வழக்கம் போல இன்று காலை, அலுவலகத்துக்கு செல்ல, ரெயில்வே ஸ்டேசனுக்கு வந்தால், கூட்டமே இல்லை. இருக்கும் சொற்ப மக்களின் முகத்திலும் ஒரு பரபரப்பே இல்லை. மிகவும் இயல்பாக செல்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாய் மின்சார ரயிலில் கூட்டமே இல்லை. எல்லா சீட்டும் காலியாகத்தான் இருந்தது. கூட்ட நாளில் இடுக்கி அடித்துக்கொண்டு, மூன்று பேர் வசதியாக அமரும் இருக்கையில் இடுக்கி அடித்துக்கொண்டு நான்காக அமர்ந்திருக்கும் இருக்கைகள் எல்லாம் இன்று தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டு, தன் பங்குக்கு அதுவும் காற்று வாங்கிக்கொண்டிருந்தது.
எனக்கு பிடித்தாற் போல சன்னல் ஓர இருக்கை, எதிரே யாருமில்லாததால் எதிர் இருக்கையில் கால் நீட்டி, அழகிய கண்ணே, உறவுகள் நீயே என்ற பாட்டை காதில் பொருத்திக்கொண்டு, இன்னமும் ஈரம் வடியாத காற்றை முகத்தில் வாங்கிக்கொண்டு பயணித்தேன். அப்படியே அந்த இரயிலோடவே போய்விடலாமா என்று தோன்றியது என் நிறுத்தம் வந்தது.
இது போல் எப்பவாவது அற்ப சொற்பமாய் நிகழ்கையில் அப்படியே ட்ரெயினோடு போய் திரும்பி வருவோமா என்று எண்ணியதுண்டு. மனம் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கால்கள் இயல்பாய் எழுந்துவிடும்.
இது மாதிரி நமக்கே நமக்கான தருணங்கள் சில நேரங்கள் மட்டுமே வாய்க்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என்று நிறைய இருந்தாலும், நமக்கென்று பிடித்தமான சில தருணங்கள் இருக்கும், அது நமக்கு இணையானவர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்வுகள் அவை.
அலைகள் மோதும் கடற்கரையில் நடப்பதும்,பேசுவதும், விண்டோ ஷாப்பிங் செய்வது, 10 ரூபாய் பெறாத ஒரு பொருளுக்கு 20 ரூபாய் விலை வைத்து சொல்லும் தி.நகரின் நடைபாதையோர வியாபாரிகளிடம் பேரம் பேசுவது, பிடித்த புத்தகத்தோடு ஊறிப் போய், ஏதோ ஒரு உலகுக்கு போய் திரும்பி வருவது, சூடான காபியை, ரசித்து ருசித்து, எதையதையோ யோசித்துக்கொண்டு, வெளிக்காற்று வாங்கிக்கொண்டே குடிப்பது (காப்பியை) என அவரவர் ருசிக்கேற்றார் போல இந்த லிஸ்ட் நீளும்.
காலையில் ஒரு பிடித்தமான நிகழ்வு நடந்து விட்டதும், டொய்ங்ங்க்க்க் என கொசுவர்த்தி சுற்ற ஆரம்பித்து விட்டது மனது.
அலைகள் வந்து கால் நனைக்க, கால் விரல்களில் மண் குறுகுறுக்க அப்படியே காலார பிடித்தமானவர்களோடு நடந்து போவது. நானும் என் தோழியும் மெட்ராஸ் யூனிவர்சிடி போகும் போது, அண்ணா சமாதியில் ஆரம்பித்து, நினைத்தையெல்லாம் பேசிக்கொண்டு, அப்படியே அலையோரம் நடந்து வந்து, காந்தி சிலையில் முடிப்போம். அங்கிருந்து வீடு வரைக்கும் நடையே.
பாலகுமாரன் நாவலை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தால், வெளியில் வெட்டி மடிந்தாலும் தெரியாது. நாவலை முடித்து விட்டு வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தால் இருட்டிப் போயிருக்கும். ஏதோ ஒரு புது உலகில் இருந்து, வெளியேறி வந்தாற் போன்ற ஒரு பிரமை நம்மை ஆட்கொண்டிருக்கும். அந்த கதாபாத்திரங்களையே சிந்திக்க துவங்கியிருக்கும் மனம், கதை முடிந்தாலும்.
