நீ என்ற
மையப்புள்ளியில்
தொடங்கிய
கோடு
நான்
நாளடைவில்
ஆளுக்கொரு
வட்டம்
போட்டு
தன்னச்சில்
சுழலத்தொடங்கியது
வாழ்க்கை
சுவாரசியமில்லாமல்
கைகோர்த்து
காதல் செய்த
கணங்களெல்லாம்
கண்ணில் நீர்
கோர்க்கச் செய்தன
என்ன செய்யலாம்
எங்கே தவறியிருப்போம்
என்று யோசிக்க நேர்கையில்
எதேச்சையாய்
கண்ணில் பட்டது
கடற்கரையின் படமொன்று.
நினைவுகளுக்கு
பஞ்சமில்லை
தடம் பதித்த
மணல் துகளும்
கால் நனைத்த
கடலலையும்
கரையிலமர்ந்து
நாம் ரசித்த
பௌர்ணமியும்
நம்மை நனைத்த
மழையும்
மௌனத்தையே
தேடாத
மொழிகளும்
என.........
எண்ண
எண்ண
ஏராளமாய்......
தவறின்
தவறு
தெரிந்துவிட்டது
ஆம்
உருகி உருகி
காதலித்த
நாம்
நான் நீ
என ஆனதை
கவனிக்கவே மறந்துபோயிருந்தோம்.
வா
கடற்கரைக்கு
நாம்
தொலைத்த
நம்மை
தேடி
எடுத்துக்கொள்ளலாம்
மணற்துகள்களில்
கால் நனைந்த
நாம்
மனம் நனைக்கலாம்
நம்மை நனைத்த
மழையில்
நாம் போய் நனையலாம்.
அமாவாசையாய்
இருக்கும்
உறவை
பௌர்ணமியாய்
மாற்றிக்கொள்ளலாம்.
கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு.
30 comments:
வந்துட்டேன் ...
படிச்சிட்டு வர்றேன்
\\தவறின்
தவறு
தெரிந்துவிட்டது
ஆம்
உருகி உருகி
காதலித்த
நாம்
நான் நீ
என ஆனதை
கவனிக்கவே மறந்துபோயிருந்தோம்\\
வாழ்வின் எதார்த்தம்...
கசப்பான உண்மை
\\நம்மை நனைத்த
மழையில்
நாம் போய் நனையலாம்.\\
நல்ல முயற்சி - தொலைந்துவிட்ட “நாம்” என்பதை தேடி
அழகான கவிதை அக்கா :))இழையோடும் சோகம் அழகு.. அது தீர்க்க எடுத்த முடிவும் அழகு.. :))
//கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு.//
ம்ம்ம் உண்மை :))
\\அமாவாசையாய்
இருக்கும்
உறவை
பௌர்ணமியாய்
மாற்றிக்கொள்ளலாம்.\\
நல்லதொரு ஆசை.
விடப்பட்ட விஷயங்களை - விட்டே விடாமல் - தொடர நினைப்பது
\\கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு. \\
மிக அழகு - என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தோனவில்லை.
மேலும் உங்கள் மனங்கள் பேசும் பொழுது - நான் வேறு எதற்கு
இது நல்லா இருக்கு!
இல்ல!
இதுதான் நல்லா இருக்கு!
ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்ட
சோகம்!
நிறைவில் எல்லாம் இன்பமயம்!
இப்படித்தான் இருக்கவேண்டும்
வாழ்க்கை, நம் எல்லோருக்கும்!
(இல்லாட்டி கடசில கத்தியால
குத்திட்டுள்ள போவீங்க) ;;;)))
/*அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு */
nice..
நேரம் இல்லாததால ஒரு சிரிப்பான் போட்டு போய்ட்டேன்! இதோ வந்துட்டேன்! :-))
//நாம்
நான் நீ
என ஆனதை
கவனிக்கவே மறந்துபோயிருந்தோம்.
