04 January 2010

அமித்து அப்டேட்ஸ்

அனைவருக்கும் அமித்துவின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நான் அமித்துவிடம் : ஹாப்பி நியூ இயர்னா என்னம்மா ?

அமித்து: எல்லார்க்கும் கைகுடுக்கர்து, அதான் ஆப்பி ......

........

இந்த எண்ணத்தையெல்லாம் கொஞ்சம் மாத்துங்கம்மா என்ற வார்த்தைகளோடு ஒரு விளம்பரம் வரும்.

அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும்போது இந்த விளம்பரம் கண்ணில் பட அந்த வரிகளை அவளிடம் ரீப்பீட் செய்தேன்.

இந்த எண்ணத்தையெல்லாம் கொஞ்சம் மாத்துங்கம்மா என்று அவளிடம் சொல்லிய போது,
பதிலுக்கு அமித்து அவளின் கைவிரல்களை துப்பாக்கி போல் நீட்டி, சிக்.. (சவுண்ட் எஃபெக்ட்டுங்க) மாத்திட்டேன், பார்ரு.

!!!!!!!!!!!!!!

.........

மழைபெய்து கொண்டிருந்த ஒருநாள் காலை, நானும் அமித்துவும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தோம். நனைந்து போய் ஒரு காக்கா சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்தது.

அமித்து: ஆந்த காக்கா பாவம்மா

நான்: ஆமாம்மா

அமித்து: ஆங்க அம்மா எங்க?

நான்: அது எங்கயாவது போய் இருக்கும்மா

அமித்து: அப்ப நீ காக்காக்கு அம்மாவா ப்போ

நான்: அப்ப உனக்கு அம்மா?

அமித்து: என்க்கு அம்மா சத்தீச், உள்ள தூங்குது, நீ காக்காக் கூட ப்போ. ப்போ, ஏந்திர்ரு...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.........

அமித்துவும் அப்பாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாந்தான் கடக்கார், நீ எங்கிட்ட வாங்கு.

தக்காளி எவ்ளம்மா? அஞ்சுபா, பொம்ம எவ்வளவும்மா? பத்துபா, இந்த டர்ன் முடிந்து இப்போ அப்பா டர்ன், இப்போ நீ தான் கடக்கார்ரு, சூ (ஷூ) விய்யி என்றாள்.

சரிம்மா.

அமித்து: சூ எவ்ளோ ?

அப்பா: இருநூத்தி அம்பது ரூபாம்மா.

அமித்து: சர்ரி, இர்ரு, சூ சரியா இர்க்கான்னு ப்போட்டு பாக்குறேன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.......


கதை விடுவதில் மேடம் செம கில்லாடி. ஏ,பி,சி,டி புக்கை எடுத்து வைத்துக்கொண்டு அதில் w for Watch என்றிருந்தால் அதுக்கும் மேடம் கதை சொல்லுவார்கள்.

ஒரு ஊல்ல ஒரு வாட்ச்சு இந்துதா, ஒர்ரு ஆள்ளு அதக் கட்டிக்னாரா, அப்றம், அப்றம் இப்போ மேடம் அவங்க ஒரு விரலை எடுத்து மோவாய்க்கும் கீழ் உதட்டுக்கும் சாய்வா வெச்சுப்பாங்க (நாங்க யோசிக்கிறோம்ல)
ம், அப்றம், அந்த வாட்ச்சு டேம் காட்டுச்சு?

நான்: ஏலோ டைம்மா?

அமித்து: எட்டு மணிம்மா

....

டிசம்பர் 12லிருந்து எதையாவது செய்துவிட்டு, நாங்கல்லாம் ஆர்ரு, ரஞ்சனில்ல (ரஜினி இல்ல) என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

ரெண்டு, மூணு நாள் சென்றபின், தெளிவாக நாங்கல்லாம் ஆர்ரு, ரஜினியில்ல என்றானது.

இப்போதெல்லாம், எதையாவது செய்துவிட்டு, நாங்கல்லாம் யார்ரு, வர்ச்சினியில்ல? என்றாகிறது

!!!

........


அமித்து சொன்னவுடன் அவளைத் தூக்கிக்கொள்ள வேண்டும், கீழ்ழ போலாம்மா என்றாள் உடனே போகவேண்டும்.

