நம்ம ஊஞ்சல் பதிவர் தாரணி பிரியா (கோயமுத்தூர் அம்மணி) கூப்பிட்டனுப்பிச்சாங்க (டேக் பண்ணியிருந்தாங்க) ஒரு தொடர் பதிவெழுத வழக்கொழிந்த தமிழ் சொற்கள் இந்த தலைப்புல.
எனக்கு ரொம்ப சந்தேகமே வந்துருச்சி, தமிழ்மொழியே வழக்குல இருக்கான்னு.
ஏன்னா நடு செண்ட்டர், டிச்சு குழி, தண்ணி டேங்க், வாட்டர் பாட்டில், டிக்கெட், ரிப்பேர், சுவிட்ச், ஃபேன், பேப்பர், லெட்டர் இப்படின்னு ஏகப்பட்ட ஆங்கிலச் சொற்கள் தமிழாகிடுச்சா, எனக்கு இப்ப எது தமிழ்னே ஒரு டவுட்டு, ச்சே சந்தேகம்.
வழக்கொழிந்த தமிழ் சொற்கள் - பேசாம தமிழ் விக்கிபீடியா லின்க் கொடுத்துடலாமான்னு கூட யோசிச்சேன். சரிப்பட்டு வரல.
அப்புறம் ரெண்டு, மூணு நாளா மக்கள் தொலைக்காட்சியெல்லாம் பாத்தேன். அங்கதானே வழக்கொழிந்த தமிழ் சொற்கள் உபயோகிக்கறாங்க.
நடுவண் அரசு, அண்மைச் செய்திகள் இப்படின்னு நெறைய.
எனக்குத் தெரிஞ்ச வழக்கொழிந்த சொற்கள் சில:
தளை - கட்டு, கைவிலங்கு
தடாகம் - குளம்
அன்னம் - சாதம்
தொன்மை - பழமை
இலக்கம் - எண்
விகிதம், குமிழி, மகவு, திண்மை, தமக்கை, மைந்தன்
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் வார்த்தை : தோழி / தோழமை
அடப்போங்க, எவ்ளோ நேரமா யோசிக்கிறேன். ஒரு வார்த்தை கூட தென்பட மாட்டேங்குது. அவ்ளோதான் மக்கா. (வர வர நான் மிகவும் குழல் விளக்காக மாறிவருகிறேன், கூப்பிட்டனுப்பிச்சாக் கூட எழுத முடிவதில்லை)
நேத்து ஆபிஸ்ல, ச்சே அலுவலகத்துல மேலதிகாரிகள் ரெண்டு பேர் பேசிக்கிட்டாங்க. திரு. திருமா கேட்டிருக்காராம், “தை” தமிழ் வார்த்தை இல்லை, சமஸ்கிருதம். பின் எப்படி அந்த மாதத்தில் தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடலாம்னு.
எது எப்படியோங்க, தமிழே வழக்கொழிஞ்சு போனாக்கூட ஒரே ஒரு சொல் மட்டும் வழக்காடிகிட்டு இருக்கும். அது “போர்”.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வலையுலகம் என்ற நல்ல நோக்கில், கீழ்கண்ட மூவரை தொடர்பதிவிட ஆணை, கட்டளை இல்லை மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்.
1. பப்புவின் ஆச்சி
2. என் வானம் அமுதா
3. கண்ணாடி ஜீவன்

20 comments:
ஆஹா - இங்கையுமா
சரி படிச்சிட்டு வாரேன்.
தடாகம், அன்னம், இலக்கம், தெரியும்.
தமக்கை - இன்னும் நாங்க உபயோகிக்கிறோம்.
//எனக்கு ரொம்ப சந்தேகமே வந்துருச்சி, தமிழ்மொழியே வழக்குல இருக்கான்னு.
நிறைய பேருக்கு அந்த சந்தேகம் உண்டு. ஆனால் நாமல்லாம் அதை அப்படி விட்டுடுவோமா?
பதிவுல அழகா எழுதி தமிழ் நிலைமையை சொல்லி இருக்கீங்க. இருந்தாலும் எனக்கு சுட்டி டி.வி மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு :-)
என்னையும் இழுத்து விட்டுட்டீங்களா! வாழ்க... யோசிச்சுட்டு வர்றேன்
அமிர்தவர்ஷினி அம்மா,
நன்றாக சமாளித்திருந்தீர்கள்.
