ஆயிரத்திற்குள் அடங்கும் நோட்டுக்குள் பர்ஸுக்குள் பத்திரமாய், அத்துடன் இன்னபிற கார்டுகள்.. வட்டி செலுத்த வாட்டமாய்...., தேவைகளையும், சில சமயம் தேவையற்றவைகளையும் நிரப்ப பொருளாதார சுதந்திரமும், தனி மனித உரிமையும் இருபாலருக்கும் இருக்கிறது. எதை எதையோ வாங்குகிறோம், உண்ண, உடுத்த, பார்க்க, படிக்க இப்படி ஏராளம்.
இருப்பினும் இந்த ருசி நாவில் ஒட்டவேயில்லை.
அழுது அடம்பிடித்து வாங்கிய கோடு போட்ட நோட்டில் இருக்கும் வாசமும், 50 பைசா வாடகை தந்து படித்த பழைய புத்தகமும் கொடுத்த வாசனை,
இன்னமும் நாசிகளில் நிரம்பியிருக்கிறது, நம் பணத்தில் நாம் விரும்பி, மற்றவர்கள் பரிந்துரை செய்து புத்தகங்கள் வாங்கினாலும், புத்தக வாசனை வரத்தான் செய்கிறது.
ஆனால் இன்னும் 20 வருடங்கள் கழித்து அப்புத்தகத்தை பார்க்கவோ, வாசிக்கவோ ஏன் நினைக்கவோ நேரிட்டால், நினைவுகளின் வாசம் நிரம்பி வழியுமா என்றால் அது சந்தேகம்தான்...
அம்மா திட்டிக் கொண்டே தரும் சில்லறைகளில் 10 பைசா தேன் மிட்டாய், தேங்காய் பிஸ்கேட், பால் ஐஸ் இப்படி ஏகப்பட்ட திண்பண்டங்களின் ஒன்றின் ருசி கூட,
இப்பொது நாம் விரும்பி போய் சாப்பிட்டாலும், இல்லை ட்ரீட் என்ற பேரில் நிரப்பி கொண்டாலும், அப்போது ருசித்தாலும். அடுத்த முறை அவ்விடத்தை கடக்க நேரும்போது, ஒரு ருசியும் தருவதில்லை.
கடந்தகாலத்தின் திண்பண்டங்கள் அடிநாவின் சுவை மொட்டுக்களில் ருசியை நிரப்பி சென்றதைப்போலவே நினைவையும் நிரப்பி சென்றிருக்கிறது.
அஞ்சறைப் பெட்டியில், முந்தானை முடிச்சில், சாமி ஸ்டாண்டின் இடுக்கில், இப்படி எங்கிருந்தாவது துழாவி, வசவோடு சேர்த்துத் தரும் சில்லறைகள் தந்த இதத்தை, இப்போது ATM-ல் எடுக்கும் புது நோட்டு தருவதில்லை.
விளம்பரங்களால் கவரப்பட்டு, அங்கேயே அப்போதே போட்டுப் பார்த்து, நினைத்த நேரத்தில், பிடித்த வண்ணத்தில், பிடித்த விதத்தில் வித விதமாய் உடைகள், வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ எடுத்துத் தரும் பூப் போட்ட பச்சைப் பாவாடை, நீல ட்ரவுசர் (அனேகம் பேருக்கு பரிச்சயப்பட்டிருக்கும்) தந்த மகிழ்ச்சி இணையே இல்லை.
ஒவ்வொரு முறையும் புதுசு எடுக்கும் போதோ, உடுத்தும் போதோ, என் முதல் பச்சைப் பூப் போட்ட பாவாடையும், கருப்பில் ரோஸ் பூப் போட்ட கவுனும் மறக்க முடிவதே இல்லை. நன்றாக நினைவு தெரியும் வரையில் பொங்கலுக்கு மட்டுமே புத்தாடைகள்.
