02 December 2008

மழையாய் நீ, மண்ணாய் நான்


வா என்று
சொல்லும் போது
வருவதில்லை

போகிறேன்
என்று சொல்லும்போது
ஓடி வருகிறாய்

சின்னத்தூறல் போல
உன் சிணுங்கல்கள்

ஓங்கி பெய்யும்
மழை போல
உன் அழுகை

விடாமல்
கெட்டியாய்
பிடித்திருக்கும்
உன் அடத்தைப் போல
இன்னும்
இந்த மழை
நிற்காமல்...

இடியோடு பெய்யும்
மழைக்கு
இதமான தேநீர்
போல
இருக்கும்
இனிக்கும்
உனது முத்தங்கள்

உனக்கு கொறிக்க
கொடுத்தால்
ந்தா இந்ந்தா வென
எனக்கே
ஊட்டி விடுகிறாய்

என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே

புயலாய் நீ வீசினாலும்
புன்னகைச்சாறலாய் இருந்தாலும்
இந்த இளமையிலும்
இனி வரும் முதுமையிலும்

என்றும்
உன் அன்பில்
சொட்ட சொட்ட
நனையவே
காத்திருக்கிறேன்.

என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்

வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........(டிஸ்கி: மழைநாள் விடுமுறையின் போது நான் என் பெண்ணோடு இருந்த நேரம் பார்த்து என் அம்மா என்னோடு போனில் பேசினார்கள், மழை ஜாஸ்தியா இருக்கும் நேரம், ஆபிஸிக்கெல்லாம் போகாத என்றார்கள்.

ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு, இந்தக் கவிதை சமர்ப்பணம்)

20 comments:

அமுதா said...

பாராட்ட வார்த்தையில்லை... எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...

சந்தனமுல்லை said...

செமையா இருக்குங்க..அருமையான வரிகள்! அம்மாங்களுக்குதான் எப்பவும் கவலை பசங்களைப் பத்தி!

//வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........//

அருமை!

சந்தனமுல்லை said...

//என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே///

:-) சூப்பர்!

சந்தனமுல்லை said...

//
என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்//

கண்டிப்பா!!

சந்தனமுல்லை said...

ரொம்ப நெகிழ்வா இருக்குங்க உங்க கவிதை! ம்ம்..உணர்ச்சிகளை வரிகளாக்கும் வித்தை!

ராமலக்ஷ்மி said...

ஆரம்பம் முதல் அம்மாவுக்கு அர்ப்பணித்த கடைசி வாக்கியம் வரை ஒவ்வொரு எழுத்திலும் ‘தாய்மை’ பொங்குவதையே கண்டேன்.

மொத்தத்தில் இப்பதிவு
‘தாய்மை’க்கே அர்ப்பணம் அமிர்தவர்ஷினி ’அம்மா’!

Vidhya Chandrasekaran said...

என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு இனம் புரியாத, விவரிக்கத்தெரியாத மனநிலைக்கு தள்ளிட்டீங்க. சூப்பர்:)

ஆயில்யன் said...

//ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு,///


நினைக்க வைத்தீர்கள் !

மனதை நினைவுகளில் நனைக்கவைத்துவிட்டீர்கள்
:(

Anonymous said...

//ந்தா இந்ந்தா வென
எனக்கே//
சூப்பர் வரிகள் அ.அம்மா

மோனிபுவன் அம்மா said...

மழையையும், உன்மகளையும் ஒப்பிட்டு எழுதிய கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

பாராட்ட வார்தைகள் இல்லையடி
தோழி

SK said...

ப்ளாக் தலைப்புக்கு ஏற்ற பதிவு .. கலக்கி இருக்கீங்க.

தமிழ் அமுதன் said...

//என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்!//

அருமை!

எங்க அமிர்த வர்ஷினி அம்மா டச்சிங்?


இதோ!


//வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........//

தமிழ் அமுதன் said...

அந்த மழை போட்டோ அழகு!

அதுல எதாச்சும் சோகம் ஒளிஞ்சுகிட்டு
இல்லையே ?

குடுகுடுப்பை said...

கவிஞர் அமித்து அம்மா நல்லா எழுதறீங்க.

Princess said...

செமை கவிதை! உருக வைச்சிருச்சு

கடைசி பத்தி ரொம்ப அழகு!அதனா
அம்மா எல்லாரும் எப்படி இப்படி இருக்காங்க...நான் எப்படி இருப்பேன் ??

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா

நன்றி முல்லை.

மொத்தத்தில் இப்பதிவு
‘தாய்மை’க்கே அர்ப்பணம் அமிர்தவர்ஷினி ’அம்மா’!//
ஆமாம் ராம் மேடம்

நன்றி வித்யா

நன்றி ஆயில்ஸ் அண்ணா

நன்றி சின்ன அம்மிணி

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி கிருஷ்ணா

நன்றி எஸ்.கே

நன்றி ஜீவன்.
ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்றீங்க என்னோட எழுத்துக்களை.
ஆமாம் நானே நினைத்தாலும் இதை தவிர்க்கமுடிவதில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி குடுகுடுப்பை அண்ணா

நன்றி ஸாவரியா

நசரேயன் said...

அருமையான வரிகள் கவிஞர்/கவிஞ்சி அமிர்தவர்ஷினி அம்மா
கவிதையின் விளக்கமும் அருமை

பழமைபேசி said...

அழகான கவிதை!

வந்து உங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் சிறிது தாமதம் ஆகிவிட்டது!!

ச்சூ ச்சூ மாரிப் பாட்டுதான் இப்ப என்னோட அஞ்சு வயசு மகள் கேக்குறது இப்ப! நன்றிங்க!!