15 June 2009

நிகழ்வுகள்

கிழக்கு பதிப்பகத்தார், ஒரு புத்தகம் இலவசமாக வீட்டுக்கு அனுப்பப்படும் என்ற லிங்க்கில் (லிங்க் உபயம்: திரு. குசும்பன் ப்லாகில் ஒருவர் இட்ட பின்னூட்டம்)
பதிவு செய்தபடியே, வீட்டுக்கு இன்ப அதிர்ச்சியாக புத்தகம் வந்து சேர்ந்தது. நன்றிகள் கிழக்கு பதிப்பகத்தார் + பின்னூட்டியவர்

புத்தகத்தின் பெயர்: ஆதவன் எழுதிய இரவுக்கு முன் வருவது மாலை,
சிறிது நாட்களுக்கு முன்னர் தூறல் கவிதைகள் திரு. ச.முத்துவேல் இந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் செய்திருந்தார்.
(முதல் கதை எனக்கு புரியவே இல்ல), முதற் கதையே கிர்ர்ர்ர் ஆனதில், மீதியை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

.............

இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரெயினில் முதுமையை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்மணி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த வழக்கமாக வாழைப்பழம் விற்கும் இருக்கும் ஆயா (தள்ளாத வயது), அவரைப் பார்த்து, கையி, காலு எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதாச்சும் வூட்டு வேலை செஞ்சாவது சாப்புடலாமில்ல, ஒரு ப்பழம் வித்தா கூட 50 பைசா கெடைக்கும், அத விட்டுட்டு பிச்ச எடுக்கற என எல்லார் முன்னிலையிலும் அந்தப் பெண்மணியை கேட்க, அடுத்த ஸ்டேசனில் அந்த பிச்சை எடுத்த பெண்மணியை காணோம், அதற்கப்புறமும்.

சில இடத்தில் சொல்வார் சொன்னால்தான், கேட்பவருக்கு எடுபடுது. இதையே நாம் சொன்னா, போடறது ஒரு ரூவா, இதுலப் பேச்சப் பாரு என்று நினைக்கக்கூடும்.

.............

”பசங்க” படம் பார்க்க கொடுத்து வைத்தது. படம் சூப்பர். பாராட்டு என்ற விஷயத்தை ஒரு மெல்லிய நூல் போல எடுத்து படத்தில் இழையோட விட்டிருக்கிறார்கள்
சிரிக்கவும் சிந்திக்கவும் அருமையான வசனங்கள். குறிப்பாக அந்த வாத்தியாரும், அன்பரசின் அப்பாவும் பேசிக்கொள்ளும் இடம். நச்.

நடுவில் பக்கடா என்ற கேரக்டர் கையில் ஊற்றிய தேனை குடிக்க முனைய, ஜீவா அந்தப் பையனை ஏய் நக்கி என்று சொல்ல, காமெடியாக இருந்தது. டி.வி.டியில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, குறுக்க நெடுக்க ஓடிக்கொண்டிருந்த அமித்துவின் காதில் அது விழுந்து, நக்கி, நக்கி என்று சொல்லி இன்னும் காமெடியாப் போனது. படத்தின் க்ளைமாக்ஸில் அன்பரசு பிழைக்க கைத் தட்டும் போது வர்ஷினியும் உடன் கைத்தட்டியது.

பாராட்டு என்ற விஷயம் எவ்வளவு பயன் தருகிறது.
சொல்லப்போனால் நம்மை உயிர்ப்போடும் ஒரு உத்வேகத்தோடும் வைத்துக்கொண்டிருக்கிறது.

ப்லாக் எழுதறவங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை என்னன்னா, கொறைஞ்சது ஒரு 10 பாராட்டாவது கெடச்சு, மனசு மத்தத யோசிக்காம இருக்க வைக்குது.
மனச விட்டுப் பாராட்டிப்போம். இதுவே ஒரு பெரிய ரிலாக்‌ஷேஷன் தானே.

26 comments:

நட்புடன் ஜமால் said...

பாராட்டு என்ற விஷயம் எவ்வளவு பயன் தருகிறது.
சொல்லப்போனால் நம்மை உயிர்ப்போடும் ஒரு உத்வேகத்தோடும் வைத்துக்கொண்டிருக்கிறது.\\

ஆம்!

நட்புடன் ஜமால் said...

தியை இனிமேல் தான் படிக்கவேண்டும்.\\

சீக்கிரம் விமர்சணங்கோ!

நட்புடன் ஜமால் said...

