02 December 2008

பெண்மணி அவள் கண்மணி

என்னா விசு பட டைட்டில் இருக்குன்னு பாக்கறீங்களா. உள்ள இருக்கும் மேட்டர் உண்மைங்க.


ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சு எழுதாம வெச்சிருந்த பதிவு இது. ரெண்டு வாரத்துக்கு முன்னர் என் அலுவலகத்தின் டெக்னிக்கல் டைரக்டரின் மனைவிக்கு (கைனகாலஜிஸ்ட்) ஆக்ஸிடென்ட். எப்படின்னா வீட்டிலிருந்து க்ளினிக்கிற்கு நடந்து செல்கையில் பின்னே வந்த சைக்கிள் இடித்து விட, அருகே இருந்த கல்லின் மேல் விழுந்து தலையில் பலத்த அடி. இப்போது கோமா ஸ்டேஜில்.நினைவுகள் வருவதும் போவதுமாய் இருக்கிறது.

வீட்டில் ஒரு பெண்மணி திடீரென இப்படியாகிவிட்டால் வீடு என்னவாகும் என்பதற்கு ஒரு உதாரணமாய் இப்போது அவரின் வீடு இருக்கிறது.மகனும், மகளும் இருப்பது அமெரிக்காவில், விசயம் கேள்விப்பட்டு இந்தியா வருவதற்குள் 2 வாரம் ஆகிவிட்டது.பீரோ சாவி கூட எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. இன்ஸூரன்ஸ் டாக்குமெண்ட் பீரோவிற்குள் இருக்கிறது. பாலிசி நெம்பர் தெரியாது. மெடிக்ளெய்ம் எடுத்தும் பலனில்லை.


பால்காரரிலில் ஆரம்பித்து, கரண்ட் பில், கேபிள் டீ.விக்கு பணம் கொடுப்பது வரை ஒன்றுமே யாருக்கும் தெரியவில்லை. இன்னார் யார் என்று தெரியாமல் அந்தம்மணி ஆஸ்பத்திரியில் நினைவிழந்து கிடக்கிறார்கள்.நினைவிருக்கும் இவர்களுக்கு வீட்டுக்கு வருபவர்கள் யார் என்றே தெரியவில்லை தன் வீட்டு டிரைவரைத் தவிர. டிரைவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்களாம். இவர்கள் யாரென. ரொம்ப பெருமைப்பட்டுக் கொள்கிறார் டிரைவர்.

ஆஸ்பத்திரியிலிருக்கும் அந்தம்மா இரண்டு வாக்கியங்களுக்கு மட்டுமே புன்னகைக்கிறார்களாம்.

1. ஆஸ்பிட்டல் நர்ஸ்: மேடம் நீங்க ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் சீஃப் டாக்டர் தானே.

2. அவரின் தம்பி: அக்கா, நாமெல்லாம் குடும்பத்தோட திருப்பதி போலாமா, கார் புக் பண்ணட்டா.

இதை நேற்று எங்களோடு பகிர்ந்து கொண்ட அவர் (டைரக்டர் : கப்பல் கட்டுவதில் கிங் மேக்கர்) கடைசியில் சொன்னது.ம்.. யார் மனசுல என்ன இருக்குன்னு, எது புடிச்ச விசயம்னு ஒன்னுமே சொல்ல முடியல, இத்தனைக்கும் நானும் அவளும் இத்தனை காலமா ஒன்னாத்தான் இருந்தோம்.

அப்புறமா அந்த பீரோ , அதோட சாவி கிடைக்காம, அவரோட மருமகன் கிட்ட சொல்லி உடைக்க சொல்லிட்டாராம். மூணு பீரோல எதுல இன்ஸூரன்ஸ் டாக்குமெண்ட் இருக்குன்னு தெரியாதாம்.அதனால மூணுத்தையும் ஒடைக்க சொல்லிட்டாராம். கல்யாணம் ஆன நாள்லருந்து அந்த பீரோ பக்கமே போனதில்ல நானு. இதுல சாவி எங்கருக்குன்னு எனக்கெப்படி தெரியும்.ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டாரு அவரு.

தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!

இதுக்கு என்னா சொல்றீங்கப்பு.

30 comments:

rapp said...

me the 1ST?

விஜய் ஆனந்த் said...

// தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!

இதுக்கு என்னா சொல்றீங்கப்பு //

ரங்கமணிகளின் கொ.ப.செ திரு. தாமிரா உடனடியாக மேடைக்கு வரவும்....

rapp said...

நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சரி. அதுப்போலவே, இன்னொரு செட்டும் இருக்காங்க. எல்லாத்தையுமே வீட்டின் குடும்பத் தலைவரே பாத்துக்கிறது. மத்த உறுப்பினர்கள் தெரிஞ்சிக்க விரும்பினாலும் details சொல்லாம மனச காயப்படுத்துரா மாதிரி ஒன்னு சொல்லி விட்டுடறது:(:(:( கடசீல ஒரு இன்றியமையா சூழ்நிலையில் இப்டியாகிடுது:(:(:( ஆனா பழிகள் பெரும்பாலும் குடும்பத்து ஆட்களுக்கு.

மறுபாதி செட் நீங்க சொல்லிருக்க மாதிரி. அவங்க சொல்ல வந்தாலும் காதுகொடுக்காம இருந்துட்டு, அப்புறம் அதையே வேற மாதிரி பிளேட்டை திருப்பி பெருமயாக்கி பேசி தப்பிச்சிக்கிறது:(:(:(

ரொம்ப ரொம்ப உபயோகமான விஷயம் நீங்க இங்க சொல்லிருக்கறது:):):)

நட்புடன் ஜமால் said...

\\
இடுகைத்தலைப்பு:
பெண்மணி அவள் கண்மணி

மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.\\

ஓட்டு போடலாம்னா இப்படி ஒரு தொந்தரவு.

நட்புடன் ஜமால் said...

\\தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!

இதுக்கு என்னா சொல்றீங்கப்பு\\

“” இதுக்கு தான் அவ கிட்ட சாவி கொடுத்து வைக்காதன்னு சொன்னேன் “”

இத நான் சொல்லலை சில ரங்கமணிகளின் தந்தையின் தங்கமணி

நட்புடன் ஜமால் said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

template மாற்றம் செய்தீர்களோ. நல்லா இருக்கு.

rapp said...

//இதுக்கு தான் அவ கிட்ட சாவி கொடுத்து வைக்காதன்னு சொன்னேன் “”

இத நான் சொல்லலை சில ரங்கமணிகளின் தந்தையின் தங்கமணி//

:):):)

விஜய் ஆனந்த் said...

ஆப்பீசர், நீங்க சொல்லியிருக்கறத கலந்து கட்டி ஒரு மூணாவது கேட்டகிரியும் இருக்கு...

// எல்லாத்தையுமே வீட்டின் குடும்பத் தலைவரே பாத்துக்கிறது //

இது நான்....

// "எப்ப" சொல்ல வந்தாலும் காதுகொடுக்காம //

இது என்னோட அரும பொண்டாட்டி...

:-(((...

இப்ப சொல்லுங்க..நா என்ன செய்ய..நா என்ன செய்ய..("தம்பி" ஸ்டைல்ல படிக்கவும்)

SK said...

நிறைய எடத்துல இது போல தான்.

எதிர் காலத்துல மாறும்னு நம்பலாம். உங்க ஆபிசரோட (அட நம்ம ராப் இல்லீங்க )
மனைவி குணம் அடைய என் பிரார்த்தனைகள்.

கபீஷ் said...

ரொம்ப நல்ல, உபயோகமான பதிவு!!

கபீஷ் said...

//தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!

இதுக்கு என்னா சொல்றீங்கப்பு.//

இப்படி கேக்காதீங்க, அப்புறம் நீங்க பெண்ணீயவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்

RAMYA said...

