06 May 2009

பயணங்கள் முடிவதில்லை

சென்னையில் சமீபத்திய இரயில் கடத்தல் ( ! ?) தொடர்பான இரயில் விபத்து அனைவரும் அறிந்ததே. அது நடந்த நன்று எப்படி நடந்திருக்கும், டிரைவர் மேல தப்பா, சிக்னல் ப்ரச்சனையா என்று ஏகப்பட்ட குழப்பங்களில் பொதுஜனங்கள் குழப்பிக்கொண்டிருக்க, வழக்கம் போல மாலை தாம்பரம் வண்டியில் சைதைக்கு சென்று கொண்டிருந்தேன். பெணகள் பெட்டியில் ஒரு அம்மா நல்ல காலை நீட்டி வைத்து உட்கார்ந்து கொண்டு காலை ரயில் விபத்தை முழக்கிக்கொண்டிருந்தார். அந்தம்மா சக பயணியிடம் பேசிக்கொண்டு ட்ரெயின் ஆக்ஸிடெண்ட்ட அப்படியே நேர்ல பாக்குற எஃபெக்ட்ட கொண்டு வந்தாங்க, அவங்க சொன்னதுல ஒன்னு, “சிக்னல் கொடுக்காமயே ட்ரெயின் போயிடுச்சாம், அப்புறம் தான் சிக்னல் கொடுக்கறவரு வந்து பார்த்து, ட்ரெயின் பின்னாடியே ஓடறாராம்”. பாவம் எப்படி ஏத்தி வெச்சிருக்காம் பாரு.
மேலும் சீட்டில் உட்கார்ந்திருந்த இரு இளம் பெண்கள் செல்போனை நோண்டிக்கொண்டே, ஏய் ஆக்ஸிடெண்ட் ஆன ட்ரெயின ஒரு லூசு ஓட்டிச்சுன்னு சொல்லிக்கிறாங்க. அய்யோ சாமி, இந்த ட்ரெயின யாரு ஓட்டறாங்களோ தெரியலயே என்று சொல்ல, இன்னொரு செல்போன் நோண்டி, இல்லடி, இந்த ட்ரெயின லூசு ஓட்டல, ஒக்காந்துட்டு வருது என்று ஒருவரை ஒருவர் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அன்று எனக்கு சீட் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தது நல்லதாக போனது.

கடைசியாக இது ட்ரெயின் கடத்தல் என்று போலீஸ் சந்தேகிப்பதாக பேப்பரில் அறிந்தேன். நாலு பேர் செத்தாலும், பத்து பேர் பாதிக்கப்பட்டாலும் சக பயணிகள் வழக்கம் போல பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ரயில்வே டிபார்ட்மெண்ட்டுக்கு இன்னும் பீதி அடங்கவில்லை போலிருக்கிறது.

பெண்கள் கம்பார்ட்மெண்ட்டில் எப்போது பார்த்தாலும் ஒரு ரயில்வே போலீஸ் இருக்கிறார். போலீஸ்கார், போலீஸ்கார், சென்னையில் ரயில் கடத்தல் நடந்தாலும், கடத்தறவங்க, பெண்கள் கம்பார்ட்மெண்ட தனியா கழட்டிவிட்டுத்தான் கடத்துவாங்க. உங்களுக்கு கடைசி பென்ச் ஆண்ட்டிகள பத்தி தெரியாது போல... போலீஸ்கார்

ப்பா, காலை, மாலை இரு வேளைகளிலும் நான் செல்லும் நேர ட்ரெயின் லேடீஸ் கம்பார்ட்மெண்ட்களை அதிகம் ஆக்ரமித்திருப்பது அரசுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களே. அப்படியே ஒரு செட் ஆக்ரமித்திருக்கும். கடைசி நீள இருக்கைதான் இவர்களின் ஆக்ரமிப்புக்கான இடம். (ஸ்கூல்ல ஆரம்பிச்சு, ட்ரெயின் வரைக்கும், இந்த கடைசி பென்ச் தொல்லை தாங்கமுடியலப்பா!). லேடிஸ் ஸ்பெசல் ட்ரெயினாக இருந்தால் கடைசி 5 பெட்டிகள் பெண்களுக்கானது. சில சமயம் ட்ரெயின விட்டுருவோமோ என்ற பரபரப்பில் ஏதாவது ஒன்று, இரண்டு ஆண்கள் ஏறிவிட்டால் அவ்ளோதான். ஏம்பா, பாத்தா தெரியல. இது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டுப்பா, இறங்குப்பா. ஒரு நான்கைந்து குரல்கள் கோரஸாக எழும். இத்தனைக்கும் அவர்கள் அடுத்த ஸ்டேஷனில் ஆண்கள் பெட்டிக்கு மாறிவிடுவார்கள். சில சமயம் பரபரப்பில் ஏறும் அந்த ஆண்களை பார்க்கும்போது பாவமாக தோன்றும். வியர்த்து விறுவிறுத்து (?) ட்ரெயின் அடுத்த ஸ்டேசன் போறதுக்குள்ள ஒரு மூணு தடவையாவது வாட்ச பாத்து, ட்ரெயின் அடுத்த ஸ்டேஷன் நுழையும்போதே ஒரு காலை கீழே வைத்துக்கொள்ளாத குறையாக தொங்குவார்கள். அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் அலைபாய்ந்து முன்னிருக்கும் ஆண்கள் பெட்டிக்கு ஓடுவார்கள்.

