தலைப்பில் குறிப்பிடப்பட்ட எண்களை தாங்கிய பேருந்துதான் அதிகம் என்னைத் தாங்கியிருக்கிறது.
முதன்முதலில் வேலைக்காக ராயப்பேட்டையிலிருந்து சென்னை மவுண்ட்ரோட் ஜி.பி.சாலைக்கு வரவேண்டியிருந்தது. முதல் இரண்டு நாட்கள் மாமாவின் புண்ணியத்தில் ஆட்டோவில் வந்துவிட்டேன். மூன்றாவது நாள் பஸ் பயணம், வீட்டிலிருந்து ஜரூராக 21ல் (இடையே மூன்று நிறுத்தங்கள் மட்டுமே) பயணித்து ஸ்பென்சர் ப்ளாசா சிக்னலில் கும்பலாக நிறைய பேர் இறங்க,வெளியே தலையை விட்டுப்பார்த்ததில் கட்டிடமெல்லாம் உயரமாக இருக்க, இது எல்.ஐ.சியாகத் தான் இருக்கவேண்டும் என்று நம்ம்ம்ம்பி இறங்கியதில், நான்கு மூலை ரோட்டின் ஓரமாய் நின்று கொண்டு எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்து, பின்னர் யார் யாரையோ கேட்டு ஜி.பி. ரோட்டுக்கு போய், அந்த ஆபீஸுக்கு போகும்போது மணி பத்தை தாண்டியிருந்ததால் சரியாய் வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.
பஸ்ஸில் ஏறினாலே ஒரு மிரட்சி, உள்ளே போகாமல் படியின் அருகில் இருக்கும் கம்பிக்கு பக்கத்திலேயே நின்று கொள்வது (நிறம் உட்பட எனக்கும், கம்பிக்கும் அதிக வித்தியாசம் ஏதுமில்லை). எப்படா இறங்குவோம், எங்க மாத்தி இறங்கிடுவோமோ என்ற பயத்திலேயே உள்ளங்கையில் இருக்கும் பஸ்டிக்கெட் நனைந்து பச, பச என்றாகிவிட எல்.ஐ.சியைப் பார்த்தவுடன் தப்பிப்பிழைத்த மாதிரி இறங்கிடுவேன். இதில் மற்றவர்களைப் பார்ப்பதோ, அதோ, இதோ, ம்ஹூம்.
இந்த பஸ் பிரச்சினையை முன்னிறுத்தியே அந்த ஆபீஸிலிருந்து கழண்டுகொண்டு, ஆழ்வார்ப்பேட்டையிலிருக்கும் இன்னொரு ஆபிஸுக்கு பயணப்பட்டேன். நல்லவேளையாக இந்த ஆபிஸுக்கு பஸ்ஸில் பயணித்துதான் வரவேண்டுமில்லை, கொஞ்சம் முன்னாடி கிளம்பினால் நடராஜா சர்வீஸே நம்மைக் கொண்டு போய் சேர்த்துவிடும். ராதாகிருஷ்ணன் சாலையின் இருபக்கமும் இருந்த பெரிய ப்ளாட்பாரமும், அதை ஒட்டிய மரங்களும் நடக்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். லேட்டானாலும் ப்ரச்சினையில்லை, 5சி அல்லது 5 கட் காலியாக வரும். வெள்ளை நிற போர்டில் உருண்டையாக கரிய பெரிய எழுத்தில் 5c என்ற எழுத்துடனான அந்தப்பேருந்தை பார்க்கும்போதே மனதில் குதூகலம் கொண்டாடும். ஏனோ அந்த பஸ்ஸை அவ்வளவு பிடித்திருந்தது எனக்கு. அதில் திருவொற்றியூரிலிருந்து வரும் சுப்புலட்சுமி என்ற தோழியும் கிடைத்தாள். இன்றும் அந்தப் பேருந்தை பார்க்க நேர்ந்தால், அதே போல் விவரம் புரியாமல் மனசில் ஒரு சந்தோஷம் ஓடத்தான் செய்கிறது.
இந்த ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில்தான் அமித்து அப்பாவை கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன். ஆனால் நாங்களிருவரும் சேர்ந்து சென்னையில் எந்த பஸ்களிலும் ஒன்றாய் பயணித்ததில்லை. மனிதனுக்கு பஸ் என்றாலே அலர்ஜி. சைக்கிள் இல்லையென்றால் நடந்தே சைதையில் இருந்து ஆழ்வாருக்கு வந்துவிடுவார்.
