10 December 2008

மாமாவும் 92 வது வட்டமும் (மனிதம் காப்போம்)

மொதல்ல நாம நாம எதை எதையெல்லாம் மறந்தோம்னு ஒரு லிஸ்ட் போடுங்க பார்க்கலாம்
இப்ப கொஞ்ச நாள் முன்னாடி நடந்ததால மும்பை சம்பவம் ஞாபகத்திலிருக்கு
அதுக்கு முன்னாடி நடந்த சட்டக்கல்லூரி வெவகாரம் அமுங்கிப்போச்சே,
இந்த மாதிரிதாங்க 100 பேர் சாகும்போது 10 பேர் செத்தது மறந்து போகுது..,
இப்படி நெறைய சொல்லலாம்
இதனால விபத்துல செத்தா கூட மக்களுக்கு பெரிய விஷயமா தெரியமாட்டேங்கு,
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா, அப்படின்னு சொல்றா மாதிரி போச்சு..,
வெக்கக்கேடுங்க....
நாளைக்கு நமக்கும் இந்தக் கதிதான். 10 அல்லது 100 அட ஆயிரத்திலும் ஒருவர்.

ஏதோ ஒரு பதிவில் படித்தேன்..,
மும்பை கலவரத்தின் பிஸியின் போது, நம்மூரில் பாரெஸ்ட் வெட்டி ஜெயிலுக்கு போன (மரத்தை வெட்டியதால் ஒன்னும் ஜெயில்லுக்கு போகலை) ஒருவரை உயர்நீதிமன்றம் ரிலிஸ் செய்துவிட்டதாம் ஜாமீனில்.
கலவர பிஸியில் அமுங்கிப்போன நம்மூர் அரசியல் இது.

என்ன, நம்ம மக்களுக்கு பரபரப்பு பிடிச்சிருக்கு, நாலு நாளைக்கு பேப்பர் சர்க்குலேசன் பிச்சிக்கிட்டு போது இப்படி ஏதாவது ஒன்னு நடந்தா,
படம் படமா போட்டுக்கலாம், மைக் எடுத்துட்டு போய் பேசிக்கலாம், அடிச்சிக்கிட்டு சாகறதை டி.வி.யில பாக்குற நாமளும் “உச்” கொட்டிக்கலாம்.

தலைவர்கள் : அப்படீன்னா, அதெல்லாம் கக்கன், காமராசர், பெரியார், அண்ணாவோட போயிடுச்சு

இப்ப இருக்குறவங்க வெறும் அரசியல்வாதிகள், இவர்களை ஃபாலோ பண்றதுக்கெல்லாம் நமக்கோ, நம் சந்ததிகளுக்கோ ஒன்னுமேயில்ல,

ஓட்டு - அட இந்த ஒரு உரிமையாவது நமக்கிருக்கே, இத வெச்சு யாராவது புதுசா நாட்டுக்கு நல்லது செய்றேன்னு(!?!) சொல்றவங்களுக்கு போடலாம்னு பாத்தா, அத யாரோ போட்டுட்டு போயிடறாங்க, அந்த யாரோ வேற யாருமில்ல, நம்ம பொதுஜனங்கதான், பணத்துக்காக..

இப்படித்தான் ஒரு முறை, ஒரு சுயேட்சைக்கு ஓட்டு போட்டேன், மொத்தமே அவர் ஓட்டு ஆயிரம் கூட தாண்டலை, நான் சும்மா இல்லாம, பேப்பர்ல இத பாத்துட்டு, எங்க வீட்டுல பீத்திக்கிட்டிருந்தேன், நான் ஆயிரத்தில் ஒருத்தி அப்படீன்னு, அடி செருப்பால ஏண்டி அதிமுகவுக்கு ஓட்டு போடலை அப்படின்னாரு எங்க மாமா.
எங்க மாமா அதிமுக அபிமானி, இப்படித்தான் 90ல் ஒருமுறை ரொம்ப அதிகமில்லை ஜெண்டில்மேன், அதிமுகவில் (92வது வட்டம்) பதிவு செயலாளரா அறிவிக்கப்படுவதாய் இருந்தது, பரவலா பேசிக்கிட்டாங்க, எங்க வீட்டுக்கு தம்பிங்க வரவு ஜாஸ்தியா இருந்தது, எங்க மாமாவும் கொஞ்சம் தட புடலாதான் இருந்தாரு, எங்க அக்கா மட்டும் சொன்னாரு பாரேன் இவர் எங்கயோ வாங்கிக் கட்டிக்கிட்டு வரப்போறாரு, என்ன ஆச்சர்யம்
அது அப்படியே பலிச்சுது...

