06 March 2009

போராடும் பெண்மணிகள்

ஆணாதிக்க சமூகத்தில் புகுந்து புறப்பட்டு சாதித்தோம் என்றே அனேகப் பெண்களின் சாதனை விமர்சிக்கப்படுகிறது. ஆனால் சத்தமே இல்லாமல், முக்கியமாய் ஆணின் துணையே இல்லாமல் வாழ்ந்து, தன் பிள்ளைகளை சரி வர வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, இன்னும் இன்ன பிற விளைவுகளை எல்லாம் சந்தித்த பெண்களைப் பற்றி பேசப்படும் பதிவுதான் இது. ஆணின் துணை இல்லாமல், அவர்களாய் விவாகரத்து என்ற பேரில் விலக்கிக்கொண்டதல்ல இது.
கணவன் இறந்தோ, இல்லை ஓடிப்போயோ இப்படியான விளைவுகளால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் இன்னதென ஒரு அடையாளத்தை அமைத்துக்கொள்ள போராடும் பெண்களைப் பற்றிய பதிவே இது. சந்தேகமே இல்லாமல் இது ஒரு மகளிர் தின சிறப்புதான்.

என் பள்ளிக்கால வயதில் பார்த்த முனியம்மா - அரை டசன் பிள்ளைகள், 2 ஆண், 4 பெண், கணவன் இறந்த போது அவர்களின் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது. 2 பெண்கள் திருமண வயதில். இவர்களுக்கோ படிப்பறிவில்லை. வீட்டுக்கு வீடு பால் போட்டு, வீட்டு வேலை செய்து மட்டுமே தன் பிள்ளைகளை கரை ஏற்றினார்கள். ஒரு ஆணின் துணை எந்த இடத்திலெல்லாம் தேவையோ அந்த இடத்தையெல்லாம் தன்னை வைத்தே பூர்த்தி செய்துகொண்டார்கள். அவர்கள் மேல் முனீஸ்வரன் சாமி வரும் என்று சொல்லி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள் (!!!).

சரசக்கா - அக்காவின் தோழி, குடும்ப சண்டையின் காரணமாக பிரிந்து போன கணவர், தன் தாயிடமும், தந்தையிடமும் போய் சேர்ந்துவிட, அவர்கள் அவருக்கு 2ம் திருமணம் செய்துவைக்கும் போது, இவர்களுக்கு ஒரு வயது ஆண்குழந்தை.
இப்போது அவன் 11ம் வகுப்பு படிக்கிறான். இவரும் பகுதி நேரமாக வீட்டு வேலை செய்தே தன்னையும் தன் மகனையும் காப்பாற்றுகிறார். முழு நேரமாக ஒரு அலுவலகத்தில் காப்பி, டீ போட்டு கொடுக்கும் வேலை. தன்னை பாதுகாத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், சக குடும்ப உறுப்பினர்கள் (அண்ணன்கள், அண்ணிகள்) இவருக்கெல்லாம் உதவும் மனப்பான்மை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

லலிதாக்கா - கல்யாணம் செய்து கொள்ளும்போது இவரின் கருப்பு நிறம் தெரியாத கணவன், குழந்தை பிறந்த பின், இவரின் கருப்பு நிறம் உறுத்த கைவிடப்பட்டார். இவரும் வீட்டு வேலைதான். வீட்டு வேலை செய்தே தன் மகனுக்காக பாண்டிச்சேரியில் ஒரு சொந்த வீடு கட்டி வைத்துள்ளார். இவர் செய்த காரியம் இன்னும் எனக்கு வியப்பளிக்கும்

விதவை உதவிப்பணம் பெறுவதற்காக, விபூதி வைத்து போட்டொ எடுத்து அனுப்பி, விதவை உதவிப்பணம் பெறுகிறார். ஏங்க்கா இப்படி செய்தீங்க, ப்ரதீப் அப்பா தான் இருக்கிறாரே என்றால், அவரு இருப்பதனலா எனக்கு என்ன லாபம், அவர் இல்லையென்று சொன்னதால தானே எனக்கு கவர்ன்மெண்ட் 400 ரூபா கொடுக்குது. அது ஏதோ ஒரு செலவுக்கு ஆகுதில்லையா. இன்னவரைக்கும் அவர் எனக்கு ஒத்தை ரூபா சம்பாதித்து தரல, ஆனா உயிரோட இருக்காரு என்றார்கள்.
எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு.


என்னதான் அலுவலக உயரதிகாரியாய் இருந்தாலும், லட்சங்களில் சம்பாதித்தாலும் ஒரு பெண் தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும் இடம் குடும்பம், குழந்தை, இதையிரண்டும் இவர்கள் மிகச்சரியாக செய்தார்கள் ஆண் துணையற்று.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இன்னும் ஏராளமனவர்களைப் பற்றி.

பெண்கள் தின வாழ்த்துக்கள் என்று இவர்களிடம் சொன்னால் என்னாதுடி, அன்னைக்கு டி.வில படம் போடுவானாடி என்று கேட்டுட்டு போகும் இவர்களை, என்னால் ஒரு பதிவிட்டு வாழ்த்த முடியும் என்பதே பெரும் பாக்கியம்.
வாழ்த்துக்கள் அம்மா, அக்காஸ். நீங்களும் வாழ்த்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு உலக மகளிருக்கும், உங்கள் வீட்டு மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

30 comments:

நட்புடன் ஜமால் said...

பெண்மனின்னாலே

போராட்டம்தான் போல ...

நட்புடன் ஜமால் said...

அவர்கள் மேல் முனீஸ்வரன் சாமி வரும் என்று சொல்லி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள் (!!!).\\

ஓஹ்! இது தான் மேட்டரா!

