01 December 2009

ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்கள்

வாரத்துக்கு ஒரு ஒளியும் ஒலியும், திரைமலர், ஒரு தமிழ் படம், டாம் & ஜெர்ரி, லாரல் & ஹார்டி, சார்லி சாப்ளின்னு எவ்வளவோ அழகா போச்சு வாழ்க்கை. இதுல ஒளியும் ஒலியும் போடும் போது கரண்டு போச்சுன்னா மகனே! அந்த கரண்ட்காரனுக்கு விழுற வசவ கேட்டான்னா கண்டிப்பா அவன் தொங்கிடுவான், அப்படியிருக்கும். பத்து பேருக்கு ஒத்த பேர் வீட்டுல டிவி, ஒலியும் ஒளியும் பார்க்கறதுக்கு நாலணா, படத்துக்கு எட்டணா ந்னு இருந்த சில்லரை வாழ்க்கையே நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா இப்ப போடுறாங்களே ரியாலிட்டி ஷோன்னு ஷ்ஷ் ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே.

நீயா நானான்னு ஒரு ப்ரோக்ராம்,அதுல ஒரு அம்மணியோட காதல் கணவர் அவங்ககிட்ட ஐ லவ் ஊ, ச்சே யூ ந்னு சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சுன்னு ஓ... ந்னு அழ, அந்த காம்பியர் மத்தியஸ்தம் செய்ய, பிற்பாடு கணவர் வந்து ஐ லவ் யூ ந்னு சொல்ல.அந்த அம்மணி ஆனந்தக்கண்ணீர் விட்டு மீண்டும் விட்ட எடத்துல இருந்து அழ ஆரம்பிக்கிறாங்க. இதுக்கு என்ன ரீஸன்னு கேட்டா அவர் அவுங்கள ஹேமூ ந்னு கூப்பிட்டும் அஞ்சு வருஷம் ஆச்சாம். இப்பல்லாம் முழுப்பேர சொல்லிதான் கூப்பிடறாராம். அய்யகோ.
இந்த மாதிரி விவகாரத்தையெல்லாம் கணவன் மனைவி இருவரும், இந்த ப்ரோக்ராமுக்கு அப்ளை செஞ்சு,நாலு பேர் இல்ல நாப்பது லட்சம் பேரு பார்க்கத்தான் சொல்லனுமா? நாலு சுவர் லேதா?

அடுத்து பாய்ஸ் & கேர்ள்ஸ் நு ஒரு ப்ரோக்ராம், இதுல ஒன்னு சண்ட போடுவாங்க இல்ல அழுவாங்க, டேன்ஸ் ஆடுவாங்களான்னு கேட்டா அதுலாம் தெரியாது, நான் பார்த்த ட்ரைலர் கிளிப்பிங்க்ஸ்லலாம் சண்டை போடுறதையும், அழுவதையும் தான் மாத்தி மாத்தி காட்டுனாங்க.

ஆச்சா, அப்புறம் அணு அளவும் பயமில்லை, ஹைய்யோ இத பார்க்க நமக்குத்தான் பயமில்லாம இருக்கனும். மேல இருந்து குதிக்கறேன், தண்ணில தாவறேன், ஐஸை ஒடைக்கறேன் செய்யுற குரங்கு சேஷ்டைல பாதி அக்காவுங்க ஒக்காந்து ஓ ந்நோ, என்னால முடியல, சம்திங்க் குத்திங்க் அப்படின்னு கத்திங். ஒரு நாளு ரெயில்வே ஸ்டேசன் பக்கம் அது இதுன்னு வந்து பாருங்க அம்மணிங்களா, ஏழெட்டு மாச வயித்து சுமையோட ரெண்டு கையில நாலஞ்சு வெயிட்டான பேகு இல்லனா தலையில கொய்யாக்கா கூடை சுமந்துகிட்டு, ட்ரெயின் நின்னு புறப்படற ரெண்டு நிமிஷ கேப்புல அடுத்த கம்பார்ட்மெண்ட்டு இல்ல எதிர்த்தாப்புல ட்ரெயினுன்னு,ஓடி ஓடி சில்லரை வியாபாரம் செய்யுறவங்களை. ஹும்... எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் அழுவது ச்சே எண்ணுவதென்பது இழுக்கு.

ஓவர் டூ சன் டி.வி.

