தூக்கு போட்டு செத்த
நாகராஜன் அண்ணா
சாவுக்கு அழவேயில்லை
ஜானகி அக்கா
மனைவியாக இருந்தபோதும்
தம் அப்பா செத்ததற்கு
அழவேயில்லை
ராணியும், ராஜேஸ்வரி அக்காவும்
எதிர்வீட்டு பெண்ணின்
அம்மா மஞ்சள் காமலையில்
செத்த போது
அந்தச் சின்னப்பெண்ணின்
அழுகையே அன்று முழுவதும்
பேச்சாக இருந்தது.
பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட
போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த
கணவனை
வசைபாடித் தீர்த்தனர் பெண்கள்
அத்தை சொன்னாள்
செத்துப்போனது
அம்மா, அப்பாவாக
இருந்தால்
இடுகாடு எடுத்துபோகும்போது
தரையில் உருண்டு
அழவேண்டுமாம்
பொறந்த பெண்கள்
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா
செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு
யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்
வந்தா, ஒக்காந்தா
ஒப்புக்கு அழுதா
அப்படின்னு
இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.
ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.
22 comments:
\\ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான். \\
நல்ல முறையில் சொல்லியிருக்கீங்க
ஒப்புக்காக அழுபவர் மத்தியில்
உண்மை அழுகையும்
மழையில் அழுபவனின் கண்ணீர் போல
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா
:(
//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்//
:-)
நச்:(
///இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.///
ஒஹோ இதான் மேட்டரா?
எங்க ஊருபக்கம் இப்படித்தான் சாவு வீடு வரை நல்லா சிரிச்சு பேசிக்கிட்டுதான் வருவாங்க. கிட்டக்க வந்தோன என்னமோ ட்ரில் மாஸ்டர் சொல்லி கொடுத்த மாதிரி
சுத்தி நின்னு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழ (?) வேண்டியது, வராத மூக்கு சளிய மல்லுகட்டி சிந்தி நல்லா சுத்தமா இருக்குற சுவத்துல தடவிட்டு,அந்தாண்ட போய்
அங்கமாக்கா பொண்ணு புருசன்கூட வாழமாட்டேன்னு சொல்லிடுசாமுல்லன்னு,
ஊர்கதை பேச வேண்டியது.
/இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்//
:(((((
நல்லா இருந்துச்சு மேடம்.. ஒப்புக்கு சொல்லல.. நிஜமாகவே நல்ல வார்த்தைகள்!
கவிதை முழுதும் யதார்த்தமான வரிகள் அருமை...
//எங்க ஊருபக்கம் இப்படித்தான் சாவு வீடு வரை நல்லா சிரிச்சு பேசிக்கிட்டுதான் வருவாங்க. கிட்டக்க வந்தோன என்னமோ ட்ரில் மாஸ்டர் சொல்லி கொடுத்த மாதிரி
சுத்தி நின்னு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழ (?) வேண்டியது, வராத மூக்கு சளிய மல்லுகட்டி சிந்தி நல்லா சுத்தமா இருக்குற சுவத்துல தடவிட்டு,அந்தாண்ட போய்
அங்கமாக்கா பொண்ணு புருசன்கூட வாழமாட்டேன்னு சொல்லிடுசாமுல்லன்னு,
ஊர்கதை பேச வேண்டியது.///
:))
// ஜீவன் said...
எங்க ஊருபக்கம் இப்படித்தான் சாவு வீடு வரை நல்லா சிரிச்சு பேசிக்கிட்டுதான் வருவாங்க. கிட்டக்க வந்தோன என்னமோ ட்ரில் மாஸ்டர் சொல்லி கொடுத்த மாதிரி
சுத்தி நின்னு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழ (?) வேண்டியது, வராத மூக்கு சளிய மல்லுகட்டி சிந்தி நல்லா சுத்தமா இருக்குற சுவத்துல தடவிட்டு,அந்தாண்ட போய்
அங்கமாக்கா பொண்ணு புருசன்கூட வாழமாட்டேன்னு சொல்லிடுசாமுல்லன்னு,
ஊர்கதை பேச வேண்டியது
//
அண்ணா எங்க ஊர் பக்கமும் இப்படி தான்:(
//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான். //
சில பேர் நம்ம வீட்டு பெருசு போன போது வந்திருக்கு அதனால நாமளும் போகனும்னு சொல்லிட்டு சாவு வீட்டு போவதை பார்திருக்கேன்..
/*ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்*/
:-((
Really Nice.
//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.//
:( இப்ப எல்லாம் எல்லா உறவுமே இப்படிதான் ஆகி போச்சுங்க
//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.
//
ம்ம் சரியா சொன்னீங்க.. இதை கண்கூடாக பார்த்து இருக்கென்
என்ன செய்வது அன்பு இல்லியே எல்லாமே போலிதான்
ம்ம்ம்ம்
/செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு
யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்/
உண்மை தான்
செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு...............
????????
இறப்புக்கு போயிட்டு கிளம்பும்போது வரேன்னு சொல்லகூடாதுன்னு ஒரு மரபு இருக்கு!!! இது உங்க பக்கம் வழக்கதில இருக்க??
வாழ்க்கையே நாடக மேடை. அதில் நாம் எல்லோரும் நடிகர்கள்.
:-)
நல்ல படைப்பு.!
இப்போழுதுதான் புரிகிறது அந்த அழுகைக்கு ஏன் ஒப்பாரி என்று பெயர் வந்ததென்று.
Post a Comment