25 September 2008

ஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல்லை)







ஏன் அமிர்தவர்ஷினி பத்தி எதுவும் எழுதல..?
என்று "சந்தனமுல்லை" கேட்டதற்கு பதில் இதோ:
ஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல்லை)

10 மாதமே ஆகிறது
ம்மா, ப்பா, தாத்தா, யா, ந்ன்னா என்று.

செல்போனை கொடுத்தால் அதை வாங்கி வாயை நோக்கி வைத்துக் கொண்டு
ஆஆன் ஆஆஆன்என்று செய்யும் அலம்பல்
என்னவென்று சொல்ல

யார் சொல்லிக்கொடுத்தார்கள்
கை தட்ட
தெரியவில்லை

போன வாரம் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த போது
நான் கையை உயர்த்தி
அண்ணாமலைக்கு அரோகரா என்று சொல்லியதைப் பார்த்து
அதிலிருந்து இரண்டு கையையும் மேலே உயர்த்தி உயர்த்தி

பின்பு நெஞ்சிடம் வைத்து
சிரித்துக் கொண்டே சாமி கும்பிடும் அழகு

வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையாரை பார்த்து
தினமும் காலையில் இரு கை கூப்புகிறாள்

குட் மார்னிங் சொல்ல ஆரம்பித்து வைத்து இருக்கிறார்
அவளின் தாத்தா
அதன்படி அனைவருக்கும் நெற்றியில் கை வைத்து குட் மார்னிங்

சொல்ல மொழியில்லை
மழலையின் பேரின்பத்தை

12 comments:

சந்தனமுல்லை said...

வாவ்..வாவ்..வாவ்!!

//போன வாரம் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த போது
நான் கையை உயர்த்தி
அண்ணாமலைக்கு அரோகரா என்று சொல்லியதைப் பார்த்து
அதிலிருந்து இரண்டு கையையும் மேலே உயர்த்தி உயர்த்தி
பின்பு நெஞ்சிடம் வைத்து
சிரித்துக் கொண்டே சாமி கும்பிடும் அழகு//

சோ க்யூட்!

வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் அமிர்தவர்ஷினிக்கும்!! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி
என்னை எழுத தூண்டியதற்கும்
பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்களுக்கும்

அமுதா said...

/*ம்மா, ப்பா, தாத்தா, யா, ந்ன்னா என்று*/
குழலினிது, யாழினிது என்பர்...மழலையில் நனையுங்கள்... நாங்களும் நனைகிறோம்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks for your visit and comment madam

புதுகை.அப்துல்லா said...

அதிலிருந்து இரண்டு கையையும் மேலே உயர்த்தி உயர்த்தி
பின்பு நெஞ்சிடம் வைத்து
சிரித்துக் கொண்டே சாமி கும்பிடும் அழகு

//

ஆஹா நினைக்கும் போதே இனிக்கிறது. உண்மைதான் சொல்ல மொழியில்லை
மழலையின் பேரின்பத்தை

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றிகள் பல அப்துல்லா சார்

தங்களின் வருகைக்கு

சந்தனமுல்லை said...

அமிர்தவர்ஷினியை பார்க்க ஆசையாயிருக்கு! :-)

வல்லிசிம்ஹன் said...

குழந்தை தரும் இன்பத்தை விட பெரியது ஏஹு இருக்க முடியும். அதுவும் மழலையும், ச்சிரிப்பும் சேர்த்து மயக்கிவிடும்.

கைகூப்பும் குழந்தைகளைப் பார்த்தால் மனம் நெகிழ்ந்துவிடும். நன்றி அம்மா.அமிர்தவர்ஷினிக்கு பல்லாயிரம் ஆசீர்வாதங்கள்.

சந்தனமுல்லை said...

இதுக்கு எதுக்குங்க நன்றில்லாம் சொல்லிக்கிட்டு? :-) உங்க ப்ரொபை-ல்ல போட்டிருந்ததை பார்த்துக் கேட்டேன்..u will be having a fun with your kid!! தொடர்ந்த் அப்டேட் பண்ணுங்க!!

cheena (சீனா) said...

ஆகா - அமித்துவின் படலம் - நல்வாழ்த்துகள். தொடர்க - மழலை இன்பம் மகிழ்ச்சி. அலைபேசியில் யாரிடம் பேசுகிறாள். அமித்து அம்மாவிடமா ? நன்று நன்று. இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கும் செயல்கள் அமித்துவின் நல்வாழ்வின் தொடக்கங்கள்.

cheena (சீனா) said...

பதிவின் வண்ணம் மாற்றலாமே - படிப்பதற்குக் கடினமாக உள்ளது.

Anonymous said...

//செல்போனை கொடுத்தால் அதை வாங்கி வாயை நோக்கி வைத்துக் கொண்டு





ஆஆன் ஆஆஆன்என்று செய்யும் அலம்பல்




என்னவென்று சொல்ல




//



ஸோ கியூட்



அன்புடன்,

அம்மு.