இந்தப் கடைசி சீட் பெண்களை பார்க்கும்போது உண்மையில் இவர்கள்தான் வாழ்க்கையை வாழப்பிறந்தவர்களோ என்று கூட தோன்றும். அந்தளவுக்கு பேச்சும், சிரிப்பும் பின்னிப் பிடலெடுத்துக்கொண்டு வருவார்கள்.சிலர் கோரஸாக சில பக்திப்பாடல்களை பாடிக்கொண்டு வருவார்கள். அரியர்ஸ்ல ஆரம்பிச்சு அடுத்த சீட் ஆள் வரைக்கும் இவர்கள் கலாய்த்தல் செம ஹாட் & டெர்ரர்.

அதிலும் ஒரு தடவை ஒரு பெண் பாடிக்கொண்டு வந்த மாமன் ஒரு நா, மல்லியப்பூ கொடுத்தான் என்ற பாட்டு, அப்படியே கம்பார்ட்மெண்டே ஆடிப்போச்சு. செம சூப்பரா பாடுனாங்க. இடையிடையே சிரிப்பு. அவரின் அந்த சிரிப்பு, கம்பார்ட்மெண்ட்டின் சில உம்மனா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்தது அன்று. அந்தப் பெண்ணின் முகத்தை என்னால மறக்கவே முடியாது. நிறைய பழைய பாடல்கள் பாடுவாங்க. ஆனால் அப்படி சிரித்து, பாடிக்கொண்டிருக்கும் பெண்களை ஏனோ சில பெண்களுக்கே பிடிக்காது போல. அன்று அந்தப் பெண் பாட்டைக் கேட்டுவிட்டு கீழிறங்கும்போது, ட்ரெயினிலிருந்து எனக்கு முன்னால் இறங்கிய இரு பெண்களின் கமெண்ட் என்னால் மறக்க முடியவில்லை. இதுக்கெல்லாம் வீட்டுல வேலையே இருக்காது போல, பாடறதுக்குன்னே ட்ரெயின்ல ஏறி ஒக்காந்துக்குமா?, நம்மளே ஆயிரம் டென்ஷன்ல ஆபீஸுக்கு வர்ரோம் என. எப்ப பாத்தாலும் கெக்க பிக்கன்னு சிரிச்சிட்டே இருக்கும் பாத்திருக்கியா நீ என. ச்சே. பிறர் சிரிக்க வாழ்ந்தாதான் தப்பு, தான் சிரித்து வாழ்ந்தா கூடவா தப்பு. மாறுங்க மக்கா. நம்மள நாம சந்தோஷமா வெச்சுக்கலன்னாலும், பிறரின் சந்தோஷம் நம்மள தொத்திக்கொள்ளும் அந்த சில கணங்களாவது நாம சந்தோஷமா இருப்போம்.

29 comments:

தமிழ் அமுதன் said...

//இல்லடி, இந்த ட்ரெயின லூசு ஓட்டல, ஒக்காந்துட்டு வருது என்று ஒருவரை ஒருவர் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அன்று எனக்கு சீட் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தது நல்லதாக போனது.//

நின்னுகிட்டு வருதுன்னு சொல்லி இருந்தா? ஒருவேள அது நீங்க தானோ???