அவள் சொன்னதை செய்யாமல் நாம் பாட்டுக்கு நமது வேலையை செய்துகொண்டிருந்தால்,

மேடம் ஒரு சிணுங்கலோடு, ஏன் எச்சோ, இபி பண்ணுற, ச்சொன்ன பேச்ச கேக்காம....... பாப்பா சொல்றன்ல.. தூக்கும்ம்மா..

:))))))))

.........

அமித்துவை சாப்பிட வைப்பது மிகவும் கடினம். சாப்பாடு கிண்ணத்தை வைத்துக்கொண்டு, டிஸ்கவரி சேனல் போட்டுவிட்டு சிங்கம் பாக்கலாம்ம்மா, சாப்பிடுமா

வேணாம்

சாப்ட்டுக்கிட்டே ரக்‌ஷன் வீட்டுக்கா போய் வேடிக்க பாக்கலாமா?

வேணாம்

கீழ போய்

வேண்ணாம்

சரி, நம்ம எல்லாரும் பார்க் போலாம், நீங்க சீக்கிரம் சாப்பிட்டுருங்க

வேண்ணாம், இப்போ பார்க்கு மூடி இர்க்கும்.

........

நோட்டில் கலர் பென்சில் வைத்துக்கொண்டு முட்டை, முட்டையாய் எதையாவது கிறுக்கிவிட்டு,

அப்பா, கரக்க்ட்டா இது என்னான்னு சொல்லு?

பதிலுக்கு அமித்து அப்பாவும், ஹைய் இது காக்காடா, பாப்பா சூப்பரா வரைஞ்சுட்டீங்களே!!

ஓக்கே, இப்போ இத்து என்னான்னு ச்சொல்லு? இப்போது இன்னும் கொஞ்சம் சாய்வாக இன்னொரு முட்டை

ஹே, இது பூனைடா?

இல்ல, த்தப்பு, இத்து கோழ்ழீ

.......

அமித்து அப்பாவின் பென் ட்ரைவை சஞ்சு எடுத்து இது என்னது சித்தப்பா என்று கேட்டுக்கோண்டிருக்க,

அமித்துவோ, ஏய் அக்கா அத எக்காத, வெச்சிடு, எத்தின்னா அப்பாவ ஆப்பிச்ல அடிப்பாங்க? வெச்சுடு........

......

கார்த்தி அமித்துவிடம், பாப்பா, நாங்க எல்லாரும் பாய் போறோமே என்றான்.

பதிலுக்கு மேடமோ, நாங்க கூட தான்டா, எங்க அப்பா, எங்க யச்சோ, எங்க அம்மா, எங்க மம்மீ எல்லார்ரும் போர்றோம்.

!!!

........

ஒரு பொம்மை செல்போன் இருக்கிறது, மேடம் யாருக்காவது போன் செய்யவேண்டுமென்றால் அதைத்தான் பயன்படுத்துவார்கள் (சிலசமயங்களில்)

ஹல்லோ, யார்ரு, உம்மா (உமா) ஆண்ட்டியா? நல்லாக்கீங்களா?

போனை பக்கத்தில் இருந்த கார்த்தியிடம் தந்து, இந்தாடா கார்த்தி, உம்மா ஆன்ட்டிடா, பேசுடா என்றாள்.

அவன் போனை வாங்கிவிட்டு என்னைப்பார்த்து வெட்கசிரிப்பு சிரித்துவிட்டு, இந்தா பாப்பா, அவுங்க பேசலை என்று திருப்பி தந்துவிட்டான்.

ஹல்லோ, .......ம்ம்ம்... ஒரே டையோடாஆ இர்க்கா? சர்ரி, போன்ன வெச்சிர்ரன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... (டையோடா = டையர்டா)

.........

வேர்ர வேர்ர வேர்ர வேட்டக்காரந்தான்டா வேண்ணும்

வர்ஷினி, அதெல்லாம் சொல்லக்கூடாது

நான் சொல்லல எச்சோ, வேட்டக்காரன் தான் சொன்னான்

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.........


வீட்டில் மீன் தொட்டி இருக்கிறது. நானும், அமித்துவும் மீன் தொட்டியை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் போது,

அமித்து: மீன்னு, எச்சோவ வந்து கடி, வா

நான்: மீன் தொட்டில இருக்கே, என்னை எப்படி கடிக்கும்?

அமித்து: அது தொட்டில இருந்து அபி ஏறி, இபி வந்து, இபி பெட்டு மேல வந்து அபியே உன்னக் கச்சீரும்

நான்: அம்மாக்கு வலிக்கும்ல, ரத்தம் வரும்ல

அமித்து: மீன்னு எச்சோவ கடிக்காத, எச்சோ பாவம், நல்ல பொண்ணு நீ கடிக்காத போய்டு உங்க வீட்டுக்கு.


