01 December 2009

அமித்து அப்டேட்ஸ்

அமித்துவின் பிறந்தநாள் உற்சாகமாக கழிந்தது. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
அமித்துவுக்கு இன்னும் பர்த்டே பைத்தியம் விட்ட பாடில்லை. நேற்று காலை சாக்லேட் கையில் வைத்துக்கொண்டு, அக்கா இன்னிக்கு பாப்பாக்கு பத்த டே, இந்தா ஆக்கிலேட்டு என்று சொல்ல, சஞ்சுவோ டேய் போதுண்டா, எப்பப் பார்த்தாலும் இதையே சொல்ற, தாங்க முடியலடா!

சஞ்சுவின் உபயத்தால் அமித்து சமீபத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை

”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “ (ஒரே காமடி பண்றாங்கப்பா) அமித்து சொல்ல ஆரம்பித்த நாளாக இந்த ஆம்பரிக்கு அர்த்தம் புரியாமல் படிப்படியாக சென்று விளங்கிக்கொண்ட பின்னர் புரிந்தது, காமெடி ஆம்பரியாக திரிந்த உண்மை.


..........

அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, பார்த்த அமித்து, அய்! பெம்மா, பொங்கல் சேஞ்சு இர்க்காங்க.

பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டான என் அக்காவுக்கோ, தான் பல்பு வாங்கியது புரியாமல் அமித்துவை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

.........

பர்ஸில் இருந்து ரூபாய் நோட்டையெல்லாம் வெளியே எடுத்துப்போட்டும் கையில் வைத்துக்கொண்டும் இருந்தாள். வேணாம் வர்ஷா, கிழிஞ்சுடும், எல்லாத்தையும் உள்ள வெச்சிடலாம் தா என்றதற்கு

ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு தர்றேன்

...........


எங்கனா சொன்ன பேச்ச கேக்கறியாம்மா நீ என்று அமித்துவிடம் அவளின் ஆயா சொல்லிய, கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் அவர்கள் தண்ணீரில் ஏதோ செய்து கொண்டிருக்க

தண்ணில்ல விளாடற, ச்சொன்னா ச்சொன்னா கேக்கே மாட்ற......

அவளின் ஆயாவோ, சரிதாம்மா,கேக்கறேன்.


........

டிவி நியூஸில் ஒபாமா இங்கிலீஷில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, கொஞ்ச நேரம் அதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அமித்து, எதிரே உட்கார்ந்திருந்த சஞ்சுவைப் பார்த்து

வாத் தூ வேன்? என்று ரிப்பீட்ட, சஞ்சுவுக்கு புரியவில்லை. எனக்கும்தான்.

கொஞ்ச நேரம் கழித்துதான் விளங்கியது அவளிடம் என்றோ ஒரு நாள் வாட் டூ யூ வாண்ட் என்று சொல்லும்போது அவள் அதை வாத் தூ வேனாக என்னை நோக்கி உச்சரித்தது.

...........


ஆயா, பூச்சிக்காரன் வந்துக்கான், படீல நிக்குர்றான் என்றாள்.

அவர்களோ, பூச்சிக்காரனை சொன்னால் அமித்து கீழே இறங்கமாட்டாள் என்று நினைத்து ஆமாம்மா, கீழே இறங்காத, வந்துடு.

அமித்துவோ, நா போய்யி தொத்திட்டு வர்ரேன், நீ இங்கீயே இர்ரு ஆயா, இல்லன்னா பூச்சிக்காரா புச்சிப்பான் என்று படிக்கட்டில் இறங்க ஆயத்தமானாள்.

.......

அமித்து ஒரு புக்கை வைத்துக்கொண்டு காண்டாமிர்கம் என்று கரெக்ட்டாக சொல்ல, சஞ்சுவோ சித்தீ, இதப்போயி காண்டாமிருகம்னு பாப்பா சொல்லுது என்றாள்.