ஆமாங்க, அடுத்தவாரம் கட்சி பத்திரிக்கையில் எங்க மாமா பெயர் பகுதி செயலாளர் என அறிவிக்கப்படுவதாயிருந்ததாம், ஆனால் அதற்கு முன்னாடியே எங்க ஏரியாவில் ரவுடியாகத் திகழ்ந்தவர்(அவ்ர் இப்போது உயிரோடு இல்ல) எங்க மாமாவ கூப்பிட்டு கொஞ்சம் பாசமா பேசி இதெல்லாம் உனக்கு வேணாம்னு கட்சி ஆபிஸ்ல சொல்லிடு, மத்தத நான் பாத்துக்கறேன் அப்படீன்னுட்டாராம்,
இவரும் அப்படியே சொல்லிட்டு வந்துட்டு, கவுந்தடிச்சு படுத்து ஒரே அழுகை, கண்ணெல்லாம் செவ செவன்னு, நாங்க எல்லாம் கூட ஒக்காந்து ஒப்பாரி, பின்ன ஒரு முழுத்த ஆம்பள வீட்டுக்கு மூத்தவரு மூணு நாளா இப்படியிருந்தா எப்படியிருக்கும், பொழப்பு போனது தான் மிச்சம். வேற ஒன்னுமில்ல அழுகைக்கு காரணம் பதவி(?) பறிபோனதும், ரவுடி பாசமா மிரட்டியதும் தான் காரணம்.
அடுத்த வாரம் பாசக்கார பய பகுதி செயலாளராயிட்டாரு.

அல்பம் (இப்படின்னு நாம வேணா சொல்லிக்கலாம் “அனுபவிக்கற”வனுக்குத்தானே தெரியும்) ஒரு வட்டத்துல இருக்குற ஒரு பகுதி செயலாளர் பதவிக்கே இப்படி வன்முறை இருக்குன்னா, மக்களே மத்ததெல்லாம் நீங்களே கணிச்சுக்கோங்க.

எனக்குத் தெரிந்து பள்ளிக்கூடத்து ரூமை பூட்டிக்கிட்டு, குத்து குத்து குத்துன்னு கள்ள ஓட்ட குத்துனவங்கள எனக்கு நல்லாத் தெரியும், பாத்துருக்கேன், எங்க வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருந்தது அந்த மாநகராட்சிப்பள்ளி.

எதுவும் இங்க சரியில்ல, மாற்றம் நம்ம கிட்டருந்து வரணும், ரொம்ப வேணாம், மாநகராட்சி சொல்லுதே மக்கும் குப்பை, மக்கா குப்பை அப்படின்னு தனித்தனியா போடுங்கன்னு, அத நாம செய்றோமா, ஏன்னா நேரமில்ல, ரொம்ப பிஸி.
நம்மளோட லைசன்ஸ் வாங்கக்கூட நாம லைன்ல நிக்க மாட்டோங்கறோம், அங்க நமக்கு தெரிஞ்ச ஆள் இருக்காங்களா அப்படின்னு பாக்குறோம், இல்லயா மேல 200 ரூபா கொடுத்தமா, கைக்கு வந்து சேரப்போகுது லைசன்ஸுன்னு அசால்ட்டா சொல்றோம்.
இந்த மாதிரி நெறைய, மழைநீர் சேகரிக்கும் தொட்டியும், பைப்லைனும் (இது நாளைக்கு நம்ம சந்ததிக்குதாங்க நல்லது) எத்தனை பேரு வீட்டுல ஒழுங்கா கொடுத்துருக்கோம் பாருங்க

பாருங்க பாருங்க இந்த பைப்லைன் மேட்டர் கூட நீங்க மறந்துட்டீங்க தானே..

அட காசு கொடுத்த உண்மையான அன்பைத் தவிர எதுவும் கிடைக்கும் நாடு இது.

ம், பெருமிதம் கொள்வோம், இந்தியநாடு என் தாய்திரு நாடு, இங்கு வாழும் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்., நான் என் தாய்நாட்டை உளமார நேசிக்கிறேன்.

