07 January 2009

அன்றில் தாய்கள்

அடுத்தவர் பொறுப்பில்
தம் குழந்தையை
விட்டு விட்டு
அலுவலகம் செல்லும்
அனைத்து அம்மாக்களும்
நித்தம் பிரிவுக்கொடுமையை
அனுபவிக்கும்
அன்றில் அம்மாக்களே..

அன்றாட தேவைகளின்
கோடிட்ட இடங்களை
நிரப்புவதற்கு
தன் பங்கினை
இயன்றவரை செய்யும்
இவர்களிடம்
தன் குழந்தைகள்
குறித்தான
ஏக்கக் காய்ச்சல்
எப்போதும் இருக்கும்..

தன் குழந்தையின்
வாடிய முகமோ
துறு துறு கண்களோ
மழலையின் கொஞ்சலோ
அழுகையின் சத்தமோ
ஏதோ ஒன்று
உள்ளிருந்து
துளைத்துக் கொண்டும்
ஒலித்துக்கொண்டும்
இருக்கையில்,
தன்னிலை மீறி வரும்
விழிநீரை விலக்கிவிட்டு
வேதனைகளை ஒதுக்கிவைத்து
வேலைகளில் கவனம் செலுத்தும்
அத்தனை அம்மாக்களும்
பிரிவுத்துயரை
புரிந்தும், புரியாமலிருக்கும்
குழந்தைகளின்
நினைவுகளை
தற்காலிகமாக
ம(றை)றக்கும் அன்றில்களே

ஆறிப்போன சோற்றை
அவசரமாய் அள்ளி
விழுங்கும் போது
கூடவே விழுங்கப்படும்
தன் பிள்ளை
சாப்பிட்டிருக்குமோ
என்ற நினைவும்...

ஒப்பனைகளோடு
அமர்ந்து
உதடசைத்துக்கொண்டிருக்கும்
அலுவலக மீட்டிங்கின்
குரலெழுப்புதல்களிக்கிடையே,
சுவர்க்கடிகாரத்திடம்
சொல்லிக்கொண்டிருப்பார்கள்
இது
குழந்தை
பள்ளியிலிருந்து
திரும்பும் வேளையென..

மார்மேலும், தோள்மேலும்
இல்லை
நெஞ்சில் நினைவுகளால்
நிதமும் சுமக்கும்
இவர்களைனைவருக்கும்
பிள்ளை பெற்ற பிறகும்
பிரசவ வேதனைதான்
என்றுமே...

பொருளாதாரத்தை
பூர்த்தி செய்யும்
தாரமாக வாய்த்த
அன்றில் அம்மாக்கள்
அனைவருக்கும்
இந்த எழுத்து
சமர்ப்பணம்...

22 comments:

நட்புடன் ஜமால் said...

\\அடுத்தவர் பொறுப்பில்
தம் குழந்தையை
விட்டு விட்டு
அலுவலகம் செல்லும்
அனைத்து அம்மாக்களும்
நித்தம் பிரிவுக்கொடுமையை
அனுபவிக்கும்
அன்றில் அம்மாக்களே..\\

பிரிவு, துயரம் ...

நட்புடன் ஜமால் said...

\\தன்னிலை மீறி வரும்
விழிநீரை விலக்கிவிட்டு
வேதனைகளை ஒதுக்கிவைத்து
வேலைகளில் கவனம் செலுத்தும்
அத்தனை அம்மாக்களும்\\

மனதார ஒரு ‘ஓ’

நட்புடன் ஜமால் said...

\\ஆறிப்போன சோற்றை
அவசரமாய் அள்ளி
விழுங்கும் போது
கூடவே விழுங்கப்படும்
தன் பிள்ளை
சாப்பிட்டிருக்குமோ
என்ற நினைவும்...\\

நிஜமா அழுதுட்டேன்

இப்போ அழுதுக்கிட்டு இருக்கேன் ...

நட்புடன் ஜமால் said...

மேலும் என்னால் படிக்க இயலவில்லை

பிறகு படித்து வருகிறேன் ...

யா! அல்லாஹ் என் சகோதரிகளின் துயர் தீர்த்திடு ...

அமுதா said...

என்னவென்று சொல்ல?

/*
ஆறிப்போன சோற்றை
அவசரமாய் அள்ளி
விழுங்கும் போது
கூடவே விழுங்கப்படும்
தன் பிள்ளை
சாப்பிட்டிருக்குமோ
என்ற நினைவும்...

ஒப்பனைகளோடு
அமர்ந்து
உதடசைத்துக்கொண்டிருக்கும்
அலுவலக மீட்டிங்கின்
குரலெழுப்புதல்களிக்கிடையே,
சுவர்க்கடிகாரத்திடம்
சொல்லிக்கொண்டிருப்பார்கள்
இது
குழந்தை
பள்ளியிலிருந்து
திரும்பும் வேளையென..*/

அன்றில் அம்மாக்களின் துயரத்தை வார்த்தைகளில் வடித்ததற்கு நன்றி...

ஜீவன் said...

நிகழ்காலத்தின் நிஜங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது ,,,,மிக அழகான கவிதை தோழி

குடுகுடுப்பை said...