இதுபோல் நிறைய முறை நடந்து, என் அம்மா மற்றும் அக்காவிடம் திட்டு, உதை எல்லாம் வாங்கியதுண்டு.
அப்புறம் விண்டோ ஷாப்பிங், ரொம்ப பேருக்கு பிடிக்கும். உங்க தங்கமணிங்களை கேட்டுப் பாருங்க. இது மாதிரி ஷாப்பிங்க் போவதற்கு ரங்கமணிகளையெல்லாம் அழைத்துக்கொண்டு போனால் அவ்ளோதான். பிடிக்குதோ பிடிக்கலையோ வாங்குகிறோமோ இல்லையோ சும்மாவாச்சும் உள்ளே போய் சுற்றிப்பார்த்து விட்டு வரவேண்டும். ஆனால் இதற்கு தோதுபட்டாற் போல நண்பர்கள் அமைவது ரொம்பக் கஷ்டம்.
அப்புறம் கோயில், நான் சொல்றது நம்ம வீடு மாதிரியே எட்டுக்கு எட்டு இருக்குற கோயில் இல்லை. நல்ல விசாலமா, பெரிய பிரகாரங்களோடு இருக்கும் கோவில்கள். சாமி கும்பிடுறோமோ இல்லையோ, அங்கே போய் அந்தப் ப்ரகாரங்களின் கற்தரையில் உட்கார்ந்தாலே போதும். அப்படியே ஏதோ ஒரு அமைதி நம்மை உள்வாங்கிக்கொள்ளும். இதற்கும் இணையான ஆள் தோதுபட்டால் போதும். எனக்கு கோவில் விஷயத்தில் பிடிபட்டவள், பாலஜோதிதான். என்னை விட 5 வயது சின்னவள், என் அக்கா மகளின் தோழி. எனக்கு தோழியாகி விட்டு, நாங்கள் வெளியே புறப்பட்டால் அது கோவிலாகத்தான் இருக்கும் என்பது எழுதப்படாத விதி.
நமக்குப் பிடித்த பாடல்களை கேட்பதும், எழுத்துக்களைப் படிப்பதும், அதைப் பற்றி பேசி சிலாகித்துக்கொள்ள ஒத்த உணர்வுகளைவுடைய நண்பர்கள் வாய்ப்பதும் என மிகவும் அரிதான நிகழ்வுகள் அவை.
இந்த இயல்பையெல்லாம் மீண்டும் கொத்திக்கொள்ள மனது துடித்தாலும், இப்போதைய இருப்புகள் அதுக்கெல்லாம் தோதுபட்டாற் போல வாய்ப்பதில்லை நம்மில் நிறைய பேருக்கு.
எங்கு சென்றாலும், குழந்தையின் நினைவை சுமந்துகொள்வதால், 6 மணி அடித்தவுடன் உள்ளே பல்பு எரிந்துவிடும், இயல்பாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டுவிடும்.
6 மணிக்கு மேல் ஏதாவது அலுவலக நிகழ்ச்சியோ, தவிர்க்க முடியாதவர்களின் கல்யாண வரவேற்போ, இல்லை இன்ன பிற நிகழ்ச்சிகளோ, எதோடும் மனது ஒட்டாமல் அரைகுறையாய் அமர்ந்துவிட்டு, சாப்பிடக் கூட தோன்றாமல், தெரிந்தவர்களை, பிடித்தமானவர்களைப் பார்த்தாலும் ஒரு ஹாய் ஹலோ சொல்லிவிட்டு ஓடிப்போகத்தான் துடிக்கிறது.
நமக்கு பிடித்தமான நிகழ்வுகளில் நாம் மட்டும் ஒன்றிப்போய் பின் அதிலிருந்து விடும்படும்போது ஏதோ ஒரு குற்ற உணர்வோடு உடன் படவேண்டியிருக்கிறது, நம்முடைய குழந்தைகளை, இணையானவர்களை அந்தக்கணங்கள் நிராகரித்ததால் அப்படி ஒரு குற்ற உணர்வு வருகிறதா என்று தெரியவில்லை.
