23 November 2009

நவம்பர் 24, 2007

எண்ணியபோதெல்லாம் வீடியோவில் நிகழ்வுகளாக ஓடும் ஜூலை 3, 2006 எப்படி நினைவிலிருக்கிறதோ, ஆடியோவும் வீடியோவும் இல்லாமலேயே சுவாரஸ்யமான நிகழ்வுகளும், அதை ஒட்டிய நினைவுகளுமாய் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது நவம்பர் 24, 2007.

அமிர்தவர்ஷினி வந்தாள் - எங்கள் அகவுலகத்தை அழகிலும் அழகு செய்தாள்.

ங்கா,ங்கா என்று தொடங்கி... இப்போது சத்தீச்குமா.. எச்சோ என்று எங்களின் பெயரை உச்சரிக்கும் போது அக மகிழ்கிறது.

டே டே இருடா, வர்ரண்டா என்று அவள் சொல்லும்போது இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்து சிரித்துக்கொள்கிறோம்.

மகள் கேட்ட ஜெல்லியை வாங்கிவந்து இரவு ஒருமணிக்கு அவள் பக்கத்தில் வைத்துவிட்டு சிரிக்கின்ற எதிர்பார்க்கின்ற தந்தையின் உணர்வுகள் இதற்கு முன் நான் பார்த்திராதது.

சோர்ந்து படுத்துவிட்டால், என்னா எச்சோ, என்னா எச்சோ என்னா ஆச்சு, என்று சுற்றி சுற்றி வந்து கேட்கும் போது சட்டென்று துள்ளியெழுந்துவிடும் மனம். அம்மாவாய் நான் அவளுக்கு அதிகம் செய்ததில்லை,ஆனால் ஒரு மகளாய் எனக்கு அவள் அதிகம் தந்திருக்கிறாள். அமித்தம்மா என்ற ஒரு வார்த்தை போதாதா! சட்டென்று மனம் நிறைந்த உணர்வெழுகிறது.

பாப்பாக்கு ஆப்பி பத்தடே வா?

மங்க்கி மாதி கேக்குதான் வேணும்.

மூண்ணு டெச், யெல்லோ கலர்
என்று தன் விருப்பங்களெல்லாம் முன் மொழியப்படுகிறது.

பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதைவிடவும் என்ன இருக்கிறது வாழ்வில்??? சொல்லப்போனால் நம் பிறப்பே அதற்குத்தானே :)

நாளை (24.11.2009) அமிர்தவர்ஷினியின் பிறந்தநாள்.

தொடர்ந்து பயணித்துவரும் நண்பர்களே!

வலைப்பூவின் வாயிலாக அன்பில் நான் நனைந்த நிறைய நிகழ்வுகள் / நெகிழ்ச்சிகள் உண்டு, அதே போல் உங்களின் வாழ்த்துக்கள் அவளுக்கு மிகவும் முக்கியமானது. வளர்ந்தபின் அமித்து இதைப்படிக்க நேரிடும்போது, உங்கள் ஒவ்வொருவரையும் கேட்க முனையும் அந்த ஆச்சர்ய கணத்தை எதிர்நோக்கி....

நட்புடன்
அமித்து அம்மா

56 comments:

பைத்தியக்காரன் said...

அன்பின் அமித்து அம்மா,

அமிர்தவர்ஷினிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Vidhoosh said...

லேபிள்ல தெறிக்கிற பெருமையை நன்னாவே உணர முடிகிறது "அமித்து அம்மா" :)

அமிர்தவர்ஷினிக்கு காலமெல்லாம் இந்த அன்பு எல்லோரிடத்தும் கிடைத்துத் திளைக்கவும் வாழ்த்துகிறேன்.

அன்றைய தினம் நீங்க அம்மாவா பிறந்ததற்காக உங்களுக்கும்.

-வித்யா

ஜீவன் said...

//அமித்தம்மா என்ற ஒரு வார்த்தை போதாதா! சட்டென்று மனம் நிறைந்த உணர்வெழுகிறது.//
அழகாய் சொன்னீங்க..!