ஆமா ஏ.கே 47 புடிச்சவன் பாகிஸ்தானியன், அவனை ஊருக்குள்ள வுட்டுட்டு வேடிக்கை பாத்தவன் இந்தியன்.

எல்லாரும் பெருமிதம் கொள்வோம்.
டிஸ்கி:
உணர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பு தந்த சந்தனமுல்லைக்கு நன்றி.
நான் எழுத அழைப்பது:
1. கண்ணாடி ஜீவன்
2. வில் டு லிவ் ரம்யா
3. பொலம்பல் எஸ்.கே
4. என் வானம் அமுதா
5. கார்க்கி
6. ஸ்ரீமதி

37 comments:

நட்புடன் ஜமால் said...

வந்துட்டேன்

படிச்சிட்டு வந்து சொல்றேன்.

நட்புடன் ஜமால் said...

\\கலவர பிஸியில் அமுங்கிப்போன நம்மூர் அரசியல் இது.\\

இதுக்காகவே கலவரம் பன்றாங்களான்னு நமக்கு ஒரு சம்ஷியம் உண்டுங்கோ

ஆயில்யன் said...

//ஆமா ஏ.கே 47 புடிச்சவன் பாகிஸ்தானியன், அவனை ஊருக்குள்ள வுட்டுட்டு வேடிக்கை பாத்தவன் இந்தியன்//

நச்!

நட்புடன் ஜமால் said...

\\நம்மளோட லைசன்ஸ் வாங்கக்கூட நாம லைன்ல நிக்க மாட்டோங்கறோம்,\\

ஆனா தியேட்டர் வாசல்ல மேட்னி ஷோவுக்கு காலையிலேர்ந்தே நிப்போம்.
(இப்ப அதுக்கு வேலையில்லை)

நட்புடன் ஜமால் said...

\\ஆமா ஏ.கே 47 புடிச்சவன் பாகிஸ்தானியன், அவனை ஊருக்குள்ள வுட்டுட்டு வேடிக்கை பாத்தவன் இந்தியன்.\\

அமித்து அம்மாவின் ஃபனைல் டச் சும்மா நச்சு, நச்சு, நச்சு

நட்புடன் ஜமால் said...

\\ஒரு வட்டத்துல இருக்குற ஒரு பகுதி செயலாளர் பதவிக்கே இப்படி வன்முறை இருக்குன்னா, மக்களே மத்ததெல்லாம் நீங்களே கணிச்சுக்கோங்க.\\

சில காலமாய் துடங்கிவிட்டது

கன்-முறை.

நட்புடன் ஜமால் said...

\\எதுவும் இங்க சரியில்ல, மாற்றம் நம்ம கிட்டருந்து வரணும், ரொம்ப வேணாம், மாநகராட்சி சொல்லுதே மக்கும் குப்பை, மக்கா குப்பை அப்படின்னு தனித்தனியா போடுங்கன்னு, அத நாம செய்றோமா, ஏன்னா நேரமில்ல, ரொம்ப பிஸி.\\

கிடையாதுங்க

இது பொறுப்பற்ற தன்மை.

குப்பைகளை பார்த்து மூக்கை நன்னா மூடிக்கிட்டு - முனுமுனுத்துக்கிட்டே போவோம் - ஆனால் அதை கொட்டுவது நம்மை போன்றோர் தான் என்பதை விளங்கிக்கொள்ள விரும்பாத பொதுஜனம்.

\\மாற்றம் நம்ம கிட்டருந்து வரணும்\\

மிகச்சரியா சொன்னீங்க

Unknown said...

அக்கா சூப்பர்... பயங்கரமா சொல்லிருக்கீங்க.. அந்த மும்பை, சட்டக்கல்லூரி விஷயம் நான் கூட நினைச்சு என் மாமாகிட்ட கேட்டேன் என்ன மாமா அவ்ளோ தானான்னு.. ம்ம்ம்ம் என்ன பண்றது மாற்றம் நம்மகிட்ட இருந்துதான் வரணும்.. ரொம்ப சரி ஆனா யாரும் தயாரா இல்ல... மாறினா தெய்வ குத்தமாகிடும்ன்னு பயப்படறாங்க... ச்சே.. :((

கார்க்கிபவா said...

நல்லா எழுதிட்டீங்க.ஆனா யாரையும் கோத்து விடலையே?