ச்சே எவ்வளவு சுயநலமா இருந்திருக்கோம் என்று தோன்றி அதற்காக பிராயச்சித்தம் எல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் அது ஒரு அல்பமான நிகழ்வாய்தான் இருக்கும், அல்பமான நிகழ்வுகளைத்தானே நம் பொருட்டு நிகழ்ந்தால் அதை அற்புதம் என்று கொண்டாடுகிறோம்.
செயற்கைத்தனமிகுந்த, வாழ்தலின் பொருட்டு நம்மையே தொலைத்த, இதையே இயல்பென்று சொல்லித் திரியும் நம் வாழ்வில் எப்போதாவது துழாவி நமக்கான கணங்களை தேடி எடுத்துக்கொண்டாலும், அதுவும் ஒரு குற்ற உணர்ச்சியோடு முடிவது எவ்வளவு அபத்தமாய் போய்விடுகிறது.
இசையும் எழுத்துமாய இனிமையாகவே இருந்தாலும், எப்போதும் அசை போட்ட பாடலாகவே இருந்தாலும், காலப்போக்கில் மறந்த பாடல்களைப் போல.
இசையும் எழுத்துமாய இனிமையாகவே இருந்தாலும், எப்போதும் அசை போட்ட பாடலாகவே இருந்தாலும், காலப்போக்கில் மறந்த பாடல்களைப் போல.
40 comments:
nallaa ezuthiyirukkeengka amiththu ammaa!
மீ த ஃபர்ஸ்டு
//நல்ல விசாலமா, பெரிய பிரகாரங்களோடு இருக்கும் கோவில்கள். சாமி கும்பிடுறோமோ இல்லையோ, அங்கே போய் அந்தப் ப்ரகாரங்களின் கற்தரையில் உட்கார்ந்தாலே போதும். அப்படியே ஏதோ ஒரு அமைதி நம்மை உள்வாங்கிக்கொள்ளும்.//
சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
happy pongal!!!
சூப்பர்ப்பா எழுதியிருக்கீங்க.
//அப்படியே அந்த இரயிலோடவே போய்விடலாமா என்று தோன்றியது என் நிறுத்தம் வந்தது.
எனக்கும் இப்படித்தான் நடக்கும்.
"அலைகள் மோதும் கடற்கரையில் நடப்பதும்,பிடித்த புத்தகத்தோடு ஊறிப் போய், ஏதோ ஒரு உலகுக்கு போய் திரும்பி வருவது, சூடான காபியை, ரசித்து" ருசிப்பது எல்லாம் அல்டிமேட் டிலைட்.
//அண்ணா சமாதியில் ஆரம்பித்து, நினைத்தையெல்லாம் பேசிக்கொண்டு, அப்படியே அலையோரம் நடந்து வந்து, காந்தி சிலையில் முடிப்போம்
என்ன கொடுமை சார் இது?
நாங்களும் இப்படிதாங்க. நாங்க காந்தி சிலையிலும் முடிக்காமல் நடந்து ரொம்ப தூரம் போய்விட்டோம். திரும்பி வர கால் வலிக்க ஆட்டோ பிடித்து வந்தோம்.
:)
சான்ஸே இல்லங்க !!!!!
//செயற்கைத்தனமிகுந்த, வாழ்தலின் பொருட்டு நம்மையே தொலைத்த, இதையே இயல்பென்று சொல்லித் திரியும் நம் வாழ்வில் எப்போதாவது துழாவி நமக்கான கணங்களை தேடி எடுத்துக்கொண்டாலும், அதுவும் ஒரு குற்ற உணர்ச்சியோடு முடிவது எவ்வளவு அபத்தமாய் போய்விடுகிறது.//
ஆழ்ந்த கருத்துக்கள்...
வாழ்வில் மற்றவர்களுக்காக நாம் செலவிடும் நேரத்தில், ஒரு சதவீதமாவது நமக்காக.."இன்று நான் நேரத்தை என்னோடு செலவிட்டேன்" என்று சொல்ல முடிவதில்லை...அதிலும் ஒரு வித இனம்புரியாத குற்ற உணர்ச்சி தொற்றிக் கொள்கிறது.
/
நாங்களும் இப்படிதாங்க. நாங்க காந்தி சிலையிலும் முடிக்காமல் நடந்து ரொம்ப தூரம் போய்விட்டோம். திரும்பி வர கால் வலிக்க ஆட்டோ பிடித்து வந்தோம்//
யார் கூடத் தம்பி போனிங்க?