//
நச்! போட்டோக்கள் சூப்பர்! அந்த போட்டோல இருக்கறது நீங்கதானா மேடம்!! ;-))
//கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு.//
எதுக்கு சண்டை போடணும், இப்போ எதுக்கு பீல் பண்ணனும்!! ;-)
//நம்மை நனைத்த
மழையில்
நாம் போய் நனையலாம்.//
:-)
//நாளடைவில்
ஆளுக்கொரு
வட்டம்
போட்டு
தன்னச்சில்
சுழலத்தொடங்கியது
வாழ்க்கை//
இது அமித்து அம்மா டச்!
//அமாவாசையாய்
இருக்கும்
உறவை
பௌர்ணமியாய்
மாற்றிக்கொள்ளலாம்.//
என்றும் பௌர்ணமியாகவே இருக்கட்டும்!! :-)
கடலில் வீசும் காற்று எவ்வளவு
சுகமானதோ!
அது போல உன் கவிதையும்
சுகமாகவே இருந்தது!
சுகம், துக்கம் இரண்டும்
உள்ள கவிதை
படங்களும், வார்த்தைகளுமாய் பொலிவும், நயமும்!!
//கைகோர்த்து
காதல் செய்த
கணங்களெல்லாம்
கண்ணில் நீர்
கோர்க்கச் செய்தன//
வலியுள்ள வார்த்தைகள்..
நினைவுகளுக்கு
பஞ்சமில்லை
தடம் பதித்த
மணல் துகளும்
கால் நனைத்த
கடலலையும்
கரையிலமர்ந்து
நாம் ரசித்த
பௌர்ணமியும்
நம்மை நனைத்த
மழையும்
மௌனத்தையே
தேடாத
மொழிகளும்
அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!!
தேவா.
அழகான..ஆழமான கவிதை...பாராட்டுகள் :-)
கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு
இந்த வரிகள் மிகவும் கவர்ந்தது!!!
ரெம்ப நல்லா இருக்கு,
நானும் படிக்கிறேன் எப்படி கவிதை எழுதுவதென
சந்தனமுல்லை said...
//கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு.//
எதுக்கு சண்டை போடணும், இப்போ எதுக்கு பீல் பண்ணனும்!! ;-)
ஆமாங்கிறேன்.
//நாம்
நான் நீ
என ஆனதை
கவனிக்கவே மறந்துபோயிருந்தோம்.//
பிரச்சனையின் வேர்க்காலை எவ்வளவு அழகாகக் காட்டி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா.
மேடம்.. tagged u here..
http://sandanamullai.blogspot.com/2008/12/blog-post_5329.html
//
கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு.
//
உண்மையான என்னவென்றால்
100 ஒரு வார்த்தை அமித்து அம்மா,
ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க.
வாழ்த்துக்கள்
நன்றி ஜமால்
வாங்க தங்காச்சி ஸ்ரீமா
சிரிப்புக்கு நன்றி முல்லை
நன்றி ஜீவன் :))))))))
நன்றி அமுதா
சந்தனமுல்லை said...
//நாம்
நான் நீ
என ஆனதை
கவனிக்கவே மறந்துபோயிருந்தோம்.
//
நச்! போட்டோக்கள் சூப்பர்! அந்த போட்டோல இருக்கறது நீங்கதானா மேடம்!! ;-))//
ஆமாங்க அது நான், உடன் இருப்பது எனது ரங்கமணி (நல்லா பாருங்க) கண்ணாடி போட்டுட்டு வந்து.
சந்தனமுல்லை said...
//அமாவாசையாய்
இருக்கும்
உறவை
பௌர்ணமியாய்
மாற்றிக்கொள்ளலாம்.//
என்றும் பௌர்ணமியாகவே இருக்கட்டும்!! :-)//
நன்றி முல்லை
நன்றி பழமைபேசி அண்ணே.
நன்றி பூர்ணிமா சரண்
நன்றி தேவன்மயம், உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
நன்றி சாகித்யா, உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
நன்றி குடுகுடுப்பையாரே,
ஃபீலா அப்டீன்னா எப்டியிருக்கும்
நன்றி நசரேயன்
நன்றி ரம்யா
grrrrrrrrrrrr!
//நன்றி குடுகுடுப்பையாரே,
ஃபீலா அப்டீன்னா எப்டியிருக்கும்//
இந்தக் கவிதை மாதிரி இருக்கும்..;-)))
அழகான கவிதை !!!
Post a Comment