22 December 2008

அமித்துவும் நானும்

அமித்துவுக்கு இன்னும் காது குத்தவில்லை. ஆனால் எனக்கு அவளுக்கு கம்மல் போட்டு விட ரொம்ப ஆசையா இருந்தது, அதனால டப்ஸ் கம்மல் வாங்கி போட்டேன். முதல் இருமுறை, பிறந்த்நாள் அன்றும், அப்புறமாய் ஒரு தரமும் அதை போட்டுக்கொண்டாள். மறுப்பேதுமில்லை.
ஆனால் நேற்று போட்டுவிட்டேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவள் காதில் கம்மல் இல்லை. இதைப்பாத்த நான் என்னம்மா, கம்மல் எங்கடா. எங்கம்மா போட்ட, அழகா இருந்துச்சிடா அது உனக்கு அப்படின்னு கம்மலை தேடிக்கொண்டே சொன்னேன்.
அதற்கு அவள் காதை தொட்டுப்பார்த்துக்கொண்டே இருந்தாள். இப்போது கம்மல் கிடைத்துவிட்டது, மறுபடியும் அவளுக்கு அதை போடும் முயற்சியில் நான் இறங்க, அவள் என் கையை தள்ளி விட்டு மறுத்தலுக்கு அடையாளமாக அவளின் தலையை வேகமாக ஆட்டினாள்
ஒரு நிமிசம் அவளின் செய்கையைப் பார்த்த நான், சற்று உரக்கவே சொல்லிக்கொண்டேன், உனக்குப் பிடிக்கலன்னா வேண்டாண்டா, உனக்கு எப்போ பிடிக்குதோ அப்ப் போட்டுக்கலாம் என்ன, இப்ப இங்க வெச்சிடலாமா, என்று ஃஷெல்பில் வைத்தேன், இதனைப் பார்த்த அவளின் முகத்தில் புன்னகை. எனக்கும்தான்.

வழக்கமாய் கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அமித்துவிடம் யசோ எங்கேமா, உங்க அம்மா எங்கே என்று கேட்டால், டாட்டா என்று சைகையில் சொல்வாளாம். சாயங்காலம் இருட்டும் வேளையில் யசோ எங்கமா, உங்கம்மா எங்கே என்று கேட்டால், த்தோ என்று தெருவை கைகாட்டுவாளாம்.
எல்லாம் தெரிஞ்சிதான் வெச்சிருக்கு என் செல்லம்.

எதிர் வீட்டுக் குழந்தை எங்கள் வீட்டில் வந்து விளையாடிக்கொண்டிருந்தாள், கூடவே அவளின் அம்மாவும் அவளுக்கு சாதம் ஊட்ட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். எல்லாக் குழந்தைகளைப் போல அந்தக் குழந்தையும் சாப்பிட அடம் செய்தது.
அமித்து, மோஹிதா (எதிர் வீட்டுக் குழந்தை) எல்லோரும் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள், மோஹிதாவோ சாப்பிட அடம்பிடித்ததால், அவளின் அம்மா நீ சாப்பிட்டா அங்கிள் உன்னை வண்டியில வெளியே கூப்பிட்டு போவாங்க, அவங்க இப்போ டாட்டா போறாங்களாம் என்றார்கள். அதற்கு அமித்து அப்பாவும், ஆமாம்மா, நீ சாப்பிட்டா நான் உன்னை வண்டியில கூப்பிட்டுபோவேன் என்றார். விளையாடிக்கொண்டே இதனை கேட்ட அமித்து, சட்டேன பொம்மையைக் கீழே போட்டு விட்டு அவளின் அப்பா காலை பிடித்துக்கொண்டாள், கூடவே சிணுங்கலுமாய் அவரின் காலை கட்டிக்கொண்டு வெளியே கிளம்ப ஆயத்தமானாள். அவர் என்னை நோக்கி, இதுக்கு எல்லாம் புரியுது போல என்றார்.

சில தினங்களுக்கு முன்னால், காலை நேரம், என் மாமியாருக்கு டீ போட்டுக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அவர்களுடன் இருந்த அமித்துவை கொஞ்சிக்கொண்டு இருந்தேன். அவளின் பாட்டி, பால் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் நீட்டியவாறே, குடிக்கவே மாட்டேங்குது, அடம் பண்றா, அப்படின்னு சொன்னாங்க.
சட்டென அப்பாட்டிலை வாங்கிய அமித்து, பாட்டிலை என் வாயில் வைத்து ஆ, ஆ என்றாள் சிரித்துக்கொண்டே.