நம் விருப்பத்திற்கு ஒவ்வாத நிறமாய் இருப்பினும் சரி, கட்டாயத்தின் பேரில் அணிந்தாலும் சரி, அந்த நிறங்களும், உடைகளும் தந்த நினைவுகள், நாம் இப்போது ஆயிரம் ஆயிரமாய் கொட்டி கொடுத்து எடுக்கும் உடைகளில் ஒரு போதும் தெரிவதில்லை. பத்தோடு பதினொன்றாய் இதுவும் ஒரு ஆடையாக அணிகிறோம் அவ்வளவே...
அக்காவின் பட்டுப் புடவையில் பாவாடை தாவணி அணிந்த போது (எனக்கு நீண்ட பாவாடை, என் அக்கா பெண்ணிற்கு அதில் குட்டி பாவாடை, சட்டை) பழையது தான் என்றாலும் அது தந்த பரவசம் போல், பீரோவில் தூங்கும் கல்யாண பட்டுப்புடவைகள் கூட தந்ததில்லை...
ஒன்றுமில்லா மாதக் கடைசியின் மிளகாய் கிள்ளி போட்ட சாம்பாரின் சுவை, இப்போது பருப்பை அள்ளிக் கொட்டி செய்தாலும் வருவதேயில்லை..
வெள்ளிக்கிழமை “ஒலியும் ஒளியும்”, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிய திரைமலர், காலையில் போடும் டாம் அண்ட் ஜெர்ரி, சார்லி சாப்ளின், லாரல் அண்ட் ஹார்டி, பழுதடைந்த பழைய டிவியை தட்டி தட்டிப் நிகழ்ச்சிகளைப் பார்த்த சுகம், என்னதான் அவற்றை மீண்டும் டிவிடியில் பார்த்தாலும் நிறைவைத்தருவதில்லை.

போட்டிப்போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகள் தந்தாலும், ஒரு ஒளியும், ஒலியும் தந்த நிறைவினை, எந்த நிகழ்ச்சியும் தந்ததேயில்லை எனக்கு. அரை ஆடையும், குறைத் தமிழுமாய், ஆண்களும் பெண்களும், பிடித்த பாடல்களையே மீண்டும் மீண்டும்................. காணக் கிடைத்தாலும், ஒலியும் ஒளியும் தந்த நினைவலைகள்...... இன்னமும் பசுமைதான்..
இப்படி ஏகமான கொசுவத்திகள் எல்லாருக்கும் இருக்கும், நான் சொல்ல விழைவது இதுவே...
பணத்தின் பிடியில் நாம் ஏகமானதை நமக்கும், நம் குழந்தைகளுக்கும் தேர்வு செய்கிறோம், வாங்கி கொடுக்கிறோம், சிலது அவர்களுக்கு அக்கணம் பிடித்திருக்கிறது, நமக்கும் அவ்வாறே.
அதற்கப்புறம் அதுவும் ஒரு பொருளாகிவிடுகிறது அவ்வளவே. உயிர்ப்பில்லை.
நீங்கள் தேர்வு செய்யும் எல்லாவற்றிற்கும் ஒரு உயிர்ப்பு இருக்கவேண்டுமா, அதை உங்கள் நினைவலைகளோடு இசையுங்கள்,
வாங்கும் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு காரணம் கண்டுபிடியுங்கள், உணவுகளுக்கும் கூட.
பொருட்கள் வீணாகினாலும், நினைவுகளை சேமித்து வையுங்கள், இதை, இப்போது, இதற்காக, எடுத்தோம் என்ற நினைவுகள் இருக்கட்டும்,
சில சமயம் நம்மில் பலருக்கு, தான் வாங்கிய பொருட்களாய் இருந்தாலும், இதை எப்போ எடுத்தோம்ம்,, எங்க வாங்கினோம் என்ற எண்ணம் எழக்கூடும்..
