31 December 2008

என் இனிய வலைப்பூ மக்களே

2008 - எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன், அப்படீன்னு எண்ண வைத்த வருடம்.

இரவும், பகலுமாய் துன்பமும் இன்பமும் சுழன்றுகொண்டுதான் இருந்தது. என்ன ஒரு விஷயம், எல்லாவற்றையும் ஒரு புரிதலுடன் அணுகியதால் சில நல்ல படிப்பினைகள் கிடைத்தது. அதனால் இதுவும் கடந்து போம் என்ற ஒரு மனப்பக்குவம் வாய்த்தது.
எல்லை மீறிய மனவருத்தங்களை இதுவும் கடந்து போம் என்று அந்தக்கணம் எடுத்துக்கொள்ளமுடியாவிட்டாலும், அக்கணங்களூடே அமைதியாய் கடந்து சென்றதில் ஒரு நல்ல ஒட்டுதலைக் கொடுத்தது நெருங்கிய உறவுகளுடன்.

மிக மிக முக்கியமாய் வலைப்பூ, இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது நெறைய் நட்பூக்கள் வளர்ந்து, வாசமிகு தோட்டத்தால் எப்போதும் மணக்கிறது என் ஜி.மெயில்.
அதுவரை நேரம் கிடைக்கும் போது வலைப்பூவை படிக்க மட்டுமே செய்வேன். முதல் முதல் நான் பின்னூட்டம் போட்ட வலைப்பூ திரு. ரசிகவ் ஞானியாரின் விதைகள், பின்னூட்டம் போடத் தெரியாததால்(!?!) தனி மெயில் அனுப்பினேன்.
பின்பு அவரின் உதவியால் தொடங்கியதே இந்த “மழை”.

குழந்தைகளின் உடலையும் உணவையும் மட்டும் சரியாக கவனிப்பது மட்டுமே ஒரு தாயின் தலையாய கடமையாக எண்ணிய எனக்கு, இல்லை மனதையும் என்று அறிவுறுத்தியது கீழ் வரும் ப்லாகர்ஸின் ப்லாக்ஸ்.
ஒரு சுபயோக சுபதினத்தில் பார்த்தது திருமதி. சந்தனமுல்லை அவர்களின் பதிவு, மிகவும் நெகிழ்ந்தேன் அவர்களின் மகள் பப்பு பற்றி அவர் எழுதியதைப் படித்துவிட்டு. இப்படியும் அம்மாவாய் இருக்கமுடியும் என்று தோன்றியது அப்போதுதான்,
அதுவரை வேலைக்கும் போய், வீட்டையும் கவனித்து, குழந்தையை சரி வர கவனிக்க இயலாமல் ஒரு வித மன உழற்சியில் மாட்டிக்கொண்டு இருந்தேன்.
தெளிவடைந்தது இவர்களால் தான், நன்றி என்ற சொல் என்ன கைம்மாறை தந்துவிடும், எங்கோ இருந்து கொண்டு எண்ணங்களால் வார்த்தைகளுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருக்கும் என்னால்.

1. சந்தனமுல்லை
2. அமுதா (என் வானம்)
3. தீஷூ அம்மா (பூந்தளிர்)

இதற்கப்புறம், இவர்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை பின் தொடர்ந்து கொண்டே போனதில் ஏகப்பட்ட ப்லாகர்ஸின் எழுத்துக்கள் அறிமுகமாயின. என் கற்பனைப்பசிக்கு நல்லதொரு தீனியாய் அசை போட அமைந்தவைகள் நிறைய பேருடைய எழுத்துக்கள்.

திருமதி. துளசி கோபாலுடைய துளசிதளம் - இவரின் அக்கா பதிவு என்னை மிகவும் பாதித்தது

திரு. ஜீவன் (கண்ணாடி) - ஏனோ இவரின் ஃபோட்டோ சாயல் எனது அண்ணனை நினைவு படுத்துகிறது. இவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரின் பிரசவம் பற்றிய ஒரு பதிவும், புகைப்பிடிப்பதைப் பற்றிய பதிவும் அருமை.

திரு. தாமிரா - இவரின் பப்புவும் சந்தனமுல்லையும் பதிவும் இன்னமும் இனிக்கிறது

திரு. ஆயில்யன் - இவரின் எழுத்துக்களும் அட போட வைக்கும் ரகமே (இவரின் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும், அதற்கு இவர் தரும் மறுமொழியும் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது)

திரு. குடுகுடுப்பையார் - நையாண்டியாக்கு குறைவு வைக்காத மனிதர்

திரு. பழமைபேசியார் - கொசுவத்தி சுத்த வைக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர். எனது வேண்டுகோள்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைத்துவிடுகிறார்.

