வாங்கிவிட்டீர்களா..................... குங்க்................குமம்..
அப்ப்டீன்ற கதையா ஆகிப்போச்சு, ரெண்டாயிரம் ரூபாயும்.
அரசியல்வாதிங்கதான் ஸ்டண்ட் அடிப்பாங்களா, நாங்களும் அடிப்போம்ல.
என்னாது உங்க தெருவுல 2000ரூபா கொடுத்துட்டாங்களா, பாரேன் இன்னும் வரல எங்க தெரு பக்கமெல்லாம்.
நிஷா வந்த சுவடு தெரியாம ஓடிப்போச்சு, பாதிக்கப்பட்டவங்களும் அத மறந்து வழக்கம்போல இயல்பு வாழ்க்கைக்கு வந்தாச்சு.
ஆனா இந்த 2000 மறுபடியும் உஷா ச்சே நிஷாவை உண்டுபண்ணிக்கிட்டிருக்கு.
2000 வரலியா, வா உடன்பிறப்பே மறியல் செய்யலாம். ம், இதுதாங்க இப்ப நம்ம பொதுஜனம் கத்துக்கிட்ட புது டிரெண்டு. (ஐடியா உபயம் : அந்தத் தெருவில் குடியிருக்கும் உ.ப.சே, ம.ப.செ. , ம.பொ .........)
அப்ப்டீன்ற கதையா ஆகிப்போச்சு, ரெண்டாயிரம் ரூபாயும்.
அரசியல்வாதிங்கதான் ஸ்டண்ட் அடிப்பாங்களா, நாங்களும் அடிப்போம்ல.
என்னாது உங்க தெருவுல 2000ரூபா கொடுத்துட்டாங்களா, பாரேன் இன்னும் வரல எங்க தெரு பக்கமெல்லாம்.
நிஷா வந்த சுவடு தெரியாம ஓடிப்போச்சு, பாதிக்கப்பட்டவங்களும் அத மறந்து வழக்கம்போல இயல்பு வாழ்க்கைக்கு வந்தாச்சு.
ஆனா இந்த 2000 மறுபடியும் உஷா ச்சே நிஷாவை உண்டுபண்ணிக்கிட்டிருக்கு.
2000 வரலியா, வா உடன்பிறப்பே மறியல் செய்யலாம். ம், இதுதாங்க இப்ப நம்ம பொதுஜனம் கத்துக்கிட்ட புது டிரெண்டு. (ஐடியா உபயம் : அந்தத் தெருவில் குடியிருக்கும் உ.ப.சே, ம.ப.செ. , ம.பொ .........)
தெருவுல, கொஞ்சம் சர்த்தார் புர்த்தாரா (அர்த்தம் தெரியாது, ஆனா புழக்கத்திலிருக்கும் சென்னை பாஷை) இருக்கும் பெண்களெல்லாம் ஒன்று கூடி, மெயின் ரோட்டில் முக்கியமாக அந்த ரோடு பஸ் ரூட்டாக இருக்கவேண்டும், அங்கே போய் உட்கார வேண்டும்.
கோஷம் போடவேண்டும், கொஞ்ச நேரத்தில் போலிஸ் வரும், கூடவே அந்த ஏரியா கவுன்சிலர், இன்னும் சில கழக உடன்பிறப்புக்கள் எல்லாம் வந்து அவர்க்ளை சமாதானப்படுத்தி (!?!) உங்களுக்கு 2000 ரூபாய் விரைவில் தர ஆவன செய்வார்கள்.
கொஞ்சம் வெவரமான ஏரியாவா இருந்தா, ஜெயா, சன் (இப்ப வராது), மக்கள், டி.விக்காரர்கள் கேமிராவும், மைக்கும் சகிதமாய் வந்துவிடுவார்கள்.
அப்புறமென்ன வாயில் வந்ததையெல்லாம் மைக்கில் முன்னால் உளறலாம்.
