14 December 2010

கோபல்ல கிராமம்

எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு.
அதைச் சொல்வதுதான் கோபல்ல கிராமம்.

தெலுங்கு தேசத்திலிருந்து தமிழகத்தில் தஞ்சமடையும் கம்மவார்களின் வாழ்க்கை முறை பற்றி பதியப்பட்ட நாவல். அற்புதமான நடை. அங்கங்கே மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகளை கி.ரா அருமையாய் விவரித்திருக்கிறார்.

தெலுங்குதேசத்தில் வளமையான குடும்பத்தில் பிறந்த சென்னாதேவி என்ற பெண்ணின் அழகினை கேள்விப்பட்டு அவளை அடையவிரும்பும் துலுக்க ராஜா. அவரிடமிருந்து சென்னாதேவியை அழைத்துக்கொண்டு சென்னாதேவியின் குடும்பத்தார் மொத்தமும் காட்டுவழியே தப்புகிறார்கள். பின்னால் துலுக்கராஜா அனுப்பிய ஆட்கள் துரத்துகிறார்கள். அப்போது ஒரு பெரிய நதி குறுக்கிட அவர்களிடம் மாட்டிக்கொள்வதை விட நதியில் விழுந்து உயிரைமாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். நதியின் அக்கரையிலிருந்த அரசமரமொன்றுநதிக்கு குறுக்காக வீழ்ந்து அவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ள, அவர்கள் அனைவரும் நதிக்கு அக்கரைக்கு போய்சேர்கிறார்கள். துலுக்க ராஜாவின் ஆட்கள் திரும்பிவிடுகிறார்கள்.

இது தொட்டு ஆரம்பிக்கிறது இவர்களது பயணம். இடையிடையே நிறைய உதவிகளும், இடைஞ்சல்களும் ஏற்படுகிறது. காய்ச்சலாலும், தீராத நடைப்பயணத்தாலும்சென்னாதேவி இறந்துவிடுகிறாள். அவர்களோடு வந்த சில வயதாளிகளும், குழந்தைகளும் இறந்துவிடுகிறார்கள். இருப்பினும் மனம் சோராமல் நடைப்பயணம் தொடரபொட்டி அம்மன் எனப்படும் ஒரு வனதேவதையால் வழிகாட்டப்பட்டு அரவநாடு (தமிழ்நாடு) வந்தடைகிறார்கள். அவர்கள் வந்தடைந்த இடத்தை அவர்கள் தங்கள் கடின உழைப்பினால் செம்மைப்படுத்துவதே கோபல்ல கிராமம் நாவல்.

மங்கத்தாயார் என்ற 139 வயது மூதாட்டி தன் அனுபவங்களை தனது பிள்ளைகளிடம் கதை போல் பகிர்ந்துகொள்வது போல் அமைகிறது கதையின் நடை. அவரின் மகன்களான கோவிந்தப்ப நாயக்கர் முதலான எட்டு மகன்களை உள்ளடக்கிய கோட்டையார் வீடு என்று அனைவராலும் மரியாதையாக அழைக்கப்படும் இவர்களே கதையின் மாந்தர்களாக கதை நெடுகவும் பயணிக்கிறார்கள்.

கம்மாளர்கள் எனப்படும் அவர்கள் அனைவரும் தாம் வந்தடைந்த இடத்தை செம்மைப்படுத்தி வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றிக்கொண்டதை மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறார் கி.ரா.மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்தாக இருக்கிறது.

ஒரு நிலையில் நாட்டை ஆண்ட கும்பினியாளர்கள் கோட்டையார் வீட்டை அணுகி கும்பினி அரசின் சார்பாக அந்த ஊர் மணியமாக இருக்க கோருகிறார்கள். இந்த ஊரின் வளமை அவர்களின் கண்ணை பிடுங்குகிறது. அறுவடைக்கு தயாராகியிருந்த கம்பம் பயிர்களையெல்லாம் விட்டில் பூச்சிகள் வந்து அழித்துவிட ஊரில் பஞ்சம் வந்துவிடுகிறது. இது குறித்து கும்பினிக்கு எழுதி போட்டாலும் எந்த ஒரு பயனுமில்லாது போய்விடவே அவர்கள் அனைவரும் மனமுடைந்து போய்விடுகிறார்கள்.

மேலும் இவர்களின் கிராமம் சாலையோரமாய் அமைந்துவிட, கும்பினியாளர்கள் பளு தூக்கிகளாக இவர்களை பயன்படுத்துகிறார்கள். வெள்ளைக்காரர்களைக் குறித்த ஏகப்பட்ட வதந்திகளாலும், கட்டபொம்முவை தூக்கிலிட்ட செய்தி அறிந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் விக்டோரியா மகாராணியார் தானே கும்பினி ஆட்சியை எடுத்தாளப்போவதாகவும், அதன் பொருட்டு நாட்டில் அமைதி நிலவப்போகிறது என்றும் அவரின் பேரறிக்கையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் நுழைகிறார்கள் வெள்ளையர்கள்.நிறைய வாக்குறுதிகளை தருகிறார்கள். இந்த மக்களும் விக்டோரியா மகாராணியாரை ராணி மங்கம்மாவாகுக்கு இணையானவராக இருப்பார் என்று ஒப்பிட்டு அவர்களின் வாக்குக்கு உடன்படுகிறார்களென கதை முடிகிறது.

ஆனால் கதையின் இறுதியில் // அப்போது அங்கே நிலவிய அமைதி, வரும் ஒரு புயலுக்கு முன்னுள்ளது என்று யாரும் அறியவில்லை அப்போது // என்று சொல்லியிருப்பார்.