அது தண்ணகரம் அல்ல. டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்பவையே சரி.
'ண்'ணுக்கு அடுத்து டகர வரிசை ( அல்லது ணகர வரிசை) எழுத்துகள் மட்டுமே வரும்....
மிக மிக நன்றி திரு. ரமேஷ் வைத்யா
படிச்சு மறந்து போன விஷயத்தை மறுபடி தெளிய வச்சதுக்கு.
நீங்க குறிப்பிட்டுருக்கிறதுல எல்லாமே எனக்குத் தெரியும். ஆனால் யாரும் உபயோகிப்பதில்லை.
வாவ், நீங்களுமா?! :)
நல்ல தமிழ் வார்த்தைகள்..நல்லாருக்கு..!
//மூணு நாளா மக்கள் தொலைக்காட்சியெல்லாம் பாத்தேன்//
பகடில பிண்றீங்களேக்கா/ம்மா..
Funny-nu ஒரு டிக்கும் பண்ணியாச்சு
//திரு. திருமா கேட்டிருக்காராம், “தை” தமிழ் வார்த்தை இல்லை, சமஸ்கிருதம்.//
இதென்ன புதுக்கதையா இருக்கு... குறுந்தொகைல 196ம் செய்யுள்ல கூட தை மாதத்தைக் குறிப்பிட்டு பாடியிருக்காங்க.
மருதம் - தோழி கூற்று
வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
-மிளைக் கந்தனார்.
சென்னையில பேசறது தமிழ் தானா அமித்து அம்மா? நல்ல வேளை நாங்க மதுரைகாரங்க.. தமிழ் கொஞ்சம் பேசுவோம்.
தமிழ் தான் எத்தனை அழகு இல்ல...
ஒரு நிமிஷம்..சாரி...சாரி...சே! சே! மன்னிச்சிக்கோங்க ஒரு நிமிடம்...அந்த அழகு தமிழ் வார்த்தைகள் என்னை எங்கோ கூட்டிட்டுப் போயிருச்சு...எனக்கு மலையாளம் பிடிக்க காரணம் அதில் இன்னும் சாகாமல் சில தமிழ் வார்த்தைகள் தாம்...உதாரணம் பிணக்கம்..செல்..
ஒன்னும் புரியலைன்னு சொல்லிட்டு
பின்னிட்டீங்க போங்க
எப்பிடித்தான் யோசிப்பீங்களோ
எனக்கு அழைப்பு இருக்கு
எப்போ எழுதபோறேனோ
அந்த ஆண்டவனுக்குத்தான்
வெளிச்சம். நல்லா எழுதி
இருக்கீங்க வாழ்த்துக்கள்!!
எது எப்படியோங்க, தமிழே வழக்கொழிஞ்சு போனாக்கூட ஒரே ஒரு சொல் மட்டும் வழக்காடிகிட்டு இருக்கும். அது “போர்”.// போற போக்குல அழகா சொன்னீங்க..
உங்க டமில் சாரி இல்லை இல்லை மன்னிச்சுக்கோங்க தமிழ் நல்ல இருக்கு:)
உங்க டமில் சாரி இல்லை இல்லை மன்னிச்சுக்கோங்க தமிழ் நல்ல இருக்கு:)
/எது எப்படியோங்க, தமிழே வழக்கொழிஞ்சு போனாக்கூட ஒரே ஒரு சொல் மட்டும் வழக்காடிகிட்டு இருக்கும். அது “போர்”./
சரியாகச் சொன்னீர்கள்
விஜய் தொலைகாட்சியில்கூட
'தமிழ்பேசு தங்க காசு' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அருமையாக இருக்கிறது.
//தளை - கட்டு, கைவிலங்கு
தடாகம் - குளம்
//
இது இரண்டும் கேள்வி பட்டதே இல்லை..
மற்றவை பயன்படுத்தியிருக்கேன். :-)
//நடு செண்ட்டர், டிச்சு குழி, தண்ணி டேங்க், வாட்டர் பாட்டில், டிக்கெட், ரிப்பேர், சுவிட்ச், ஃபேன், பேப்பர், லெட்டர் //
ஓ இதெல்லாம் தமிழில்லையா??? சாரியை விட்டுட்டீங்களே???
அன்புடன் அருணா
:)))நல்லாருக்கு போஸ்ட் :)
Post a Comment