13 February 2009

நூற்றுக்கு நூறு


நமக்கு எப்போதும் நூற்றுக்கு நூறின் மேல் ஒரு வித ஈர்ப்பு இருக்குமில்லையா !
அதுதான் கதை, மேற்கொண்டு படியுங்கள்


ஒரு சிறுவனும், சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவன் நிறைய விதவிதமான கூழாங்கற்கள் வைத்திருந்தான். சிறுமி தன்னிடம் இனிப்பு பண்டங்களை வைத்திருந்தாள். அவளிடம் வைத்திருந்த இனிப்பு பண்டங்களின் மீது ஆசை கொண்டஅச்சிறுவன், அச்சிறுமியிடம் நான் எனது கூழாங்கற்களை உனக்குத் தருகிறேன். அதற்குப் பதிலாக உன்னிடம் இருக்கும் இனிப்பை தருகிறாயா, எனக்கு சாப்பிட வேண்டும் போல இருக்கிறது என்றான்.

இதற்கு ஒப்புக்கொண்ட அச்சிறுமி தன்னிடமிருந்த அத்தனை இனிப்பு பண்டங்களையும் கொடுத்துவிட்டாள், பதிலுக்கு அச்சிறுவனும் கூழாங்கற்களை கொடுத்தான், ஆனால் மிகவும் அழகாகவும், பெரிதாகவும் இருந்த கூழாங்கற்களை அவன் தன்னிடமே மறைத்து வைத்துக்கொண்டான்

விளையாடி முடித்தபின் இருவரும் தத்தம் வீட்டுக்கு சென்றனர். அன்றைய நாளின் இரவு அச் சிறுமி நன்றாக உறங்கினாள். ஆனால் அந்தச் சிறுவனோ, அன்று நடந்த நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தான். மறைத்து வைத்த அந்த கூழாங்கல்லை பார்த்தவாறே, நாம் மறைத்தது போல, அவள் என்ன திண்பண்டத்தை நம்மிடம் கொடுக்காமல் மறைத்திருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்ததில் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

இந்தக் கதையினால் அறியப்படும் நீதி:
உன்னிடமிருக்கும் 100 சதவிகித அன்பையும் உன்னை நம்புமொருவருக்கோ, உன்னைச் சார்ந்திருப்பவருக்கோ கொடுக்க முடியாமல் போனால்,
நீ எப்போதும் அடுத்தவரின் அன்பு நம் மீது 100 சதவிகிதம் இருக்காது என்ற குறையுடனே இருப்பாய்.

இந்த நீதி காதல், நட்பு, மேலாளர் - தொழிலாளி என எல்லா உறவுகளுக்குமே பொருந்தும்.

நூற்றுக்கு நூறை கொடுங்கள் , அதையே திரும்பப் பெறுங்கள்

21 comments:

SK said...

me the first..

Happy Valentines day :) akkov

SK said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நட்புடன் ஜமால் said...

நூற்றுக்கு நூறு - நீங்க வாங்கிய மார்க்கா

நட்புடன் ஜமால் said...

நமக்கு எப்போதும் நூற்றுக்கு நூறின் மேல் ஒரு வித ஈர்ப்பு இருக்குமில்லையா !\\

உண்மையே ...

Thamira said...

அழகான கதை.. இப்போதான் எங்கியோ.. படிச்சா மாதிரி ஞாபகம்.!

நட்புடன் ஜமால் said...

\\நூற்றுக்கு நூறை கொடுங்கள் , அதையே திரும்பப் பெறுங்கள்\\

அருமை.

கொடுங்கள் கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள்

திரும்ப வராவிட்டாலும் சரி ...

அமுதா said...

/*இந்த நீதி காதல், நட்பு, மேலாளர் - தொழிலாளி என எல்லா உறவுகளுக்குமே பொருந்தும்.*/
நூற்றுக்கு நூறு சரி

இராகவன் நைஜிரியா said...

Me the first?

இராகவன் நைஜிரியா said...

ஆண்டவரே... இந்த பதிவில இதுவரைக்கும் மீ த பர்ஸ்ட் வாங்கினதில்ல...

இந்த தடவை வாங்கிடுவேன் அப்படின்னு நினைக்கின்றேன்..

இராகவன் நைஜிரியா said...

//
நூற்றுக்கு நூறை கொடுங்கள் , அதையே திரும்பப் பெறுங்கள் //

நீங்கள் சொல்வது சரிதான்.