மதிப்பு 10 ரூபாயோ, 10 ஆயிரம் ரூபாயோ, அப்பொருட்களோடு நினைவுகளையும் முடிச்சிட்டு வையுங்கள். நினைவுகளுக்கு என்றுமே மக்கும் சக்தியில்லை..
பணத்தை டெப்பாஸிட் செய்து, வட்டியோடு சேர்த்து திரும்பி வந்த அதனை செலவழிக்கும் போது, நினைவினை மட்டும் நிறுத்தி வையுங்கள்.
குறைந்த பட்சம் பதிவிடவாவது, இல்லை, அதிகபட்சம் முதுமையின் கடைசி நாட்களின் தனிமையில் அசை போட்டு மென்று திங்க, உங்கள் நினைவுகளாவது உதவும்.

29 comments:
காத்திருந்து, கிடைத்த பொருட்களின் மகிழ்ச்சியே தனி.
இப்ப எல்லாமே தேவைக்கதிகமாக் கூடிப்போச்சு. மக்களின் வாழ்க்கை முறை மாறிவருதே.
பேசாம நினைவுகளைச் சேமிச்சுவையுங்க. கொசுவத்திக்கு நம்ம கிட்டே ஆர்டர் கொடுத்தால் மலிவு விலை. நாந்தான் ஹோல் ஸேல்:-))))
(ஏங்க அமித்து அம்மா உங்களுக்கு என்ன அவ்வளவா வயசு ஆகிப்போச்சு?)
\\"பணத்தின் ருசி...."\\
பசித்தால் ருசி தெரியாது என்பார்கள்...
ஆனால்
பசிக்க பசிக்க
புசிக்க புசிக்க
இன்னும் இன்னும் என்று கேட்க்கவைக்கும் ருசி உண்டு இதற்கு
ரொம்ப அழகா இழுதி இருக்கீங்க.
/*நம் விருப்பத்திற்கு ஒவ்வாத நிறமாய் இருப்பினும் சரி, கட்டாயத்தின் பேரில் அணிந்தாலும் சரி, அந்த நிறங்களும், உடைகளும் தந்த நினைவுகள், நாம் இப்போது ஆயிரம் ஆயிரமாய் கொட்டி கொடுத்து எடுக்கும் உடைகளில் ஒரு போதும் தெரிவதில்லை*/
ஒவ்வொரு முறை உடை எடுக்கும் பொழுதும் நான் நினைத்துக் கொள்வேன்.
/*மதிப்பு 10 ரூபாயோ, 10 ஆயிரம் ரூபாயோ, அப்பொருட்களோடு நினைவுகளையும் முடிச்சிட்டு வையுங்கள்*/
நல்ல கருத்து.
\\ஒன்றுமில்லா மாதக் கடைசியின் மிளகாய் கிள்ளி போட்ட சாம்பாரின் சுவை, இப்போது பருப்பை அள்ளிக் கொட்டி செய்தாலும் வருவதேயில்லை..\\
அமித்து அம்மா டச் கடைசியில் தானே வரும் இந்த முறை இடையில் வந்துவிட்டது.
அருமை
நல்ல கொசுவத்தி! நிறைய நினைவுகளைக் கிளறி விட்டது!! கடைசியல் ஒரு டச்சிங் மெசேஜ்!!
//தேன் மிட்டாய், தேங்காய் பிஸ்கேட், பால் ஐஸ் இப்படி ஏகப்பட்ட திண்பண்டங்களின் ஒன்றின் ருசி //
:-))..எடைக்கல் மிட்டாய், சிகரெட் மிட்டாய் அப்புறம் campco சாக்லெட்..இதெல்லாம் எங்கேப்பா??
நினைவுல நிக்கிற மாதிரியான பதிவு..
அமித்து அம்மானந்தமயி..
//பணத்தை டெப்பாஸிட் செய்து, வட்டியோடு சேர்த்து திரும்பி வந்த அதனை செலவழிக்கும் போது, நினைவினை மட்டும் நிறுத்தி வையுங்கள்.//
இது நல்ல தத்துவம்!!