//பெண்கள் கம்பார்ட்மெண்ட்டில் எப்போது பார்த்தாலும் ஒரு ரயில்வே போலீஸ் இருக்கிறார். போலீஸ்கார், போலீஸ்கார், சென்னையில் ரயில் கடத்தல் நடந்தாலும், கடத்தறவங்க, பெண்கள் கம்பார்ட்மெண்ட தனியா கழட்டிவிட்டுத்தான் கடத்துவாங்க. உங்களுக்கு கடைசி பென்ச் ஆண்ட்டிகள பத்தி தெரியாது போல... போலீஸ்கார்///

அது அந்த போலீஸ் கார்ர்ர் க்கு தெரியும்! அவர் தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டிதான்
அங்க வந்து நிக்குறார்!

S.A. நவாஸுதீன் said...

சுவாரசியமா இருக்கு. பயணங்கள் என்றுமே முடிவதில்லை.

என் நண்பர் அப்துல்லாஹ் எழுதிய அவரின் "பயணங்கள்" பதிவில் "தந்தையின் குறி கடந்து தாயின் கருவறை நோக்கிப் பயணிக்கத் துவங்கும்போதே பயணங்கள் குறித்த நம் ஆர்வமும் நம்மோடு பிறக்கத் துவங்குகின்றது.நமக்குத்தான் திசைகளேதவிர எந்தப் பயணமும் துவக்கப் புள்ளி நோக்கியே மீண்டும் மீண்டும் சுற்றி வருவதால் திசைகளற்றே இருக்கின்றன.பயணங்களின் வேர்கள் அகலமானவை.ஆனால் அவை தரும் அனுபவங்களோ ஆழமானவை.பயணங்கள் வாய்க்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலி.காரணம் ஒவ்வோரு பயணமும் ஏதோ ஒரு விதத்தில் அவனை மேம்படுத்தும்" என்பதும் நினைவுக்கு வருகிறது.

பெண்கள் கம்பார்ட்மெண்ட்டில் எப்போது பார்த்தாலும் ஒரு ரயில்வே போலீஸ் இருக்கிறார். போலீஸ்கார், போலீஸ்கார், சென்னையில் ரயில் கடத்தல் நடந்தாலும், கடத்தறவங்க, பெண்கள் கம்பார்ட்மெண்ட தனியா கழட்டிவிட்டுத்தான் கடத்துவாங்க. உங்களுக்கு கடைசி பென்ச் ஆண்ட்டிகள பத்தி தெரியாது போல... போலீஸ்கார்

சிரித்தேன்

எம்.எம்.அப்துல்லா said...

//போலீஸ்கார், போலீஸ்கார், சென்னையில் ரயில் கடத்தல் நடந்தாலும், கடத்தறவங்க, பெண்கள் கம்பார்ட்மெண்ட தனியா கழட்டிவிட்டுத்தான் கடத்துவாங்க. உங்களுக்கு கடைசி பென்ச் ஆண்ட்டிகள பத்தி தெரியாது போல... போலீஸ்கார்

//

இதை கவுண்டமணி எபெக்ட்டில் படித்துவிட்டு சிரித்துக் கொண்டே இருக்கின்றேன் :)))

Vidhya Chandrasekaran said...

\\இந்த ட்ரெயின லூசு ஓட்டல, ஒக்காந்துட்டு வருது என்று ஒருவரை ஒருவர் ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.\\

நல்லா கவனிச்சிங்களா? உங்களை சொல்லிருக்கப் போறாங்க:)

Dhiyana said...

//சில சமயம் ட்ரெயின விட்டுருவோமோ என்ற பரபரப்பில் ஏதாவது ஒன்று, இரண்டு ஆண்கள் ஏறிவிட்டால் அவ்ளோதான். ஏம்பா, பாத்தா தெரியல. இது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டுப்பா, இறங்குப்பா.//

நான் படிச்ச காலேஜில பப்ளிக் பஸ்ஸை, லேடிஸ் ஸ்பெஷலாக காலை மற்றும் மாலை நேரங்களில் விடும் வழக்கம் உண்டு. அதில் ஏறும் ஆண்களைப் பார்க்க பாவமாக இருக்கும். அவரசத்தில் ஏறி விட்டு, அசடு வழிந்து கொண்டே இறுங்குவர்.

அ.மு.செய்யது said...

அது என்ன‌வோ சென்னை மின்சார‌ ர‌யில்க‌ளைப் ப‌ற்றி யார் எழுதினாலும் ஏதோ ஒன்று ம‌ன‌தை சில‌ நிமிட‌ங்க‌ள் ஆக்ர‌மித்து விடுவதைப் போல் உண‌ர்கிறேன்.

பீச் டூ திருவான்மியூர் ரூட்ட‌ நான் ரொம்ப‌ மிஸ் ப‌ன்றேன்.