அன்பரசு பிழைக்க கைத் தட்டும் போது வர்ஷினியும் உடன் கைத்தட்டியது.\\

ஹா ஹா ஹா

உடல் மொழிகள் தான் உடன் விளங்கும் போல...

rapp said...

இப்போ என்னோடது எத்தனாவது பாராட்டு?:)

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா..உங்களாலே எனக்கும் ஒரு புக் இலவசமா கிடைச்சுது...! :-)ஆனா நிஜமாவே ஏதாவது புக் காசு கொடுத்து வாங்கணும்னு தோணுச்சு..ஒரு குற்றவுணர்ச்சிதான்!

அப்புறம் கடைசில மனசை பிழிஞ்சுட்டீங்களே! :-)) நல்லாருக்கு நிகழ்வுகள்!

ராமலக்ஷ்மி said...

//சில இடத்தில் சொல்வார் சொன்னால்தான், கேட்பவருக்கு எடுபடுது. இதையே நாம் சொன்னா, போடறது ஒரு ரூவா, இதுலப் பேச்சப் பாரு என்று நினைக்கக்கூடும்.//

சரியென இதை சற்று மாற்றியும் யோசித்து வைத்துக் கொள்வோம். பாத்திரம் அறிந்துதான் ‘பிச்சை’ மட்டுமல்ல அட்வைசையும் போடணும்.

//மனச விட்டுப் பாராட்டிப்போம். இதுவே ஒரு பெரிய ரிலாக்‌ஷேஷன் தானே//

உண்மைதான். நிகழ்வுகளின் தொகுப்பு அருமை அமித்து அம்மா:)!

நர்சிம் said...

நிகழ்ந்தவைகளை நல்லா சொல்லி இருக்கீங்க.

தமிழ் அமுதன் said...

// முதுமையை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்மணி ///

சுருக்கமா சக வயது பெண்மணின்னு சொல்லி இருக்கலாம்!!;;))


///ப்லாக் எழுதறவங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை என்னன்னா, கொறைஞ்சது ஒரு 10 பாராட்டாவது கெடச்சு, மனசு மத்தத யோசிக்காம இருக்க வைக்குது. ///

உண்மைதான்! நல்லா சொல்லி இருக்கீங்க!
பாராட்டுகள்!
பாராட்டுகள்!!
பாராட்டுக்கள்!!!

அகநாழிகை said...

அமிர்தவர்ஷினி அம்மா,
ஆதவன் கதைகள் வாசிப்பு சுவாரசியமானவை. மனித உறவுகளில் ஏற்படுகின்ற பல்வேறு நிலைகளைப் பற்றி பேசுபவை. நீங்கள் மறுபடி வாசித்துப் பாருங்கள்.
கிழக்கு பதிப்பக புத்தகங்கள் வாசித்துவிட்டு விமர்சனம் செய்வதற்காக கொடுக்கிறார்கள். சென்னைக்கு மட்டும் அல்ல, எல்லா பகுதிக்கும் அனுப்புகிறார்கள்.

அப்பாவி முரு said...

கொறைஞ்சது ஒரு 10 பாராட்டாவது கெடச்சு, மனசு மத்தத யோசிக்காம இருக்க வைக்குது.//

மிகச் சரியாக சொல்லியுள்ளீர். கவனமும், திசையும் மாறாமலிருப்பதன் காரணம், சரியான பாரட்டுக்களால் தான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரு. அகநாழிகை. விமர்சனத்திற்காகத்தான் கிழக்கு பதிப்பகம் புத்தகங்களை அனுப்புகிறது என்பதை நான் அறிந்தேன், உங்கள் வாயிலாக.

நன்றிகள். இருப்பினும் எனக்கு ஒரு குற்றவுணர்வு. கூடிய சீக்கிரம் அந்தப் பதிப்பகத்திலிருந்து இன்னும் சில புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிவிடவேண்டும் என்று.

ஆதவனின் அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. படித்துவிட்டு கண்டிப்பாக விமர்சனம் எழுதுகிறேன்.

நன்றிகள் உங்கள் விளக்கமான பின்னூட்டத்திற்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜமால். ஆமாம் சகோ.

ராப், நீங்க என்ன நெறைய தடவ பாராட்டீட்டிங்க. :)

ஆமாம் முல்லை, எனக்கும் அதே உணர்வு, அந்தப் புத்தகத்தைப் பார்க்கும் போதெல்லாம், சீக்கிரமே கிழ்க்கிற்குப் போய் மாலன் சிறுகதைகள் வாங்கிவிடவேண்டும், உமா வேறு அழகாக ரெவ்யூ எழுதியிருக்கிறார்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ராம் மேடம்

நன்றி நர்சிம்

நன்றி ஜீவன், மொதல்ல கால வாரி விட்டுட்டு, கடைசில பாராட்டிவிட்டுப் போனதற்கு. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வருகைக்கு நன்றி திரு. முரு.