தேவன் மாயம் said...

அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா, அப்படின்னு சொல்றா மாதிரி போச்சு..,
வெக்கக்கேடுங்க....
நாளைக்கு நமக்கும் இந்தக் கதிதான். 10 அல்லது 100 அட ஆயிரத்திலும் ஒருவர்.
மறப்பது இல்லையென்றால்
அரசியலே இல்லை.
தேவா.

Thamiz Priyan said...

மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருக்கிறது. இன்று பணத்துக்கே மதிப்பு அதிகமாகி விட்டது..:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்ப என்னத்துல ஓட்டு போடனும் நான்?

விசயம் சீரியஸா இருக்கே.. ஃபன்னில போட்டா நல்லாருக்காது. இண்டரெஸ்டிங்க்ன்னு சொன்னா.. கஷ்டத்துல என்னங்க இண்ட்ரெஸ்டிங்..கூல் ன்னா எப்படிங்க.. விசயமே எதையும் கூலா எடுத்துக்காதீங்கன்னு தானே ..

நான் என்ன பண்ண ...

பழமைபேசி said...

எப்பிடிங்க இதெல்லாம்? வெகு நேர்த்தியா?? அருமை!


ஒன்னு, நீங்க‌ ப‌த்திரிகை ஆளாத் தாயாராகுறீங்க‌? இல்லைன்னா வேட்பாள்ரா?? இதுல் நீங்க‌ எது??

Dhiyana said...

//எனக்குத் தெரிந்து பள்ளிக்கூடத்து ரூமை பூட்டிக்கிட்டு, குத்து குத்து குத்துன்னு கள்ள ஓட்ட குத்துனவங்கள எனக்கு நல்லாத் தெரியும்//

நிறைய விஷயம் தெரிந்து வைச்சிருக்கீங்க..

அமுதா said...

நச் நச் நச்

Anonymous said...

பொங்கித்தள்ளீட்டீங்க

SK said...

:(

நிதர்சனம்...
ஆனா யாரோ ஒருவர் பூனைக்கு மணி கட்டி தானே ஆகணும்..

சந்தனமுல்லை said...

போட்டுத் தாக்கிட்டீங்க!

//எதுவும் இங்க சரியில்ல, மாற்றம் நம்ம கிட்டருந்து வரணும், ரொம்ப வேணாம், மாநகராட்சி சொல்லுதே மக்கும் குப்பை, மக்கா குப்பை அப்படின்னு தனித்தனியா போடுங்கன்னு, அத நாம செய்றோமா, ஏன்னா நேரமில்ல, ரொம்ப பிஸி.//

இது செம!

சந்தனமுல்லை said...

//அத யாரோ போட்டுட்டு போயிடறாங்க, அந்த யாரோ வேற யாருமில்ல, நம்ம பொதுஜனங்கதான், //

:-))

Anonymous said...

// நம்ம மக்களுக்கு பரபரப்பு பிடிச்சிருக்கு, நாலு நாளைக்கு பேப்பர் சர்க்குலேசன் பிச்சிக்கிட்டு போது இப்படி ஏதாவது ஒன்னு நடந்தா,
படம் படமா போட்டுக்கலாம், மைக் எடுத்துட்டு போய் பேசிக்கலாம், அடிச்சிக்கிட்டு சாகறதை டி.வி.யில பாக்குற நாமளும் “உச்” கொட்டிக்கலாம்//

இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும். ஆனாலும் ஒரு விசயம் கவனிச்சிங்களா..இதில் பெரும் பங்களிப்பு வகிப்பது ஊடகம் மட்டும்தான். வன்முறையைக் குறிப்பிடவில்லை இங்கு. எனக்குக்கூட சில சமயம் தோன்றும் இந்த ஊடகம் எப்படியெல்லாம் அவனியை ஆட்டி வைக்கிறதென்று. இதற்கு ‘அஜெண்டா செட்டிங்’ தியரியை தொடர்புப் படுத்தலாம். ஆனாலும் நீங்க சொன்னது மாதிரி இவ்வேளையில் மனிதத்தை காப்போம். ம்ம்ம் மனிதத்தை காக்க சொல்லி மனிதனிடமே கேட்பது எவ்வளவு வேதனையானது. அதுக்காக வேற்றுக்கிரகவாசியிடமா கேட்கிறதுன்னுல்லாம் கேட்கப்படாது
:-)

தமிழ் அமுதன் said...

