18 December 2008

2002ன் கவிதைகள்

வார்த்தை சிக்கல்

வார்த்தைகளுக்கு
சிக்கெடுத்து
வாக்கியம்
அமைக்க
நேரிடும்போது

முரண்பாடாய்
மோனையும்
எதுகையும்
இணையாமல்
முட்டுகிறது

உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்

ஆத்திச்சூடி

கிட்டாதாயின்
வெட்டென
மற
ஆத்திசூடி
சொன்ன
அவ்வை
சொல்லமறந்துவிட்டாள்
மறந்து
எப்படி
இரு(ற)ந்து
வாழ்வதென.

புத்தகம்
வார்த்தைகளின்
கனத்தை விட
புத்தகங்களின்
கனம்
அதிகமாயிருக்கும்
அந்தக்
கண்காட்சியில்,

எழுத்துக்கள்
விலைமதிப்பற்றது
தானெனினும்
புரட்டிப்பார்த்து,
ஆங்காங்கே
விழி உயர்த்தி
புன்னகை புரிந்து
வாங்கலாமென
நினைக்க
நேர்கையில்

எதேச்சையாய்
பார்ப்பது போல்
விலைப்பட்டியலைப்
பிரிக்கும் விரல்கள்
விரட்டும் வறுமை
அங்கேயும்.

சிலுவை

அவசரம்
அவசரமாய்
அழகாய்
வரைந்த
நடைபாதையோர
ஏசுநாதர்

காசுக்காக
காத்திருக்க
ஆரம்பித்தபோது
தொடங்கியது
கோடை மழையின்
முதல் துளி.

இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்.

32 comments:

சந்தனமுல்லை said...

இந்த ஸ்பீடுதான் பிடிக்கும் உங்ககிட்டே!!
கவிதைகள் சூப்பர் வழக்கம்போல்!


//உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்//

அனைவருக்கும் இது நேரும்..ஆனால் கவிதையாக்க உங்களுக்குதான் வரும்!!

சந்தனமுல்லை said...

//எதேச்சையாய்
பார்ப்பது போல்
விலைப்பட்டியலைப்
பிரிக்கும் விரல்கள்//

எவ்வள்வு எளிமையா சொல்லியிருக்கீங்க..நல்ல வரிகள்! பிடிச்சது..சொன்ன் விதத்தில்!!

//இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்//

க்லிஷே....?! நல்லா படம் பிடிச்சிருக்கீங்க!

புதுகை.அப்துல்லா said...

//இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்.

//

இதுக்கு மேல அந்த வலியை எளிமையா உணர்த்த முடியாது. அருமை.

பழமைபேசி said...

தமிழே
தமிழை
ஆட்சி புரியும்
களமிது!

சொல்லே
சொல்லாய்ப்
பொழியும்
மாரியிது!!

கவியே
கவியாய்ச்
சொரியும்
கவியடையிது!!!

வாசகமே
வாசகமாய்
வாய்க்குமிந்த‌
வாசமிகு கவிதைப் பூந்தோட்டம் செழிக்க‌
வாழ்த்துக‌ள்
வாஞ்சையுட‌னே!!!!

ரவி said...

பழைய டைரி ஓப்பன் ஆகிருச்சு போல...

இனி யார் தடுத்தாலும் முடியாது :))

நல்ல கவிதைகள் !!!!!

நட்புடன் ஜமால் said...

\\வார்த்தை சிக்கல்\\

தலைப்பே கவதை சொல்கிறேதே...

நட்புடன் ஜமால் said...

\\முரண்பாடாய்
மோனையும்
எதுகையும்
இணையாமல்
முட்டுகிறது\\

எதுகையும்

மோனையும்

முரண்பாடாய் - இதையே மாற்றி

ம்ம்ம் ... அருமைங்கோ

நட்புடன் ஜமால் said...

\\உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்\\

ஃபைனல் டச் - சும்மா நச்

நட்புடன் ஜமால் said...

\\கிட்டாதாயின்
வெட்டென
மற
ஆத்திசூடி
சொன்ன
அவ்வை
சொல்லமறந்துவிட்டாள்
மறந்து
எப்படி
இரு(ற)ந்து
வாழ்வதென.\\

இத-தான்

உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்

இப்படி சொன்னீங்களோ

நட்புடன் ஜமால் said...