இதில ஏரியா லேடிஸ்க்கு கொஞ்சம் பெருமை வேற, ஏய் என்னை ஜெயாவுல காமிச்சாங்களே, நீ பார்த்தியா. அப்டியா, எப்போ, சொல்லியிருக்கக்கூடாது, பாத்துருப்பேனே,
அட, அதெத்தான் திரும்பி திரும்பி போட்டுக்குனு இருப்பானே அந்த டி.விக்காரன், போய் பாரு இடையில் இன்னொரு பெரிசு.
இதுல இன்னொன்னும் இருக்கு, அதாங்க கமிஷன், ம் 2000 ரூபாய்க்கு 500 ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம் கழக உடன்பிறப்புக்கள்.
நிஷாவில் இழக்காதவர்களுக்கு இந்த 2000 ரூபாய் இனாம்.
நிஷாவால் இழந்தவர்களுக்கோ இந்த 2000 ரூபாய் வயிற்றெரிச்சல்.
பாதிப்போ, பாதிப்பு இல்லையோ 2000 ரூபாய் கிடைத்துவிடும்.
தேவை: உங்களிடம் ஒரு ரேஷன்கார்டு
ம், பணம் காசுக்குக்கூட மதிப்பில்லாம போச்சு, இந்த பாழாப்போன மனுஷப்பய ஊருல.
23 comments:
///2000 வரலியா, வா உடன்பிறப்பே மறியல் செய்யலாம். ம், இதுதாங்க இப்ப நம்ம பொதுஜனம் கத்துக்கிட்ட புது டிரெண்டு. (ஐடியா உபயம் : அந்தத் தெருவில் குடியிருக்கும் ///
அட ஏங்க நீங்க வேற!
இங்க கிராமத்தில் எல்லாம் விளையாத
நிலத்தை நாலு சொசைட்டியில் காட்டி
நாலு தடவை பணம் வாங்கிட்டாங்க!!!
இப்படி இனாம் வாங்க சென்று உயிரிழந்த பழைய சம்பவம் தொடராவிட்டால் சரி.
\\தேவை: உங்களிடம் ஒரு ரேஷன்கார்டு\\
இது இல்லீங்களே ...
உங்க உ.ப.சே, ம.ப.செ., ... இவர்கள்ட்ட சொல்லி ஏதேனும் வாய்ப்பு இருக்குங்களா ...
hmm...onnum solrathuku illai!
//நிஷாவில் இழக்காதவர்களுக்கு இந்த 2000 ரூபாய் இனாம்.
நிஷாவால் இழந்தவர்களுக்கோ இந்த 2000 ரூபாய் வயிற்றெரிச்சல்.
பாதிப்போ, பாதிப்பு இல்லையோ 2000 ரூபாய் கிடைத்துவிடும்.//
500 ரூபாய் குறைவா.
இழக்காதவங்களுக்கு பரவாயில்லை. அது லாப பணம் நிஜமாவே இழப்பு ஏற்பட்டு இருப்பவங்களுக்கு இந்த 2000 போதுமா? இந்த பணத்தை வெச்சு என்ன செய்ய முடியும் எனக்கு எதுவுமே புரியலைங்க.
//ஜெயா, சன் (இப்ப வராது), மக்கள், டி.விக்காரர்கள் கேமிராவும், மைக்கும் சகிதமாய் வந்துவிடுவார்கள்//
ரசிச்சு சிரிச்சேன். நம்மளை எல்லாம் கோமாளிகளாய் நினைச்சுகிட்டு இருக்கிற கழக டி.விகாரங்க ஆச்சே.
//பணம் காசுக்குக்கூட மதிப்பில்லாம போச்சு, இந்த பாழாப்போன மனுஷப்பய ஊருல.//
இதுக்கு :( இந்த மாதிரி போடறதை தவிர என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியலை
ஆனாங்க ரேஷன் கார்டு வாங்கறதுதான் உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான காரியம். புதிதா திருமணம் ஆன என் தங்கைக்கு கார்டு வாங்க இந்த ரெண்டு மாசமா அலையோ அலைன்னு அலைஞ்சுகிட்டு இருக்கேன் :(
நம்ம மக்கள் 2000 ரூபாய்க்கு என்னவெல்லாம் பண்றாங்க.. ஹ்ம்ம்.. ஒன்னும் சொல்றதுக்கில்ல!!
