30 September 2008

கஸ்தூரியும், அமிர்தவர்ஷினியும்



நேற்று இரவு 7 மணிக்கு கஸ்தூரி என்னும் சீரியல் TV-யில் ஓடிகிட்டிருந்தது.
வழக்கம் போல நானும் என் அமித்துவும் சீரியஸாக பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
சட்டென என் அமித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். என் மாமனார் சிரித்துக்கொண்டு இருந்தார்.
விசயம் இதுதான்: சீரியல் முடியும் போது அதில் ஒரு பெண்மணி பூஜை அறையில் கற்பூர ஆரத்தி காட்டி மணி அசைப்பதைப் போன்ற காட்சி.
இது போதாதா அமித்து சாமி கும்பிட.
அவள் சாமி கும்பிட்டு விட்டு மறுபடி பொம்மை விளையாட்டுக்கு வந்ததுதான் ஹை-லைட்

10 comments:

சந்தனமுல்லை said...

//அவள் சாமி கும்பிட்டு விட்டு மறுபடி பொம்மை விளையாட்டுக்கு வந்ததுதான் ஹை-லைட்//

:-)))..சோ க்யூட்!!

குழந்தைகள் தான் என்னமா அப்சார்வ் பண்றாங்க!!

குடுகுடுப்பை said...

பெண் குழந்தைகள் இந்த விஷயத்தில் கில்லாடிகள், உங்க தம்பி(நாந்தாங்க) பொண்ணுக்கு 5 வயசு ஆகுது சாமி கும்பிடுறதுன்னா ரொம்ப இஷ்டம்.

வல்லிசிம்ஹன் said...

எனக்காக ஒரு படியாவது வச்சு,பொம்மைகள் வைங்கப்பா.
உள்ள சுத்தம் போறும்.அவ சாமி கும்பிடுற அழகைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. எங்க கிருஷ்ணாவும் மெய்ம்மறந்து உம்மாச்சி காப்பாத்து சொல்லிட்டு ஓடிடுவான்:)அண்ணாவோட போட்டி!!

Anonymous said...

அழகு :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா
நன்றி சந்தனமுல்லை. (நீங்கள் சொல்வது சரி)
தம்பி (,,,,,) எப்படிப்பா இருக்க..., ஹரிணி எப்படி இருக்கா?
நன்றி வல்லிம்மா செய்றேன்.
நன்றி தூயா தங்களின் முதல் வருகைக்கு.

Princess said...

Good Girl, Amithu :)

SK said...

:-)

So cute. சாமி கும்பிடும் போது அதோட விளையாட்டோட விளையாட்ட ஒவ்வொரு காரணத்தையும் சேத்து கொஞ்சம் சொல்லி கொடுங்க. இப்போவே கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்ட பின்ன தெளிவா இருப்பாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks Saawariya

Thanks SK, thanks for your advice

Unknown said...

Chooo cute...!! :))

cheena (சீனா) said...

மழலைகளின் விளையாட்டே விளையாட்டு. விளையாடிக் கொண்டிருக்கும் எங்கள் பேத்தியை அழைத்து குரு பிரம்மா சொல் என்றால் - சில விநாடிகளிலேயே வேக வேகமாக மழலையில் கூறி விட்டு "ஆமென்" என்று முடித்து விட்டூ ஒரே ஒட்டமாக ஓடியெ விடுவாள் பாதியில் விட்ட விளையாட்டினைத் தொடர.

இதெல்லாம் அனுபவிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அமித்து அம்மா

செல்லம் அமிர்த வர்ஷினிக்கு அன்பு முத்தங்களுடன் கூடிய ஆசிகள்.