நம் மக்கள் மேல் குறை இருக்கிறது
இல்லை என சொல்ல முடியாது!

ஆனால்? அதற்கு வழி செய்து கொடுப்பவர்கள்
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான்!

கரண்ட் பில்லோ, டெலிபோன் பில்லோ
கட்டாமல் இருக்க முடியுமா?

முடியாது !

அதே சமயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு
எல்லோர் வீட்டிலும் செய்யப்படவேண்டும்
என்ற திட்டம் மட்டுமே அறிவிக்க பட்டது
அதனை மக்கள் ஏற்று செயல் பட்டார்கள்
கெடு பிடி ஏதும் இல்லாத போதே!


ஆனால் அதன் பின்னர் வந்தவர்கள்
அதை செயல் படுத்தவில்லை!

லைசன்ஸ் இருநூறு ரூபாயில் கிடைத்து
விடுகிறது,அல்லது கிடைத்தது

இந்த செய்தி நம் நாட்டு முதலமைச்சர் வரை
தெரிந்து இருக்கும் ஆனால்? அந்த குற்றத்தை
செய்பவன் கட்சி காரனாகவோ அல்லது கட்சிக்கு
வேண்டபட்டவனாகவோ இருப்பான்.கட்சியின்
இடைநிலையில் இருப்பவர்கள் அவனை
காப்பாற்றி விடுகிறார்கள்!

இந்த மாதிரி விசயங்களில் ஆரம்பிக்கிற
ஊழல்தான்! தீவிர வாதிகள் நம் நாட்டினுள்
நுழைவது வரை நீடிக்கிறது!

(அப்புறம் அதிமுக வில் வட்ட செயலாளர் பதவி
என்பது சாதாரணமானது அல்லங்கோ )


''கண்ணாடி ஜீவன்''
அட நல்லா இருக்கே!


''கண்ணாடிகார ஜீவன்''
''கண்ணாடி போட்ட ஜீவன்''
சும்மா சொல்லி பார்த்தேன்
(நான் கண்ணாடி ஏதும் போடுறது இல்லங்கோ)

rapp said...

supero super:):):)

rapp said...

//மும்பை கலவரத்தின் பிஸியின் போது, நம்மூரில் பாரெஸ்ட் வெட்டி ஜெயிலுக்கு போன (மரத்தை வெட்டியதால் ஒன்னும் ஜெயில்லுக்கு போகலை) ஒருவரை உயர்நீதிமன்றம் ரிலிஸ் செய்துவிட்டதாம் ஜாமீனில்//
//ஏ.கே 47 புடிச்சவன் பாகிஸ்தானியன், அவனை ஊருக்குள்ள வுட்டுட்டு வேடிக்கை பாத்தவன் இந்தியன்.
//

super

Poornima Saravana kumar said...

//நம்மளோட லைசன்ஸ் வாங்கக்கூட நாம லைன்ல நிக்க மாட்டோங்கறோம்,\\

சரியா சொன்னீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதிரை ஜமால் said...
\\கலவர பிஸியில் அமுங்கிப்போன நம்மூர் அரசியல் இது.\\

இதுக்காகவே கலவரம் பன்றாங்களான்னு நமக்கு ஒரு சம்ஷியம் உண்டுங்கோ

இது கூட யோசிக்கவேண்டிய விஷயமாத்தான் இருக்கு ஜமால்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஆயில்ஸ் அண்ணா

நன்றி ஜமால்

அதிரை ஜமால் said...
\\ஒரு வட்டத்துல இருக்குற ஒரு பகுதி செயலாளர் பதவிக்கே இப்படி வன்முறை இருக்குன்னா, மக்களே மத்ததெல்லாம் நீங்களே கணிச்சுக்கோங்க.\\

சில காலமாய் துடங்கிவிட்டது
கன்-முறை.
நல்லா சொன்னீங்க உங்க பாணியிலே

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமதி said...
ரொம்ப சரி ஆனா யாரும் தயாரா இல்ல... மாறினா தெய்வ குத்தமாகிடும்ன்னு பயப்படறாங்க... ச்சே.. :((

ஆமாம்பா அதுதான் வ்ருத்தமா இருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி தேவா

நன்றி தமிழ்பிரியன் முதல் வரவுக்கு

நன்றி கார்க்கி கோத்துவிட்டுருக்கேன் உங்களையும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
இப்ப என்னத்துல ஓட்டு போடனும் நான்?

