25 March 2009

அமித்து அப்டேட்ஸ்

வர வர மாமியார் கதையாகிட்டே வருது அமித்து கதை, அதட்டல், மிரட்டல், அப்புறம் சேட்டைகள், பிடிவாதம் என லிஸ்ட் நீளுகிறது.
என் சமத்து பப்பி எங்கே காணோம் ? என்று அடிக்கடி அவளிடமே கேட்கிறேன். பதிலுக்கு மூக்கை தூக்கி ஒரு சுழிப்பு சிரிப்பு. என் நாத்தனார் பையன் (ஹரி, எல்.கே.ஜி) அவளுக்கு சிரிப்பழகி என்ற பட்டம் கொடுத்தது சரிதான் என்று தோன்றுகிறது.

கீழ்வீட்டில் இருக்கும் தாத்தாவிற்கு உடல் நடுக்கம், அதனால் ஒரு மாதிரி முனகல் சத்தம் அவரிடமிருந்து எப்போதும் வந்துகொண்டிருக்கும், நடக்கும் போதும், நிற்கும் போதும் என.
அமித்து இப்போ அவரை அப்படியே மிமிக்ரி. ம்ம் ஹூஹூம் ம்ம் ஹ்ஹூஉம் என பல்வேறு சத்தங்களுடன் உடம்பை வேறு சற்று குனிந்து கொண்டு, மேடம் மிமிக்ரிக்கு அடிக்கடி தயார் ஆகிடறாங்க.
அந்த தாத்தா மாடிக்கு துணி காயப்போட வருவாங்க. இந்தம்மா அவரைப் பாத்தவுடனே இந்த சத்தத்தை ஸ்டார்ட் செஞ்சிடுவாங்க. செய்து முடித்துவிட்டு அவங்களோட ஒரு ட்ரேட் மார்க் சிரிப்பை தந்துடுவாங்க நமக்கு.
இந்த மிமிக்ரி இப்போது யாராவது அழுதால், நான் தும்மினால், அவளின் தாத்தா இருமினால் என்று அதை அப்படியே செய்து காட்டவைக்கிறது அவளை.

அப்பா, ம்ம்மா, தாத்தா, ஆயா, அக்கா என்று அழகா ராகம் போட்டு இசைத்து கூப்பிடுகிறாள். எனக்கு மட்டும் ஒரு தடவை தான் ம்ம்ம்மா என்று சொல்வாள், பதிலில்லையெனில் அதிகாரமாக ச்சோ, என்று கூப்பிடுவாள்.

போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்கிறாள், அதற்குப்பிறகு ச்சுக்க்கா, த்துதாஅ, அல்லல்லா, த்துக்கல்லல்லா என்று நமக்கு புரியாத ஒரு பாஷை ஓடும், போனை கையில் வாங்க நாம் முயன்றால், மேடம் ஒரே அழுகைதான்.

பந்து மேல் பயங்கர ஆசை இருக்கிறது. பக்கத்து வீட்டில் புட்பால் இருக்கிறது. மாலை நேரத்தில் பசங்களெல்லாம் அதைதான் விளையாடுவார்கள். நான் அவளை தூக்கிக்கொண்டால் போதும், ம்ம்மா, பாலா, பாலா என்று பந்தை கை காட்டுவாள். இத்தனைக்கும் வீட்டில் 3 பந்துகள் இருக்கின்றது.
நேற்று ஒரு ஸ்மைலி பந்து (sponge ball) வாங்கித்தந்தேன். மேடம் அதை பார்த்தவுடன் ஒரே குஷி, ஹை ஹை என்று அந்த ஸ்மைலியை தொட்டுக்கொண்டு சொல்லிக்கொண்டிருந்தாள். தாத்தாவிற்கு கேட்ச் போடுமா என்றாள், ஏட்ச் ஏட்ச் என்று பந்தை போட்டுக்கொண்டு இருந்தாள்.
இன்று காலை பார்த்தால், பாதி ஸ்மைலியை காணோம். என் ஸ்மைலி அந்த பந்தில் இருந்த ஸ்மைலியை கடித்து துப்பி வைத்திருந்தது. அவளின் ஆயா, அமித்துவிடம் யாரும்மா இப்படி பாலை கடிச்சு துப்புனது, அம்மா நேத்து தானே வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க, இப்படி பண்ணி வெச்சிருக்கியேமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதற்கு அமித்து, ஆயா,.............. தாத்தா...... கட்ச்சி, கட்ச்சி. (தாத்தா பந்தை கடித்துவிட்டாராம்), சற்று நேரத்துக்கு பிறகு தாத்தா, அப்பாவாகியிருந்தது.

இப்போது அவளின் பெரியம்மாவிடம் போனில், அண்ணா, பாலா, பெய்ய பாலா என்று சொல்லிக்கொண்டிருக்கிறதில், காலையில் என் அக்கா மகன் போன் செய்து, ஞாயிற்றுக்கிழமை பாப்பாவுக்கு பெய்ய பாலா வாங்கிட்டு வரேன் என்கிறான்.
அந்த பந்து யாரிடம் கடி வாங்கப்போகிறதோ. வர்ஷினிக்கே வெளிச்சம்.