இதே வரிசையில் 45பி, 12ஜி இரண்டுமே ஆழ்வார்ப்பேட்டையிலேயே இருந்த இன்னொரு அலுவலகத்துக்கு நான் பயணப்பட உதவியது. இதில் 45பி யில் ஏறினால் காலை வேளை ரகளையாக இருக்கும். நந்தனம் ஆர்ட்ஸின் மாணவர்கள் அனைவரும் அவ்வளவு அழகாக பஸ்ஸின் மேற்கூரையில் தாளமிசைப்பார்கள், தாளத்துக்கு இசைவாக யாராவது ஒருவர் கானா பாடுவார். அந்தப்பாட்டுக்கு கண்டிப்பாய் யாராவது ஒரு பெண் நமுட்டு சிரிப்போடு பஸ்ஸில் பயணிப்பாள். காரணப்பெயராய் அவள் தானே இருக்கிறாள். அக்காவுக்கு கோபம் வந்தாதான் ஆச்சரியம். அந்த காலைவேளை கசகசப்பிலும் அதை ரசிக்கமுடியும். இடையே இடித்தல், உதைத்தல், அய்யோ என் பர்ஸை காணோம் என்ற ரீதியிலான டயலாக்குகளையும் நிறைய கேட்கலாம்.
அடுத்ததாய் ஒன்னாம் நம்பர் பஸ். திருவொற்றியூர் டூ திருவான்மியூர். அடிக்கொருதரம் வரும் பஸ் என்பதாலோ, எங்கள் வீட்டிலிருந்து மவுண்ட்ரோட் திருப்பத்திற்கு வர பத்தே நிமிடம். எக்மோரில் இருந்த என் ஆபீஸுக்கு சுமார் 6 1/2 வருட காலம் இந்த பஸ்ஸில்தான் காலை, மாலை இருவேளை பயணம். இந்த ரூட்டில் இந்த பஸ் சர்வீஸ் அதிகம் என்பதால் குறைந்தபட்சம் இடிபடாமல் நின்றுகொண்டு வரலாம் என்பதே இந்த பஸ்ஸின் சிறப்பு. டீலக்ஸும், ஏசி பஸ்ஸும் வந்துவிட்ட போதிலும் மஞ்சள் போர்டில் சிகப்பிலோ அல்லது கருப்பிலோ பட்டை நாமம் போல ஒன்றை இட்டு வரும் அதிகபட்சம் காலியாகவே இருந்த இந்த பஸ்ஸின் மீது ஏதோ ஒரு இனங்காண முடியாத பிரியம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.
18கே - மவுண்ட் ரோட்டை கடந்து மேற்கு சைதாப்பேட்டைக்கு செல்லும் ஒரே பஸ். இந்த பஸ் பிடித்ததன் காரணமே அது போகும் ஏரியாவுக்காகத்தான். பின்ன, அந்த ஏரியாவுல தான் நான் இப்ப வாக்கப்பட்டு போயிருக்கறது ;) மவுண்ட்ரோட்டில் ஒன்றாம் நம்பர் பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருக்கும் போதெல்லாம் இந்த பஸ் சிக்னலில் நிற்கும் இல்லையென்றால் என்னை கடந்து போகும். அப்போதெல்லாம் என்னமோ காணாததை கண்ட கணக்காய் வெட்கப்பட்டிருக்கிறேன். தலை குனிந்திருக்கிறேன். ஏன் கற்பனையில் மிதந்திருக்கேன். கவிதை கூட மனதினடியில் எழுதியிருக்கிறேன். திருமணமான பின்னர், அந்தப் பேருந்தில் சைதை டூ மவுண்ட்ரோட் தினமும் பயணிக்க வேண்டிவர, கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆன வெறுப்பில் 18கே என்றாலே கடுப்பாகிவிடுவேன். பத்தாதகுறைக்கு, சைதை போகும் வரை அந்த பஸ்ஸில் கடைசி வரைக்கும் உட்கார இடம் கிடைக்காது. அடச்சே, இந்த பஸ்ஸை பார்த்தா கவுந்தடிச்சு, கற்பனையில் மூழ்கி கவிதையெல்லாம் எழுதினோம்னு இருக்கும். விதி வலியது :)))))
நல்லவேளையாய் இப்போது மேற்சொன்ன எந்த நம்பருமில்லாமல், சென்னை மெட்ரோ இரயில்வேயின் புண்ணியத்தில் போய்வந்து கொண்டிருக்கிறேன்.