அதனைப்பார்த்த நானும், இல்லம்மா இது காண்டாமிருகம்தான், அவ சரியாத்தான் சொல்றா என, கவனித்துக்கொண்டிருந்த அமித்துவோ

அக்கா, நீ தப்பா தப்பா ச்சொல்லூற .........

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

..............

என் பட்டும்மா, தங்கம், ச்செல்லம் இதையெல்லாம் அமித்து, சமீபத்தில் என் அக்கா பெண்ணுக்கு பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொஞ்சியது.

ஒரு கவிதை
இன்னொரு கவிதையை
கொஞ்சுகிறதே
ஹைய்
ஆச்சர்யக்குறி

...........

மதியத்தில் அமித்துவின் பாட்டி, அமித்துவுக்கு சாப்பாடு ஊட்ட முனையும் போது,

இபிலாம் பண்ண, எச்சோ கிட்டியே ச்சொல்லிடுவேன் உன்ன......

இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கில்லை அவளின் ஆயாவுக்கு
........

நேற்று மாலை பெய்த சிறுமழையில் நனைந்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன். பார்த்துக்கொண்டிருந்த அமித்து,

இபி மழலையே நெஞ்சீட்டு வர்ர......

ராஜாக்குட்டி, உனதன்பில் நனையவே பிறந்திருக்கிறேன் போல நான்.

28 comments:

ஆயில்யன் said...

//ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா///

:))))

Anonymous said...

//ராஜாக்குட்டி, உனதன்பில் நனையவே பிறந்திருக்கிறேன் போல நான். //

நெகிழ்வாயிருக்கு அமித்து அம்மா

அமித்துவுக்கும் ஆங்கிலம் பேசற ஆசை வந்துருச்சா :)

அன்புடன் அருணா said...

நனையுங்கள்...ஆனந்தமாக அமிர்தவர்ஷிணீ மழையில்!

அ.மு.செய்யது said...

Best of Amithu updates !!!

//ஒரு கவிதை
இன்னொரு கவிதையை
கொஞ்சுகிறதே
ஹைய்
ஆச்சர்யக்குறி //

அடடே !!! நோட் பண்ணுங்கப்பா !!
நோட் பண்ணுங்கப்பா !!

KarthigaVasudevan said...

படிக்கப் படிக்க திகட்டலை,அமித்து தமிழ் நு ஒரு தனித் தமிழ் படு பிரபலம் போல இருக்கே வலை உலகத்துல!நல்லா இருக்குப்பா.

அமுதா said...

/*அமித்துவுக்கு இன்னும் பர்த்டே பைத்தியம் விட்ட பாடில்லை.*/
:-)) யாழ் கூட இப்படிதான். நாளைக்கு ஏப்ரலா அம்மா என்று தினம் கேள்வி...

/*ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா */
:-))

/*அமித்துவோ, நா போய்யி தொத்திட்டு வர்ரேன், நீ இங்கீயே இர்ரு ஆயா, இல்லன்னா பூச்சிக்காரா புச்சிப்பான் என்று படிக்கட்டில் இறங்க ஆயத்தமானாள்.
*/
:-))

S.A. நவாஸுதீன் said...

அமித்து அப்டேட்ஸ் அருமை.

”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “

சோ ஸ்வீட்

நாணல் said...

:))) அமித்து அமித்து தான்...

பா.ராஜாராம் said...

ஒரு க்ளான்ஸ் விட்டுருக்கேன்.வேலைக்கு கிளம்பும் நேரம்.முடிச்சுட்டு வர்றேண்டா அமித்து.என் சலிக்காத அமித்து!

செ.சரவணக்குமார் said...

அருமை.

"உழவன்" "Uzhavan" said...

//ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு தர்றேன்//
 
:-))))))))
 
நாங்களும் அமித்துவின் மழலையில் நனைகிறோம்.

Ungalranga said...

என்கு என்னா ச்சொல்ல தெர்ல..