அவரின் தாத்தா நேற்று ரேஷனில் இருந்து கோதுமை, சர்க்கரை, கூடவோ பாமாயில் எண்ணெய் பாக்கெட்டும் வாங்கி வைத்திருந்தார். அந்த பையில் எண்ணெய் பாக்கெட் கொஞ்சம் வெளியே துருத்திக்கொண்டிருந்தது. அந்த எண்ணெய் பாக்கெட்டின் மீது, தற்போதைய முதல்வர் சிரித்துக்கொண்டிருந்தார். அமித்து அந்த எண்ணெய் பாக்கெட்டை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, தாத்தா தாத்தா என்று தலைவரை கையை காட்டிக்கொண்டிருந்தார்கள். :)))))))))))))))))))))))

மேடத்தின் குரல் எப்போதும் ஒரு அதிகாரத்தொனியோடுதான் இருக்கிறது. இந்தா இந்தா , ந்னானா, ந்னானாஆ என்று கொஞ்சம் சத்தமாகவும் ஆனால் அழுத்தமாக சொல்லுவாள்.
எதிர்வீட்டு கார்த்தி, தன்னை அண்ணா சொல்லு என்றே சொல்லுவான், விளையாடும்போது கூட அண்ணாகிட்ட கொடும்மா என்பான், ஆனால் அமித்து அழிச்சாட்டியமாக அவனை
கார்த்தீ, கார்த்தீ என்றே கூப்பிடுவாள். ராகேஷை அண்ணா என்றுதான் கூப்பிடுகிறாள், ஆனால் ராகேஷ் தன்னை அண்ணா என்று இவளிடம் சொன்னது இல்லை.

அகமகிழ்ந்து கொண்டிருக்கிறோம் அமித்துவின் அதிகாரம் கலந்த ஆட்சியில்.

30 comments:

நட்புடன் ஜமால் said...

\\சிரிப்பழகி \\

ஹையா! அழகாயிருக்கு

குடந்தை அன்புமணி said...

உள்ளேன் போட்டுக்கிறேன்.படிச்சிட்டு வர்றேன்.

குடந்தை அன்புமணி said...

படிக்க படிக்க இனிக்குதடா... குழந்தைகளின் மழலைக்குறும்பை...

நட்புடன் ஜமால் said...

\\அகமகிழ்ந்து கொண்டிருக்கிறோம் அமித்துவின் அதிகாரம் கலந்த ஆட்சியில்\\

அழகா பதிவு செய்திருக்கீங்க

கற்பனையில் மகிழ்கிறோம்.

சந்தனமுல்லை said...

:-)) கலக்கல் அப்டேட்ஸ்! நான் எபப்டி வளர்ந்துட்டேன் பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்குப்பா!

சந்தனமுல்லை said...

//எனக்கு மட்டும் ஒரு தடவை தான் ம்ம்ம்மா என்று சொல்வாள், பதிலில்லையெனில் அதிகாரமாக ச்சோ, என்று கூப்பிடுவாள்.//

ஆகா..அதிகாரம் தூள் பறக்குது போலிருக்குதே!

//அதற்கு அமித்து, ஆயா,.............. தாத்தா...... கட்ச்சி, கட்ச்சி. //

ewwwwwwwwwwww!

சந்தனமுல்லை said...

//போனை கையில் வாங்க நாம் முயன்றால், மேடம் ஒரே அழுகைதான்.//

ஆகா..ஆரம்பிச்சுடுச்சா..வெரிகுட்! :-))

அமுதா said...

ஆசையாக இருக்கிறது அமித்துவின் சேட்டைகளைக் காண. இனிது இனிது மழலை இனிது...

Unknown said...

ஹை இந்த முறை மிஸ் பண்ணாம குட்டி ராணி பத்தி தெரிஞ்சிக்க வந்துட்டேனே :))))))) அக்கா அமித்து ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்வீட் :))))))))))))) என்ன மாதிரியே சமத்தும் கூட ;))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க வீட்டுலயும் ஸ்மைலி பால் கடிக்கப்பட்டு எப்பவேணாலும் ரெண்டு பாதியா உடையர நிலையில் இருக்கு.. யாரு கடிச்சான்னு எங்களுக்கு தெரியும் அதனால் விசாரணைக்கமிசன்லாம் வைக்கலை.. :))

பெய்ய பால் பாப்பாவால தூக்கமுடியுமா.. ?

Poornima Saravana kumar said...

என் ஸ்மைலி அந்த பந்தில் இருந்த ஸ்மைலியை கடித்து துப்பி வைத்திருந்தது
//

ரசித்தேன்.. ரசிக்கிறேன்.. ரசித்துக் கொண்டேயிருக்கிறேன்:)))))

Poornima Saravana kumar said...