//
ஆஸ்பிட்டல் நர்ஸ்: மேடம் நீங்க ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் சீஃப் டாக்டர் தானே.


2. அவரின் தம்பி: அக்கா, நாமெல்லாம் குடும்பத்தோட திருப்பதி போலாமா, கார் புக் பண்ணட்டா.


இதை நேற்று எங்களோடு பகிர்ந்து கொண்ட அவர் (டைரக்டர் : கப்பல் கட்டுவதில் கிங் மேக்கர்) கடைசியில் சொன்னது.ம்.. யார் மனசுல என்ன இருக்குன்னு, எது புடிச்ச விசயம்னு ஒன்னுமே சொல்ல முடியல, இத்தனைக்கும் நானும் அவளும் இத்தனை காலமா ஒன்னாத்தான் இருந்தோம்.
//

யாரு மனுச்லே என்ன இருக்குது? இது 100 லே ஒரு வார்த்தைங்க. இது போல் ரங்கமணி அமைந்தால் தங்கமணிங்க பாடு ஒரே திண்டாட்டம்தான்.

அவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்

Dhiyana said...

உண்மை தான் அமித்து அம்மா. பீரோ சாவி ஒரு உதாரணம்னா எங்க வீட்டில ஐ.டி, பாஸ்வார்ட். எல்லா ஐ.டியும் பாஸ்வார்டும் எனக்கு மட்டும் தான் தெரியும்.

நசரேயன் said...

அவிங்க முகவரி இருந்தா கொடுங்கோ, நான் தான் அவங்க வளர்ப்பு மகன் ன்னு சொல்லி அவங்க சொத்துல பாதியாவது தேறுமான்னு பார்கிறேன்

Anonymous said...

ரெண்டு விததிலயும் இருக்காங்க. என் அம்மாவோட பல்வீனம் என் தந்தை மரணித்ததும்தான் தெரிந்தது. எல்லாவற்றையும் என் தந்தையே பார்த்துக் கொண்டதால் வந்த வினை.

அதே நேரம் என் தங்கமணியின் அம்மாதான் அவங்க வீட்டுல எல்லாம் முடிவு செய்வது.

ரெண்டு பேரும் பகிர்ந்து செய்யனுங்கிறதே இந்த இரு தலை முறையாகத்தன் இருக்கிறது.

நான் இல்லன்ன எங்க வீட்டுக்காரருக்கு கையும் ஓடாது காலும் ஓடாதுங்கிறதுல பெருமைப் பட்ட தங்கமணிகள் கூட்டம் குறைஞ்சிருச்சு.

தங்கமணிகள் இருந்தாத்தான் இப்ப ரங்கமணிகளுக்கு கை கால் ஓடாம இருக்கு.

தமிழ் அமுதன் said...

//தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!//


இதெல்லாம் சும்மா உரிமைல சொல்லுறதுதான்!

தங்கமணி க்கு ஒடம்பு சரி இல்லாட்டி பூமியே
சுத்துறத நிறுத்திட்டது போல இல்ல இருக்கு?

(இந்த கமெண்ட யாராவது தங்க மணிகிட்டசொல்லமாட்டாங்களா)

குடுகுடுப்பை said...

\\தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!

நான் இல்லங்க.

இதுக்கு பேருதான் இல்லத்தரசியலா?

அவங்களுக்கு அடிபட்டதுனால மறந்துருச்சு, ரங்கமணிகளுக்கு எப்பயுமே மறதிதான், வேனும்னா உங்க ஊட்டுக்க்காரர கிள்ளிப்பாருங்க, எப்ப கிள்ளுனன்னு கேப்பாரு.

தாரணி பிரியா said...

இங்க எல்லோரும் சொன்ன மாதிரி ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர்தான் குடும்ப நிர்வாகத்தை பெரும்பாலும் கவனிக்கிறாங்க. அதுல வர்ற குழப்பம்தான் இது எல்லாம்.