ராஜா, ராணின்னு என்னன்னமோ பேரு வெச்சு ப்ரோக்ராம் போட ஆரம்பிச்சுருக்காங்க. ஆடுற ஆட்டத்தைப் பார்த்தாலே பயம்மா இருக்கு, யார் யாரெல்லாம் நடுவரா வரப்போறாங்களோன்னு நெனச்சாலே கதி கலங்குது.

அடுத்தாப்புல சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட்டான (?) டீலா நோ டீலா, ஏங்க அம்மிணி, தெருவுக்கொரு பேங்க்கு வெச்சுக்கிட்டு, உடம்பைக் குறைக்கறதில இருந்து, காரு, கப்படா எல்லாத்துக்கும் லோனு தராங்களே அவங்க எல்லாம் உங்க கண்ணுல பட மாட்டாங்களா, போயும் போயும் இந்த ப்ரோக்ராம் தானா கெடச்சது காரு வாங்க, கடைசியில இவுங்க வாங்குனாங்களான்னு தெரியல.
வீட்டுல டென்ஷனாகற மாதிரியே டி.வி.லயும் டென்ஷனாகிட்டாங்க போல. பாவம் வீட்டுக்காரர், அவர் வேற ஆறுதல் சொல்ற மாதிரி சீன் போட வேண்டியதா போச்சு.

இப்படியா போனவாரம், கொடுமை கொடுமைன்னு சானல் மாத்திக்கிட்டே போனா அங்க மூணு கொடுமைங்க ஒன்னா ஒக்காந்துட்டு ஜீபூம்பா ந்னு சொல்லுச்சு பாருங்க, அப்படியே அலறி, எம்மா, என்னிய மாரியாத்தா கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போயி மந்திரிச்சு கூட்டியாம்மான்னு சொல்ல, பக்கத்துல இருந்த அக்கா பையன் இங்க இருந்து பாக்குற உனக்கே இப்படின்னா அந்த கேமராமேன் நெலமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படின்னான். என்னன்னு பாத்தா, மானாட மயிலாடல,இந்த வாரம் ஹாரர் எபிசோடாம் எல்லாரும் பேய் மாதிரி வேஷம் போட்டு ஆடுவாங்களாம். இந்த வாரம் மட்டுமா ஹாரர் வாரம், அப்ப இதுக்கு முன்னாடி ஆடுனதெல்லாம்?

இந்த கெரகத்தையெல்லாம் பார்க்குறதுக்கா இலவச கலர் டிவி குடுத்தீங்க?

இந்த தமிழ்சேனல்லாம் எப்பயுமே இப்படித்தான் பாஸ்னு, டிஸ்கவரி சேனலுக்கு மாத்துனா எங்கெட்ட நேரம், கக்கூஸ் கழுவுற ப்ரோக்ராம் போல, பேண்ட்டு சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர், ஆண்கள் டாய்லெட் அவ்வளவு மோசமில்லை, ஆனா பெண்கள் டாய்லெட் ஏன் இவ்வளவு அழுக்கா இருக்கு அப்படின்னு ஆரம்பிக்க, லேடிஸ் டாய்லெட் க்ளீன் செய்ய வந்த அம்மணி ஹி, ஹி, ஹி அது ஏன்னு எனக்குத் தெரியல, ஆன்னா புரியல அப்படின்னு மொக்கை தமிழாக்கத்தை கேட்க சகியாமல், இப்பல்லாம் கக்கூஸ்ல இருந்து ஆரம்பிச்சுட்டாங்களா இந்த வெவகாரத்தை அப்படின்னு யோசிச்சுக்கிட்டே டிவிய பாக்க தலைய நிமித்தினா, ஹைய்யோ அத காண சகிக்கலடா சாமீ, கடுப்புல டி.விய ஆஃப் செஞ்சதுதான் மிச்சம்.

சேனல்களில் வரும் இந்த பொய்யாலிட்டி ஷோ, சீரியல் என எல்லாத்தையும் எடுத்து ஏறக்கட்டி விட்டதில் கம்ப்யூட்டரில் ஆர்கேட் கேம்ஸும், பஸீல் கேம்சுமாய் பொழுதோட்ட முடிகிறது, என்ன, கண்ணு கொஞ்சம் எரியும். மேல சொன்ன கஷ்டத்துக்கு கண்ணெரிச்சலே தேவலாம்.

