30 September 2008

புனிதப் பெருநாள் வாழ்த்துக்கள்.




ரசிகவ் ஞானியார், அப்துல்லா சார் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு
புனிதப் பெருநாள் வாழ்த்துக்கள்.

கஸ்தூரியும், அமிர்தவர்ஷினியும்



நேற்று இரவு 7 மணிக்கு கஸ்தூரி என்னும் சீரியல் TV-யில் ஓடிகிட்டிருந்தது.
வழக்கம் போல நானும் என் அமித்துவும் சீரியஸாக பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
சட்டென என் அமித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். என் மாமனார் சிரித்துக்கொண்டு இருந்தார்.
விசயம் இதுதான்: சீரியல் முடியும் போது அதில் ஒரு பெண்மணி பூஜை அறையில் கற்பூர ஆரத்தி காட்டி மணி அசைப்பதைப் போன்ற காட்சி.
இது போதாதா அமித்து சாமி கும்பிட.
அவள் சாமி கும்பிட்டு விட்டு மறுபடி பொம்மை விளையாட்டுக்கு வந்ததுதான் ஹை-லைட்

29 September 2008

காதலாகி / கசிந்துருகி / கண்ணீர் மல்கி




காதலாகி
கசிந்துருகி
கண்ணீர் மல்கி
காதலாகியாயிற்று
கசிந்தும் உருகியாயிற்று
ஆன காலங்கள்
போய் முடிய
கண்ணீர் மல்க ஆரம்பித்து இருக்கிறது
கல்யாண வாழ்க்கை
சர்வேசா

தமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு

தமிழ் பிரிவு
கணக்கு வகுப்பு
ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.
பசங்களா
2 + 2 = 4
ரெண்டு கூட்டல் ரெண்டு
ஈக்வல் டூ
நாலு.
எங்கே போயிற்று
சமக்குறி

25 September 2008

ஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல்லை)







ஏன் அமிர்தவர்ஷினி பத்தி எதுவும் எழுதல..?
என்று "சந்தனமுல்லை" கேட்டதற்கு பதில் இதோ:
ஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல்லை)

10 மாதமே ஆகிறது
ம்மா, ப்பா, தாத்தா, யா, ந்ன்னா என்று.

செல்போனை கொடுத்தால் அதை வாங்கி வாயை நோக்கி வைத்துக் கொண்டு
ஆஆன் ஆஆஆன்என்று செய்யும் அலம்பல்
என்னவென்று சொல்ல

யார் சொல்லிக்கொடுத்தார்கள்
கை தட்ட
தெரியவில்லை

போன வாரம் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த போது
நான் கையை உயர்த்தி
அண்ணாமலைக்கு அரோகரா என்று சொல்லியதைப் பார்த்து
அதிலிருந்து இரண்டு கையையும் மேலே உயர்த்தி உயர்த்தி

பின்பு நெஞ்சிடம் வைத்து
சிரித்துக் கொண்டே சாமி கும்பிடும் அழகு

வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையாரை பார்த்து
தினமும் காலையில் இரு கை கூப்புகிறாள்

குட் மார்னிங் சொல்ல ஆரம்பித்து வைத்து இருக்கிறார்
அவளின் தாத்தா
அதன்படி அனைவருக்கும் நெற்றியில் கை வைத்து குட் மார்னிங்

சொல்ல மொழியில்லை
மழலையின் பேரின்பத்தை

24 September 2008

தற்கொலை முயற்சி

பிரபல நடிகையின் தற்கொலை முயற்சி




அப்படின்னு அடிக்கடி பேப்பரில் வருதே

அப்ப அவங்கல்லாம் இப்படிதான்
முயன்றிருப்பாங்களோ


ஹி ஹி ஹி

இதுவும்
ஒரு முயற்சிதானுங்களே

13 September 2008

அணையா விளக்கு

நமக்கான நட்பை
அழகாய் மொழிபெயர்க்கிறது
இந்தப் படம்

சாரலிலும் அணையா விளக்கைபோலவே
நமது நட்பு

சில சமயம் வார்தைகள் தோற்றுப்போகும்
என்று சொல்வார்களே
அது
இந்த படத்தை பார்த்த
பிறகுதான் புரிந்தது

ஆம்
எனது கவிதையும்
பொருள் விளங்காமல் போனது
இந்தபடத்தின் முன்னால்

04 September 2008