அ.மு.செய்யது said...

//அதிலும் ஒரு தடவை ஒரு பெண் பாடிக்கொண்டு வந்த மாமன் ஒரு நா, மல்லியப்பூ கொடுத்தான் என்ற பாட்டு, அப்படியே கம்பார்ட்மெண்டே ஆடிப்போச்சு. //

சில‌ நேர‌ங்க‌ள்ல ந‌ம்ம‌ சிச்சுவேச‌னுக்கு த‌குந்த‌ மாதிரி யாராவ‌து பார்வைய‌ற்ற பிச்சைக்கார‌ங‌க் டைமிங் பாட்டு பாடி க‌ல‌ங்க‌டிக்க‌ வைச்சுருவாங்க‌...

ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ள் த‌னி சுக‌ம்.....

Thamira said...

எப்டிங்க இப்டி? காமெடி அள்ளுது..

நர்சிம் said...

//உங்களுக்கு கடைசி பென்ச் ஆண்ட்டிகள பத்தி தெரியாது போல//

?.. நல்லா எழுதி இருக்கீங்க.

pudugaithendral said...

இந்தப் கடைசி சீட் பெண்களை பார்க்கும்போது உண்மையில் இவர்கள்தான் வாழ்க்கையை வாழப்பிறந்தவர்களோ என்று கூட தோன்றும். அந்தளவுக்கு பேச்சும், சிரிப்பும் பின்னிப் பிடலெடுத்துக்கொண்டு வருவார்கள்.சிலர் கோரஸாக சில பக்திப்பாடல்களை பாடிக்கொண்டு வருவார்கள்.//

me too :))))). மும்பை டிரையினில் நான் அடிச்ச லூட்டிகள் பதிவு போட்டிருக்கேன். அந்த ஞாபகத்தை மறுபடியும் தந்தது இந்த பதிவு

ஆகாய நதி said...

நிறைய மேட்டர், சிரிப்பு, உண்ர்ச்சி என ஒரு நவரசப் பதிவு! :)

மணிநரேன் said...

இரயில் பயணங்கள் அளிக்கும் மகிழ்ச்சியும் அனுபவமுமே அலாதிதான்.

அமுதா said...

/*நம்மள நாம சந்தோஷமா வெச்சுக்கலன்னாலும், பிறரின் சந்தோஷம் நம்மள தொத்திக்கொள்ளும் அந்த சில கணங்களாவது நாம சந்தோஷமா இருப்போம். */
ஆமாம்.
சுவாரசியமான பயணங்கள்...

அன்புடன் அருணா said...

//நம்மள நாம சந்தோஷமா வெச்சுக்கலன்னாலும், பிறரின் சந்தோஷம் நம்மள தொத்திக்கொள்ளும் அந்த சில கணங்களாவது நாம சந்தோஷமா இருப்போம்//

உண்மை...உண்மை!!!!
அன்புடன் அருணா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஆகாய நதி said...

நிறைய மேட்டர், சிரிப்பு, உண்ர்ச்சி என ஒரு நவரசப் பதிவு! :)//
ரிப்பீட்டே..:)

சந்தனமுல்லை said...

உங்களுக்கும் அப்படி ஒரு க்ரூப் அமைஞ்சுஇருந்தா அதுக்கு தலைவியே நீங்கதான் அமித்து அமமா! நல்ல் பொண்ணு வேஷமெல்லாம் ஏன் போடறீங்க...;-)

சந்தனமுல்லை said...

//(ஸ்கூல்ல ஆரம்பிச்சு, ட்ரெயின் வரைக்கும், இந்த கடைசி பென்ச் தொல்லை தாங்கமுடியலப்பா!)//

மேடம் நீங்க எந்த பெஞ்சு? படிப்ஸா நீங்க..ஆகா!

நல்ல காமெடியா போய்ட்டு இருக்கும்போது எதுக்கு மனசை பிழியற வேலை?!! :-))

நசரேயன் said...

நல்லா இருக்கு.. நேரிலே பார்த்த உணர்வு பதிவின் எழுத்துகளில்

தாரணி பிரியா said...

ஆஹா தினமும் டிரைனில் போகறவங்களா நீங்க குடுத்து வெச்சவங்கப்பா :)

லாஸ்ட் பென்ச் டெரர்ஸ் :)

//நம்மள நாம சந்தோஷமா வெச்சுக்கலன்னாலும், பிறரின் சந்தோஷம் நம்மள தொத்திக்கொள்ளும் அந்த சில கணங்களாவது நாம சந்தோஷமா இருப்போம்.//

சூப்பர் அமித்து அம்மா :).