திரு. கார்க்கி - நக்கலும் நையாண்டியுமாய், ஒரு யூத் எஃபெக்ட்

திரு. ஸ்ரீமதி - படமும், கவிதையுமாய் காதல் கலக்கல்.

திரு. அதிரை ஜமால் - பின்னூட்ட பெரியசாமியான இவரின், ”வரவு செலவு” எக்செல் ஃபைல் பதிவு எல்லோருக்கும் உபயோகமான ஒன்று.

இவர்களின் வரிசையில் இன்னும் நிறைய பேரின் எழுத்துக்கள் அட போட வைக்கிறது,

எனக்கு இடப்படும் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரு பொன்னூட்டமாய், என்னை என்றும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
சிறப்பு வணக்கங்கள் என்னை(யு)ம் பின் தொடரும் அந்த 27 பேருக்கு.

இனி அவ்வளவுதான் என்று நான் மூட்டை கட்டி வைத்த என் கற்பனைகளுக்கும், கவிதைகளுக்கும் நல்ல விதமாய் வெளிக்கொண்டு வந்த இந்த 2008க்கு இன்னும் எவ்வளவோ செய்யலாம், ஆனால் இன்றோடு முடிந்து விடப்போகும் இந்த வருடத்திற்கு, என்ன செய்ய முடிந்து விடும் என்னால், இனிவரும் வருடத்தை இனிமையாய் எதிர்கொள்வதை விட.

”வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே” (அருமையான ஒரு பாடலின் அற்புதமான வரிதான் இது.)

இப்படியே வாழ்ந்துவிட்டால் போகிறது. என்ன இருக்கிறது இந்த அறைகுறை வாழ்வில்
இயற்கையின் சுனாமியோ, பூமி அதிர்ச்சியோ இல்லை செயற்கையின் ஒரு அணுகுண்டு வீச்சோ என்ன மிச்சம் வைத்துவிட்டு போகும் நம் வாழ்வில், ஒருவருக்கொருவர் அண்டி வாழும் வாழ்வில் வரும் அன்பையும் அனுசரணைப் பேச்சுகளையும், செய்யும் உதவிகளையும் விட....

நம் தேவைகள் என்றும் குறையப்போவதில்ல, இது போதும் என்று நினைக்கும் போதே, இன்னொன்றின் தேவை அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.

கூடுமானவரையில் நம் இயல்பு வாழ்க்கையில் கோபம் தவிர்த்து, போட்டிகள் அன்றி, பொறமையை பொசுக்கி, அகந்தையை அழித்து, எல்லாவிடங்களிலும் அன்பையும், புன்சிரிப்பையும் மட்டுமே நிரப்பி ஒரு புதிய வாழ்தலுக்கு முயற்சிப்போம் இனியேனும்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009

40 comments:

நட்புடன் ஜமால் said...

\\"என் இனிய வலைப்பூ மக்களே"\\

தலைப்பே அருமையான வாசம்

பூ-வாசம்

நட்புடன் ஜமால் said...

\\திரு. அதிரை ஜமால் - பின்னூட்ட பெரியசாமியான இவரின், ”வரவு செலவு” எக்செல் ஃபைல் பதிவு எல்லோருக்கும் உபயோகமான ஒன்று.\\

நன்றிங்கோ ...

நட்புடன் ஜமால் said...

\\இதுவும் கடந்து போம் \\

இதனை புரிந்து கொண்டால் வாழ்வோம் நலம்

நட்புடன் ஜமால் said...

\\மழை\\

நாங்களும் நன்றாக நினைகிறோம்

ஆனாலும் ஜூரம் ஒன்றும் இல்லை

நல்ல உரம் ...

நட்புடன் ஜமால் said...

\\குழந்தைகளின் உடலையும் உணவையும் மட்டும் சரியாக கவனிப்பது மட்டுமே ஒரு தாயின் தலையாய கடமையாக எண்ணிய எனக்கு, இல்லை மனதையும் என்று அறிவுறுத்தியது\\

மிகச்சரியே ...

ஆயில்யன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

குடுகுடுப்பை said...

நல்லவேளை என் பேர சேத்தீங்க இல்லாட்டி திருமதி குடுகுடுப்பையார் ஏன் அமித்து அம்மா உங்களை சேக்கலை ஒரே கும்க்கி ஆகிருக்கும்

நட்புடன் ஜமால் said...