\\எதேச்சையாய்
பார்ப்பது போல்
விலைப்பட்டியலைப்
பிரிக்கும் விரல்கள்
விரட்டும் வறுமை
அங்கேயும்.\\

எண்ட அம்மே ஒன்னாங்கிளாஸானும் இது...


எத்தனை எத்தனை முறை இதை அனுபவித்துள்ளேன் ...

என்னை போன்ற பலர் இருக்கத்தான் செய்கின்றனர்

ராமலக்ஷ்மி said...

நான்கும் அற்புதம் அமித்து அம்மா!

//உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்//

இணையாமல் முட்டுவதற்கு என்ன ஒரு உதாரணம்!

//அவ்வை
சொல்லமறந்துவிட்டாள்
மறந்து
எப்படி
இரு(ற)ந்து
வாழ்வதென.//

ஆமாம் பாடுவோர் பாடிச் சென்று விடுகிறார். படுவோர் பாடு அவரே அறிவார்.

//விரட்டும் வறுமை
அங்கேயும்.//

கடலளவு ஆசை கற்க
விரல் தடவுது விலைப்பட்டியலை விரக்தியுடன்.

//
இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது//

அந்த சிலுவையின் கனம் வாசிப்பவர் மனத்திலும் ஏறி விடுகிறது.

வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

\\இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்.\\

ச்சே சூப்பர்ங்க ...

உள்ளம் பல நினைக்க
வார்த்தைகள்
பள்ளத்தில் விழுந்துவிடுகிறது...

அமுதா said...

ஒவ்வொன்றும் அருமை...

மிகவும் பிடித்தது...

/*இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்*/

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்குங்க..எல்லா கவிதையும் இரசிச்சு படிச்சேன்..கடைசி கவிதை அசத்தல்... எனக்கு ஒரு நிமிடம் மு.வ வின் கரித்துண்டை நினைவுப் படுத்திச் சென்றது உங்கள் கவிதை :-) பாராட்டுக்கள்!!

Vidhya Chandrasekaran said...

சூப்பர் அமித்து அம்மா. உங்கள் வரிகளைப் படிக்கும்போது கண் முன்னே காட்சிகளாய் விரிகிறது வரிகள்:)

தமிழன்-கறுப்பி... said...

நச்சுன்னு எழுதி இருக்கறிங்க...

விஜய் ஆனந்த் said...

:-)))...

நன்று!!!

தமிழ் தோழி said...

உங்கள் கவிதை அருமை

தமிழ் தோழி said...

///வார்த்தைகளுக்கு
சிக்கெடுத்து
வாக்கியம்
அமைக்க
நேரிடும்போது

முரண்பாடாய்
மோனையும்
எதுகையும்
இணையாமல்
முட்டுகிறது

உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்///

இந்த வரிகள் போல்
ஏதோ சொல்ல
நினைத்து
ஏதோ எழுதுகிறேன்.

தமிழ் தோழி said...

///புத்தகம்
வார்த்தைகளின்
கனத்தை விட
புத்தகங்களின்
கனம்
அதிகமாயிருக்கும்
அந்தக்
கண்காட்சியில்,

எழுத்துக்கள்
விலைமதிப்பற்றது
தானெனினும்
புரட்டிப்பார்த்து,
ஆங்காங்கே
விழி உயர்த்தி
புன்னகை புரிந்து
வாங்கலாமென
நினைக்க
நேர்கையில்

எதேச்சையாய்
பார்ப்பது போல்
விலைப்பட்டியலைப்
பிரிக்கும் விரல்கள்
விரட்டும் வறுமை
அங்கேயும்.///

இந்த வரிகளை படித்து
என்னையே நான்
மறந்துபோனேன்.

Poornima Saravana kumar said...

//வார்த்தைகளுக்கு
சிக்கெடுத்து
வாக்கியம்
அமைக்க
நேரிடும்போது

முரண்பாடாய்
மோனையும்
எதுகையும்
இணையாமல்
முட்டுகிறது
//

உணர்வுகளை எதார்த்தமாய் சொல்லி இருப்பது வெகு அழகு :))

Poornima Saravana kumar said...

//உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்
//

எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று:)

Jeevan said...

அழகும், அர்த்தமும் இணைந்த கவிதைகள். எனக்கு மிகவும்
பிடித்தது புத்தக கவிதை.

தமிழ் அமுதன் said...

///ஆத்திசூடி
சொன்ன
அவ்வை
சொல்லமறந்துவிட்டாள்
மறந்து
எப்படி
இரு(ற)ந்து
வாழ்வதென.///

அது பாட்டி வைத்தியம்!

இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்.

அருமை!

RAMYA said...

அமித்து அம்மா எந்த வரிகள்
தங்க வரிகள் என்று கூறட்டும் ?
அனைத்தும் உள்ளத்தை அள்ளுதே!!
உண்மையை கூறினால்
உன் எழுத்தில் என் உள்ளம்
பறிபோனதே தோழி...

RAMYA said...

//
வார்த்தைகளுக்கு
சிக்கெடுத்து
வாக்கியம்
அமைக்க
நேரிடும்போது
//

அட இங்கே தான்
எங்க அமித்து அம்மா
நிக்கறாங்க.
அருமை அருமை

RAMYA said...

//
பழமைபேசி said...
தமிழே
தமிழை
ஆட்சி புரியும்
களமிது!

சொல்லே
சொல்லாய்ப்
பொழியும்
மாரியிது!!

கவியே
கவியாய்ச்
சொரியும்
கவியடையிது!!!

வாசகமே
வாசகமாய்
வாய்க்குமிந்த‌
வாசமிகு கவிதைப் பூந்தோட்டம் செழிக்க‌
வாழ்த்துக‌ள்
வாஞ்சையுட‌னே!!!!

//

பழமை பேசி மிக அருமையாக
வாழ்த்தி இருக்காறு
மிக அருமையான
வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

நாலு முத்துக்கள் அமித்து அம்மா

//உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்
//

அசத்துறீங்க‌

//எதேச்சையாய்
பார்ப்பது போல்
விலைப்பட்டியலைப்
பிரிக்கும் விரல்கள்
விரட்டும் வறுமை
அங்கேயும்.
//

வலிகள் நிறைந்த வரிகள்.

//இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்.
//

நச் வரிகள்

எல்லாத்திலும் முடிவுகள்ல அசத்தறீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சந்தனமுல்லை said...
இந்த ஸ்பீடுதான் பிடிக்கும் உங்ககிட்டே!!
கவிதைகள் சூப்பர் வழக்கம்போல்!


//உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்//

அனைவருக்கும் இது நேரும்..ஆனால் கவிதையாக்க உங்களுக்குதான் வரும்!!

நன்றி முல்லை, பாராட்டுகளுக்கு,
இது ஒரு மாதிரியான ஊக்கப்படுத்துதலும் கூட.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி புதுகை அண்ணா

நன்றி பழமைபேசி
கவிதையாலே மறுமொழிந்த உங்களின் கவிதை அருமை.
நன்றி வாழ்த்துக்களுக்கு.

நன்றி செந்தழல் ரவி, வருகைக்கும், வாழ்த்துக்கும்.

நன்றி ஜமால்

நன்றி ராம் மேடம், மோதிரக்கையால் குட்டு வாங்கினா மாதிரி இருக்கு, நீங்க பின்னூட்டம் போடும் போது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா
நன்றி இனியவளே
நன்றி வித்யா
நன்றி தமிழன் கறுப்பி - முதல் வருகைக்கு,
நன்றி விஜய் ஆனந்த்
நன்றி தோழி, தமிழ்
நன்றி பூர்ணிமா
நன்றி ஜீவன்(ஸ்)
நன்றி ரம்யா
நன்றி தாரணி பிரியா.

தமிழ்நதி said...

"இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்."

இயேசுநாதருடன் நாங்களும் கரைகிறோம். என்ன... எனக்குப் பிடித்த வரிகள் அநேகருக்குப் பிடித்திருக்கிறது போல... வாழ்த்துக்கள்.