என்னடா, பேருந்தில் காதல்னு தலைப்பு வெச்சா, பதிவில் அதைப்பத்தி ஒன்னுமே காணோம்னு நினைப்பவர்களுக்கு,, சாரி பாஸ், நானும் என் சக்திக்கு மீறி பஸ் டயரை (அதுவும் ரவுண்டாதானே இருக்கு ஹி.. ஹி) சுத்திப்பார்த்துட்டேன், அதுமாதிரி ஒரு சீன் கூட என் நினைவுக்கு வரலை. வர்ரதெல்லாம் இடிச்சது, உதைச்சது, மேற்கொண்டு அதுக்காக சண்டைப்போட்டது அப்படின்னு கொஞ்சம் டெர்ரராதான் இருக்கு. அதையெல்லாம் சொன்னா கண்டிப்பா சைதை தமிழரசியாகும் வாய்ப்புகள் அதிகம் ;)
தொடர்பதிவிட அழைத்த தீபாவிற்கு நன்றி. விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்.

30 comments:
//நின்று கொண்டு எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்து, //
அவ்வ்வ்வ் அம்புட்டு அப்பாவியா பாஸ் நீங்க?
ஆஹா 1ஆம் நம்பர் பஸ் எங்க ஏரியாவாச்சே! :)
நல்ல நினைவுகள் பாஸ்
//(நிறம் உட்பட எனக்கும், கம்பிக்கும் அதிக வித்தியாசம் ஏதுமில்லை).//
இதெல்லாம் ஓவர் பாஸ்
நான் ஆதவன்☀ said...
//நின்று கொண்டு எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்து, //
அவ்வ்வ்வ் அம்புட்டு அப்பாவியா பாஸ் நீங்க?//
ஆஹா, பஸ் வாரியா பிரிச்ச நான் வருஷத்த சொல்லாம போனதால குழம்பிட்டீங்க போல பாஸ்.
அப்ப நான் அம்புட்டு அப்பாவியாதான் பாஸ் இருந்தேன். நம்புங்க பாஸ்.
//(நிறம் உட்பட எனக்கும், கம்பிக்கும் அதிக வித்தியாசம் ஏதுமில்லை).//
இது உட்பட ;)
//இந்த ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில்தான் அமித்து அப்பாவை கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்.//
:))))
/// பேருந்தில் காதல்னு தலைப்பு வெச்சா, பதிவில் அதைப்பத்தி ஒன்னுமே காணோம்னு நினைப்பவர்களுக்கு,,///
''மழை'' அப்படின்னு வலைப்பூ வைச்சு இருக்குறவங்க கிட்ட வெய்யில் நேரத்துல பதிவு போட சொன்னா இப்படித்தான்போல ...! நீங்க பஸ்சுல போன காலகட்டத்துல பதிவு எழுதி இருந்தா இப்படியா எழுதி இருப்பீங்க...!;;))
ஹைய்யோ ஹைய்யோ..அப்பாவின்னு நம்பிட்டோம் பாஸ்!
/அப்போதெல்லாம் என்னமோ காணாததை கண்ட கணக்காய் வெட்கப்பட்டிருக்கிறேன். தலை குனிந்திருக்கிறேன்/
பாஸ்...காலாலே கோலம்? :)))
/அதையெல்லாம் சொன்னா கண்டிப்பா சைதை தமிழரசியாகும் வாய்ப்புகள் அதிகம் ;)/
ஹிஹி...இனிமேதானா....அதான் ஆகியாச்சே பாஸ்...ஆனாலும் அநியாய சீன் பாஸ்! :))
சந்தனமுல்லை said...