ஜீவா said...

நம்மள நாம சந்தோஷமா வெச்சுக்கலன்னாலும், பிறரின் சந்தோஷம் நம்மள தொத்திக்கொள்ளும் அந்த சில கணங்களாவது நாம சந்தோஷமா இருப்போம்.
//


அட்டகாசம் போங்க அமித்து அம்மா . :)

"உழவன்" "Uzhavan" said...

//சில சமயம் ட்ரெயின விட்டுருவோமோ என்ற பரபரப்பில் ஏதாவது ஒன்று, இரண்டு ஆண்கள் ஏறிவிட்டால் அவ்ளோதான். //

எனக்கும் இந்த அனுபவம் ஒருமுறை ஏற்பட்டது. ஆனால் எறங்குப்பா என எந்தக் கோரஸ்குரலும் எழவில்லை. (ஒருவேளை ஹீரோ லுக்கில இருந்தா எறங்கச் சொல்லமட்டாங்களோ .. ஹி ஹி :-) )

இந்த ரயில் அனுபவத்தை நானும் இப்போது மிஸ் பண்ணுறேன். டூ வீலர் வாங்குவதற்கு முன்பாக, நான் தினமும் பயணித்த கோடம்பாக்கம் டூ கிண்டி பயணம் மறக்க முடியாதது. திருமணத்திற்குப் பின் முதன்முதலாக மனைவியோடு இந்த வழியாகப் பயணித்தபோது, இதுதான் வழக்கமாக நான் ஏறுவதற்கு நிற்குமிடம், இது இறங்குமிடம்..... இப்படி பல நினைவுகளைச் சொன்னதும் இப்போது இதைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை, பாட்டுப்பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென தன் சட்டைப்பையிலிருந்த மொபைலை எடுத்து, நான் சைதாப்பேட்டையில நிக்குறேன்.. நீ அங்கே வா என்று சொல்லிவிட்டு சைதையில் இறங்கிவிட்டார். இவரது கையில் மொபைலா என ஆச்சர்யமாக எல்லோரும் பார்த்தார்கள் (அப்ப ரிலையன்சு மொபைல் வந்து கலக்குன நேரம் என நினைக்கிறேன்). அப்போது என்னிடத்தில் மொபைல் இல்லை :-)

பிச்சை எடுக்காமல் உழைத்து சாப்பிடவேண்டும் என்கிற நோக்கில், கண் தெரியாத பலர் ஏதேனும் விற்றுக்கொண்டு வருவார்கள். எனக்குத் தேவையோ இல்லையோ பெரும்பாலும் அவர்களிடம்தான் பேரிச்சம்பழம், பட்ஸ்... இப்படி எதையாவது வாங்கிய ஞாபகங்கள்...

கையில் வயலின் போன்று ஒன்றை வைத்துக்கொண்டு (அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை) ஒரு இஸ்லாமியர் ஒருவர் டொய்ங்.. டொய்ங்க் என்று வாசித்துக்கொண்டே வருவார். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்..

இப்பட் நிறைய இருக்கு அமித்துமா.. ம்ம்ம்.. ரயில் பயணத்தை அனுபவிங்க :-)

மேடேஸ்வரன் said...

conveyed message was good

மேடேஸ்வரன் said...

conveyed message was good

குடந்தை அன்புமணி said...

ஆண்கள் கம்பார்ட்மெண்டிலும் இதே கதைதான். அதிலும் தாம்பரத்தில் குரூப்பாக ஏறுபவர்கள் அடுத்தடுத்த ஸ்டேசன்களில் ஏறுபவர்களுக்கு சீட்போட்டு வைத்து இல்லாத இம்சையும் தருவார்கள். இங்கும் ஒரு பஜனை கோஸ்டி உண்டு. பல்லாவரத்தில் ஆரம்பித்து எழும்பூர்வரை அவர்களின் கானமழை தொடரும்.

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் ட்ரெயின் ஆசையக் கிளப்பிட்டீங்களே அமித்து அம்மா.

தமயந்தி said...

amiruthavin amma.. unga varthai prayoogayangal miga azagu

தமயந்தி said...

amiruthavin amma.. unga varthai prayoogayangal miga azagu

கிருத்திகா ஸ்ரீதர் said...

அப்படியே நேர்ல பாக்கற மாதிரி இருக்கு....:)