\\கூடுமானவரையில் நம் இயல்பு வாழ்க்கையில் கோபம் தவிர்த்து, போட்டிகள் அன்றி, பொறமையை பொசுக்கி, அகந்தையை அழித்து, எல்லாவிடங்களிலும் அன்பையும், புன்சிரிப்பையும் மட்டுமே நிரப்பி ஒரு புதிய வாழ்தலுக்கு முயற்சிப்போம் இனியேனும்.\\

அழகான ஆழமான வரிகள்

நானும் உங்கள் பாதையில் ...

ஆயில்யன் said...

/நம் தேவைகள் என்றும் குறையப்போவதில்ல, இது போதும் என்று நினைக்கும் போதே, இன்னொன்றின் தேவை அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.

கூடுமானவரையில் நம் இயல்பு வாழ்க்கையில் கோபம் தவிர்த்து, போட்டிகள் அன்றி, பொறமையை பொசுக்கி, அகந்தையை அழித்து, எல்லாவிடங்களிலும் அன்பையும், புன்சிரிப்பையும் மட்டுமே நிரப்பி ஒரு புதிய வாழ்தலுக்கு முயற்சிப்போம் இனியேனும்.///


அருமை!

அருமை!

அ.மு.செய்யது said...

வலைப்பூ நண்பர்களை ஒரே பதிவில் இணைத்ததற்கு நன்றி.வலைப்பூவில் நடைபழக ஆரம்பித்திருக்கும் எங்களைப் போன்ற குழந்தைகளுக்கு இவர்களின் அறிமுகம் பயனளிக்கும்.

அமுதா said...

/*இதுவும் கடந்து போம் என்ற ஒரு மனப்பக்குவம் வாய்த்தது*/
ஒவ்வொருவருக்கும் தேவையான மனப்பக்குவம். குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அருமையாக எழுதியுள்ளீர்கள்.

Sanjai Gandhi said...

அமித்து பாப்பாவுக்கும் உங்களுக்கும் அமித்து அப்பாவுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

Thamira said...

அழகான ஒரு பதிவு. உங்கள் அன்பை சம்பாதித்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.! லிஸ்ட்டில் எனது பெயரையும் பார்த்ததில் பெருமை. மேலும் அனேகராலும் கவனிக்கப்படாத ஆனால் நான் எழுதியதிலேயே சிறப்பானதாக உணரும் 'பப்புவும்..' பதிவை நீங்கள் குறித்துச்சொன்னதில் கொஞ்சம் புல்லரிப்பு. நன்றி, வாழ்த்துகள்.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜமால்

நன்றி ஆயில்ஸ் அண்ணா

குடுகுடுப்பை said...
நல்லவேளை என் பேர சேத்தீங்க இல்லாட்டி திருமதி குடுகுடுப்பையார் ஏன் அமித்து அம்மா உங்களை சேக்கலை ஒரே கும்க்கி ஆகிருக்கும்//
இஃகி.கி.கி.கி.

நன்றி அ.மு. செய்யது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா

நன்றி DON, சொல்லிடறேன்

நன்றி தாமிரா, உண்மையில் என்னை ஃபாலோ பண்ணுவதற்கு உங்களுக்கு நாந்தான் நன்றி சொல்லனும், நீங்க முந்திக்கிட்டீங்க.

சந்தனமுல்லை said...

செமையா இருக்கு அமித்து அம்மா! ஆனா என்னை இப்படி அன்பு மழையில் திக்கு முக்காட வச்சீட்டீங்களே..ஹூம்..ஹூம்!! :-))

ஓக்கே..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..குடும்பத்தினர் அனைவருக்கும்!!

//கூடுமானவரையில் நம் இயல்பு வாழ்க்கையில் கோபம் தவிர்த்து, போட்டிகள் அன்றி, பொறமையை பொசுக்கி, அகந்தையை அழித்து, எல்லாவிடங்களிலும் அன்பையும், புன்சிரிப்பையும் மட்டுமே நிரப்பி ஒரு புதிய வாழ்தலுக்கு முயற்சிப்போம் இனியேனும்.///

இது எனக்கு மிகவும் பிடிச்சது..பாலோ பண்றோமோ இல்லையோ!!lol

- இரவீ - said...

