09 January 2009

ச்சுக்கா க்கா... ஆலி,

அமித்துவுக்கு இப்போது விளம்பரங்கள் பார்க்க பிடிக்கிறது,
"MOTO LIFE Engine oil" விசிலடிக்கும் தாத்தா அவளை கவர்ந்துவிட்டார் போலும், கைதட்டி வரவேற்கிறாள்.
அப்புறம் குழந்தைகள் வரும் விளம்பரங்களும் அவளை கவருகின்றன, கண் சிமிட்டாமல் பார்க்கிறாள்.
சில சமயம், குழந்தைகள் அழுவது போல் சீரியலிலோ, படத்திலோ ஏதோ காட்சி ஓடினால், அதைப் பார்க்காமலே, தானும் அழுவதைப் போல மிமிக்ரி செய்கிறாள். நாம் கவனித்தால் சிரிக்கிறாள். வர்ஷினி எப்படி அழுவா, என்றாள் அழுது காண்பித்து விட்டு சிரிக்கிறாள்.
அதே போல் யாராவது இருமினாலோ, தொண்டையை கனைத்தாலோ, அதே போல் தானும் செய்கிறாள், அவர்களைப் பார்க்காமலே.

கழுத்தை கட்டிப்பிடித்து தூங்குகிறாள், முகத்தோடு முகம் வைத்து, ஏதேதோ கொஞ்சுகிறாள். முத்தம் கொடுப்பது போல், கடித்து வைத்துவிட்டு, நாம் கத்தினால், சிரிக்கிறாள்.
ஏதாவது பொம்மையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, ஊ, ஊ என்று நம்மை பயமுறுத்துகிறாள். நாம் பயப்படுவது போல் ஆக்‌ஷன் செய்தால், அவளுக்கும் இன்னமும் மகிழ்ச்சியாகிவிடுகிறது.

அவளுக்கென்று வாங்கிய குட்டி சைக்கிளின் மீது ஏதாவது துணி வைத்திருந்தால், தூக்கி தூர போட்டுவிடுகிறாள். ரொம்ப பத்திரமா பாதுகாத்து வைத்துக்கொள்வாள் போல் அவளின் பொருட்களை.

A,B,C,D என்று பட்டன் ப்ரஸ் செய்தால், மியூசிக்கோடு ஒலிக்கும் ஒரு பியானோ வடிவ pad இருக்கிறது. அதை வைத்து சொல்லிக்கொடுத்தால், அந்த பட்டனை மட்டும் அழுத்தி விட்டு ஓய்ந்துவிடுகிறாள்.
ஆனால் நாம் ஏ, பி, சி, டி, pad எங்கே, என்றால் அதை தேடி எடுத்து தருகிறாள்.

ரோடில் கார் செல்லும் போது கார் என்று சொல்லி விரல் நீட்டுகிறாள். கார் என்னும் வார்த்தை ஈஸியா வாயில் நுழைகிறது. (தாயுமானவர் இதை நோட் பண்ணாரான்னு தெரியலை)

பொங்கலுக்கு ட்ரஸ் வேணுமா, வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாள், புரிந்து சொன்னாளா, புரியாமல் சொன்னாளா தெரியவில்லை, தாயுமானவர் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு, அவ வேணாம்னாலும் நீ விடமாட்டியே என்ற வாசகங்களோடு.

ஏதோ தலையை ஆட்டிக்கொண்டே, ச்சுக்கா க்கா... ஆலி, த்த்துக் கோழீஈஈஈ, ஆஆஆ என்று சொல்லும்போது, ஒன்றும் புரியா பின் நவீனத்துவ கவிதை மாதிரியே இருக்கிறது.
வழக்கம் போல சிரித்து வைக்கிறோம், அமித்துவின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் எல்லாவற்றிற்கும்.

இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!

20 comments:

அ.மு.செய்யது said...

//இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!//

சந்தேகமே இல்லை...
குழ‌ந்தைகளை ர‌சிப்ப‌தும் அவ‌ர்க‌ளின் வாய்மொழிக் க‌விதைக‌ளுக்கு ந‌ம் க‌ண்க‌ளாலும் முத்த‌ங்க‌ளாலும் பின்னூட்ட‌ம் இடுவ‌தும் என்றுமே ச‌லிப்பை ஏற்ப‌டுத்துவ‌தில்லை.

Thamira said...

வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!//

ச‌ர்வ‌ நிச்ச‌ய‌மாக‌.!

ஆயில்யன் said...

//ரோடில் கார் செல்லும் போது கார் என்று சொல்லி விரல் நீட்டுகிறாள். கார் என்னும் வார்த்தை ஈஸியா வாயில் நுழைகிறது. (தாயுமானவர் இதை நோட் பண்ணாரான்னு தெரியலை)///

அமித்து நல்லா பழக்கிட்டீங்க போல :)))))

ஆயில்யன் said...

//வந்தது வந்துட்டீங்க, ஏதோ உங்க மனசுல நெனச்சத சொல்லிட்டுப்போங்க.//


நான் சொல்லிட்டேன்!

நட்புடன் ஜமால் said...