அமிர்த வர்ஷினிக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இப்படிக்கு ,
அட்சய நந்தினி
அமிர்தவர்ஷிணி
வனிதா தமிழ் அமுதன்
தமிழ் அமுதன் (ஜீவன் )

பிரியமுடன்...வசந்த் said...

அமிர்தவர்ஷினி

கடும் வெயிலிலும் மழை பொழிவிக்கும் ராகத்தின் பெயர் கொண்டவள்..

இன்று போல் என்றும் நீ வாழ்க வளமுடன்..

சத்ரியன் said...

//நவம்பர் 24, 2007.

அமிர்தவர்ஷினி வந்தாள் - எங்கள் அகவுலகத்தை அழகிலும் அழகு செய்தாள்.//

அமிர்தவர்ஷினிக்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்."

வாழ்த்துகளுடன்,
சாரலின்பா குடும்பத்தினர்கள்.

சந்தனமுல்லை said...

அமித்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

S.A. நவாஸுதீன் said...

ஓஹ். ரொம்ப சந்தோசம். தங்க மகள் அமிர்தவர்ஷினிக்கு இந்த மாமாவின் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (இன் அட்வான்ஸ்)

சாராம்மா said...

happy birthday amithu.many many happy returns of the day. may god bless amithu.

with regards
anita

KVR said...

அமித்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - நிலா, கோமதி & ராஜா

Special wishes from Nila - ஆப்பி பாத்டே டூ யூஊஊ

ஹுஸைனம்மா said...

அமிர்தவர்ஷினிக்கு முதல் வாழ்த்து என்னுடையது!!

இனிமையான பிறந்த நாட்கள் என்றும் அமையட்டும் வர்ஷினி.

SK said...

Happy Birthday Amithu!!!

ராமலக்ஷ்மி said...

அமிர்தவர்ஷினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

அ.மு.செய்யது said...

அமித்துவுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !!!!

வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை
வேண்டுகிறோம்.

ஈரோடு கதிர் said...

அமித்துக்கு வாழ்த்துகள்

அமுதா said...

அமித்து குட்டிக்கு மழையென பொழியட்டும் நல்வாழ்த்துக்கள். எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ எங்கள் அன்பு வாழ்த்துக்கள்

ச.முத்துவேல் said...

அமித்துவை நேரில் பார்த்ததில்லையென்றாலும், நன்கறிந்ததுபோல் உணரும் வகையில் இதுவரை எழுதியிருக்கிறீர்கள். வரிஷினிக்கு என் அன்பு கலந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

பிறந்ததேதியக் கூட்டினா 6 வர்றவங்க பொதுவா பெரிய ஆளா, பிரபலமானவங்களா இருப்பாங்க. நிறைய உதாரணம் சொல்லலாம். அமித்துவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் ஆயிரம்!

Deepa (#07420021555503028936) said...

செல்லக்குட்டி அமித்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குழந்தை எல்லா சிறப்பும் வளமும் பெற்று வளர அன்புடன் வாழ்த்தும்...
நேஹாவும் அவள் அம்மா, அப்பாவும்!

//டே டே இருடா, வர்ரண்டா என்று அவள் சொல்லும்போது இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்து சிரித்துக்கொள்கிறோம்.//

:-)) அழகு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி.. :)

காமராஜ் said...

அன்பால் நெய்த கவிதையும்
வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட பூங்கொத்தும்
ப்ரியங்களை மிதக்கவிடும் ஜொலிப்புகளுமாக

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அமித்துவுக்கு.

என்ன சாப்பாடு.

அம்பிகா said...

அமித்து செல்லத்துக்கு
அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வர்ஷினி :)

வாழ்த்துகளை சொல்லிடுங்க அமித்து அம்மா :)

குந்தவை said...

Happy Birthday Baby.

Rajalakshmi Pakkirisamy said...

Happy B'day Kutty :)

Kathir said...

பாப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

மனசு
நெறஞ்ச
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்டா
அமித்து!

sujatha said...

Dear Amirdha varshini,

Many more Happy returns of the day.