//இன்றோடு முடிந்து விடப்போகும் இந்த வருடத்திற்கு, என்ன செய்ய முடிந்து விடும் என்னால், இனிவரும் வருடத்தை இனிமையாய் எதிர்கொள்வதை விட.//

அம்சமா சொல்லிட்டீங்க போங்க,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமை அக்கா.. :))

//திரு. ஸ்ரீமதி - படமும், கவிதையுமாய் காதல் கலக்கல்.//

செல்வி.ஸ்ரீமதி இப்படி இருக்கணும்.. இல்ல..,
ஸ்ரீமதி- இப்படி இருந்தாலும் போதும் அக்கா.. :)) சின்ன குழந்தைக்கு எதுக்கு இவ்ளோ சிறப்பெல்லாம்??

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா :)))))

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முக்கியமாக அழகுக் குட்டிச் செல்லம் அமித்துவுக்கு....

தமிழ் அமுதன் said...

//திரு. ஜீவன் (கண்ணாடி) - ஏனோ இவரின் ஃபோட்டோ சாயல் எனது அண்ணனை நினைவு படுத்துகிறது.///

மிக்க மகிழ்ச்சி!!!

//இவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரின் பிரசவம் பற்றிய ஒரு பதிவும், புகைப்பிடிப்பதைப் பற்றிய பதிவும் அருமை.///

என் கடந்த சில ஆண்டுகளில்
எனக்கு கிடைத்த மிக சிறந்த
புத்தாண்டு பரிசு இதுதான்!
என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது
என புரியவில்லை!
நன்றி! நன்றி !! நன்றி !!!

தமிழ் அமுதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கணினி தேசம் said...

//"என் இனிய வலைப்பூ மக்களே"//

சமீபத்தில்.. பாரதிராஜா படம் பார்த்தீங்களோ?

கணினி தேசம் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

ஜீவா said...

Wish you a happy new year

Princess said...

அருமை! அருமை! அருமை!

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!

Muruganandan M.K. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

பாரதிராஜா போலத் தொடங்கியிருக்கிறீர்கள்:))!

//என் இனிய வலைப்பூ மக்களே//

உண்மைதான் அமித்து அம்மா. நானும் கடந்த ஆண்டுதான் வலைப்பூ ஆரம்பித்து முத்துக்களைக் கோர்க்கத் தொடங்கினேன். விட்டுப் போனதாய் அசட்டையாய் விட்டிருந்த எழுத்தார்வம் மறுபடி தொத்திக் கொண்டதும் நண்பர் வட்டம் விரிந்ததும் பல நல்ல எழுத்துக்கள் வலையில் வாசிக்கக் கிடைத்ததும் எனக்கும் நடந்தது. மனம் மகிழ்கிறது.

உங்களுக்கும் அமித்துவுக்கும் குடும்பத்தினருக்கும் எல்லோருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அகநாழிகை said...

தள சுத்துது அஆனாலும் சொல்றேன்....

புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Karthik said...

wish you happy new year!

special wishes for amishu.
:)

RAMYA said...

ம்ம்ம்ம் பரவா இல்லை
இந்த ரம்யா என்ற
தோழியை மறந்துட்டீங்க

என்ன பயந்திட்டீங்களா
சும்மா கலாயின்சேன்
உங்கள் நினைவு என்றுமே
என் மனதில் இருக்கிறந்து
அதே போல் ஜீவனினின் நினைவும்
மறக்க இயலாது.

அயராது எனக்கு ஊக்கம் அளித்தவர்
அளித்துக்கொண்டு இருப்பவர்.

நீங்கள் மேன்மேலும் நிறைய எழுதி
எங்கள் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்பது இந்த
அன்பு தோழியின் ஆசைகள்!!

மகி said...

//மிக மிக முக்கியமாய் வலைப்பூ, இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது நெறைய் நட்பூக்கள் வளர்ந்து, வாசமிகு தோட்டத்தால் எப்போதும் மணக்கிறது என் ஜி.மெயில்.//

உண்ம்மை. என் வாழ்விலும் பல ஏமாற்றங்கள்,சங்கடங்களை ஜி-மெயில் போக்கியிருக்கிறது.
தொழில்நுட்பத்தில் கிடைத்த சந்தோசம் எனலாம்.

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அமித்து அம்மா :)

SK said...

Happy New year :-) Hope you had a nice time.

தமிழன்-கறுப்பி... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

(தாமதத்துக்கு குறைநினைக்க மாட்டிங்களே?

தமிழன்-கறுப்பி... said...

எல்லோருக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிக்குங்க...

புதுகை.அப்துல்லா said...

புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி உங்களுக்கு, போலிஸ்காருக்கு அப்புறம் அமித்துக்கு :))