//அம்மா திட்டிக் கொண்டே தரும் சில்லறைகளில் 10 பைசா தேன் மிட்டாய், தேங்காய் பிஸ்கேட், பால் ஐஸ் இப்படி ஏகப்பட்ட திண்பண்டங்களின் ஒன்றின் ருசி கூட//
புதுமைப் பித்தன்கள் கவனீப்பீராக !!!
பழசெல்லாமே அழகு தான்...இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு !!
உங்கள் கட்டுரை ஒரு கொசுவத்தி ஸ்டாண்டு.
சூப்பர் அமித்து அம்மா. ஒவ்வொரு தலைமுறைக்கும் பணத்தின் மதிப்பு மாறிக்கொண்டேதான் வருகிறது.
நல்லா எழுதியிருக்கீங்க
உங்களுக்கு தேன் மிட்டாய், தேங்காய் பிஸ்கேட், பால் ஐஸ் ...
எங்களுக்கு தேன் மிட்டாய், கமர்கட், இலந்தவடை, பால் ஐஸ் ...
உங்களுக்கு அஞ்சறைப் பெட்டியில், முந்தானை முடிச்சில், சாமி ஸ்டாண்டின் இடுக்கில்...
எங்களுக்கு கோவில் திருவிழாவுக்கு, மாட்டு பொங்கல் அன்று ஆசியுடன் கிடைக்கும் பைசா அந்த வருட முழுவதிற்கும்...
இரு முறை கிடைத்தால் "பூப் போட்ட பச்சைப் பாவாடை + மயில் பாவடை" என் தங்கைக்கு இரண்டு நீல கலர் ட்ரவுசர் எனக்கு ;))
வெள்ளிக்கிழமை “ஒலியும் ஒளியும்”, ஞாயிற்றுக்கிழமைகளில் மகாபாரதம்.
அட எங்க பாத்தாலும் இதேதான் நடந்துருக்கா???
அமித்து அம்மாவை இனி அம்சம்மா என்று கூப்பிட போறாங்க ... அவ்ளோ அம்சமா பகிர்ந்திருக்கீங்க உங்க நினைவுகளை.
சரி - விரைவில் தொடருறேன் என் நினைவலை பதிவுகளை :)
மிக்க நன்றி வர்ஷினி அம்மா.
//அழுது அடம்பிடித்து வாங்கிய கோடு போட்ட நோட்டில் இருக்கும் வாசமும், 50 பைசா வாடகை தந்து படித்த பழைய புத்தகமும் கொடுத்த வாசனை///
ஆஹா!
எனக்கு இப்ப தேன் மிட்டாய் ஞாபகம் வந்திருச்சு பாஸ் :((
//மதிப்பு 10 ரூபாயோ, 10 ஆயிரம் ரூபாயோ, அப்பொருட்களோடு நினைவுகளையும் முடிச்சிட்டு வையுங்கள். நினைவுகளுக்கு என்றுமே மக்கும் சக்தியில்லை..//
மனசை டச்சிய்ய நிகழ்வுகள் பற்றி சொல்ல சொல்லும் டச்சிங்க் வரிகள் :)))
அடடா.. என்ன அழகான பதிவு. மொத்த பதிவுக்குமே ஒரு பெரிய்ய ரிப்பீட்டு.!
துளசி கோபால் said...
பேசாம நினைவுகளைச் சேமிச்சுவையுங்க. கொசுவத்திக்கு நம்ம கிட்டே ஆர்டர் கொடுத்தால் மலிவு விலை. நாந்தான் ஹோல் ஸேல்:-))))
//
:-))
நன்றி மேடம் வரவுக்கும், ஊட்டத்திற்கும்,
பேசாம நினைவுகளைச் சேமிச்சுவையுங்க. கொசுவத்திக்கு நம்ம கிட்டே ஆர்டர் கொடுத்தால் மலிவு விலை. நாந்தான் ஹோல் ஸேல்:-))))
தெரியும் மேடம், உங்க கிட்ட இருந்து படிச்சதுதான் நிறைய டீச்சர்....