Vaazhga Valamudan !!!

Anbudan
Sujatha.

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

அமித்துக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மூண்ணு டெச், யெல்லோ கலர்ல வாங்கிக்குடுத்தாச்ச அமித்தம்மா?

HVL said...

Many more happy returns of the day, Amitthu.

Dr.Rudhran said...

best wishes for the baby

புதுகைத் தென்றல் said...

happy birthday amithu.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமித்து குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்ஷி said...

அமித்துக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

தமயந்தி said...

அமித்துக்கு உம்மா..

தீஷு said...

அமித்து குட்டிக்குப் பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள்.. பாப்பா எல்லா வ‌ள‌ங்க‌ளும் பெற்று வாழ‌ வாழ்த்தும், தீஷு, தீஷு அப்பா ம‌ற்றும் அம்மா..

கிருஷ்ண பிரபு said...

நல் வாழ்த்துக்கள் சாரதா... என் பங்காக கொஞ்சம் அன்பை அவளிடம் பரிர்ந்துகொல்லுங்கள். Give some chocolates to amithu from my side.

காதல் கவி said...

MANY HAPPY RETURNS OF THE AMITHTHU

graham said...

அமித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மணிநரேன் said...

அமிர்தவர்ஷினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)

தாரணி பிரியா said...

அமித்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நவீனன் said...

அமித்து அம்மாவையும், அப்பாவையும் (மன்னிக்கவும் உங்க கணவர் பெயர் தெரியவில்லை) இப்புவிக்கு அறிமுகப்படுத்திய குட்டி தேவதை அமிர்தவர்ஷினிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

" உழவன் " " Uzhavan " said...

அமித்துச் செல்லம்.. இன்னிக்கு உன் பெர்த்டே வா..
இன்று நீ காணும் இதே மகிழ்ச்சி, உன் வாழ்வெங்கும் தொடர்ந்திட மனப்பூர்வமாய்ப் பிராத்திக்கிறேன்.
உனக்கு எங்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Uma Maheswaran said...

அமிர்தவர்ஷினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Bee'morgan said...

அமித்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
நல்ல வேளை.. இந்த நாளை மிஸ் பண்ணப் பாத்தேன்.. சரியான டைமிங்லதான் வந்திருக்கேன்.. :)

அந்த ஆச்சரிய கணங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. :)

सुREஷ் कुMAர் said...

//
அம்மாவாய் நான் அவளுக்கு அதிகம் செய்ததில்லை
//
ஆச்சரியமாய் இருக்கே.. எப்படி இப்படி நினைக்க தோன்றியது உங்களுக்கு..

அவள் பிறப்பதற்கு முன்பிருந்தே அவளுக்காக நொடிநொடியாய் பார்த்து பார்த்து வாழத்தொடங்கி இருப்பீர்களே..

ஒவ்வொரு நொடியும் அவளின் நினைவுகளுடன் அவளுக்காக வாழும்போது இப்படி எப்படி சொல்லத்தோன்றியது உங்களுக்கு..

सुREஷ் कुMAர் said...

ஆப்பி பர்த்டே அமித்து குட்டி..

nvnkmr said...

ohh
belated happy birthday to ur baby sister

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு

இது எத்தனாவது birthaday???

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமித்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் அனைவருக்கும் எங்களின் மனப்பூர்வமான நன்றிகள்.

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அமித்து.

செல்வநாயகி said...

அமித்துவுக்கு வாழ்த்துகள்.

பாலராஜன்கீதா said...

திருநிறைச்செல்வி அமிர்தவர்ஷிணிக்கு எங்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் அமித்க்கு!

Karthik said...

belated birthday wishes to amirdhavarshini!! :) :)

Rajkumar said...

Dear Amirdha Varshini

WISH YOU A VERY HAPPY BIRTH DAY. GOD BLESS YOU

http://www.youtube.com/watch?v=wFh-rX_Sfhs&feature=player_embedded

இரசிகை said...

nooru varusham santhoshamaa irudi yen chellak kutti...

muththangaludan

rasihai:)