எங்களையும் கொசுவத்தி சுத்த வச்சிட்டிங்க.. ஏற்கனவே ஆணி புடிங்கல டேமேஜர் கத்தறாரு
\"பொருத்தமற்ற தலைப்பு"\\
இதே இழுத்துகிட்டு வருதே ...
\அழகிய கண்ணே, உறவுகள் நீயே என்ற பாட்டை காதில் பொருத்திக்கொண்டு\\
என்ன சுகம்
என்ன சுகம் ...
\\நமக்கென்று பிடித்தமான சில தருணங்கள் இருக்கும்\\
பல பல ...
\\நினைத்தையெல்லாம் பேசிக்கொண்டு, \\
மேலும் ஒரு கொசுவத்தி ... போடவேண்டியது தானே ...
\\பாலகுமாரன் நாவலை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தால், வெளியில் வெட்டி மடிந்தாலும் தெரியாது. \\
உண்மை உண்மை ...
\\என் அம்மா மற்றும் அக்காவிடம் திட்டு, உதை எல்லாம் வாங்கியதுண்டு.\\
ஹா ஹா ஹா
//நினைத்தையெல்லாம் பேசிக்கொண்டு//
நிமிடத்துக்கு நாலுமுறை சிரித்துக்கொண்டு..
//நல்ல விசாலமா, பெரிய பிரகாரங்களோடு இருக்கும் கோவில்கள்.//
வாய்ப்பு இருந்தா எங்க ஊரு நெல்லையப்பர் கோவில் போய்ப் பாருங்க.
//சாமி கும்பிடுறோமோ இல்லையோ, அங்கே போய் அந்தப் ப்ரகாரங்களின் கற்தரையில் உட்கார்ந்தாலே போதும். அப்படியே ஏதோ ஒரு அமைதி நம்மை உள்வாங்கிக்கொள்ளும்.//
ஆமா ஆமா.
இப்படி நீங்க எழுதியிருக்கும் எல்லாமே ஆமா போட வைக்கிறது அமித்து அம்மா. அருமையான பதிவு.., கூடவே எல்லோரது பெருமூச்சையும் உள்வாங்கி சூடாகி வருகிறது.
\\அங்கே போய் அந்தப் ப்ரகாரங்களின் கற்தரையில் உட்கார்ந்தாலே போதும். அப்படியே ஏதோ ஒரு அமைதி நம்மை உள்வாங்கிக்கொள்ளும்\\
நானும் அனுபவித்ததுண்டு ...
\\நமக்குப் பிடித்த பாடல்களை கேட்பதும், எழுத்துக்களைப் படிப்பதும், அதைப் பற்றி பேசி சிலாகித்துக்கொள்ள ஒத்த உணர்வுகளைவுடைய நண்பர்கள் வாய்ப்பதும் என மிகவும் அரிதான நிகழ்வுகள் அவை\\
ஆமாங்க ...
\\வாழ்தலின் பொருட்டு நம்மையே தொலைத்த, இதையே இயல்பென்று சொல்லித் திரியும் நம் வாழ்வில் எப்போதாவது துழாவி நமக்கான கணங்களை தேடி எடுத்துக்கொண்டாலும், அதுவும் ஒரு குற்ற உணர்ச்சியோடு முடிவது எவ்வளவு அபத்தமாய் போய்விடுகிறது.
இசையும் எழுத்துமாய இனிமையாகவே இருந்தாலும், எப்போதும் அசை போட்ட பாடலாகவே இருந்தாலும், காலப்போக்கில் மறந்த பாடல்களைப் போல\\
வழமை போல ஃபைனல் டச்
சும்மா
நச்...
////சாமி கும்பிடுறோமோ இல்லையோ, அங்கே போய் அந்தப் ப்ரகாரங்களின் கற்தரையில் உட்கார்ந்தாலே போதும். அப்படியே ஏதோ ஒரு அமைதி நம்மை உள்வாங்கிக்கொள்ளும்.//
உண்மை அமித்து அம்மா.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
//நமக்கு பிடித்தமான நிகழ்வுகளில் நாம் மட்டும் ஒன்றிப்போய் பின் அதிலிருந்து விடும்படும்போது ஏதோ ஒரு குற்ற உணர்வோடு உடன் படவேண்டியிருக்கிறது,///
இந்த கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன்!