(ஏங்க அமித்து அம்மா உங்களுக்கு என்ன அவ்வளவா வயசு ஆகிப்போச்சு?)
என் நினைவுகளுக்கு வயசு கூடிக்கொண்டே வருகிறது, ஒரு பொண்ணு பொறந்து ஒரு வயசாகிடுச்சில்ல.
நன்றி ஜமால்
நன்றி அமுதா
நன்றி திகழ்
நன்றி முல்லை
:-))..எடைக்கல் மிட்டாய், சிகரெட் மிட்டாய் அப்புறம் campco சாக்லெட்..இதெல்லாம் எங்கேப்பா??
ஹைய் சிகரெட் மிட்டாய் - நன்றிப்பா கெளறிவிட்டதற்கு..
அமித்து அம்மானந்தமயி..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நன்றி கார்க்கி
நன்றி செய்யது
நன்றி கபீஷ்
நன்றி வித்யா
நன்றி இரவீ
ஆயில்யன் said...
ஆஹா!
எனக்கு இப்ப தேன் மிட்டாய் ஞாபகம் வந்திருச்சு பாஸ் :((
தின்றதிலியே குறியா இருங்க பாஸ்
நன்றி தாமிரா
//வாங்கும் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு காரணம் கண்டுபிடியுங்கள், உணவுகளுக்கும் கூட.//
கண்டுபிடிக்கலாம்தான்...........
//அஞ்சறைப் பெட்டியில், முந்தானை முடிச்சில், சாமி ஸ்டாண்டின் இடுக்கில், இப்படி எங்கிருந்தாவது துழாவி, வசவோடு சேர்த்துத் தரும் சில்லறைகள் தந்த இதத்தை, இப்போது ATM-ல் எடுக்கும் புது நோட்டு தருவதில்லை//
பாதி படிக்கும்போதே பழைய நெனப்பு!
நல்ல நினைவுகள்!
நானும் இதுபோல பதிவு போடுறேன்!
நீஙகள் சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மைதான். அப்போது கிடைத்த அந்த த்ரில் மகிழ்ச்சி, சர்வ சாதாரணமாய் இப்போ எல்லாம் கிடைக்கையில் இல்லவே இல்லை. இதை பலமுறை நானும் நினைத்து அசை போட்டிருக்கிறேன். எல்லார் மனசையும் ஆட்டி பார்த்து விட்டது இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்!
Excellant write up அமித்து அம்மா..என் கதையில் என் அப்பாவின் சட்டைப் பையிலிருந்தும், ஷெல்பில் உள்ள ஆஷ்ட்ரேயில் வைக்கப்பட்டிருக்கும் சில்லறைகளை அள்ளிடுவேன்...அப்பா ஒரு போதும் கோவித்துக் கொள்வதில்லை...(வேறு எங்காவது ஒளித்து வைத்துவிடுவார்). அதன் பின் அண்ணாச்சி கடைக்கு ஓடிப்போய் கமர்கட் (ஆஹா இப்ப எங்கிட்டாவது அது கிடைக்குதா), சிவிங்க மிட்டாய் (இப்போது பரிமாண வளர்ச்சியடைந்த அதை சூயிங்கம் என்கிறார்கள்), தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், ஆரஞ்சி வில்லை...இன்னும் சில கலர் கலர் மிட்டாய்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும்..வாங்கி பாவடையில் வைத்து வீட்டு மொட்டை மாடிக்கு வந்து தங்கைக்கும் தோழிக்கும் காக்கா கடி குருவி கடி எல்லாம் கடித்து கொடுத்து நானும் சாப்பிட்ட ருசி இப்போதும் நினைவின் அடி நாக்கில் தித்திக்கிறது... .நன்றீ அமித்து அம்மா..அடிப்படையில் நான் spendthrift...பணத்தின் அருமை இன்றுவரை எவ்வளவு அடிபட்டாலும் தெரியாது...கையில் காசிருந்தால் தீபாவளிதான்..ஆனால் கணவர் நீங்கள் சொல்வது போல ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதற்கான காரணங்கள் அவரிடம் இருக்கும்..அருமையான பதிவு..உங்களால் நான் ஒரு குட்டி ப்ளாஷ்பேக்கிற்கு சென்று வந்தேன்....
