07 January 2009

பட்டாம்பூச்சி விருது

நண்பர் திரு. அதிரை ஜமால் (நட்புடன் ஜமாலாகிவிட்டார் இப்போது), எனது எழுத்துக்களால் கவரப்பட்டு (!?!) பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார்.

இந்த வருடத்தின் முதல் விருது, இந்த வயது வரைக்கும் இதுவே எனக்கு கிடைத்த முதல் விருது. நன்றி ஜமால்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே! உடன் என் மகளுக்கும் ( அவ பேரை வெச்சு தானே கடையை நடத்திட்டு வரேன்) ஏதோ மொதலுக்கு மோசமில்லாம ஓடிட்டு இருக்கு.

இனிமே இப்படியே ஓட உங்களோட ஆதரவு தேவை. ஏதோ பார்த்து செய்யுங்க மக்கா.

இதை நான் ஏழு பேருக்கு பகிர்ந்தளிக்கவேண்டும், இது இந்த விருதின் விதிமுறைகளில் ஒன்று.

இந்த விதிமுறையை மீறாமல் (ஆஹா, இந்த விதிமுறையையாவது ஃபாலோ செய்யறேனே), இப்போது பட்டாம்பூச்சி விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Now, the award goes to



the one and only (இந்தப் பேருல இவங்க ஒருத்தர்தான் இருக்கமுடியும், அப்புறம் என்ன ஒன் அண்ட் ஒன்லி, டூ அண்ட் த்ரீலி அப்படின்னு, உனக்குதான் பீட்டர்னா அலர்ஜியாச்சே, அப்புறம் எதுக்கு இந்த வெட்டி பந்தா)

1. சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)

2. ஆயில்ஸ் - அண்ணாச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. ஆயிரம் கோடி அன்பு நெஞ்சங்களில் நிறைந்தவர் (இது ஒரு எதுகை மோனைக்காக எழுதினேன், 1000ம் எல்லாம் இல்ல)
(கத்தாரின் கருப்பு சிங்கமே, தங்கைகளின் தங்கமே, தமிழகம் நீ இல்லாமல் தவிக்கிறது, பத்திரமாக வந்து சேருங்க)

3. கண்ணாடி - ஜீவன்( இவரைப் பத்தியும் உங்களுக்கு தெரியும், கொஞ்சமே எழுதினாலும், நிறைவா எழுதுவார்.
(தோட்டம் வைத்து “தண்ணி” ஊத்துவதில் ஆர்வம் அதிகம் என்று இப்பதான் தெரிந்துகொண்டேன்)

4. என் வானம் - அமுதா - (அம்மணியின் எழுத்துக்களும் அசத்தல் ரகமே, தன் பெண்களைப்பற்றியும், பொதுவாகவும் எழுதித் தள்ளுவார். திண்ணையின் கதை செம)

5. பொலம்பல்கள் - எஸ்.கே, எப்பவாச்சும் எழுதுனாலும், மெசெஜோட எழுதிடுவார்.

6. உமாஷக்தி - எழுத்தாளர், அறிமுகமே தேவையில்லை - இவரின் எழுத்துக்கு

7. என் தேவதையின் பெயர் மதி - அவ்வளவாய் அடையாளம் கண்டுகொள்ளப்படாத கவிஞர்.





(குறிப்பு: விருதை ப்ரேம் போட்டு, உங்க ப்லாக்ல மாட்டிடுங்க.)

19 comments:

ஆயில்யன் said...

விருதுக்கு நன்றி தங்கச்சி !

அ.மு.செய்யது said...

விருது பெற்ற உங்களுக்கும்,உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துககள்.

//நல்ல வேள !! நான் தரலாம்னு நினச்சிவங்க பேர நீங்க சொல்லல..//

ஆயில்யன் said...

//கத்தாரின் கருப்பு சிங்கமே//

ஒரு ச்சுமால் மிஸ்டேக்கு! & ராங்க் இன்பர்மேஷனு!

நானெல்லாம் அஜித் கலராக்கும் :)

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)//

எங்க பப்புவை கரீக்டா பாலோ பண்றதால (லேட்டஸ்ட் பாலோ-அப் //நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி//)

சரின்னு நாங்களும் குட் கேர்ள் பட்டத்தை ஆச்சிக்கு கொடுக்கிறோம்!

நட்புடன் ஜமால் said...

உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கு

வாழ்த்துக்கள்.

புதியவன் said...

விருது பெற்ற உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

SK said...

அக்கோவ் என்னது இது. :-)

இப்போ இந்தியா வர்றேன், இதுக்கு பதிவு இப்போதைக்கு எழுத முடியாது. திரும்பி வந்த அப்பறம் பிப்ரவரில எழுதறேன் .. சரியா.

விருதுக்கு நன்றி :-)

- இரவீ - said...

அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

விருதுக்கு நன்றி அமித்து அம்மா! எதிர்பாராமல் கிடைத்த பூங்கொத்து போல இருக்கிறது!

அப்துல்மாலிக் said...

விருது வாங்கியகிவிட்டது...
விருந்து எப்போ.....???
வாழ்த்துக்கள்..... பட்டாம்பூச்சி தோட்டம் அமைப்பதற்கு...

கணினி தேசம் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

அமுதா said...

விருது வாங்கி கொடுத்த அமித்து அம்மாவுக்கும், விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆஹா... அவார்டு கிடைச்சிடுச்சே... அவார்டு கிடைச்சிடுச்சே... இனி மிஸ் எனக்கு ஸ்டார் கொடுத்தாங்க, ஐஸ்க்ரீம் கொடுத்தாங்கனு சொல்ற என் பொண்ணுங்ககிட்ட நானும் பட்டர்பிளை வாங்கிட்டேன்னு சொல்லலாம்ல... ஹையா!!! ரொம்ப நன்றி அமித்து அம்மா...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

ஜீவா said...

////7. என் தேவதையின் பெயர் மதி - அவ்வளவாய் அடையாளம் கண்டுகொள்ளப்படாத கவிஞர்////

அமித்து அம்மாக்கு நன்றிங்க, என்னையும் உங்க பிளாக் குடும்பத்துல சேர்த்துகிட்டது , ஜமாலுக்கும் ரெம்ப ரெம்ப நன்றி என்னோட பிளாக்க பார்க்குறதுக்கும் ,பின்னுட்டமிடுவதற்கும்..

என்னை நீங்க "ஜிஜி" ன்னே கூப்பிடலாம் :)

ஜீவா said...

பிரேம் போட்டு என்னோட பிளாக்குல மாட்டியாச்சுசுசுசுசு ,,,,

சந்தனமுல்லை said...

விருதுக்கு நன்றி அமித்து அம்மா!
:-))

தமிழ் அமுதன் said...

/// கண்ணாடி - ஜீவன்( இவரைப் பத்தியும் உங்களுக்கு தெரியும், கொஞ்சமே எழுதினாலும், நிறைவா எழுதுவார்.
(தோட்டம் வைத்து “தண்ணி” ஊத்துவதில் ஆர்வம் அதிகம் என்று இப்பதான் தெரிந்துகொண்டேன்)///

ரொம்ப! நன்றிங்கோ!

butterfly Surya said...

அமுதா அவர்களால் எனக்கும் பட்டாம்பூச்சி விருது கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி..

உங்களுக்கு நன்றிகள் பல..

உற்சாகத்துடன்

சூர்யா

Karthik said...

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!
:)