பாஸ்...காலாலே கோலம்? :))) //
ப்ச், தார் ரோட்டுல அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லாம போயிடுச்சுங்க ;)
ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
நீங்க பஸ்சுல போன காலகட்டத்துல பதிவு எழுதி இருந்தா இப்படியா எழுதி இருப்பீங்க...!;;)) //
அட நீங்க வேற ஜீவன், இதை விட மோசமா எழுதியிருப்பேன் :)
அமித்து அம்மா , உங்கள் படைப்புகள் நிறைய படித்திருக்கிறேன். மிகவும் இயல்பானவை மற்றும் சுவாரஸ்யமானவை. இதுவே எனது முதல் பின்னூட்டம்.உங்களின் பேருந்துப்பயணங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறீர்கள்..... கட்டிடமெல்லாம் உயரமாக இருக்க, இது எல்.ஐ.சியாகத் தான் இருக்கவேண்டும் என்று நம்ம்ம்ம்பி இறங்கியதில், நான்கு மூலை ரோட்டின் ஓரமாய் நின்று கொண்டு எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்தது மிகவும் நகைச்சுவையானது... அருமை.... :)
/வர்ரதெல்லாம் இடிச்சது, உதைச்சது, மேற்கொண்டு அதுக்காக சண்டைப்போட்டது அப்படின்னு கொஞ்சம் டெர்ரராதான் இருக்கு/
பரவாயில்லே ...கொஞ்சம் டெரராவும்தான் எழுதுங்களேன்!
"இந்த பஸ் பிடித்ததன் காரணமே அது போகும் ஏரியாவுக்காகத்தான்.."
ஆகா... கிழக்கே போகும் ரயில்.
நான் மந்தவெளி ரயில் நிலையம் அருகில்தான் இருக்கிறேன்.போகும் போதும் வரும்போதும் ஒரு ‘ஹா...ய்”சொல்லுங்க....
பஸ் கம்பியோட கம்பேரிசன் - சிரிப்பை வரவைத்தது சகோ!.
ராயப்பேட்டையில் தங்கி இருக்கும் பொழுது அதிகம் 1ஆம் நம்பர் பஸ் தான் வந்தேன் ஃபூட் போர்ட் அடிக்கிற ஆர்வம் தான் அதிகம் இருந்திச்சி, சென்னையிலேயே டிக்கெட் எடுக்கலடா மச்சான்னு சொல்லிக்கவும் முயற்சிகள் நடந்ததால் ஃபூட் போர்ட் தான் ...
18K - ஹிஹிஹி...
45 Bல நானும் போயிருக்கேன் .ஆர்ட்ஸ் காலேஜ் எதிர தான் என் அலுவலகம் இருந்தது. நல்ல இனிமையான பொழுது தான்
//இந்த ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில்தான் அமித்து அப்பாவை கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்.//
//18கே - மவுண்ட் ரோட்டை கடந்து மேற்கு சைதாப்பேட்டைக்கு செல்லும் ஒரே பஸ். இந்த பஸ் பிடித்ததன் காரணமே அது போகும் ஏரியாவுக்காகத்தான். பின்ன, அந்த ஏரியாவுல தான் நான் இப்ப வாக்கப்பட்டு போயிருக்கறது ;) மவுண்ட்ரோட்டில் ஒன்றாம் நம்பர் பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருக்கும் போதெல்லாம் இந்த பஸ் சிக்னலில் நிற்கும் இல்லையென்றால் என்னை கடந்து போகும். அப்போதெல்லாம் என்னமோ காணாததை கண்ட கணக்காய் வெட்கப்பட்டிருக்கிறேன். தலை குனிந்திருக்கிறேன். ஏன் கற்பனையில் மிதந்திருக்கேன். கவிதை கூட மனதினடியில் எழுதியிருக்கிறேன்//
//என்னடா, பேருந்தில் காதல்னு தலைப்பு வெச்சா, பதிவில் அதைப்பத்தி ஒன்னுமே காணோம்னு நினைப்பவர்களுக்கு,,//
இருக்கே! :-))
மவுண்ட்ரோட்டில் ஒன்றாம் நம்பர் பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருக்கும் போதெல்லாம் இந்த பஸ் சிக்னலில் நிற்கும் இல்லையென்றால் என்னை கடந்து போகும். அப்போதெல்லாம் என்னமோ காணாததை கண்ட கணக்காய் வெட்கப்பட்டிருக்கிறேன்//
;) அழகுங்க..
