அம்மா மகள்
குளிருக்கு
இதமாக
அவளுக்கு நான்
மனதுக்கு
இதமாக
எனக்கு அவள்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
குட் ஜாப்
மேலதிகாரியின் பாராட்டு
குழம்பு
நல்லாருக்கு
அண்ணி
அவரின் ஆபிஸில் பணிபுரிவரின்
பாராட்டு
அருமையா எழுதுறீங்க
பின்னூட்ட பாராட்டுக்கள்
இப்படியாய்
எனக்கே எனக்கான பெருமைகள்.....
இரவில்
தன் கையை
என் கழுத்தில் போட்டு
தன் முகத்தை
என் நெஞ்சில்
இடுக்கி
என் போர்வைக்குள்
ஒடுங்கி
தூங்கும் மகளை
அரவணைக்கும் போதும்,
வர்ஷினி அம்மா
என்று யாராவது விளிக்கும் போதும்,
மகளின்
குறும்புகளை
பிறர் சொல்ல கேட்கும் போதும்
வரும் பெருமைக்கு முன்னால்
மற்றவையெல்லாம்
வெட்கித்தான் போகின்றது
பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் நின்றது.
இருப்பினும்
புன்னகைக்கிறேன்
தோற்றது உன்னிடம் என்றானபோது....
காதல்
எல்லா இரவுகளிலும்
உறக்கம் வருவதுபோல
எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....
ஒரு ஹைக்கூ முயற்சி
மாதச் சம்பளக்காரனின்
கடைசி நாள் போல
வெறுமையான வானம்
அவ்வப்போது
மிதக்கும்
சில வெண்மேகங்கள்
உபயம்
ஓசி சிகரெட்.
35 comments:
\\"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்"\\
அழகான தலைப்பு.
இது சொல்லும் விஷயங்களே மிக அதிகம் ...
\\மனதுக்கு
இதமாக
எனக்கு அவள்\\
ஆரம்பமே தூள்
//வரும் பெருமைக்கு முன்னால்
மற்றவையெல்லாம்
வெட்கித்தான் போகின்றது
//
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...நெகிழ வைக்கின்றன வார்த்தைகள்.
\\ட் ஜாப்
மேலதிகாரியின் பாராட்டு
குழம்பு
நல்லாருக்கு
அண்ணி
அவரின் ஆபிஸில் பணிபுரிவரின்
பாராட்டு
அருமையா எழுதுறீங்க
பின்னூட்ட பாராட்டுக்கள்
இப்படியாய்
எனக்கே எனக்கான பெருமைகள்.....\\
ஆஹா ஆஹா மெய்யாலுமா ...
\\வர்ஷினி அம்மா
என்று யாராவது விளிக்கும் போதும்,\\
இதில் இருக்கும் சுகம் ...
சொற்களில் அடங்கா ...
\\எல்லா இரவுகளிலும்
உறக்கம் வருவதுபோல
எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....\\
ரொம்ப எளிதா சொல்லிட்டீங்க ...
என்னால முடியல.
\\மாதச் சம்பளக்காரனின்
கடைசி நாள் போல
வெறுமையான வானம்
அவ்வப்போது
மிதக்கும்
சில வெண்மேகங்கள்
உபயம்
ஓசி சிகரெட்.\\
அருமை - ஆனால் ஹைக்கூவா என்று அறியேன்...
பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் நின்றது.
இருப்பினும்
புன்னகைக்கிறேன்
தோற்றது உன்னிடம் என்றானபோது....////
அன்பானவர்களிடம் தோற்பது சந்தொஷம்தான்!!!
தேவா...
:))) super
அனைத்தும் அருமை அக்கா :)) Especially the bellow one..
//வர்ஷினி அம்மா
என்று யாராவது விளிக்கும் போதும்,
மகளின்
குறும்புகளை
பிறர் சொல்ல கேட்கும் போதும்
வரும் பெருமைக்கு முன்னால்
மற்றவையெல்லாம்
வெட்கித்தான் போகின்றது//
& //காதல்
எல்லா இரவுகளிலும்
உறக்கம் வருவதுபோல
எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....//
Great..:)))))
தமிழுக்கு
இதமாய்
கவிதைக்கு நீங்கள்!
வாசகத்துக்கு
இதமாய்
வாசிப்புக்கு நாங்கள்!!
இஃகிஃகி!!
கலக்கறீங்களே..எப்படி தானா வருதா இதெல்லாம்??
அமிர்தவர்ஷினி அம்மா,
//ஒரு ஹைக்கூ முயற்சி//
இந்த கவிதைதான் நல்லா இருக்கு. ஏன்? வித்தியாசம்.ஆனால் இது ஹைக்கூ அல்ல.
