புழுக்கள்
பச்சையாய்
நீலமாய்
வெள்ளையாய்
புழுக்கள்
நெளியும் விதத்தை
பார்த்தவுடனே
அருவெறுப்புடன்
அடுத்த நிமிடம்
அடித்துப் போடத்தான்
தோன்றுகிறது
எறும்பை கொன்றால்
ஏற்படும் குற்ற உணர்வுகூட
புழுக்களை கொன்றால்
வருவதில்லை
ஆயினும்
முசுமுசுக்கை இலை வைத்து
பட்டுப்புழு வளர்த்தாகிறது
நெருப்பை வைத்து
கம்பளிப்பூச்சை கொன்றாகிறது
அட!
புழு, பூச்சிலும்
என்னவொரு
மனிதப் பெருந்தன்மை.
....ம்....
வார்த்தை சிதறலில்
தொடங்கிய
மௌனத்தை
மேலும்
தொடரச்செய்கிறது
...ம்.......
என்னும்
ஒற்றைச்சொல்
இடி
எதிரே பார்த்து
வரும்போது
எதிர்பாராமல்
எதிர்பாராமல்
வரும்போது
எதிர்பார்த்தே
எப்படியாகிலும்
வந்த
நோக்கம்
நிறைவேறிவிடும்
எப்போதும்
வாய்வசம்
வைத்திருங்கள்
சில பல
கெட்ட வார்த்தைகளை
கூட்டங்களில்
இடிபடப்போகும்
நம்மை
குறி வைத்தே
வரும்
இடி(க்கும்)மன்னர்களுக்காக.
வல்கெனோ
அனைவரினுள்ளும்
தகதகத்துக் கொண்டிருக்கிறது
வன்ம லாவா
சந்தர்ப்பங்கள்
வாய்த்தால்
வெளிப்பட
பெரும்
சத்தத்தையும்
வெப்பத்தையும்
எதிர்நோக்கிக்கொண்டே
இயல்பாய்
இருப்பதைப் போல
எப்போதும்
இருக்கவேண்டியிருக்கிறது.
33 comments:
உங்கள் கவிதை அருமை.
///....ம்....
வார்த்தை சிதறலில்
தொடங்கிய
மௌனத்தை
மேலும்
தொடரச்செய்கிறது
...ம்.......
என்னும்
ஒற்றைச்சொல்///
சூப்பர்
கவிதை தொகுப்பா ...
\\....ம்....
வார்த்தை சிதறலில்
தொடங்கிய
மௌனத்தை
மேலும்
தொடரச்செய்கிறது
...ம்.......
என்னும்
ஒற்றைச்சொல்\\
அருமை ...
மெத்தப் பிடித்தது ம் கவிதையும் வல்கெனோவும்!! நல்ல சொல்லாக்கம்!!
\\எப்போதும்
வாய்வசம்
வைத்திருங்கள்
சில பல
கெட்ட வார்த்தைகளை
கூட்டங்களில்
இடிபடப்போகும்
நம்மை
குறி வைத்தே
வரும்
இடி(க்கும்)மன்னர்களுக்காக.\\
கூரான வார்த்தை பற்றாது ...
சிறு ஆயுதம் தான் தேவை ...
ம்... வழக்கம் போல் அருமை (ம்.. மட்டுமல்ல எல்லாமே அருமை)
புழுக்கள் பற்றிய கவிதை நச்...
நல்ல கவிதைகளின் தொகுப்பு..நன்றி
\\அனைவரினுள்ளும்
தகதகத்துக் கொண்டிருக்கிறது
வன்ம லாவா
சந்தர்ப்பங்கள்
வாய்த்தால்
வெளிப்பட
பெரும்
சத்தத்தையும்
வெப்பத்தையும்
எதிர்நோக்கிக்கொண்டே
இயல்பாய்
இருப்பதைப் போல
எப்போதும்
இருக்கவேண்டியிருக்கிறது.\\
பைனல் டச் வழக்கம் போல நச் ...
//வார்த்தை சிதறலில்
தொடங்கிய
மௌனத்தை
மேலும்
தொடரச்செய்கிறது
...ம்.......
என்னும்
ஒற்றைச்சொல்//
...ம்.......அழகு...
//அனைவரினுள்ளும்
தகதகத்துக் கொண்டிருக்கிறது
வன்ம லாவா
சந்தர்ப்பங்கள்
வாய்த்தால்
வெளிப்பட
பெரும்
சத்தத்தையும்
வெப்பத்தையும்
எதிர்நோக்கிக்கொண்டே
இயல்பாய்
இருப்பதைப் போல
எப்போதும்
இருக்கவேண்டியிருக்கிறது.//
எரிமலையின் சீற்றம் வார்த்தைகளில்...