ஆனாலும் ஒண்ணு சரி. ஒரு பெண்மணி இல்லாட்டி வீடு களேபரமாதான் இருக்கும். அதை இந்த ரங்கமணிங்க எல்லாம் எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ?

Anonymous said...

அவங்க சீக்கிரமா குணமாகனுமுன்னு வேண்டிக்கிறேன் :-(

அமிர்தவர்ஷினி அம்மா said...

யெஸ் ராப் u r the first

கூப்பிடுங்க உங்க கொ.ப.செ.வை.
நேத்துதான் அவருக்கு ஒரு பனிஷ்மெண்டு கொடுத்திருக்கேன்.

தேங்கஸ் ராப்

ஓட்டெல்லாம் போடவேண்டாம் ஜமால். வருகையும், பின்னூட்டமே போதும்.
இத நான் சொல்லலை//
நீங்களே சொல்லலாம் ஒன்னும் பயப்படவேணாம்.
ம். தேங்க்ஸ்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

விஜய் ஆன்ந்த்
“” இதுக்கு தான் அவ கிட்ட சாவி கொடுத்து வைக்காதன்னு சொன்னேன் “”

இந்த கருத்த சொன்னது ராப் இல்ல, அதிரை ஜமால். யாரோ சொன்ன மாதிரி சொல்லியிருக்கார். என்ன இருந்தாலும் பயம் விட்டுப் போகுமா.

அய்யோ பாவம் உங்க காது.
இனிமே அது கேக்காது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

SK said...
நிறைய எடத்துல இது போல தான்.
எதிர் காலத்துல மாறும்னு நம்பலாம்.//

உங்க கல்யாணத்துக்குள்ள சீன் மாறணும்னு எதிர்பார்க்கரெதல்லாம் ரொம்ப தப்பு.


உங்க ஆபிசரோட (அட நம்ம ராப் இல்லீங்க )
மனைவி குணம் அடைய என் பிரார்த்தனைகள்.
நன்றி. நாங்களும் ப்ரார்த்தனை செய்துவருகிறோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி கபீஷ்

இப்படி கேக்காதீங்க, அப்புறம் நீங்க பெண்ணீயவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்

குத்துங்க எசமான் குத்துங்க.
எவ்வளவோ குத்து சமாளிச்சு வந்தாச்சு. இது என்ன ப்ரமாதம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ரம்யா

நன்றி தீஷீ அம்மா. :)))))))

நன்றி நசரேயன். சல்லிக்காசு பேறாது அங்க.

நன்றி வடகரைவேலன்.
தங்கமணிகள் இருந்தாத்தான் இப்ப ரங்கமணிகளுக்கு கை கால் ஓடாம இருக்கு.//
இங்கதான் இருக்கு தங்கமணிகளோட பலமே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தங்கமணி க்கு ஒடம்பு சரி இல்லாட்டி பூமியே சுத்துறத நிறுத்திட்டது போல இல்ல இருக்கு//

என்ன ஜீவன் இப்படி சொல்லீட்டீங்க.
பூகோளத்துல மாற்றம் இருக்காது
ஆனா சரித்திரத்துல மாற்றம் நிச்சயம் இருக்கும். புரட்டிப்பாருங்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் இல்லங்க.//

நீங்க இல்லன்னு எனக்கு சும்மா குழம்பு வைக்க ஹெல்ப் பண்ணும்போதே தெரியும் குடுகுடுப்பையாரே.

இதுக்கு பேருதான் இல்லத்தரசியலா?
ஆமா இங்க எங்க வந்தது அரசியல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆனாலும் ஒண்ணு சரி. ஒரு பெண்மணி இல்லாட்டி வீடு களேபரமாதான் இருக்கும். அதை இந்த ரங்கமணிங்க எல்லாம் எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ?

நன்றி தாரணி ப்ரியா
சரின்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டாங்களே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி இனியவளே

Poornima Saravana kumar said...

தங்கமணிக்காக வருத்ப்படுவாத? இல்லை ரங்கமணியை நினைத்து பரிதாபப்பாடுவாத?