ஆனா, இவங்க இப்படியெல்லாம் போராடாம இருந்தா 500 கமிஷன் அடிக்கற உடன்பிறப்புக்கள் மொத்தமா 2000 மும் அடிச்சிடுவாங்க.. சரிதானே?
பாதிக்க பட்ட மக்களுக்கு பணம் கிடைக்கிறது
ஒரு பக்கம் இருக்க! நம்ம கழக உடன் பிறப்புக்களுக்கு
ஜாக்பாட் அடிச்சுருக்கு பாருங்க! இந்த அட்ரஸ் மாறின ரேசன் கார்டுக்கான
பணத்த ஒரே அமுக்கா அமுக்கிடுறாங்க ஆளாளுக்கு பங்கு போட்டு பிரிச்சுகிறாங்க
நல்ல வேட்டைதான்!
//சன் (இப்ப வராது)// நல்ல நக்கல்!!
மக்களின் ஏமாளித்தனமும் புத்திசாலித்தனமும் கலந்த பதிவு!!!!
அச்சச்சோ...இதெல்லாம் கூட நடக்குதா????ம்ம்ம்ம் என்னத்தைச் சொல்ல?
அன்புடன் அருணா
/*ம், பணம் காசுக்குக்கூட மதிப்பில்லாம போச்சு, இந்த பாழாப்போன மனுஷப்பய ஊருல. */
:-((
//இந்த 2000 மறுபடியும் உஷா ச்சே நிஷாவை உண்டுபண்ணிக்கிட்டிருக்கு//
ஆகா...!
//2000 ரூபாய்க்கு 500 ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம் கழக உடன்பிறப்புக்கள்.//
:(
what happened?
is it?
no tension..
cool down..
be happy...
இது கால காலமா நடந்துகிட்டு வர்ற ஒரு விடயம்.
:(
எல்லாத்துக்கும் காசு காசு காசு தான்
ஹும்ம். என்றைக்கு சேர வேண்டிய கைகளுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது உதவிப் பணம்:(!
சுனாமி நேரத்தில வசதியான என் ரூம் மேட், பூட்டிக் கிடந்த, உபயோகப்படுத்தாத வீட்டைக் காட்டி பணம் வாங்கினது தெரியும். என்ன சொல்ல?
SK said...
இது கால காலமா நடந்துகிட்டு வர்ற ஒரு விடயம்.
:(
எல்லாத்துக்கும் காசு காசு காசு தான்
////// ரிப்பீட்டு
ஆஹா எங்கடா அக்காவ ரொம்பா நாளாக்காணோமேன்னு பாத்தேன், இந்த பந்துக்கு போயிட்டீங்களா?
பொதுவா எலெக்சன் வந்தா எல்லாருக்கும் ரெண்டாயிரம் கொடுப்பாங்க.
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...
எங்க அம்மாவுக்கு கணிணி இயக்கத் தெரியாது.தமிழ் மட்டும் படிக்கத் தெரியும்.
நேற்றிரவு தான் உங்கள் கட்டுரையைக் கூப்பிட்டு காண்பித்தேன்.மிகவும் ரசித்து படித்தார்கள்.(அதுவும் சத்தமாக ) "ரொம்ப நல்லா எழுதிர்காங்க !!" அப்டினு கமெண்ட் வேறு.
நான் இதை படித்த போது "எங்க ஏரியா" வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் ஏற்பட்ட உயிரிழப்புதான் (சென்னையில் இங்குதான் அதிகம்) நினைவுக்கு வந்தது.
இந்த 2000ரூ பணம்,5கி அரிசிக்காக எங்களுள் நிறைய பேர் காணாமல் போனதுதான் மிச்சம்.
என்கிட்டே ரேசன் கார்டு, கடவு சீட்டு ஏதும் இல்ல, காசு கிடைக்குமா
கருவிப்பட்டையில் கோளாறு இருக்கிறது. ஒரு சின்ன வேலை செய்தால் தமிழ்மணத்தில் ஓட்டு போடமுடியும்..!!! ஹும்......
Post a Comment