"வன்ம லாவா" அழகான "வார்த்தைப்பிரயோகம்....
பெரும்
சத்தத்தையும்
வெப்பத்தையும்
எதிர்நோக்கிக்கொண்டே
இயல்பாய்
இருப்பதைப் போல
எப்போதும்
இருக்கவேண்டியிருக்கிறது."
பெரும்பான்மையான நேரங்களின் மனோநிலையை ஆழமாய் சொல்கிறது...
ம்
:)))
வல்கெனோ..உணர்வுக் குவியலின் வெளிப்படத் துடிக்கும் வெப்பத்தை வார்த்தைகளில் வ(வெ)டித்திருக்கும் விதம் சூடு. சூப்பர். வாழ்த்துக்கள் அமித்து அம்மா.
முதல் முறையாக வருகிறேன். கவிதை சிறப்பு. 'ம்' பிடித்து. 'வன்ம லாவா' - கிருத்திகா சொன்னதுபோல் நல்ல வார்த்தைப் பிரயோகம். வாழ்த்துகள்.
அனுஜன்யா
கூட்டங்களில்
இடிபடப்போகும்
நம்மை
குறி வைத்தே
வரும்
இடி(க்கும்)மன்னர்களுக்காக.
///
நல்லா எழுதியிருக்கீங்க..
//பெரும்
சத்தத்தையும்
வெப்பத்தையும்
எதிர்நோக்கிக்கொண்டே
இயல்பாய்
இருப்பதைப் போல
எப்போதும்
இருக்கவேண்டியிருக்கிறது.//
நிதர்சனம்!
/....ம்....
வார்த்தை சிதறலில்
தொடங்கிய
மௌனத்தை
மேலும்
தொடரச்செய்கிறது
...ம்.......
என்னும்
ஒற்றைச்சொல்/
நல்லா இருக்கு!
//பெரும்
சத்தத்தையும்
வெப்பத்தையும்
எதிர்நோக்கிக்கொண்டே
இயல்பாய்
இருப்பதைப் போல
எப்போதும்
இருக்கவேண்டியிருக்கிறது.//
ரொம்ப யதார்த்தமான உண்மை..
அன்புடன் அருணா
"ம்" கவிதை சூப்பர்.
உங்கள் கவிதை நல்லா இருக்கு.
வாவ், எல்லாமே சூப்பர்ப்!
நன்றி பின்னூட்டமிட்ட அனைவருக்கும்............
நல்ல வரிகள்..
வாழ்த்துக்கள்
//எப்போதும்
வாய்வசம்
வைத்திருங்கள்
சில பல
கெட்ட வார்த்தைகளை
கூட்டங்களில்
இடிபடப்போகும்
நம்மை
குறி வைத்தே
வரும்
இடி(க்கும்)மன்னர்களுக்காக//
எல்லா பெண்களுக்கும் தேவையான ஒன்னு...எல்லாயிடங்களுக்கும் பொருந்தும்..
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
ரசித்தேன்.!
அக்கா கவிதை அனைத்தும் அழகு .. :)))
//....ம்....
வார்த்தை சிதறலில்
தொடங்கிய
மௌனத்தை
மேலும்
தொடரச்செய்கிறது
...ம்.......
என்னும்
ஒற்றைச்சொல்//
Ultimate :))
//எறும்பை கொன்றால்
ஏற்படும் குற்ற உணர்வுகூட
புழுக்களை கொன்றால்
வருவதில்லை//
ஜென் கதையைப் போல் இருக்கிறது இந்த வரிகள். நல்ல கவிதை.
ம் நன்றாக இருக்கிறது. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - இடி போன்ற விடயங்களைத் தவிர்க்கப்பாருங்கள். மற்றவற்றோடு ஒப்பிடும்போது சாதாரணமாகயிருக்கிறது. வல்கெனோ நல்ல ஆக்கம். :)
for follow up :)
ம் கவிதை சூப்பர் தான்... ஆனா பாதிக்கப்பட்டவங்க நிறையபேரு இருப்போம் போலயே.. அதுவே பிடிச்சிருக்கு எல்லாருக்கும்..
வித்தியாசமான சிறந்த கவிதையாக இருக்கிறது அமிர்தவர்ஷிணி அம்மா..வாழ்த்துகள்!
Post a Comment