//வரும் பெருமைக்கு முன்னால்
மற்றவையெல்லாம்
வெட்கித்தான் போகின்றது//
செம!!
அட போங்க ஒவ்வொரு தடவையும் நல்லாருக்குன்னு சொல்லி அலுத்துப்போச்சு. உங்க கவிதைகளைப் பாராட்ட தனி வார்த்தை கண்டுபிடிக்கனும்:)
கவிதைகளும் அதற்கொத்த தலைப்புகளும் அருமை..னு எனக்கு கமெண்ட் போட்டு இரண்டு நாள்ல அத திருப்பி வாங்கிட்டீங்களே.. அருமை..
/*தோற்றது உன்னிடம் என்றானபோது....*/
:-) nice.
//பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் /.
வர்ஷினி அம்மா (பின்னது), உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு (முன்னது).
இப்ப என்ன பண்ணுவீங்க?.
//அம்மா மகள்//
அன்பின் ஊற்று.
//பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் நின்றது.//
பூரிக்கும் பெருமை.
//காதல்//
காற்றில் கரைய முடியாத கனிவு.
//ஒரு ஹைக்கூ முயற்சி//
ஓசியில் கிடைத்த சுகம்:)).
கவித...கவித.. :)
\\எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....||
நம் காதலும் பின் நம் கவிதையும் இதை விட உங்கள் பிள்ளை அமிர்தவர்தினி பற்றி கவிதையாய் சொல்லி விட முடியாது...
குடுத்து வைத்த அந்த செல்லத்திற்க்கு என் அன்பை சொல்லுங்கள்
முதல் கவிதை அழகு. காதல் கவிதை ரசனை.
வர்ஷினி அம்மா!
வர்ஷினி அம்மா!!
கவிதை எல்லாம் நல்லா இருக்கு!
கண்டினியூ
கண்டினியூ!
""அம்மா மகள்"
இதமான இதயமும் உணர்வும்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
""புன்னகைக்கிறேன்
தோற்றது உன்னிடம் என்றானபோது....""
எத்தனை முறை வேண்டுமானாலும் இதற்காக தோற்கலாம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....
காதல் வயப்பட்ட ஒவ்வொரு இதயமும் காதலை சுவாசிக்கும்போது இந்த உணர்வை அசை போட வைக்கும். நீங்களும் அப்படியே!!
உங்கள் ஹைக்கூ இப்படி மாற்றி எழுதலாமோ??
வெறும் வானத்தில்
சிகரெட் மேகங்கள்!!
சம்பளகரானின் கடைசி நாட்கள் போல!!
//பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்// - ரொம்ப பிடிச்சிருந்தது
ஒவ்வொரு வரியாக விமர்சிக்க தோன்றுகிறது..
அந்த அளவுக்கு அருமை!!
மொத்தத்தில்..கலக்கல்.
கலக்கல்
\எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....||
நம் காதலும் பின் நம் கவிதையும் இதை விட உங்கள் பிள்ளை அமிர்தவர்தினி பற்றி கவிதையாய் சொல்லி விட முடியாது...//
கவிதை சூப்பர், மேலே ஜாக்கி விளக்கம் குடுக்கலண்ணா இந்த பட்டிக்காட்டானுக்கு புரிஞ்சுருக்காது.
அப்படியே எல்லாத்தையும் கவுஜ ஆக்கிரட்டா? பயப்படாதீங்க
:-)))...
கலக்கறேள்!!!
///பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் நின்றது.
இருப்பினும்
புன்னகைக்கிறேன்
தோற்றது உன்னிடம் என்றானபோது....///
அருமை!
//பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் நின்றது.
இருப்பினும்
புன்னகைக்கிறேன்
தோற்றது உன்னிடம் என்றானபோது....
//
ரசித்தேன்!
//மனதுக்கு
இதமாக
எனக்கு அவள்//
நல்ல வரிகள்....அமித்து அம்மா!
சாரி..வர்ஷினி அம்மா!
//அம்மா மகள்
குளிருக்கு
இதமாக
அவளுக்கு நான்
மனதுக்கு
இதமாக
எனக்கு அவள்//
அழகு...வார்த்தைகளில் அழகு...
//காதல்
எல்லா இரவுகளிலும்
உறக்கம் வருவதுபோல
எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....//
உண்மையான வரிகள்...
அமிர்தவர்ஷிணி அம்மா....பெயரைப் போலவே வார்த்தைகள் அத்தனையும் அமிர்தம்....
அன்புடன் அருணா
Post a Comment