கோலம்போட முடியலயா.. சரிதான் :)
பேருந்தில் காதல்ன்னா.. பேருந்து மேல இருக்கற காதலை எழுதிட்டீங்க போல :)
பகிர்வு சுவாரசியமானது.
//பாஸ்...காலாலே கோலம்? :))) //
//ப்ச், தார் ரோட்டுல அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லாம போயிடுச்சுங்க ;)//
ஹா...ஹா...
/இன்றும் அந்தப் பேருந்தை பார்க்க நேர்ந்தால், அதே போல் விவரம் புரியாமல் மனசில் ஒரு சந்தோஷம் ஓடத்தான் செய்கிறது.//
சே! எப்படி இதை நாம மிஸ் பண்ணோம்னு நினைக்கும் படியா மிக அழகான எல்லாரும் ரிலேட் செய்யக்கூடிய விஷயத்தை எழுதறீங்க.எனக்கு இந்த மாதிரி தோன்றுவது G70, 5T!
//மாணவர்கள் அனைவரும் அவ்வளவு அழகாக பஸ்ஸின் மேற்கூரையில் தாளமிசைப்பார்கள், தாளத்துக்கு இசைவாக யாராவது ஒருவர் கானா பாடுவார்.// இதுவும் தான்!
//இந்த பஸ் பிடித்ததன் காரணமே அது போகும் ஏரியாவுக்காகத்தான். பின்ன, அந்த ஏரியாவுல தான் நான் இப்ப வாக்கப்பட்டு போயிருக்கறது ;) //
//அடச்சே, இந்த பஸ்ஸை பார்த்தா கவுந்தடிச்சு, கற்பனையில் மூழ்கி கவிதையெல்லாம் எழுதினோம்னு இருக்கும். விதி வலியது :)))))//
கலக்கல்ஸ்! :))))))
தலைப்பை நியாயப்படுத்திட்டீங்களே பாஸ். இதுக்கு மேல என்ன?
//சாரி பாஸ், நானும் என் சக்திக்கு மீறி பஸ் டயரை (அதுவும் ரவுண்டாதானே இருக்கு ஹி.. ஹி) சுத்திப்பார்த்துட்டேன், அதுமாதிரி ஒரு சீன் கூட என் நினைவுக்கு வரலை. //
எனக்கும் அப்படி எதுவுமில்லாமத் தான் ரீல் வுட்டேன். நீங்க உண்மையான சம்பவங்களையே அழகா எழுதி இருக்கீங்க.
ஆனா சிலபேர் பாடாவதி படத்தோட கதையை எல்லாம் எடுத்து வுட்டு பல்பு குடுக்கறாங்க. பேட் கர்ல்! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்!)
//காலாலே கோலம்?//
ஹேய் முல்லை ஸ்டாப்! முதல்ல உனக்குக் கையாலயாவது கோலம் போடத் தெரியுமா? கேள்வியப் பாரு!
:))
;)
//விதி வலியது :)))))//
பின்ன.. சும்மாவா :-))
நல்லாருக்குங்க. :)
:)
அன்பு அமித்து அம்மா,
அழகாய் இருக்குது இந்த பதிவு... பேருந்துடன் சம்பந்தம் உள்ள எல்லோருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு நினைவை,உறவை,வலியை சுமந்து கொண்டு பறக்கிறது... மாதவராஜ் சொல்ல படித்தேன் இந்த பதிவை... இந்த பதிவை மேலும் மெருகிட்டது இதற்கான சில பின்னூட்டங்கள்...
வாழ்த்துக்கள்!
அன்புடன்
ராகவன்
//அடச்சே, இந்த பஸ்ஸை பார்த்தா கவுந்தடிச்சு, கற்பனையில் மூழ்கி கவிதையெல்லாம் எழுதினோம்னு இருக்கும்.//
அதேங்க கல்யாணத்துக்கப்புறம் அநேகமா எல்லாருக்குமே இப்படித் தோணிடுது? எனக்குந்தான்!! சிலருக்கு பஸ், மத்தவங்களுக்கு வேறெதாவதொண்ணு.
ஹா...ஹா... நானும் காதல் வரும் காதல் வரும்னு கடைசி வரை படிச்சேன்.... இரசிச்சேன்
18K எனக்கும் தெரிந்த பஸ்
இறுதிப்பகுதி சுவாரசியம்.
Post a Comment