29 September 2008

காதலாகி / கசிந்துருகி / கண்ணீர் மல்கி




காதலாகி
கசிந்துருகி
கண்ணீர் மல்கி
காதலாகியாயிற்று
கசிந்தும் உருகியாயிற்று
ஆன காலங்கள்
போய் முடிய
கண்ணீர் மல்க ஆரம்பித்து இருக்கிறது
கல்யாண வாழ்க்கை
சர்வேசா

7 comments:

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா..நல்லாருக்குங்க..:-))

தமிழ் அமுதன் said...

அமிர்த வர்ஷினி அம்மாவுக்கு கண்ணீரா ? இல்லைம்மா ! அமிர்த வர்ஷினி பேச ஆரம்பிச்சு இருக்குல்ல அந்த ராகத்துல வந்த மழையா இருக்கும் !
( எங்க வீட்டுலயும் அஞ்சு வயசுல ஒரு அமிர்த வர்ஷினி இருக்கு)

குடுகுடுப்பை said...

இது ரங்கமணி எழுதுன கவிதையா அக்கா.

Princess said...

பல அர்த்தங்கள் சொல்லுது உங்க கவிதை.

புதுகை.அப்துல்லா said...

கண்ணீர் மல்க ஆரம்பித்து இருக்கிறது
கல்யாண வாழ்க்கை
சர்வேசா
/

ஹா...ஹா..ஹா...

கிட்டத்தட்ட இதேபோல் நான் எழுதியதை இங்கு வாருங்கள்
(wise people think alike )

http://pudugaitamil.blogspot.com/2008/09/blog-post_08.html#links

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks sandhanamullai
Thanks aayilyan
Thanks Jeevan (cho chweet)
Thanks Anna (kukukuppai sir)ரங்கமணி கவிதை எழுதும் வாய்ப்பை நாங்கள் வழங்குவதில்லை அண்ணா.
Thanks Saawariya
Thanks abdulla sir ((wise people think alike ) சரியா சொன்னீங்க

cheena (சீனா) said...

மனம் ஒரு குரங்கு - மனித மனம் ஒரு குரங்கு. அதிலும் எழுதுவதற்கு ஒரு பிளாக் இருந்தால் உணர்ச்சிகள் கட்டுப்படுவதில்லை.

வாழ்வில் - அதிலும் காதலால் வந்த வாழ்வில் இதெல்லாம் இயல்பு. இதன் பின்னர் - இதன் அடிப்படையில் இழைந்தோடும் அன்பிற்கு முன் இச்சிறு கண்ணீர் ஒரு தூசு.


திருமண வாழ்க்கை என்றாலேயே கண்ணீர் நிறைந்த வாழ்க்கை எனப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். கண்ணீரும் வாழ்க்கையின் ஒரு அங்கமே.

நினைப்பதை - பார்ப்பதை - உடனே கவிதையாக எழுதும் திறமை பாராட்டுக்குரியது.