22 December 2008

2002ன் கவிதைகள்

ராசி

மனசு பொருந்திச்சுன்னா
போதும்
ஜாதகம், ஜோசியமெல்லாம்
வேணாம்.

அன்று
பேசியது
நினைத்தால்
சிரிப்பாய் வருகிறது

தேளும், மீனும்
ஒன்றாய் சேராது
சேர்ந்தாலும் வாழாது.

நேற்று
நீ பகிர்ந்ததை
நினைத்தால்
வருத்தமே மிஞ்சுகிறது

தேளும், மீனுமா
வாழ்க்கை நடத்துவது
மனிதர்கள் தானே.
வழிநடத்துவது மனம் தானே.

கொட்டும் தேளாய்
இருந்தாலும்
பாவம்தான்
விஷம் ஏற்றியது
சூழ்நிலையே.
எதிர்த்துக் கொட்டினால்
எப்போது வேண்டுமானாலும்
அடித்துப்போடலாம்

ஆயினும்
உனக்கு தேளின்
மனம் தெரிய வாய்ப்பில்லை
எப்போதும்
கரை சேரா மீனாய்
நீரை மட்டுமே சார்ந்திருப்பதால்.


”திரு”க்குறள்
கற்க கசடற் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கசடற கற்கவே
காசை
கையூட்டாய்
கொடுத்தல்
என்றானபின்

அதற்குத் தகுந்தார்போல
நிற்க முயலும் போது
முடியாமல்
போகும்
வள்ளுவனாரே
உமக்கும்.


மௌனமே.......

நிதர்சனமாய்
உண்மை
சில சமயம்
முகத்தில்
அறைகின்ற போது
மௌனம் தாங்கி
கடக்க நேரிடுகின்றது.

இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம்.

16 comments:

சந்தனமுல்லை said...

//இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம். //

ஹாஹா! சூப்பர்...! உண்மைதான்...இது! ம்ம்..அமித்து அம்மானந்தாமயி ரெடி..தத்துவங்கள் அள்ளி விடுவதற்கு! lol

தேவன் மாயம் said...

கவிதைகளா?....இவை?

பிரமாதம்1111

தேவா.

குடுகுடுப்பை said...

சூப்பர்

ராமலக்ஷ்மி said...

//கொட்டும் தேளாய்
இருந்தாலும்
பாவம்தான்
விஷம் ஏற்றியது
சூழ்நிலையே.//

உண்மைதாங்க.

//கசடற கற்கவே
காசை
கையூட்டாய்
கொடுத்தல்
என்றானபின்//

ஹூம் ஆமா, பாருங்க [நேரம் கிடைத்தால்].

//இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம்.//

சூப்பரா சொல்லியிருக்கீங்க.

Poornima Saravana kumar said...

கவிதைகள் அனைத்தும் அருமை:)

Poornima Saravana kumar said...

//இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம். //

சரியான வார்த்தை பிரயோகம் :)

Poornima Saravana kumar said...

//தேளும், மீனும்
ஒன்றாய் சேராது
சேர்ந்தாலும் வாழாது.//

:)

நசரேயன் said...

நல்ல கவிதை, இதை யாரு எழுதினா?

நட்புடன் ஜமால் said...

நிறைய எழுதியினியளோ 2002ல

நட்புடன் ஜமால் said...

\\ஆயினும்
உனக்கு தேளின்
மனம் தெரிய வாய்ப்பில்லை
எப்போதும்
கரை சேரா மீனாய்
நீரை மட்டுமே சார்ந்திருப்பதால்.\\

அருமை

நட்புடன் ஜமால் said...

\\கசடற கற்கவே
காசை
கையூட்டாய்
கொடுத்தல்
என்றானபின்\\

மிக அருமை.

அவர் காலத்தில் இருந்திருக்காதோ

நட்புடன் ஜமால் said...

\\இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம்.\\

அட நல்லாயிருக்கே.

அ.மு.செய்யது said...

தேளும், மீனுமா
வாழ்க்கை நடத்துவது
மனிதர்கள் தானே.
வழிநடத்துவது மனம் தானே.//

முற்றிலும் உண்மை.


இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம். //

நெத்தியடி.

கசடற கற்கவே
காசை
கையூட்டாய்
கொடுத்தல்
என்றானபின்//

திருக்குற‌ள் ரீமிக்ஸா.....

அர்த்த‌ம் பொதிந்த கவிதைக‌ள் ஆரோக்கிய‌ம்.

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு....1

நிஜமா நல்லவன் said...

இன்னும் நிறைய கவிதைகள் இருக்கும் போல....அடுத்த பதிவில் வருமா?

தமிழ் அமுதன் said...

எல்லாமே நல்லா இருக்கு!