பாடல்கள் என்றுமே மனதைத் தாண்டி உயிரை வருடுவன. வாசிப்பில் எவ்வளவு அலாதி சுகமோ அது போல தனிமையில் பாடல் கேட்பதும். அனைவருமே இதை உணர்ந்தவர்கள் தான் எனவே அதிகப்படியாய் சிலாகித்து சொல்ல என்ன இருக்கிறது?
சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும், பார்க்கும் போது காண சகிக்காது. சில பாடல்கள் விஷுவல்களுக்காகவே பார்க்கத் தோன்றும், ஆனால் வரிகள் சொதப்பலாக இருக்கும். இரண்டும் ஒன்றாய் அமைவது வரம்.
நம் உணர்வுகளோடு இழைந்து வரும் பாடல்கள் நிறைய. பழைய பாடல்கள் தான் அதில் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன என்றாலும், கொஞ்சம் சமீபத்தில்(2007) வெளிவந்த கிரீடம் என்ற படத்தின் இந்தப் பாடல் மனதையும் கண்களையும் ஒரு சேர நிறைத்து சிலிர்க்க வைக்கும். ரொம்ப நாள் கழித்து இன்று இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. பல்விதமான உணர்வுகளின் ஊடே மாமாவும், சபரியும் இந்தப் பாடலை பார்த்துக்கொண்டே ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டதும் நினைவிலிருந்து மீண்டு வந்தது.
ராஜ்கிரணும், அஜீத்தும் நடித்த இதோ அந்தப் பாடலின் வரிகள். இந்தப்பாடலில் ராஜ்கிரணின் நடிப்புணர்வு அற்புதமாய் இருக்கும்.
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

நடைவண்டியில் நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரை சொல்லும் பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளை தாண்டி வளர்ந்ததினால் என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால் என் பாதை நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட

கிளி கூட்டில் பொத்திவைத்து புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு உயிர் இருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான், என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீயல்லவா
என் ஆதியந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீரில்

மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது.

18 comments:
கனவெல்லாம் பலித்தால்
வாழ்வெல்லாம் சுகம்தான்.
நல்லதொரு பகிர்வு அ.அம்மா :)
புதுப்பாடல்கள்ல என்ன இருக்கு என்ற பொதுவான அபிப்பிராயங்களால் பல நல்ல புதிய பாடல்களை கேட்க முடியாமலே போகுது. இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் உழைப்பு தெரியாமலே போகுது. அந்த வகையில் நான் ருசிக்காமல் விட்ட பாடல்... நன்றி
/*மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது.
*/
உண்மை. பகிர்வுக்கு நன்றி
//கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே//
ரொம்ப நல்ல பாடல்.
வரிகள் நல்லாருக்கு! பகிர்வுக்கு நன்றி அமித்து அம்மா! பாடல்கள் கேட்டே ரொம்ப நாளாகுது...
கனவெல்லாம் பலிக்குதே - நல்ல பொருத்தமான பாட்டாத்தான் போட்டிருக்கீங்க. உங்க டெரர் கனவுகள் பலிக்கறது பத்திதான் ஏற்கெனவே சொல்லியிருக்கீங்களே!
//மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது. //
ஆம்,அமித்தம்மா!
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அமித்து குட்டீஸ்க்கு!
" என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,"
வரிகள் மனதை வருடுகின்றன
நிஜத்தில் மாமனையும் சபரியையும் பார்பது போல உணர்வு எழுகிறது
அழகான பாடல்வரிகள் !!!
கிரீடம் படத்தின் மற்ற பாடல்களை கேட்டிருக்கிறேன்.
இந்த பாடலை இதுவரை கேட்டதில்லை.
யூடிப்பில் பார்த்து விட்டு வருகிறேன்.
வால் விண்மீன் !
விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்
விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் வின்மீண்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!
அமித்துவுக்காக நீங்கள் எழுதுவது போல நான் எழுதிய கவிதை.....
பொருந்துகிறதா பாருங்கள்.
அமித்துவுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
************
அமித்துவுக்காக நீங்கள் காணும் கனவுகள் யாவும் நிறைவேறட்டும்.
கனவெல்லாம் பலிக்கட்டும் :)
palikkattum...:D
நானும் ரசித்த பாடல் இது..பகிர்தமைக்கு நன்றி..
அனைத்தும் அருமையான வரிகள்..
http://www.indiashines.com/pranav-video-9219&tag=Kanavellaam%20Palikkudhe
அமித் எனும் நட்சத்திரம் ஜொலிக்கிறதே.
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எப்படியோ மிஸ் செய்திருக்கிறேன் இந்த இடுகையை.
மிக அழகான பாடல். பகிர்வுக்கு ரொம்ப நன்றி அமித்து அம்மா.
இன்ஸ்பயர் செய்த அமித்துக்குட்டிக்கு அன்பு முத்தங்கள்!
Post a Comment