அருமையாய் விவரித்திருக்கிறீர்கள் !
சின்ன சின்ன செயல்களில் பெரிதும் உணர்வுபூர்வமாய் அனுபவிக்க வைக்கும் மனம் !
வாழ்த்துக்கள்! :)
கோயில் விசயத்தில் 100% என்னோட மனத்திலிருந்தே விழுந்த வரிகளாக இருக்கு! :))))
//பாலகுமாரன் நாவலை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தால், வெளியில் வெட்டி மடிந்தாலும் தெரியாது. நாவலை முடித்து விட்டு வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தால் இருட்டிப் போயிருக்கும். ஏதோ ஒரு புது உலகில் இருந்து, வெளியேறி வந்தாற் போன்ற ஒரு பிரமை நம்மை ஆட்கொண்டிருக்கும். அந்த கதாபாத்திரங்களையே சிந்திக்க துவங்கியிருக்கும் மனம், கதை முடிந்தாலும்.
இதுபோல் நிறைய முறை நடந்து, என் அம்மா மற்றும் அக்காவிடம் திட்டு, உதை எல்லாம் வாங்கியதுண்டு.//
நான் இப்ப அடுத்த தலமுறைகிட்டயும் வாங்கறேன்(என் பொண்ணுகிட்ட)
//ரெயில்வே ஸ்டேசனுக்கு வந்தால், கூட்டமே இல்லை
//
எல்லோரும் இன்னும் பொங்கல் கொண்டாடுராங்களோ..
//எனக்கு பிடித்தாற் போல சன்னல் ஓர இருக்கை//
பல நாட்கள் நான் மிகவும் ரசித்து பயணித்ததை நினைவூட்டுகிறது.
//இது போல் எப்பவாவது அற்ப சொற்பமாய் நிகழ்கையில் அப்படியே ட்ரெயினோடு போய் திரும்பி வருவோமா//
நாங்க கோடம்பாக்கத்துல ஏறி...பீச் ஸ்டேஷன் போயிட்டு...அதே வண்டியில மௌன்ட் ஸ்டேஷன் வருவோம்... :-))
நல்ல பதிவு..
நன்றி
மிக மிக அழகாக எழுதியுள்ளீர்கள். பல இடங்களொல் அப்படியே உங்களோடு ஒன்றிப் போனேன்.
நமக்கான தருணங்கள் நம்மிடமே இருக்கிறது...!
எப்படிங்க பதிவுக்கு இப்படியொரு தலைப்பு வைக்க வேண்டும் என்று தோன்றியது..
எழுதி முடிச்சதுக்கப்புறம் வைத்த தலைப்பா அல்லது ஆரம்பிக்கும் போதே வைத்ததா?
பொருத்தமான தலைப்பு!
//நமக்கான தருணங்கள் நம்மிடமே இருக்கிறது...!//
ரிப்பீட்டு!
//யார் கூடத் தம்பி போனிங்க?
karki, :)))
சேம் பிளட்!
மிக இயல்பாய் இருந்தது, ஜாலியாவும்!!
ஆஹா மற்றுமொரு இரயில் சிநேகிதியா (எனக்கும் இந்த மின்சார இரயில் பயணங்களின் பொழுதுகள் மிகவும் அருமையான நேரங்கள் ஒரு நாளில் தவறவிட விரும்பாத பொழுதுகள்)...
//பாலகுமாரன் நாவலை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தால், வெளியில் வெட்டி மடிந்தாலும் தெரியாது. //
இந்தப் பழக்கம் எனக்குத் தெரிஞ்சு நிறைய
பேர்கிட்ட இருக்கு...நல்ல பதிவு...
பல தருணங்களில் நம் விருப்பத்தை விட்டுக் கொடுக்க வேண்டிதான் இருக்கிறது!!
மிக நேர்த்தியான பதிவு. எல்லோருக்கும் பலப்பல தருணங்களில் தோன்றுவது என்றாலும், இவ்வளவு கோர்வையான சிந்தனை, அதை எழுத்தில் கொணர்தல் உங்களுக்குக் கைகூடியிருக்கிறது. Enjoyed it.
