எனக்கு எழில்வரதனின் சிறுகதைகள் மிகவும் பிடிக்கும், எனக்குத் தெரிந்த வரையில் அவள் விகடனில் வெளிவந்த “ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு” நகைச்சுவை கலந்த தொடர் ஒரு சிறந்த அறிமுகம் என சொல்லலாம்.
இவர் தன் கதைகளுக்கு வைக்கும் தலைப்பே கொஞ்சம் அலாதிதான்.
சிறுகதைகளின் தலைப்பில் சில
வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல், வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன், வைத்தியனின் கடைசி எருமை, கண்ணீர்த் துளிகளும் கன்னிமார் ஒத்தடமும்
அவரின் நகைச்சுவைந்த கலந்த எழுத்துதான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று அவரின் கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது. அது இதுதான்,
இவர் தன் கதைகளுக்கு வைக்கும் தலைப்பே கொஞ்சம் அலாதிதான்.
சிறுகதைகளின் தலைப்பில் சில
வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல், வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன், வைத்தியனின் கடைசி எருமை, கண்ணீர்த் துளிகளும் கன்னிமார் ஒத்தடமும்
அவரின் நகைச்சுவைந்த கலந்த எழுத்துதான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று அவரின் கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது. அது இதுதான்,
தனித்து தோப்பாகு (எழில்வரதன்)
கண் துடைக்க மாட்டேன்
ஒரு கவளம் ஊட்டமாட்டேன்
தலைகோதி
ஆறுதல் தரவும் மாட்டேன்
துக்கத்திற்கான ஆறுதல்
என்னிலிருந்து கிடைக்காது
ஆறுதல் உனது மோட்சத்தை
எந்திரத்திலிட்டு மாவாக்கியது
உதிரப்பாசம்
உச்சியிலிருந்து வீழ்த்தியது
என் மென்மையான இறகின் கீழ்
நீ கதகதப்பாய் இல்லை
கருகிப் போனாய்
நீ நீயாக இருக்கும் பொருட்டே
விரட்டுகிறேன்
தாய்க்கோழியாய்.
புரிந்து கொள்
மிகு பாசத்தில் நெட்டி வளர்த்தால்
பள்ளிப் பிள்ளையாய்
பலப்பம் தின்பாய்
கண்டெடுக்கச் சொல்லி கத்தினால்
பழத்தின் முள்பிளந்து
வாழ்வின் ருசியறிவாய்.
(நல்லாருக்குல்ல)
12 comments:
நல்லாதான் இருக்கு.ஆமா நீங்க பெரிய படிப்பாளியா இருப்பீங்க போலருக்கு.
கவிதை தெறிக்குது..
எழில்வரதன் அசத்திட்டாரு..
// குடுகுடுப்பை said...
நல்லாதான் இருக்கு.ஆமா நீங்க பெரிய படிப்பாளியா இருப்பீங்க போலருக்கு.//
ரிப்பீட்டு!!
\\குடுகுடுப்பை said...
நல்லாதான் இருக்கு.ஆமா நீங்க பெரிய படிப்பாளியா இருப்பீங்க போலருக்கு.\\
ரிப்பீட்டேய்
ரொம்ப நல்லா இருக்கு கவிதை. நிறைய வாசிப்பிற்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா
\\தனித்து தோப்பாகு\\
மிக அழகான தலைப்பு.
\\என் மென்மையான இறகின் கீழ்
நீ கதகதப்பாய் இல்லை
கருகிப் போனாய்
நீ நீயாக இருக்கும் பொருட்டே
விரட்டுகிறேன்
தாய்க்கோழியாய்.
\\
அருமை.
பகிர்வுக்கு நன்றி சகோ ...
தோப்பில் தனித்திருப்பவர்கள் சிலர் இருக்கும்
இங்கே ''தனித்து தோப்பாகு''
தலைப்பு நல்லாருக்கு!!!
///நீ நீயாக இருக்கும் பொருட்டே
விரட்டுகிறேன்
தாய்க்கோழியாய்.///
நல்ல வரிகள்!!
(நல்லாருக்குல்ல)
ம்ம் நல்லாருக்கு!!!
////குடுகுடுப்பை said...
நல்லாதான் இருக்கு.ஆமா நீங்க பெரிய படிப்பாளியா இருப்பீங்க போலருக்கு.////
இது ரொம்ப நல்லா இருக்கு!!!;;)))
/*அவரின் நகைச்சுவைந்த கலந்த எழுத்துதான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்*/
நான் கூட இந்த கவிதை படிக்கற வரைக்கும் அப்படிதான் நினைச்சேன்... பகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல பகிர்வு.!
அன்புள்ள அமிர்தவர்ஷினி அம்மா (உங்களை வேறெப்படியும் கூப்பிடத் தோணலை!)
//அவள் விகடனில் வெளிவந்த “ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு” நகைச்சுவை கலந்த தொடர் ஒரு சிறந்த அறிமுகம் என சொல்லலாம்.//
இது எந்த இதழில் வந்ததென்று சொல்ல முடியுமா? ஏன்னா இதுவரை இணையத்தில் வந்துள்ள எழில்வரதனின் அத்துணை சிறுகதைகளையும் pdf கோப்பாக சேமித்திருக்கிறேன். இவர் கதை கதையாம் என்று விகடனில் ஒரு கதைத்தொடர் எழுதினாரென்றும் தெரியும். ஆனால் அவள் விகடன் தொடர் நான் பார்த்ததில்லை. அது எப்போது வந்தது என்று சொல்ல முடியுமா?
சேர்த்துக்கொள்ள வசதியாயிருக்கும்.
அன்புடன்
வெங்கட்ரமணன்
(venkatramanan [at] gmail [dot] com)
Post a Comment