல்லாயிருக்கு இந்தப் பதிவு..எனக்கு பூ ரொம்ப பிடிக்கும், ஆனா நிறைய வச்சிக்கப் பிடிக்காது...வளையல் ரொம்பப் பிடிக்கும்..எனக்குப் பிடிக்காம இருந்தது மெட்டியும் கொலுசும் தான்...எப்படியோ இவையெல்லாம் நம் உடலுடன் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது....நமக்குப் பிடித்ததை அணிய முடியாது, பிடிக்காதவற்றை அணிந்து திரிய வேண்டிய சூழல்.compromises, everywhere....how is amithu....

ரிதன்யா said...

என்ன நீட்டா போடுற கோட்டை குறுக்கால போட்டுட்டா, விடு இன்னைக்கு இப்படியே சாமி கும்பிடலாம்னு சொன்னார்.
he is always great.//

இப்பவுமா!
ஏன் இப்படி?

Shakthiprabha (Prabha Sridhar) said...

//எனக்கு பூ வைக்க, வளையல் போட பிடிக்காது. எனக்கு கல்யாணம் ஆகும் வரை இந்த ரெண்டு விஷயத்தை நான் செஞ்சதே இல்லை. சில பேரின் கட்டாயத்துக்க அப்ப அப்ப ஆட்பட்டா கூட அப்படியே கழண்டுப்பேன்.//

அட! நம்மை போல நிறைய பேர் இருப்பாங்க போல! எனக்கும் பிடித்ததில்லை. பிடிப்பதில்லை.

என் மாமியார் வீட்டுக்கு வந்தால் சமர்த்தாய் வளையல் பொட்டுக்கொண்டு விடுவேன் (போட்டுக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்தார்கள் ) அவர்கள் ஊருக்கு கிளம்பியதும் வளையல் நகைப்பொட்டிக்குள் அடைக்கலம் ஆகிவிடும்.

செடியில் பூக்கற பூவை என்னத்துக்கு தலையில் வைத்து...பாவம்...(பூ தான்) :)

இன்னி வரைக்கும் நல்ல வேளை ஏன் வளையல் போட்டுக்கொள்வதில்லை என்று கணவர் கேட்பதில்லை.

திருந்தா ஜன்மம் என்று விட்டுவிட்டார்கள் போலும் :)))

பொட்டு வைத்துக்கொள்வது பிடிக்காது. திருமணமான பின் அப்படி இருக்க முடிவதில்லை. அதனால் பொட்டை விதவிதமாக வரைந்துவிடுவேன் (டிசைனர் பிந்தி போல). இதுவும் மட்டும் நான் மற்றவர்களுக்காக மாற்றிக்கொண்ட விஷயம்.

உங்கள் பதிவு என்னையும் நினைவுகளை அசைபோட வைத்தது.

நசரேயன் said...

இன்னும் மாமியார் மருமகள் சண்டை ஆரமிக்கலையா?
ஒரே ஏமாற்றமா இருக்கு :):)

அன்புடன் அருணா said...

//அவளா நீய்யீ...//

நிறைய விஷயங்களில் நான் கூட அவளா நீய்யீதாங்க......
அன்புடன் அருணா

Deepa said...

நன்றி அமித்து அம்மா!

உங்கள் பதிவைப் படித்தேன்.

உங்கள் (முல்லை, வித்யா, நீங்கள்) பதிவுகளில் பொதுவான தீம் நிர்பந்தங்களினால் செய்ய நேரும் சில சங்கடமான காரியங்கள். என் பதிவு நகைகளைப் பற்றி மட்டுமே!

ம்...நிர்பந்தத்தினால் நீங்கள் நகைகள் அணியப் பழகிக் கொண்டு விட்டீர்கள். சமத்து தான்!

அப்புறம் உங்கள் மூவரைப் போல் அல்லாமல், எனக்குப் பூ வைத்துக் கொள்ள ரொம்பப் பிடிக்கும்!
(அதற்கேற்ற உடை அணிந்திருந்தால்!
(தலை வலி வரும் முன் எடுத்து விடுவேன்!)

பெண்களுக்குப் பூக்களை விட எளிமையான அலங்காரம் என்ன சொல்லுங்கள்? :-)

அப்புறம் என் பதிவு பற்றியும் ஓரிரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாமே! :-)

Deepa said...

//அவளா நீய்யீ...//

//ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம்.//

இப்படி நிறைய இடங்கள் நச்!