\\A,B,C,D என்று பட்டன் ப்ரஸ் செய்தால், மியூசிக்கோடு ஒலிக்கும் ஒரு பியானோ வடிவ pad இருக்கிறது. அதை வைத்து சொல்லிக்கொடுத்தால், அந்த பட்டனை மட்டும் அழுத்தி விட்டு ஓய்ந்துவிடுகிறாள்.
ஆனால் நாம் ஏ, பி, சி, டி, pad எங்கே, என்றால் அதை தேடி எடுத்து தருகிறாள்.\\

நான் வளர்கிறேனே மம்மி ...

நட்புடன் ஜமால் said...

\\தாயுமானவர் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு, அவ வேணாம்னாலும் நீ விடமாட்டியே என்ற வாசகங்களோடு.\\

ஆஹா ஆஹா ஆஹா

இப்படி ஒரு வழி இருக்கா

தங்கமணிகள் கவணிக்கவும்

ரங்கமணிகள் இதை படிக்காமல் தடுக்கவும்...

நட்புடன் ஜமால் said...

\\இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!\\

உண்மையே ...

ரவி said...

//இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!//

சர்வ நிச்சயமா !!

நசரேயன் said...

/*ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!*/
உண்மை, ரசித்து எழுதி இருக்கிறீர்கள்

தமிழ் அமுதன் said...

////இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!///ஆமாம்! அதோட இந்த காலகட்டம் தான் வாழ்க்கையின் ''பொற்காலம்''

நல்லா சந்தோசமா அனுபவிங்க!

(இந்த பொற்காலம் வாழ்க்கை முழுவதும் நீடிக்க ஒருவழி இருக்கு எப்படின்னு
சொல்லுங்க பார்ப்போம்)

அமுதா said...

/*ச்சுக்கா க்கா... ஆலி, த்த்துக் கோழீஈஈஈ, ஆஆஆ என்று சொல்லும்போது, ...*/
ஒவ்வொரு சொல்லும் கவிதை...


/*இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!*/
ஆமாம்... கடவுள் தந்த வரம்.

Dhiyana said...

//கழுத்தை கட்டிப்பிடித்து தூங்குகிறாள், முகத்தோடு முகம் வைத்து, ஏதேதோ கொஞ்சுகிறாள். முத்தம் கொடுப்பது போல், கடித்து வைத்துவிட்டு, நாம் கத்தினால், சிரிக்கிறாள்.//

அழகு..

Karthik said...

ச்ச்சோ ச்ச்வீட்!
:)

Unknown said...

அமித்துக் குட்டி வளர்கிறாள்..
"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."
என்ற குறள் ஞாபகம் வருகிறது அமித்து அம்மா. நமக்குள் ஆச்சரியமான ஒற்றுமைகள் சில உள்ளன..அதில் ஒன்று நீங்கள் தாயுமானவர் என்று விளிப்பது. சராவை (சரவணன் கணவர்) நான் பல தடவை நான் அப்படி சொல்லியிருக்கிறேன்...கடுமையான கோடை இரவில் கரண்ட் கட் ஆகிவிட்டால், குழந்தைகளுக்கு இரவெல்லாம் விழித்து விசிறி விடுவார்.(நெல்லுக்கு போவது புல்லுக்கும் போகும் அல்லவா...நான் கொஞ்ச நேரம் அக்காற்றை அனுபவித்துவிட்டு பாவம் கைவலிக்கும் என நாங்கள் மாற்றி மாற்றி வீசுக் கொண்டிருப்போம்...)..இன்னும் போகப் போக பாருங்கள் அமித்துவின் சேட்டைகள் என்று நீங்கள் தனி வலைத்தளம் ஆரம்பிக்கவேண்டியிருக்கும்...வாழ்த்துக்கள்..உங்களுக்கும் உங்கள் அமித்துவிற்கும்...அமித்துவின் தாயுமானவருக்கும்...

குடுகுடுப்பை said...

உங்க வீட்ல ஒருத்தருக்கு விருது கொடுத்திருக்கேன் வந்து பாருங்க

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு அமித்து அம்மா! விளம்பரங்களின் இசையும் காட்சி அமைப்ப்புகளும் குழந்தைகளை எளிதில் கவர்ந்துவிடும்!

//ஏதாவது பொம்மையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, ஊ, ஊ என்று நம்மை பயமுறுத்துகிறாள். //
:-)))


//நாம் பயப்படுவது போல் ஆக்‌ஷன் செய்தால், அவளுக்கும் இன்னமும் மகிழ்ச்சியாகிவிடுகிறது.
//

உன்னத தருணங்கள்!

சந்தனமுல்லை said...

//இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!//

:-)

சந்தனமுல்லை said...

//இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!//

:-)

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
//ரோடில் கார் செல்லும் போது கார் என்று சொல்லி விரல் நீட்டுகிறாள். கார் என்னும் வார்த்தை ஈஸியா வாயில் நுழைகிறது. (தாயுமானவர் இதை நோட் பண்ணாரான்னு தெரியலை)///

அமித்து நல்லா பழக்கிட்டீங்க போல :)))))
//

ரிப்பீட்டு!

சென்ஷி said...

//ஏதோ தலையை ஆட்டிக்கொண்டே, ச்சுக்கா க்கா... ஆலி, த்த்துக் கோழீஈஈஈ, ஆஆஆ என்று சொல்லும்போது, ஒன்றும் புரியா பின் நவீனத்துவ கவிதை மாதிரியே இருக்கிறது.
வழக்கம் போல சிரித்து வைக்கிறோம், அமித்துவின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் எல்லாவற்றிற்கும்.//

:-)))


//இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!//

கலக்கல் :-))