இந்த வாக்கியங்களை படித்து முடித்தபின், இனி கம்மாளர்களின் நிலை என்னவாயிருக்கும் என்று இனம் காண முடியாத ஒரு பயம் வருவதை தவிர்க்கமுடியாது. ஏனெனில் கி.ரா கதையை நடத்திச்சென்றவிதம் அவ்வாறு இருக்கிறது.

கோபல்ல கிராமம்

ஆசிரியர்: கி.ராஜநாராயணன்

பதிப்பகம்: அன்னம்

விலை : ரூ. 80

23 comments:

Unknown said...

welcome back

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ இத்தனை ஓய்வுல நிறைய படிச்சிருப்பீங்க போலயே ஜாலியா..:)

sakthi said...

வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை காண்பதில் மகிழ்ச்சி அமித்து அம்மா welcome back :)

தமிழ் அமுதன் said...

நீண்ட இடைவெளிக்கு பின் பதிவுலகிற்கு வருகை தரும் அமித்து அம்மாவை வருக...வருக ..என வரவேற்கிறோம்...!

அணைகட்டில் இருந்து பீறிடும் வெள்ளம் போல பதிவுகள் வரட்டும்..!

ராமலக்ஷ்மி said...

Welcome Back:)! நலமா அமித்து அம்மா?

அருமையான விமர்சனம்.

வடகரை வேலன் said...

மீண்டு(ம்) வந்ததற்கு நன்றி.

மேலும், இவர்கள் தமிழ்நாட்டில் கோவை, தேனி, கோவில்பட்டி ஆகிய நகரங்களைச் சுற்றிக் குடியேறினார்கள். பருத்திச் செடியைத் தமிழகத்திற்கு இவர்கள்தான் கொண்டு வந்தார்கள் என்றும் படித்திருகிறேன்.

Mahi_Granny said...

சென்னையில் மட்டும் தான் நல்ல மழை என்று நினைத்தேன் .இங்கும் " மழை" துவங்கியது குறித்து மகிழ்ச்சி . வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Mahi_Granny said...

திரும்பவும் ஒருமுறை வாசிக்க தூண்டுகிறீர்கள்

Karthik said...

Welcome back. :-)

காமராஜ் said...

அமித்தம்மா...
ஒரு வாரமாக உங்கள் வலை நீண்ட ஓய்வெடுத்துக்கொண்டதைபல நண்பர்களிடம் கேட்டேன்.நல்வரவே இது.நிம்மதியாக இருக்கிறது மீண்டும் எழுதுங்கள்.நலமே விளைக.

சந்தனமுல்லை said...

வாங்க அமித்து அம்மா....வெல்கம் பேக்!

புது டெம்ப்ளேட்...புது போஸ்ட்...கலக்குங்க மேடம்...:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும்...

மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

வருக வருக :)

நல்ல விமர்சனம் பாஸ். இந்த வருகையில வாங்கிடுறேன்.

அம்பிகா said...

நல்வரவு அமித்தம்மா. உங்களை நிறையவே மிஸ் பண்ணினோம்.
நல்ல பகிர்வு. தொடருங்கள்.

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

வாங்க அமித்து அம்மா....வெல்கம் பேக்!

புது டெம்ப்ளேட்...புது போஸ்ட்...கலக்குங்க மேடம்...:-)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் வெல்கம்மு


ஃபாண்ட் கொஞ்சம் பெருசாக்கி வைச்சா என்னைய போல சின்னஞ்சிறுசுங்க நல்லா ஓடியாடி எழுத்து கூட்டி படிக்க வசதியா இருக்கும்ல ! #ரிக்வெஸ்ட்டு

அமுதா said...

welcome back!!!! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. எனக்கும் இந்த புத்தகம் மிகவும் பிடித்தது. நடுநடுவே பட்டப்பெயர்கள் வந்த கதை... அப்புறம் கள்வர்களை விரட்டிய கதை (இதை குழந்தைகளுக்கும் சொல்லி சிரித்தோம்) என்று வெகு யதார்த்தமாக செல்லும் கதைக்களம்.

ஹுஸைனம்மா said...

அப்ப, இனி தொடர்ந்து ஓய்வில் படித்த/பார்த்த புத்தக மற்றும் (உலகத்) திரைப்பட விமர்சனங்கள் எதிர்பார்க்கலாம் போல!! ;-)))))

நல்வரவு!!

மாதவராஜ் said...

இப்போதும் மழைதான் வெளியே..
கோபல்ல கிராமத்து வாசம் மனசுக்குள்ளே...
வாங்க... வாங்க அமித்து அம்மா!

"உழவன்" "Uzhavan" said...

அருமையான நாவலைப் படித்துள்ளீர்கள். கிரா(மம்)வின் எழுத்தில் கிராம வாசனை அப்படியே அடிக்கும்.
உங்களின் எழுத்தை நீண்ட நாட்களுக்குப் பின்னர் படிப்பதே மகிழ்ச்சியாய் உள்ளது அமித்துமா :-)

அன்புடன் அருணா said...

Welcome Back:) குட்டீஸும் நலமா???

அ.மு.செய்யது$ said...

வாங்க...எப்பவோ எழுத வேண்டிய பதிவு. திரும்பி வந்தீங்களே.மகிழ்ச்சி.


கோபல்ல கிராமம் ரசித்து வாசித்த நாவல்.ஏற்கெனவே இதைப் பற்றி பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்.

நீங்களும் எனக்கு வெல்கம் பேக் சொல்லலாம்.நானும் பல மாதங்களுக்கு பிறகு பின்னூட்டமிடுகிறேன்.

சென்ஷி said...

welcome back amithu amma..

பா.ராஜாராம் said...

ச்சொல்லவே இல்ல..திரும்பிட்டீஹன்னு.. :-)

நல்ல பகிர்வு அமித்தம்மா!