விளையாடும்போது கூட அண்ணாகிட்ட கொடும்மா என்பான், ஆனால் அமித்து அழிச்சாட்டியமாக அவனை
கார்த்தீ, கார்த்தீ என்றே கூப்பிடுவாள்//

ச்ச்சோ ஸ்வீட்:)

Poornima Saravana kumar said...

அழகு அமித்துவிற்க்கு இந்த அத்தையின் ஆசிகள்..

Poornima Saravana kumar said...

இனிதே தொடரட்டும் அமித்துவின் அட்டகாசங்கள்.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி, ஜமால்

நன்றி அன்புமணி, குடந்தை.

சந்தோஷப்படத்தானே குழந்தைகள் ஜமால்

அப்படியா நன்றி முல்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சந்தனமுல்லை said...

//போனை கையில் வாங்க நாம் முயன்றால், மேடம் ஒரே அழுகைதான்.//

ஆகா..ஆரம்பிச்சுடுச்சா..வெரிகுட்! :-))

ஆஹா பாருப்பா சந்தோஷத்தை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா

வாங்க ஸ்ரீமதி , உங்கள மாதிரியே சமத்தா...........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பெய்ய பால் பாப்பாவால தூக்கமுடியுமா.. ?
வாங்க முத்து,
ம், அதெல்லாம் இப்பவே பக்கத்து வீட்டு பால்ல ட்ரெயினிங்க் எடுக்கறாங்க மேடம் சாயந்திர வேளைகளில்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க பூரணி, நன்றி உங்கள் ரசிப்புக்கும், ஆசிகளுக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க பூரணி, நன்றி உங்கள் ரசிப்புக்கும், ஆசிகளுக்கும்.

narsim said...

//போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்கிறாள், அதற்குப்பிறகு ச்சுக்க்கா, த்துதாஅ, அல்லல்லா, த்துக்கல்லல்லா என்று நமக்கு புரியாத ஒரு பாஷை ஓடும்//

ம். தருணங்களின் தருணம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரசித்தமைக்கும் வருகைக்கும் நன்றி நர்சிம் சார்.

அபி அப்பா said...

\\பாக்கெட்டை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, தாத்தா தாத்தா என்று தலைவரை கையை காட்டிக்கொண்டிருந்தார்கள். :)))))))))))))))))))))))

\\

ஆஹா ஆஹா ஆஹா அமித் அமித்செல்லம் சூப்பர் சூப்பர்!!!

புதியவன் said...

//அப்பா, ம்ம்மா, தாத்தா, ஆயா, அக்கா என்று அழகா ராகம் போட்டு இசைத்து கூப்பிடுகிறாள். எனக்கு மட்டும் ஒரு தடவை தான் ம்ம்ம்மா என்று சொல்வாள், பதிலில்லையெனில் அதிகாரமாக ச்சோ, என்று கூப்பிடுவாள்.//

அதிகாரம் கூட அழகாகத் தெரிவது குழந்தைகளின் உலகத்தில் தான்...வர்ஷினிக்கு எனது வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா said...

//அகமகிழ்ந்து கொண்டிருக்கிறோம் அமித்துவின் அதிகாரம் கலந்த ஆட்சியில்.//

ம்ம்ம் வருங்காலத்தில் ஆட்சியில் அமர்ந்து கலக்கட்டும் அமித்து!!!
அன்புடன் அருணா

Deepa said...

//போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்கிறாள், அதற்குப்பிறகு ச்சுக்க்கா, த்துதாஅ, அல்லல்லா, த்துக்கல்லல்லா என்று நமக்கு புரியாத ஒரு பாஷை ஓடும், //

கேட்க வேண்டும் போல் ரொம்ப ஆசையாக இருக்கிறது.

நேஹா இபோது தான் ம்மா, காகா, தாத்தா என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.

ராம்.CM said...

அழகாக இருந்தது...ரசித்தேன்.

"உழவன்" "Uzhavan" said...

//வர வர மாமியார் கதையாகிட்டே வருது// வீட்டுல மாமியார் இல்லையோ? :-))

குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அழகுடன் ரசிப்பதில் அன்னைக்கு நிகர் அன்னையே.. அந்தவிதத்தில் அமி ரொம்ப கொடுத்துவைத்தவள்தான். அமிக்கு வாழ்த்துகள் இப்படிப்பட்ட அம்மா கிடைத்தமைக்காக.

ராமலக்ஷ்மி said...

//அதிகாரம் கலந்த ஆட்சியில்//
தொடர்ந்து அகமகிழ வாழ்த்துக்கள். அவ்வப்போது அப்டேட்ஸும் தாருங்கள்:)!

தமிழ் அமுதன் said...

குழந்தையின் அசைவுகளை நேரடியாய் அனுபவிக்கும் அதே உணர்வு உங்க பதிவை படிக்கும்போது ஏற்படுகிறது! இன்னும் சொல்ல போனால் அதைவிட அதிகமாகவே
ரசிக்க முடிகிறது! நன்றி !!!

- இரவீ - said...

சோ... ஸ்வீட்.