நாங்கல்லாம் யார்ரு, நல்ல பொண்ணுல்ல ;))))))))

30 comments:

நட்புடன் ஜமால் said...

எல்லார்க்கும் கைகுடுக்கர்து, அதான் ஆப்பி .]]

ஜூப்பர் அமித்து

நட்புடன் ஜமால் said...

என்க்கு அம்மா சத்தீச், உள்ள தூங்குது]]

தாயுமானவர்ன்னா சும்மாவா ...

நட்புடன் ஜமால் said...

நாங்கல்லாம் யார்ரு, வர்ச்சினியில்ல? என்றாகிறது]]


நீங்கள்ளாம் :P ...

ஆடுமாடு said...

பெருவெளிச் சலனங்கள் புத்தகத்தில் தங்களின் உப்பை படித்தேன். நன்றாக இருந்தது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

வருடத்தின் முதல் இடுகையே கலக்கல்.

அமித்துவைச் சுத்தி இருக்கிற எல்லோருமே கன்னாபின்னான்னு பல்ப் வாங்குறிங்கன்னு தெரியுது.

//கதை விடுவதில் மேடம் செம கில்லாடி. ஏ,பி,சி,டி புக்கை எடுத்து வைத்துக்கொண்டு அதில் w for Watch என்றிருந்தால் அதுக்கும் மேடம் கதை சொல்லுவார்கள்.
//

அம்மா ரத்தம் :-)?

அம்பிகா said...

அமித்துவின் மழலை மழையில் எங்களையும் நனைய விட்டதற்கு நன்றி. அமித்துஅம்மா!.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Karthik said...

ஹாஹா..:))))))

அப்பப்ப கார்த்தினு ஒரு கேரக்டர் வந்து பல்பு வாங்கிட்டு போறானே, யாருங்க அது?

சும்மா பொது அறிவ வளர்த்துக்கலாம்னுதான். ஆவ்வ்..

சந்தனமுல்லை said...

/அமித்து: என்க்கு அம்மா சத்தீச், உள்ள தூங்குது, நீ காக்காக் கூட ப்போ. ப்போ, ஏந்திர்ரு.../

:-))

/
நாங்கல்லாம் யார்ரு, நல்ல பொண்ணுல்ல ;))))))))/

நம்பிட்டோம்... :-)))

மாதவராஜ் said...

ரசித்தேன்..!

S.A. நவாஸுதீன் said...

///அனைவருக்கும் அமித்துவின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்///

அமித்துக்கும் நூரா, நதீம் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

வழக்கம்போலவே அமித்து டாமினேசன் ஜாஸ்திதான். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

pudugaithendral said...

பார்க்கு மூடிர்க்கும்//

இது சூப்பர். அப்டேட்ஸ் படிச்சு அமித்துவை அள்ளிக்கணும் போல இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

நாங்கெல்லாம் ஆர்ரு... ஆதவன்ல :)))

பின்னோக்கி said...

கவிதை அனைத்தும்.

வேட்டைக்காரன் விளம்பரத்தில் என் பையன் அவன் பெயரைச் சொல்லி அவன் தான்டா வரணும்னு சொல்றான்.

ஆயில்யன் said...

//எல்லார்க்கும் கைகுடுக்கர்து, அதான் ஆப்பி///


ரசித்தேன்! :)

ஆயில்யன் said...

//KVR said...

வருடத்தின் முதல் இடுகையே கலக்கல்.//


இப்பிடியெல்லாம் கமெண்ட் வாங்குற அளவுக்கு போஸ்ட் போட என்னால முடியுமா? :(

ஸோ இந்த வருசம் ஃபுல்லா பதிவு போடறது சிரமந்தான் !

"உழவன்" "Uzhavan" said...

அமித்துவுக்கு சாப்பாடு ஊட்ட ஆறு மணிக்கே அடித்துப் பிடித்து ஓடும் போதே தெரிந்துகொண்டேன். இல்லையெனில் அதற்கும் அவளிடம் ஏதாவது வாங்கிக்கட்டவேண்டியிருக்கும்.
இந்த பயம் இருக்கனும் :-)
இப்படியே மெயிண்டன் பண்ணு அமித்து குட்டி :-)

நிஜமா நல்லவன் said...