இருந்தும் இப்போதைய எனது ஃபேவரிட்டாக மூன்று நிகழ்ச்சி முன்னணியில் இருக்கிறது 1.டிஸ்கவரி சேனல் விலங்குகள் 2. பொதிகையில் ஒளிபரப்பப்படும் மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு (இவர கிருபானந்தவாரியாரின் பேத்தின்னு சொல்றாங்க) 3. ஆஹா என்ன ருசி, இந்த ப்ரோகிராமின் கடைசியில் ஒளிபரப்பப்படும் சொதப்பல் ஷாட்ஸ் சூப்பரா இருக்கும்.

எதையெடுத்தாலும் நாலு பேரை அழவிட்டால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்ற வேண்டுதல்களோடு தொடங்கப்படும் ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்களிலிருந்து தமிழ் கூறும் சானல் உலகத்துக்கும், விதி யாரை விட்டது என்று பார்க்கத்துவங்கும் நமக்கும் என்று விடிவுகாலம் வருமோ?

22 comments:

Anonymous said...

இதில் எந்த நிகழ்ச்சியும் பாத்ததில்லை. அதனால் விடு ஜூட்

சந்தனமுல்லை said...

:-)))) ஓ..அமித்து ரொம்ப சமத்தா இருக்காங்களே....டீவி பார்க்கல்லாம் விடறாங்களே!! அமித்து, இந்த போஸ்டை கொஞ்சம் கவனி!! :-))

உண்மைத்தமிழன் said...

உங்களை மாதிரியே எல்லாரும் அந்த அழுவாச்சி காவியங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்தால் தானாகவே அது காணாமல் போய்விடும்..!

தமிழ் அமுதன் said...

ஹா ...ஹா ... சூப்பரு விமர்சனம் ..! மானாட... மயிலாட .. அதபத்தி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்...!

☀நான் ஆதவன்☀ said...

இங்க இதையெல்லாம் பார்க்கலைன்னு சந்தோசப்பட்டாலும்.... இதே மாதிரி நிகழ்ச்சி மலையாளத்திலேயும் போடுறாங்க. எங்க ரூம்ல வேற வழியில்லாம பார்க்க வேண்டியதா இருக்கு. ஹிந்திலேயும் இந்த கொடுமை தான். இதுல மட்டும் எல்லா மொழியிலேயும் ஒற்றுமை இருக்கு

சென்ஷி said...

நாங்கல்லாம் டிவி பார்க்கறது இல்லைன்னு சொல்லி சந்தோசப் பட்டுக்க வேண்டியிருக்குது உங்க போஸ்ட் படிச்சு :-))

அருமை!

Vidhoosh said...

//இதில் எந்த நிகழ்ச்சியும் பாத்ததில்லை. அதனால் விடு ஜூட்//

ஆனா ரொம்ப நாள் முன்ன ஹிந்தில ஒரு மாமியார் மருமக ஷோ பார்த்து டிவிய அனைச்சைதுதான், இப்போலாம் tom and jerry show போன்ற நிகழ்ச்சிகள் காண்பிக்கும் cartoon network தவிர வேறெந்த சேனலும் ஓடுவதில்லை.

--வித்யா

அமுதா said...

:-)) ரொம்ப நாளாச்சு டி.வி பார்த்துனு முந்தாநேத்து தான் நினைச்சேன்... இப்ப அப்படி எல்லாம் ஒண்ணும் நினைக்கலை... நல்லா எழுதினீங்க... (பார்த்தீங்க!!!)

pudugaithendral said...

நாங்கல்லாம் டிவி பார்க்கறது இல்லைன்னு சொல்லி சந்தோசப் பட்டுக்க வேண்டியிருக்குது உங்க போஸ்ட் படிச்சு :-))//

ஆமாம். நான் நிம்மதியா இருக்கேன். நோ டீவி நோ டென்ஷன் :))

ஆயில்யன் said...

ஹம்ம்ம்ம் துன்பத்தில் இன்பம் மாதிரி நாங்க ஒன்லி ரசிக்கிறோம் நீங்க கஷ்டப்படுறத :)))

அ.மு.செய்யது said...

இந்தி ரியாலிட்டி ஷோக்கள கம்பேர் பண்ணும் போது நம்ம தமிழ் ரியாலிட்டி ஷோக்கள் எவ்வளவோ பரவாயில்லங்க..!!