அன்பு நூறு கொடுத்தால், அது திரும்பி வரும் போது 300 ஆகத்தான் வருகின்றது.

நல்லது எதைச் செய்தாலும், அதனுடைய பிரதிபலன், அதை விட கூடுதலாகத்தான் இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// நாம் மறைத்தது போல, அவள் என்ன திண்பண்டத்தை நம்மிடம் கொடுக்காமல் மறைத்திருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்ததில் அவனுக்கு உறக்கம் வரவில்லை. //

குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும் என்று சொல்வார்கள். அதுப் போலத்தான் இதுவும்

Dhiyana said...

உண்மை அமித்து அம்மா.
அன்போ வெறுப்போ நாம் கொடுப்பது, திரும்ப நம்மிடம் வந்து சேரும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப அழகு வர்ஷினி அம்மா. எதைக் கொடுத்தாயோ அதையே பெறுகிறாய் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
அருமை.

அ.மு.செய்யது said...

ந‌ல்ல‌ த‌த்துவ‌ம்.

ஒரு ஷாட் ஸ்டோரில, ஒரு சூப்ப‌ர் ஷாட் அடிச்சிட்டீங்க‌..

தாரணி பிரியா said...

100 /100 மார்க் குடுக்கலாம் இந்த பதிவுக்கு :)

தமிழ் அமுதன் said...

நாம் மட்டும் நூறை கொடுத்துவிட்டு அந்த சிறுமியைபோல
ஏமாந்து போய்விட்டால்? இப்போது நிம்மதியாக தூங்கினாலும்
பின்னர் அச்சிறுமிக்கு விவரம் தெரிய வந்தால் பாவமில்லையா ?
அன்போ? நட்போ? வியாபாரமோ?
எதையும் கொடுப்பதற்கு முன்னர் அலசி ஆராய்ந்து தெளிந்து
கொடுக்கலாம்!
என்ன நான் சொல்லுறது?

அபி அப்பா said...

அமித் அம்மா என் பிளாக்ல கூட தலைப்பிலே இருக்கும் பாருங்க"ஒருவன் பிறருக்கு கொடுப்பது எல்லாம் தனக்கு தானே கொடுத்துக் கொள்வதாக அர்த்தம்" இது ஒரு அழகான ரமணர் பொன்மொழி!

இப்ப தெரியுதா நான் ஏன் எப்பவும் சந்தோஷமாகவே இருக்கின்றேன் என்று!

நல்ல பதிவு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமாங்க நீங்க தான் பர்ஸ்ட்டூ

தாங்க்ஸ் அண்ணாத்தே

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜமால்

ஆம் தாமிரா, இது எனக்கு வந்த மெயிலின் தமிழாக்கம். டிஸ்கியாக போட எண்ணி மறந்துவிட்டேன்.

நன்றி அமுதா

நன்றி இராகவன் சார்,
உங்களை முந்திக்கிட்டாங்க சார்.

நன்றி தீஷீ

நன்றி வல்லி அம்மா

நன்றி செய்யது, ஸ்டோரி ஒரு மெயிலின் தமிழாக்கம்.

நன்றி யக்கோவ்

எம்.எம்.அப்துல்லா said...

என் அனுபத்தில் சொல்றேன் 100 குடுத்தா 200 கிடைக்குது. அன்பும் சரி....அடியும் சரி...

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜீவன் said...

நாம் மட்டும் நூறை கொடுத்துவிட்டு அந்த சிறுமியைபோல
ஏமாந்து போய்விட்டால்? இப்போது நிம்மதியாக தூங்கினாலும்
பின்னர் அச்சிறுமிக்கு விவரம் தெரிய வந்தால் பாவமில்லையா ?

இதில் பாவமும் இல்லை, புண்ணியமுமில்லை ஜீவன்
கொடுத்த மனது நிறைவு பெறும். அதில் குற்றம் கண்டுபிடிக்கும் மனதுதான் குறுகுறு வென்றே இருக்கும்.

அன்பையும் நட்பையும் அலசி ஆராய்ந்து பின் கொடுத்தால் அதற்கு பெயர் அன்பா, நட்பா அல்லது வியாபாரமா.

கொடுப்பதினால் ஏற்படும் உறவுகளுக்குள் ஒரு எல்லை வேண்டுமானால் இருக்கட்டும். அது தவறில்லை.