அமித்து..மீ டூ யுவர் பெஸ்து ப்ரெண்ட்.. ஓகே வா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரே ஆம்ப்ரி தான் போங்க :)

Karthik said...

//ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா

ஹாஹா.. :))

நட்புடன் ஜமால் said...

காந்தி தாத்தா - உணர்சிகளை சொல்லத்தெரியலை

--------------

பூச்சிக்காரன் - ஒரே ஆம்பரி தான் போங்கோ

---------------

நீங்கள் மட்டுமல்ல நாங்களும் நனைகிறோம் :)

பா.ராஜாராம் said...

//அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, பார்த்த அமித்து, அய்! பெம்மா, பொங்கல் சேஞ்சு இர்க்காங்க.

பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டான என் அக்காவுக்கோ, தான் பல்பு வாங்கியது புரியாமல் அமித்துவை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.//

//ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு தர்றேன்//

//தண்ணில்ல விளாடற, ச்சொன்னா ச்சொன்னா கேக்கே மாட்ற......//


//அமித்துவோ, நா போய்யி தொத்திட்டு வர்ரேன், நீ இங்கீயே இர்ரு ஆயா, இல்லன்னா பூச்சிக்காரா புச்சிப்பான் என்று படிக்கட்டில் இறங்க ஆயத்தமானாள்//

ஹா.ஹா..ஹா..ஹா..

கலக்குடா அமித்து!

☀நான் ஆதவன்☀ said...

//”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “//

:))))))))))))))))) கலக்கல் பாஸ்

சந்தனமுல்லை said...

ஹேய்..சூப்பர்! அமித்து வளர்கிறாளே...மம்மி! :-))

விக்னேஷ்வரி said...

ஒவ்வொன்றும் ரசித்து சிரித்தேன் அமித்து அம்மா. அமித்துவிற்கு Belated Birthday Wishes.

மோனிபுவன் அம்மா said...

தேன் கூட சாப்பிட சாப்பிட திகட்டும் போல!

இந்த அமித்துவின் பேச்சு அத்தைக்கு கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்குது

அவ்வளவு அழகா இருக்குது டா செல்லம் உன் பேச்சு!!!!

அட அட அட

உன் மழலை பேச்சை கேட்டால்
கவலை எல்லாம மறந்து போகும் டா தங்கம்

நவீனன் said...

கூடிய சீக்கிரம் அமித்துக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு நானே தலைவராகலாம்னு இருக்கேன்...
அமித்து குட்டி கிட்ட ஃப்பர்மிஷன் வங்கி கொடுங்க அமிர்தம்மா !

யாத்ரா said...

அமித்துவுக்கு வாழ்த்துகள், குழந்தைகளோட இருக்கிற நிமிஷங்கள் அற்புத கணங்கள்.

Chitra said...

HAPPY Birthday, Amithu. Baby talk is so cute and sweet........

Deepa said...

/”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா //
:-)))

//அமித்து ஒரு புக்கை வைத்துக்கொண்டு காண்டாமிர்கம் என்று கரெக்ட்டாக சொல்ல, //
அமித்து சமத்தாச்சே!

//இபி மழலையே நெஞ்சீட்டு வர்ர......

ராஜாக்குட்டி, உனதன்பில் நனையவே பிறந்திருக்கிறேன் போல நான்.//
நெகிழ்ந்தேன்!

Thamira said...

இதுபோன்ற பதிவுகள் ரசனையானவை, சுவாரசியமானவை.. இதுவும்.!

தமிழ் அமுதன் said...

இனிமையாய் உள்ளது பதிவு...!

///அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, பார்த்த அமித்து, அய்! பெம்மா, பொங்கல் சேஞ்சு இர்க்காங்க.///
பழக்க தோசத்துல சொல்லி இருக்கும்..!;;)

Unknown said...

நான் வளர்கிறேனே மம்மின்னு நிறைய வார்த்தைகள் பேச ஆரம்பிச்சிட்டா அமித்து. Good :))

இரசிகை said...

nice.............