ராகி கா சுயம்வர்னு ஒரு புரோகிராம் வந்துச்சு..அவ்வ்வ்வ் !!!!

நல்லா அலசி காயப் போட்டிருக்கீங்க !!!

Bee'morgan said...

அப்படியே வழிமொழிகிறேன் அமித்தும்மா.. நான் டிவி பாக்கறதே ஒரு நாளைக்கு அரை மணிநேரம்தான் இருக்கும்.. அந்த கொஞ்ச நேரமும் இதே மாதிரியே ஒவ்வொருத்தரா வந்து ஷிஃப்ட் போட்டு அழுதா எப்படி இருக்கும்.. ஸ்ஸ்ஸ்ஸ்.. ஸப்பா.. இப்போ அது கூட பாக்கறதில்லை.. கொஞ்ச நேரம் நிம்மதியாவாவது இருக்க முடியுது..

அப்படியே, 4 வருடங்களாக கணவுடன் போராடிக்கொண்டிருக்கும் தேவயாணி அக்கா பத்தியும் சொல்லியிருக்கலாமே.. ;o)

ஹுஸைனம்மா said...

//புதுகைத் தென்றல் said...
நோ டீவி நோ டென்ஷன் :))//

ஒரு பெரிய ரிப்பீட்டு...

ப்ரியமுடன் வசந்த் said...

:))))

குப்பன்.யாஹூ said...

why dont u watch Podigai and makkal tv

Ungalranga said...

நானும் இந்த கொடுமையெல்லாம் பாக்குறவந்தான்..
ஆனால் ஒரு மாத்துவழி வெச்சிருக்கேன்..எப்படியும் சனி ஞாயிறுகளில் டிஸ்கவரி மற்றும் ட்ரேவல் அண்டு லிவிங்குல நல்ல நிகழ்ச்சிகள் வரும்..அதை டைம் டேபிள் போட்டு ஆன்லைனில் ரிலீஸ் பண்ணி இருப்பாங்க..அதுக்கேத்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி பார்த்துக்குவேன்..

ஆனால்..மானாட..மயிலாட..ச்சீ..ச்சீ..

புளியங்குடி said...

தலைவரே விரும்பிப் பார்க்கும் மானாட மயிலாட நிகழ்ச்சியைக் குறை சொன்னதற்காக, நமீதா அக்கா சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல விமர்ச்சனம்......

புதுசா ரீலிஷ்னு பட விளம்பரத்த
5 நிமிசத்துக்கு ஒரு தடவை போடாறாங்களே
அதையும் சேர்த்துக்குங்க.......

"உழவன்" "Uzhavan" said...

நாங்க சொல்லல. நீங்க சொல்லிட்டீங்க. சபாஷ்!

பின்னோக்கி said...

//சம்திங்க் குத்திங்க் அப்படின்னு கத்திங்

சிரிப்பு தாங்க முடியலை

அடக்கடவுளே..டிஸ்கவரியயும் கவுத்துட்டீங்களே :(

Deepa said...

//இந்த மாதிரி விவகாரத்தையெல்லாம் கணவன் மனைவி இருவரும், இந்த ப்ரோக்ராமுக்கு அப்ளை செஞ்சு,நாலு பேர் இல்ல நாப்பது லட்சம் பேரு பார்க்கத்தான் சொல்லனுமா? நாலு சுவர் லேதா?
//

:-)))) LOL!

நட்புடன் ஜமால் said...

ஹையோ ஹையோ

சேம் பிளட் - இங்கன புலம்புகிட்டே இருக்கேன் டீலா நோ டீலா - என்னமோ கஷ்ட்டப்பட்டு சம்பாரிச்ச பணம் போச்சேன்ற மாதிரி ஒரு அழுகை -

அனு அளவும் --- விளம்பரம் கூட பார்க்க பிடிப்பதில்லை ...

எந்த சானலை எடுத்தாலும் ஒரு அழுவாச்சி சீரியல் அல்லது சினிமா சம்பந்தப்பட்ட காட்ச்சிகள்

இதற்கு யார் காரணம் - விளம்பரம் கிடைப்பது இது போன்ற நிகழ்ச்சிகளுக்குத்தான் - அதுவும் ஏன்னா நம்மளை மாதிரி மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பதாலத்தானே

எப்பதான் விடியுமோ ...