24 December 2008

ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை

அமித்துவுக்கு நல்ல காய்ச்சல், உடம்பு கொதிக்கிறது. என் மடியில் படுத்திருந்தாள், என் ஆடை கூட காய்ந்தது. கொஞ்ச நேரம் தூங்கிவிட்டாள்.
நேரம் கொஞ்சம் சென்றது, அவரின் அப்பா வந்தார், அழுதபடியே எழுந்துவிட்டாள்.

ஜீரம் விட்டுடுச்சா - என்னிடம்

இல்லை, அப்படியேதான் இருக்கு - நான்

ம், வாம்மா என்ற அமித்துவின் அப்பா, அமித்துவை தூக்கி மடியில் வைத்து, கட்டிக்கொண்டு உன் ஜீரத்தையெல்லாம் என்கிட்ட கொடுத்துடு, கொடுத்துடும்மா என்றார் சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக.

உணர்ந்தேன், ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை ஒளிந்திருப்பதை.

//பாப்பா பொறந்திருக்கு, குண்டா இருக்குது, அப்பவே சொன்னேன், ரொம்ம்ப எதிர்பார்க்காதன்னு கேட்டியா. ரொம்ப கத்தாத, வலி ஜாஸ்தியாகும்
அப்படிதான் இருக்குமாம்.//
குரல் மட்டுமே கேட்க முடிந்தது, கண்ணைத் திறக்கவொடா வலி.

எப்போதாவது நினைப்பதுண்டு, ச்சே, ஒரு அழகிய தருணத்தை கண்கொண்டு பார்க்காமல் போய்விட்டோமே என.

அது அத்தனையும் நேற்றைய உனது ஒரு துவளலில் பார்த்துவிட்டேன்.

அப்பா - அப்பப்பா
நான் கொட்டிவிடும் நேசமனத்தையும் உன் மனசில் பூட்டி வைத்து பெண்ணை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த நீயா துவண்டாய்.
உன் வேதனை கண்டு மகவின் வேதனை மறந்து நின்றேன் ஒரு சில கணம்..............



24 comments:

நட்புடன் ஜமால் said...

\\"ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை"\\

தலைப்பே அருமை.

நட்புடன் ஜமால் said...

\\உன் ஜீரத்தையெல்லாம் என்கிட்ட கொடுத்துடு, கொடுத்துடும்மா என்றார் சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக.

உணர்ந்தேன்\\

ம்ம்ம் ... அருமை.

உங்கள் ரங்கமணிக்கு ஒரு பெரிய - ஓ.

நெகிழ்ந்து சொல்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\அது அத்தனையும் நேற்றைய உனது ஒரு துவளலில் பார்த்துவிட்டேன்.\\

ம்ம்ம் ... அருமையான உணர்வின் அருமையான வெளிப்பாடு.

அமுதா said...

/*ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை*/
நல்ல கருத்து. அமித்துக்கு ஜுரம் சரியாய்டுச்சா?

சந்தனமுல்லை said...

வாவ்! அருமையான ஒரு பாசப் பதிவு!!

சந்தனமுல்லை said...

//ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை ஒளிந்திருப்பதை.//

சோ ஸ்வீட்!

சந்தனமுல்லை said...

//உன் வேதனை கண்டு மகவின் வேதனை மறந்து நின்றேன் ஒரு சில கணம்.............. //

கவிதை மாதிரி இருக்கு அமித்து அம்மா!

Thamira said...

அழ‌கான ரசனையான ப‌திவு. வாழ்த்துக‌ள் அ.அ.! (நிறைய‌ பேரை பாலோ ப‌ண்ண‌ வேண்டிருக்குது கொஞ்ச‌ நாளா பிர‌வுசிங் சென்ட‌ர் போக‌ முடியாம‌ ப‌ணிப்ப‌ளு.!)

Poornima Saravana kumar said...

உன் வேதனை கண்டு மகவின் வேதனை மறந்து நின்றேன் ஒரு சில கணம்..............

அன்பு பொங்கப் பொங்க

நசரேயன் said...

/*ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை*/
உண்மை

அபி அப்பா said...

ஆமா அமித் அம்மா, நீங்க சொல்வது சரி!நீங்க சொல்லிய விதம் அருமையோ அருமை!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..நல்லா உணர்ந்து எழுதி இருக்கீங்க..

Maddy said...