என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................

21 comments:

Muruganandan M.K. said...

வாழ்க்கையை, குழந்தை வளர்ப்பை அனைத்தையும் ரசனையுடன் பார்க்கிறீர்கள். எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

/வாழ்க்கையை, குழந்தை வளர்ப்பை அனைத்தையும் ரசனையுடன் பார்க்கிறீர்கள். எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்./

ரிப்பீட்டேய்..!

நிஜமா நல்லவன் said...

/என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து./

குழந்தையோடு நாமும் குழந்தையானால் எல்லா நிமிடங்களும் அழகு தான்...!

சந்தனமுல்லை said...

வாவ்! சூப்பர்! அமித்துவும் அமித்துவின் மொழிகளும்!! நல்லாருக்கும் உங்க "அமித்துவும் நானும்"

ஆயில்யன் said...

அழகாய் விவரித்திருக்கிறீர்கள்!

சந்தனமுல்லை said...

//என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே............//

மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை! இந்தபதிவையும் அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறீர்கள்..உங்கள் கவித்துவ வரிகளால்!

அமுதா said...

/*என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................ */
அமித்துவுடன் உங்களது ஒவ்வொரு பொழுதும் அழகுதான். வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

//கூடவே சிணுங்கலுமாய் அவரின் காலை கட்டிக்கொண்டு வெளியே கிளம்ப ஆயத்தமானாள்//

:-)) சோ ஸ்வீட்!

சந்தனமுல்லை said...

//அப்பாட்டிலை வாங்கிய அமித்து, பாட்டிலை என் வாயில் வைத்து ஆ, ஆ என்றாள் சிரித்துக்கொண்டே.//

ஆகா..:-))) உணர்ச்சிமயமான நிமிடங்கள்?!!

Shakthiprabha (Prabha Sridhar) said...

குழந்தை வளர்ப்பதை அழகிய தவமாய் செய்கிறீர்கள். உங்கள் அமித்து ரொம்ப லக்கி ('நானும் தான் லக்கி' என்று நீங்கள் சொல்வீர்கள் என்று தெரியும் :) )

ஆகாய நதி said...

அழகான வரிகள் மிக அழகான நிகழ்ச்சிகளை தங்கள் மனதிலிருந்து வெளிப்படுத்துயுள்ளது :) அமித்து மட்டும் அதிர்ஷ்டசாலி அல்ல... நீங்களும் தான்... :) பெண்ணாய் பிறப்பதே பாக்கியம் தான் :)

ராமலக்ஷ்மி said...

அழகாய் விவரித்து அழகாய் முடித்திருக்கிறீர்கள்.
//என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................//

அருமை. அமித்துவுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அமித்து பெரிசானதும் படித்துக் காட்டுங்கள். ரசிப்பாள். இன்னும் நேசிப்பாள் உங்களை.
அழகான அம்மா.அழகான பாப்பா.

நசரேயன் said...

அமித்துக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Poornima Saravana kumar said...

//என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................
//

குழந்தைகள் செய்யும் சேஷஃடைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதமான அழகு தான் :))

Poornima Saravana kumar said...

//வழக்கமாய் கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அமித்துவிடம் யசோ எங்கேமா, உங்க அம்மா எங்கே என்று கேட்டால், டாட்டா என்று சைகையில் சொல்வாளாம். சாயங்காலம் இருட்டும் வேளையில் யசோ எங்கமா, உங்கம்மா எங்கே என்று கேட்டால், த்தோ என்று தெருவை கைகாட்டுவாளாம்.
எல்லாம் தெரிஞ்சிதான் வெச்சிருக்கு என் செல்லம்//

Great:))

Dhiyana said...

//அவளின் முகத்தில் புன்னகை. எனக்கும்தான்.//

குழந்தையின் புன்னகை என்னைக்கு நமக்கு புன்னகை வர வைக்காமல் இருந்திருக்கு..அமித்துக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

சாரி ஃபார் லேட்டு

நட்புடன் ஜமால் said...

\\என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................\\

அமித்து அம்மா டச்

சும்மா நச்.

Thamira said...

ர‌சித்தேன்..

தமிழ் அமுதன் said...

///என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................///


இது நல்லா இருக்கு !!