நட்புடன் ஜமால் said...

\\வாழ்த்துக்கள் அம்மா, அக்காஸ்\\

சர்வ நிச்சியமான

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

எல்லா மகளிர்க்கும் வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

:-) நல்ல பதிவு அமித்து அம்மா! மிக இயல்பாய் பலரது வாழ்க்கையை சொல்லிவிட்டீர்கள்!

anujanya said...

நல்ல பதிவு. அவர்களின் நெஞ்சுரத்திற்கு வணக்கங்கள். உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள். (ஆமாம், ஞாயிறு தானே மகளிர் தினம்?)

அனுஜன்யா

www.narsim.in said...

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Anonymous said...

"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/

RAMYA said...

மகளிர் தின வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

எல்லாருக்கும் உங்கள் வலையில் நான் வாழ்த்து சொல்லிக்கறேன்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

அப்பாவி முரு said...

\\வாழ்த்துக்கள் அம்மா, அக்காஸ்\\அன்பு, பாசம், ... என சராசரி வேதைனையான வாழ்க்கையிலும், முனியம்மா, சரசக்கா, லலிதாக்கா போல சாதனையான வாழ்க்கயிலும், பெண்கள் இருவேறு நீச்சத்திலும் சாதிக்ககூடிய மனதினை இயல்பாக படைத்தவர்கள்.

சந்தர்ப்பத்தையும், சூழ்நிலையையும் ஒரு பெண் எவ்வாறு கையாளுகிறார் என்பதிலேயே பெண் எந்த நீச்சத்தை அடைகிறார் என்பதிருக்கும்.

நல்ல பதிவு வாழ்த்துக்கள் அ. அம்மா

குடந்தை அன்புமணி said...

பூந்தோட்டமா வாழ்க்கை போராட்டமே வாழ்க்கை என்று வைரமுத்து சொல்வார். உண்மைதான். வாழ்க்கையில் போராடி வெற்றி(?)பெற்ற அந்த மகளிர்க்கு ஒரு ராயல் சல்யூட்! (என் வலையில் மகளிர்தின கவிதையும், கூடவே கொஞ்சம் குசும்பும் பதிவு...)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு அம்மா!

அமுதா said...

நிச்சயம் வாழ்த்துவோம். வாழ்த்துகள்

Vidhya Chandrasekaran said...

மகளிர் தின வாழ்த்துக்கள்:)

Karthik said...

பெண்கள் தின வாழ்த்துக்கள்..!

இராகவன் நைஜிரியா said...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

// என்னால் ஒரு பதிவிட்டு வாழ்த்த முடியும் என்பதே பெரும் பாக்கியம்.
வாழ்த்துக்கள் அம்மா, அக்காஸ். //

அந்த அம்மா, அக்காக்களையும், இவர்களைப் போல அங்கு அங்கு இருக்கும் எண்ணற்ற அக்காக்களையும், அவர்களின் மனதிடத்திற்க்காகவும், வணங்குகின்

ராம்.CM said...

அனைத்து பெண்மணிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

- இரவீ - said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

அருமையான கண்ணோட்டம்.
மிக்கநன்றி .

sakthi said...

என்னதான் அலுவலக உயரதிகாரியாய் இருந்தாலும், லட்சங்களில் சம்பாதித்தாலும் ஒரு பெண் தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும் இடம் குடும்பம், குழந்தை
100%true

sakthi said...

என்னதான் அலுவலக உயரதிகாரியாய் இருந்தாலும், லட்சங்களில் சம்பாதித்தாலும் ஒரு பெண் தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும் இடம் குடும்பம், குழந்தை
100%true

தமிழ் அமுதன் said...

நானும் சிலரை பார்த்து இருக்கிறேன்.ஆண் துணை இல்லாமல்
குழந்தைகளை ஆளாக்கும் பெண்மணிகளை.இவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில்
வெற்றி பெறுகிறார்கள்.பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்து விடுகிறார்கள். வெற்றிபெற அவர்கள் மேற்கொள்ளும் உறுதி,உழைப்பு,தியாகம், ஆகியவற்றை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Unknown said...

கட்டாயம் வாழ்த்த வேண்டும். உங்கள் நல்லெண்ணம் வாழ்த்தப்பட வேண்டிய ஒன்று அமித்து அம்மா. நம் குழந்தைகளுக்கு மிகப் சிறந்த பரிசாக நாம் தர வேண்டியது உயரிய சிந்தனைகளும், நல்லெண்ணங்களூம் தான். நீங்கள் இவ்விதயத்தில் தங்கம், அமித்துவிற்கு உங்கள் குணம் அப்படியே போய் சேர்ந்துவிடும் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும் தோழி. மகளிர் தின வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள அந்தத் தங்க மகளிருக்கும்!

SK said...

நச் :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நீங்கள் வாழ்த்தியவர்களை விகடனும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது ‘குட் ப்ளாக்ஸ்’ஸில்.

மகளிர்தின வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

sindhusubash said...

பெண்களின் உணர்வுக்கு என்றும் போராட்டம் தானே!! ஆனா ஜெயிக்கணும் என்ற உறுதி எல்லா பெண்களுக்கும் உண்டு.

மகளிர் தின வாழ்த்துகள்

Deepa said...

நல்ல பதிவு. நீங்கள் மனிதர்களைப் படிக்கும் விதமும் படைக்கும் விதமும் அழகு!

தமிழன்-கறுப்பி... said...

மகளிர்தின வாழ்த்துக்கள்...!

Thamira said...

தரமான பதிவு