/ KVR said...

வருடத்தின் முதல் இடுகையே கலக்கல்./

Repeattttttttttuuu

அன்புடன் அருணா said...

அமித்து அப்டேட்ஸ் கலக்கல்ஸ்!

அமுதா said...

:-)) ஆப்பி நியூ இயர் டு வர்ச்சினி

யாத்ரா said...

வாசிக்க வாசிக்க காட்சிகள் கண்முன். இப்படி எழுதப்படும் எல்லாமே எனக்கு மிகச்சிறந்த கவிதைகளாகவே காட்சியளிக்கிறது, எவ்வளவு உன்னதமான தருணங்களை எழுத்துக்குள் வடிக்கிறீர்கள், அமித்துக் குட்டி வளர்ந்த பிறகு இவற்றையெல்லாம் படித்தால் அந்த கணம் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் கவிதைகளாகவே வாழ்கிறார்கள் இல்லையா

பா.ராஜாராம் said...

:-))))))

நானும் எங்கையவும் கொடுக்கிறேண்டா அமித்து!

ரொம்ப நாளாய் காணோமேன்னு இருந்தது அமித்து அப்-டேட்ஸ்..

வந்து கலக்கிட்டாங்க. சிரிச்சு முடியலை..

நன்றி அமித்தம்மா!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Anonymous said...

//எத்தின்னா அப்பாவ ஆப்பிச்ல அடிப்பாங்க? வெச்சுடு........//

அமித்து அப்பா பாவம். வீட்லயும் அடி, ஆப்பீச்லயும் அடியா.

அமித்து கதை சொல்லறதெல்லாம் யார்கிட்ட இருந்து கத்துக்கிட்டான்னு நினைக்கறீங்க :)

KarthigaVasudevan said...

//ஓக்கே, இப்போ இத்து என்னான்னு ச்சொல்லு? இப்போது இன்னும் கொஞ்சம் சாய்வாக இன்னொரு முட்டை

ஹே, இது பூனைடா?

இல்ல, த்தப்பு, இத்து கோழ்ழீ
//

:)))

so nice of u amithu.

ஹுஸைனம்மா said...

என்ன அழகா எழுதுறீங்க நடந்தத!! எனக்கும் இந்த மாதிரி எழுதிவைக்கத் தோணலியேன்னு வருத்தமா இருக்குது.

ஸோ ச்சுவீட் அமித்து!!

Thamira said...

யாத்ரா said...

வாசிக்க வாசிக்க காட்சிகள் கண்முன். இப்படி எழுதப்படும் எல்லாமே எனக்கு மிகச்சிறந்த கவிதைகளாகவே காட்சியளிக்கிறது, எவ்வளவு உன்னதமான தருணங்களை எழுத்துக்குள் வடிக்கிறீர்கள், அமித்துக் குட்டி வளர்ந்த பிறகு இவற்றையெல்லாம் படித்தால் அந்த கணம் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் கவிதைகளாகவே வாழ்கிறார்கள் இல்லையா
//

ரிப்பீட்டு.

Thamira said...

உங்கள் எழுத்துகள் அச்சுக்கு உரியவை என்று நான் அடிக்கடி சொல்லிவந்தது நிஜமாகிக்கொண்டிருக்கிறது. தொகுப்பில், அகநாழிகையில் என உங்கள் கதைகளை பார்க்க நேர்வது மகிழ்வாக இருக்கிறது. இன்னும் வெகுஜன இதழ்களில் மற்றூம் கதைத்தொகுப்புகளாக பார்க்கும் நாட்கள் தொலைவிலில்லை. வாழ்த்துகள் சாரதா@அமித்துஅம்மா.!

Bee'morgan said...

அப்பப்பா.. சுவையான அனுபவங்கள்.. :)

அமித்து அப்டேட்ஸ் க்கு தனியானதொரு இடம் கொடுத்து புக் மார்க் செய்து வைத்திருக்கிறேன்.. எப்போதாவது வேலைப்பளுவில் நொந்து போய் அமர்கையில் முதலில் நினைவுக்கு வருவது இதுதான்.. ஏற்கனவே படித்திருந்தாலும் கூட திரும்பத் திரும்ப வாசிக்கையில் மனசு லேசாகிறது. மனநினைவான புன்னகையுடன் சொல்கிறேன்,

நன்றி அமித்தும்மா :)

SK said...

New year with Amithu updates :-)

Super

இரசிகை said...

so...........nice:)