Vidhya Chandrasekaran said...

நானும் பசங்க படம் பார்க்கனும். நிகழ்வுகள் நல்லாருக்கு:)

அமுதா said...

/*பதிவு செய்தபடியே, வீட்டுக்கு இன்ப அதிர்ச்சியாக புத்தகம் வந்து சேர்ந்தது*/
உங்களால் எனக்கும்... ஆனாலும் இலவசமாவானு ஒரு குறுகுறுப்பு. இன்னும் இரண்டு புத்தகமாவது வாங்கி படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.


/*சில இடத்தில் சொல்வார் சொன்னால்தான், கேட்பவருக்கு எடுபடுது. இதையே நாம் சொன்னா, போடறது ஒரு ரூவா, இதுலப் பேச்சப் பாரு என்று நினைக்கக்கூடும்*/
ஆமாம்...

/*ப்லாக் எழுதறவங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை என்னன்னா, கொறைஞ்சது ஒரு 10 பாராட்டாவது கெடச்சு, மனசு மத்தத யோசிக்காம இருக்க வைக்குது.
மனச விட்டுப் பாராட்டிப்போம். இதுவே ஒரு பெரிய ரிலாக்‌ஷேஷன் தானே. */
ஆமாம்..

நிகழ்வுகளின் தொகுப்பு அருமை

அ.மு.செய்யது said...

எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே புத்தகம் வந்து விட்டது.நான் பூனேவில் இருக்கிறேன்.டான்னு
அனுப்பி வைச்சிட்டாங்க.200 ரூபாய் புத்தகம் எப்படி இலவசமாக அனுப்பி வைச்சாங்கன்னு நான் யோசிச்சிட்டே இருக்கேன்.

ஆனால் இன்னும் விமர்சனம் தான் எழுத வில்லை.

மேலும் நீங்கள் எழுதும் விமர்சனத்திற்கு பத்ரி அவர்களின் எண்ணங்கள் வலைப்பூவில் தொடுப்பு கொடுக்கப்படும்.

Thamira said...

இவ்வளவு குட்டிப்பதிவுக்கெல்லாம் பாராட்டமுடியாது. வாழ்த்துகள்தான்.!

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்னுடைய பாராட்டுக்களும்....

நசரேயன் said...

//ப்லாக் எழுதறவங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை என்னன்னா, கொறைஞ்சது ஒரு 10 பாராட்டாவது கெடச்சு, மனசு மத்தத யோசிக்காம இருக்க வைக்குது.
மனச விட்டுப் பாராட்டிப்போம். இதுவே ஒரு பெரிய ரிலாக்‌ஷேஷன் தானே.//
பெரியவங்க நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

ஆ.சுதா said...

நிகழ்வுகள் நன்று.
புத்தகத்தை ஈர்ப்புடன் வாசித்துக் கதை சொல்லுங்கள்.

Dhiyana said...

//மனச விட்டுப் பாராட்டிப்போம்.//

நிகழ்வுகள் அருமை அமித்து அம்மா. மனச விட்டுப் பாராட்டுகிறேன்..

"உழவன்" "Uzhavan" said...

//கிழக்கு பதிப்பகத்தார், ஒரு புத்தகம் இலவசமாக வீட்டுக்கு அனுப்பப்படும் (சென்னை மட்டும்)//

அப்படியா? இது நமக்குத் தெரியாம போச்சே :-(

//இதையே நாம் சொன்னா, போடறது ஒரு ரூவா, இதுலப் பேச்சப் பாரு //

சரியாச் சொன்னீங்க..

//வர்ஷினியும் உடன் கைத்தட்டியது//

கலக்குற வர்ஷினி.. கலக்குற :-)

Deepa said...

ரசனையான பதிவு!

அன்பரசு பிழைக்க கைத் தட்டும் போது வர்ஷினியும் உடன் கைத்தட்டியது.\\

:-)

கே.என்.சிவராமன் said...

அமித்து அம்மா,

அகநாழிகையின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன். ஆதவனின் படைப்புகள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

அப்புறம், 'நிகழ்வுகள்' நல்லா இருக்கு :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மணிநரேன் said...

நிகழ்வுகளை நன்றாக கூறியுள்ளீர்கள்.