அனுஜன்யா
Very Nice and touched my heart!
excellant write up Amithu amma...அற்புதமாய் எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் எனக்கானதாயும், என் போன்றே இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் ரயிலோடு போய் விடலாமா என்ற நினைப்பு எனக்கும் அடிக்கடி நேர்வதுண்டு (போயும் இருக்கிறேன்...நான் இறங்க வேண்டிய க்ரீன்வேஸ் சாலையில் இறங்காமல் வேளச்சேரியிலும், பட்டரவாக்கத்தில் இறங்க மனமில்லாமல் ஆவடியிலும் இறங்கி மறு ரயில் பிடித்து அலுவலகம் அல்லது வீட்டுக்கு தாமதமாக வந்த கதைகள் உண்டு)
நமக்கே உரிய அற்புதமான தருணங்களை நாம் விடக் கூடாது அமித்து அம்மா...எனக்கு எப்படி வாய்த்தது இந்த மனநிலை என்று தெரியவில்லை..குழந்தைகளுடன் இருக்கும் போது totally together with them...வீட்டில் இருந்து இறங்கிவிட்டால் மனதில் அவ்வப்போது நினைத்தாலும் அவர்களை பார்த்துக் கொள்ள என்னைவிட பொறுப்பானவர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பினால் நான் இங்கும் சரி நண்பர்கள் வட்டாரத்திலும், வெளியிடங்களிலும் ஒன்றிவிடுவேன்...ஆனால் வீடு நோக்கி செல்லும் ஒவ்வொரு அடியும் பரபரப்பாகவே இருக்கும்...சாப்பிட்டானா...தூங்கியிருப்பாளா...ஹோம் வொர்க் பண்ணியிருப்பாளா...கேள்விகள் கேள்விகள்...நான் வந்ததும் இத்தனை நேரம் பார்த்துக் கொண்டவர்களை (அம்மா / மாமியார்) அப்படியே விட்டுவிட்டு ஓடோடி வரும் பிள்ளைகளின் முகத்தில் என்னைப் பார்த்ததும் தெரியும் ஒரு சந்தோஷத்திற்கு இந்த உலகில் ஈடாக எதையுமே சொல்ல முடியாது...நம் போன்ற அம்மாக்களின் ஆகப்பெரிய சந்தோஷம் இதை விட வேறு எதுவாக இருக்க முடியும் அமித்து அம்மா..
கீழ்குரியவை அனைத்தும் எனக்கும் பொருத்தம் ஆனவையே....
என் மனதின் பிரதிபலிப்பாக உங்கள் எழுத்துக்களை உணர்கிறேன்...
////நமக்கு பிடித்தமான நிகழ்வுகளில் நாம் மட்டும் ஒன்றிப்போய் பின் அதிலிருந்து விடும்படும்போது ஏதோ ஒரு குற்ற உணர்வோடு உடன் படவேண்டியிருக்கிறது, நம்முடைய குழந்தைகளை, இணையானவர்களை அந்தக்கணங்கள் நிராகரித்ததால் அப்படி ஒரு குற்ற உணர்வு வருகிறதா என்று தெரியவில்லை.
ச்சே எவ்வளவு சுயநலமா இருந்திருக்கோம் என்று தோன்றி அதற்காக பிராயச்சித்தம் எல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் அது ஒரு அல்பமான நிகழ்வாய்தான் இருக்கும், அல்பமான நிகழ்வுகளைத்தானே நம் பொருட்டு நிகழ்ந்தால் அதை அற்புதம் என்று கொண்டாடுகிறோம்.
செயற்கைத்தனமிகுந்த, வாழ்தலின் பொருட்டு நம்மையே தொலைத்த, இதையே இயல்பென்று சொல்லித் திரியும் நம் வாழ்வில் எப்போதாவது துழாவி நமக்கான கணங்களை தேடி எடுத்துக்கொண்டாலும், அதுவும் ஒரு குற்ற உணர்ச்சியோடு முடிவது எவ்வளவு அபத்தமாய் போய்விடுகிறது.
இசையும் எழுத்துமாய இனிமையாகவே இருந்தாலும், எப்போதும் அசை போட்ட பாடலாகவே இருந்தாலும், காலப்போக்கில் மறந்த பாடல்களைப் போல.///
Post a Comment