உன் வேதனை கண்டு மகவின் வேதனை மறந்து நின்றேன் ஒரு சில கணம்..............

உங்கள் விழியில் நீர் வழிந்ததா தெரியவில்லை, ஆனால் அகத்தில் வழிந்ததை( ஆனந்தத்தில்) கண்டேன்!!

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருப்பதை போல

Dhiyana said...

//ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை ஒளிந்திருப்பதை.//

அருமையான வரிகள்.

Unknown said...

குழந்தைகளுக்கு உடம்பு முடியவில்லை என்றால் நாம் செயலற்றுப் போய்விடுவோம்...என் பள்ளி நாள்களில் ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் இளையராஜா, ஏ.ஆர்.ரெஹ்மான் எல்லாரும் நள்ளிரவில் நான் மூச்சு வாங்கும் போது இசைப்பார்கள் (severe wheezing ல் )...ஆஸ்தாலின், deriphyln..ஸ்டீராய்டுகள் இல்லாமல் அந்த மாதத்தை கடத்தவே முடியாது. அப்போதெல்லாம் என் அப்பா என்னை தோளில் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விரைவார்....நோய்மையின் தீவிரத்தைத் தாண்டி என் கண்ணிலிருந்து நீர் வழியும் என் தந்தையின் தாய்மையை அறிந்த அக்கணங்களில்....அமித்துவின் அப்பாவும் பிள்ளையின் துயர் தாங்காமல் மனம் கரையும் மற்றொரு தந்தை...அமித்துவின் காய்ச்சல் நின்றுவிட்டதா? தங்கத்திற்கு என் முத்தங்களை அனுப்புகிறேன்...சாயங்காலங்களில் எப்போதும் ஸ்வெட்டர் மற்றும் மப்ளர் மறக்காமல் போட்டு விடுங்கள்..(அமித்துவின் அப்பா அம்மா - அபியும் நானும் பார்த்துவிட்டீர்களா? நான் அடுத்த வாரம் போகிறேன்)

பழமைபேசி said...

//ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை
//

அப்பாட, எங்க மனசுலயும் ஈரம் இருக்குன்னு சொல்லி குளிர வெச்சிட்டீங்க!

ரிதன்யா said...

வாழ்க்கை என்பது உணர்ச்சிகளின் சங்கமமே.
என்ன வேலை என்ன பத்வி உயர்வு
இதுக்கு மேல என்னங்க வேணும்.நானும் பாசக்கார அப்பாதானுங்க.

ரிதன்யா said...

குழந்தகள் என்பது கடவுளின் அவதாரம்.
நமக்கு வரமளிக்கவே அவர்கள் வருகிறார்கள்.

தேவன் மாயம் said...

///உணர்ந்தேன், ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை ஒளிந்திருப்பதை.///

வெட்கப்பட்டுக்கொண்டுதான் நிறைய ஆண்கள் வெளியே சொல்வது இல்லை!!

தேவா...

தமிழ் அமுதன் said...

//ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை//

நல்ல தலைப்பு! ''ஆண்மைக்குள் ஒரு தாய்மை''
இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

அம்மா =அப்பா
தாய் =தந்தை
பெண்மை =ஆண்மை
தாய்மை =????

நம் மொழி கூட சொல்லாமல் விட்டுவிட்ட
ஒன்றை அருமையாய் விளக்கி இருக்கிறீர்கள்
எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு தாய்மை
உணர்வு உள்ளது. ஆனால் அது மிகவும்
பலவீனமானது. தன் பிள்ளையின் லேசான
கண்ணீருக்கே அது துவண்டு விடும்!

கணினி தேசம் said...

உணர்வுபூர்வமான பதிவு. சிறிது நெகிழவும் வைத்தது!!

நன்றிகள் பல.

அன்புடன் அருணா said...

இந்தத் தாய்மையின் உணர்வுகளைப் பலமுறை பார்த்ததுண்டு.....நீங்கள் அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்.
அன்புடன் அருணா

ராமலக்ஷ்மி said...

கவிதையாய் ஒரு தலைப்பு.

கனிவாய் ஒரு நிகழ்வு.

அதை நெகிழ்வாக்கிய பதிவு.

தமிழ்நதி said...

உங்களுக்குள் ஒரு கவிதை மனசு இருக்கவே இருக்கிறது. நுண்ணிய உணர்வுகளைக் கவனிப்பதிலும் பகிர்வதிலும்.