27 October 2009

மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - தொடர்பதிவு

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
அமிர்தவர்ஷினி அம்மா (அமித்துவுக்கு அம்மாவான பிறகுதான் வாழ்க்கை சுவாரஸ்யமடைந்ததால் இந்தப் பெயரே ஒரு சிறுகுறிப்புதான்!)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
ஐந்தாவதோ இல்லை ஆறாவது படிக்கும்போதா என்று நினைவில்லை. தீபாவளி அன்று இரவு அம்மா, நான், அக்கா மூவரும் ஆளுக்கொரு பென்சில் வெடிகளை கையில் வைத்துக்கொண்டு முனையைப் பற்றிக்கொண்டிருக்க, பரபரவென்று எரிந்து கொண்டே வந்து டப்பென்று வெடித்து எனக்கும் அம்மாவுக்கும் கையெல்லாம் தீக்காயம். அது மறக்கமுடியாதது.

அதையடுத்து வந்த இன்னொரு தீபாவளியில் மதியம் தூங்கி எழுந்திருக்க லேட் சாயங்காலம் ஆகிவிட்டது. அலறி பிடித்து எழுந்து கதவிடுக்கு வழியே வெளியே பார்த்தால் காலை விடியலைப்போல இருந்தது.அடப்பாவி மக்கா, எல்லாரும் என்னை விட்டு எல்லா வெடியையும் வெடிச்சுட்டு, வடை, பாயாசத்தையெல்லாம் தின்னு காலி செஞ்சிருப்பாங்களேன்னு நினைக்க நினைக்க அழுகை ஆத்தாமையா பொங்கிட்டு வந்து, பக்கத்தில் படுத்திருந்த அக்காவை என்ன ஏன் எழுப்பல, என்ன ஏன் எழுப்பல, இப்ப விடிஞ்சுடுச்சு பாரு என கத்த,
அரை குறை தூக்கத்திலிருந்து எழுந்த அக்கா, சரியான ஈயத்தை காச்சு காதுல ஊத்துனாங்க பாருங்க ச்சான்ஸே இல்ல. இன்னிக்கும் தீபாவளி அன்னிக்கு சாயங்காலமாச்சுன்னா எனக்கு இந்த ஞாபகம் வந்துரும்.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சென்னையில்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
பால்யத்தை தொலைத்தவர்கள் தத்தம் குழந்தைகளின் பால்யத்தின் பரவசத்துக்காகவே, இனிப்பு, புத்தாடை, பட்டாசு என பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
அமித்துவுக்கு மட்டும் ரெண்டு செட் ட்ரஸ். ஒன்னு அந்தம்மா கேட்ட யெல்லோ கலர்.


6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
முறுக்கு, அதிரசம், தட்டை (செய்தது நானல்ல, மாமியார் & கம்பெனி)


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
என் கிட்ட இருக்க கெட்ட பழக்கம். இது போன்ற பண்டிகைகளுக்கு அவ்வளவு ஈடுபாடோடு யாருக்கும் வாழ்த்து தெரிவிக்க மாட்டேன். யாராவது வாழ்த்துகள் அனுப்பினால் பதிலுக்கு நன்றி நவிலல் மட்டுமே.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தீபாவளி அன்னிக்கு வெளிய சுத்தறதா,என்னா பட்டாசு வெடிக்குதுங்க பய புள்ளைங்க. பட்டாச கீழ வெச்சு வெடிங்கன்னா ராக்கெட்டு கணக்கா எல்லாம் மேலதான் பறக்குது :) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
உதவுவதெதற்கு தீபாவளி, திருநாள் எல்லாம். உண்மையான தேவையிருப்போருக்கு, தேவைப்படுமிடங்களில், தேவைப்படும் நேரங்களில் (நம் கைக் காசைப் பொறுத்து).இல்லனா இப்படி ஒரு தேவையிருக்காம், உதவறீங்களான்னு கூசாம அடுத்தவங்கள கேட்டுடறது.
கேக்கறதுல என்ன குறைஞ்சுடப்போறோம் சொல்லுங்க?.


10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
முன்னும், பின்னும் என தீபாவளியைப் பற்றி அனேகமா எல்லாருமே பதிவெழுதிட்டாங்க. தீபாவளி பற்றி படிக்காதது ஒரு சில வலைப்பூக்களில் மட்டுமே. அவர்களில் நால்வர்.

1. பால்யத்தில் நீங்கள் கொண்டாடிய தீபாவளி பற்றி படிக்க ஆசை பா.ராஜாராம் http://karuvelanizhal.blogspot.com/
2. ஆஸ்திரேலியால பட்டாசு கெடைக்குமாங்க சின்ன அம்மிணி :) http://chinnaammini.blogspot.com/
3. நான் ஆதவன் (நல்லா சுத்திவிடுங்க பாஸ், இன்னொரு கொசுவத்தியை :) http://nanaadhavan.blogspot.com/
4. உழவன் (அகமதியோடு கொண்டாடிய தீபாவளி பத்தி சொல்லுங்க) http://tamiluzhavan.blogspot.com/

தேவதைக்கு தேவதை ட்ரஸ்தானே போடனும், என அழகா சொல்லி உடன் என்னையும் தொடர்பதிவில் இணைத்த திரு. கே.வி.ஆருக்கு நன்றிகள். தொடங்கிவைத்த நானானி அம்மாவுக்கும்.