நல்ல கவிதை. வாழ்க்கை அப்படித்தான்.

ஆயில்யன் said...

//ஆறிப்போன சோற்றை
அவசரமாய் அள்ளி
விழுங்கும் போது
கூடவே விழுங்கப்படும்
தன் பிள்ளை
சாப்பிட்டிருக்குமோ
என்ற நினைவும்...//

:((((

வித்யா said...

வாழ்க்கையையும் கவிதையாக வடிக்க உங்களால் தான் முடியும் சிஸ்டர். வேலைக்கு செல்லும் தாய்மார்களின் நிலையை கண்முன்னே நிற்றுத்திவிட்டீர்கள். பொருளாதார நிலையினால் நீங்கள் இழக்கும் செல்வம் கொஞ்சமல்ல:(

மிஸஸ்.டவுட் said...

//அன்றில் அம்மாக்களே..//

இந்த தலைப்பே கவிதை தான் அமித்து அம்மா ...
என்ன சொல்ல? புரிகிறது அன்றில் அம்மாக்களின் ஏக்கம் !

அ.மு.செய்யது said...

//சுவர்க்கடிகாரத்திடம்
சொல்லிக்கொண்டிருப்பார்கள்
இது
குழந்தை
பள்ளியிலிருந்து
திரும்பும் வேளையென..
//

கற்பனையல்ல..நிஜம்....

"அன்றில் தாய்கள்" ந‌ல்ல‌ த‌லைப்பு.

சந்தனமுல்லை said...

நல்லக் கவிதை..உணர்ச்சிகளை வார்த்தைகளில் படம் பிடித்திருக்கிறீர்கள்!

அ.மு.செய்யது said...

இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா !!!
நோட் பண்ணுங்கப்பா !!!

ராமலக்ஷ்மி said...

//இவர்களைனைவருக்கும்
பிள்ளை பெற்ற பிறகும்
பிரசவ வேதனைதான்
என்றுமே...//

அன்றில் தாய்களின் துயரத்தை இதை விட ஆழமாய்ச் சொல்ல இயலுமோ என வியக்கிறேன்.

அபுஅஃப்ஸர் said...

//மார்மேலும், தோள்மேலும்
இல்லை
நெஞ்சில் நினைவுகளால்
நிதமும் சுமக்கும்
இவர்களைனைவருக்கும்
பிள்ளை பெற்ற பிறகும்
பிரசவ வேதனைதான்
என்றுமே...//

பிரசவ வேதனை என்பது மறு ஜென்மம்... ஒவொரு நாளும் புது ஜென்மம் எடுக்கும் தாய்மார்களின் வேதனையை சொல்லும் அழகிய வரிகள்....

Ravee (இரவீ ) said...

நிதர்ஷன நிழல்படமாக உங்கள் பதிவு...

நசரேயன் said...

அன்றில் தாய்கள் தலைப்பும் கவிதையும் அருமை

கயல்விழி said...

அமிர்தவர்ஷினி அம்மா

ரொம்ப அழகாக இருக்கிறது உங்கள் கவிதை.

நீங்கள் எழுதி இருப்பது உண்மை தான். வேலை செய்யும் அம்மாக்கள் பலரது நிலை இது தான்.

ஒரு சிந்தனை: வேலைக்குப்போகும் அப்பாக்கள் என்றாவது தங்கள் குழந்தைகளைப்பற்றி இந்த அளவுக்கு கவலைப்படுவார்களா? இல்லை என்றே நினைக்கிறேன். வேலைக்குப்போவதைப்பற்றிய குற்ற உணர்ச்சி பெண்களுக்கு தான் உண்டு.

குடும்பப்பொறுப்பு பெண்களுடையது, என்ற ஸ்டீரியோ டைப் ஆதிக்க எண்ணம் தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

பெண்கள் மீது பல பொறுப்புகள் திணிக்கப்படுகிறது அல்லது தானே திணித்துக்கொள்ளுகிறார்கள்.

தாமிரா said...

மிக மிக அழகாக எண்ணங்களைக் கோர்த்திருக்கிறீர்கள். பாராட்டத்தகுந்த படைப்பு. (வார்த்தைகளை கட் செய்யாமலிருந்தால் அழகான சிறு கட்டுரையாக மலர்ந்திருக்கும். கவிதைக்கான .:பீல் முழுதுமாக வரவில்லை. விமர்சிக்கலாம் இல்லையா? ஹிஹி.. நான் ஒரு பெரிய கவிஞராக்கும்.!)

kalyan kumar said...

நல்ல கவிதை.
தம் குழந்தைக்கும்
part time அம்மா!

-kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

Anonymous said...

கவிதைக்கு என்ன விமர்சனம் போடறதுன்னே தெரியலை. அவ்வளோ மனசை கலக்கீடுச்சு.

Ponniyinselvan said...

Dear,
By chance I read your blog.so touching.
I feel identical with you.
Even I beg everyone to call me karthikamma.
I resigned my Asst.prof job just to be with my dearest.
One more thing you know,I became my son's child and child+child=heaven.
Enjoy every nano second.Best wishes.
karthik amma