//மதிப்பு 10 ரூபாயோ, 10 ஆயிரம் ரூபாயோ, அப்பொருட்களோடு நினைவுகளையும் முடிச்சிட்டு வையுங்கள். நினைவுகளுக்கு என்றுமே மக்கும் சக்தியில்லை..//
அருமை அமித்து அம்மா.
அமிர்தவர்ஷினி அம்மா,
பொருளாதாரத்தில் ஒரு definition
உண்டு.
If supply is more demand will be less. எந்த ஒரு பொருளும் அள்வுக்கு அதிகமாக் கிடைத்தால் அதற்கு மவுசு கம்மி.
கிழ் உள்ள வரிக்கு பொருந்தும்.
அதான் வாழக்கை ருசிக்கவில்லை
பணம் /தனி மனித உரிமை supply இப்போது ஜாஸ்தி.அதான் வாழக்கை ருசிக்கவில்லை.(demand less)
//ஆயிரத்திற்குள் அடங்கும் நோட்டுக்குள் ..... பொருளாதார சுதந்திரமும், தனி மனித உரிமையும்//
If supply is less demand will be more.எந்த ஒரு பொருளும் அபூர்வமாக கிடைத்தால்அதற்கு மவுசுஜாஸ்தி..கிழ் உள்ள வரிக்கு பொருந்தும்.அதான் வாழ்க்கை ருசிக்கிறது.
//அழுது அடம்பிடித்து வாங்கிய கோடு போட்ட நோட்டில் படித்த பழைய புத்தகமும் //
பொருளாதார சுதந்திரமும், தனி மனித உரிமையும் supply கம்மி அப்போது. அதான் அடம்(demand) ஜாஸ்தி.
ஒலியும் ஒளியும் என்ற் supply கம்மியாக இருந்தது அப்போது அதான்அதைப் பார்ப்பதற்கு ஜாஸ்திdemand.இப்போது
ஒலியும் ஒளியும் என்ற supply ஜாஸ்தி அதனால் demand கம்மி.எந்த சேனலைத் திறந்தாலும் ஒலியும் ஒளியும் தான்.
//வெள்ளிக்கிழமை “ஒலியும் ஒளியும்”, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிய திரைமலர், காலையில் போடும் டாம் அண்ட் ஜெர்ரி,//
ரஜனி (உடை விஷயத்தில்) ஒரு சாதரண ஜிப்பாதான் போடுவார் பொது
இடங்களுக்கு வ்ரும் பொழுது.ஏன்?
உடை supply ஜாஸ்தி.எல்லாம் அனுபவித்து விட்டார். அதான் demand இல்லாமல் ஒரு சாதரண் ஜிப்பா.
கண்டெக்கராக இருந்த சமயத்தில் தின்மும் இதற்கெல்லாம் ஏங்கினார். ஏன்? அப்ப இது supply கம்மி. so
demand is more.
நீங்கள் எல்லா விஷயங்களிலும் இதைப் பொருத்தி பார்த்து எனக்குச் சரியா என்று சொல்லவும்.
நல்ல கொசுவத்தி
நம்ம பேவரிட் தேன்மிட்டாயும், அரைநெல்லிக்காயும்தான். அப்பப்ப பக்கத்தில இருக்கிற கடலை மிட்டாய் கம்பெனிக்கும் ஓடிடுவோம். ம்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...
Post a Comment