டிஸ்கி: பதிவின் தலைப்பில் இருக்கும் மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - அமித்து மொழிந்த வார்த்தைகள்

19 comments:

ISR Selvakumar said...

மழையில் தொடர் பதிவு மழையடித்துக் கொண்டிருக்கிறதாக்கும் . . .

☀நான் ஆதவன்☀ said...

அழைத்ததற்கு நன்றி அமித்து அம்மா.

இந்த மாசம் கொசுவத்தி மாசம் போல :)

அ.மு.செய்யது said...

மனசு நிறைந்த பதிவு !!!! மகிழ்ச்சி !!!

ஆயில்யன் said...

உங்க தீபாவளி கதைகளை விட டாப்ல இருக்கறது அமித்து ஸ்பீச்சுத்தான் :)

கலக்கல்:))

Unknown said...

//டிஸ்கி: பதிவின் தலைப்பில் இருக்கும் மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - அமித்து மொழிந்த வார்த்தைகள்
//

ம்ம் தலைப்புக்காகவே அமித்துக்கு ஒரு தடவை சுத்திப் போடுங்க :-).

பதிவைத் தொடர்ந்தமைக்கு நன்றி அமித்து அம்மா.

pudugaithendral said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

தொடர் பதிவு எப்படி ஆரம்பபிப்பதுன்னு
உக்காந்து யோசிக்கிற அந்த புண்யாத்மா யாரோ!!!
:))))

Karthik said...

நல்ல பதிவு.. அமித்து அப்டேட்ஸ் சீக்கிரம் ஒண்ணு போடுங்க.. :)

Thamira said...

உதவுவதெதற்கு//

உதவுவதற்கெதற்கு.. உஸ்ஸப்பா.. கரெக்டா எழுதிட்டனா.?

ராமலக்ஷ்மி said...

அமித்து மொழிந்த வார்த்தைகளும் அழகு. நீங்கள் பொழிந்திருக்கும் நினைவுகளும் அழகு:)!

கல்யாண்குமார் said...

புதிய தலைமுறை வார இதழ் பார்த்தீர்களா? அதன் ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கிறேன். உங்கள் துறை சார்ந்த விஷயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காமராஜ் said...

மிகத் தெளிவாகிவிட்டது அமித்தம்மாவின் இதமும், பளிச்சுமான வாக்கியங்கள்.

ரொம்ப நல்லாருக்கு அமித்தம்மா.

பா.ராஜாராம் said...

நன்றி அமித்தம்மா.எழுதிருவோம்...

தலைப்பு, A-க்ளாஸ்டா அமித்து!

//உதவுவதெதற்கு தீபாவளி, திருநாள் எல்லாம். உண்மையான தேவையிருப்போருக்கு, தேவைப்படுமிடங்களில், தேவைப்படும் நேரங்களில் (நம் கைக் காசைப் பொறுத்து).இல்லனா இப்படி ஒரு தேவையிருக்காம், உதவறீங்களான்னு கூசாம அடுத்தவங்கள கேட்டுடறது. கேக்கறதுல என்ன குறைஞ்சுடப்போறோம் சொல்லுங்க?.//

உயரமாகிக்கொண்டே இருக்கிறீர்கள் அமித்தம்மா!

Anonymous said...

இன்னும் ஒரு 10 நாள்ல பதிவு போடறேன் அமித்து அம்மா. அழைப்பிற்கு மிக்க நன்றி. பட்டாசு கிடைக்கும். ஆனா எல்லா இடத்துலயும் வெடிக்க முடியாது.

சந்தனமுல்லை said...

/என்ன ஏன் எழுப்பல, இப்ப விடிஞ்சுடுச்சு பாரு என கத்த, அரை குறை தூக்கத்திலிருந்து எழுந்த அக்கா, சரியான ஈயத்தை காச்சு காதுல ஊத்துனாங்க/

:-)))))))))))


/மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி/

சூப்பர்!

இரசிகை said...

4-vathu kelvikkaana pathil manathil nirkirathu.........

நட்புடன் ஜமால் said...

இந்தப் பெயரே ஒரு சிறுகுறிப்புதான்!)]]


சிறு குறிப்பா!

இதுதான் வாழ்க்கையே ...

"உழவன்" "Uzhavan" said...

என்ன அமித்துமா.. இப்படி மாட்டிவிட்டுட்டீங்க :-)) முதன்முதலில் நான் அழைக்கப்பட்டிருக்கும் தொடர்பதிவு இதுதான் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றியும் கூட.
இந்த வாரம் நெல்லைக்குப் பயணம். ஆதலால் அடுத்த வாரத்தில் பதிவு போடுகிறேன்.

Anonymous said...

தீபாவளிப்பதிவு போட்டாச்சு
http://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_30.html

"உழவன்" "Uzhavan" said...

பதிவு போட்டாச்சு

http://tamiluzhavan.blogspot.com/2009/11/blog-post.html