விசயம் சீரியஸா இருக்கே.. ஃபன்னில போட்டா நல்லாருக்காது. இண்டரெஸ்டிங்க்ன்னு சொன்னா.. கஷ்டத்துல என்னங்க இண்ட்ரெஸ்டிங்..கூல் ன்னா எப்படிங்க.. விசயமே எதையும் கூலா எடுத்துக்காதீங்கன்னு தானே ..

நான் என்ன பண்ண ...

நம்மளால ஒன்னும் பண்ண்முடியலன்னுதானே இந்த பதிவு,
அப்புறம், அந்தக்கூல், இண்ட்ரஸ்டிங் இதுல என்னமோ ஒன்னுத்த க்ளிக் பண்ணப்ப வந்துச்சு, அப்படியே விட்டுட்டேன், இப்ப நீங்க சொன்னதுக்கப்புறம் தான் புரியுது அது ஓட்டுப்போடற மேட்டர்னு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பழமைபேசி said...
எப்பிடிங்க இதெல்லாம்? வெகு நேர்த்தியா?? அருமை!

//உங்களவிட நான் ஒன்னும் பெரிசா
எழுதிடலை.

ஒன்னு, நீங்க‌ ப‌த்திரிகை ஆளாத் தாயாராகுறீங்க‌? இல்லைன்னா வேட்பாள்ரா?? இதுல் நீங்க‌ எது??//

கரெக்ட்டா சொல்லீட்டீங்க
நான் தாயார்னு. ம் அம்மான்னா அதுதானே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி தீஷீ அம்மா, விஷயம் தெரிஞ்சு என்ன ப்ரயோஜனம், ஒன்னும் செய்ய முடியலையே.

நன்றி அமுதா

நன்றி சின்ன அம்மிணி,
ஏதோ நம்மளால முடிஞ்சது.

நன்றி எஸ்.கே
பூனைக்கு மணிகட்டதான் உங்கள கூப்பிட்டிருக்கேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி முல்லை,
என்னை அழைத்ததால்தான் எனக்கு இதை எழுத தோன்றியது.

நன்றி இனியவளே
மனிதத்தை காப்போம். ம்ம்ம் மனிதத்தை காக்க சொல்லி மனிதனிடமே கேட்பது எவ்வளவு வேதனையானது. அதுக்காக வேற்றுக்கிரகவாசியிடமா கேட்கிறதுன்னுல்லாம் கேட்கப்படாது//
ரொம்பச் சரியா சொல்லீட்டிங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜீவன்
உங்கள் கூற்றுகள் அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்புறம் அதிமுக வில் வட்ட செயலாளர் பதவி
என்பது சாதாரணமானது அல்லங்கோ )
அப்படியா, நல்ல வேளை கிட்டவில்லை.


''கண்ணாடி ஜீவன்''
அட நல்லா இருக்கே!
மன்னிக்கவும், குறி தவறிடுச்சு, டி-க்கு ப்திலா ன் -க்கு போயிடுச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ராப்

துளசி கோபால் said...

ஊதுற சங்கை ஊதத்தானே வேணும்.

ஆனா...எதிராளி காது கேக்கும் சக்தியை இழந்தவராமே(-:

அதுதான் இங்கே......

போகட்டும் 'சைன் லேங்குவேஜ்' சொல்லிறலாமுன்னா..... 'அவருக்குப் பார்வையும் இல்லை.

Jeevan said...

உங்ளுக்கு சிறந்த பேச்சாலர் பட்டம் வழங்களாம்,
நீங்க பேசின அத்தனையும் உண்மை. ஜனநாயகம் மக்கள்
கிட்டஇருந்து பரிச்சிட்டாங்க. பலசாலியவிட,
புத்திசாலியவிட பனசாலியதான் நிறயபெருக்கு புடிக்குது.

குடுகுடுப்பை said...

அட காசு கொடுத்த உண்மையான அன்பைத் தவிர எதுவும் கிடைக்கும் நாடு இது.//

எல்லா ஊரும் இதேதான். நம்மிடம் மனித நேயம் அதிகம்தான் ஆனால் அவசர உலகம் மனிதர்களை மாற்றிக்கொண்டிருக்கிறது