நேற்று இரவு நானும் அமித்துவும் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அவள் அங்கிருந்த சின்ன நகைப்பெட்டியைக் கேட்டாள். அது வெறும் பெட்டிதான், அதை திறந்து மூடி திறந்து மூடி விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென பயங்கர அழுகை. என்னவென்று பார்த்தால் அவளின் சின்னஞ்சிறு விரல் அப்பெட்டியின் பின் பக்கம் மாட்டிக்கொண்டிருந்தது. குழந்தைக்கு வலி தாங்கவில்லை போலும், அழுது கொண்டிருந்தாள். நான் உடனே அவளின் விரலை விலக்கிவிட்டு பாக்ஸை கையில் எடுத்து அதை அடிப்பதை போல் பாவனை செய்தேன். சட்டென அழுகையை நிறுத்தி விட்டு என்னையும் பாக்ஸையும் பார்த்தாள். மறுபடி அழுதாள். உடனே அப்பெட்டினை கையில் எடுத்து பாப்பாவை அழ வெச்சியா நீ, போ நீ வேணாம் என்று அந்த பெட்டியை தூக்கி போட்டேன். அது கதவருகே சென்று விழுந்துவிட்டது. அதைப்பார்த்து விட்டு அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள். மறுபடி விளையாட ஆரம்பித்துவிட்டோம்.
கொஞ்ச நேரம் கழித்து, ம்மா, அந்த பாக்ஸ் எங்கேடா என்று கேட்டேன். சற்று விழித்தாள். உன் கையை நசுக்குச்சே அந்த பாக்ஸ் எங்கடா என்றேன். சட்டென அவள் கதவருகே கையை நீட்டி த்தோ, அத்தோ என்றாளே பார்க்கலாம். என்னால் அதை வியக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அவளின் அப்பா வந்தவுடன் சொன்னேன். இன்று அதிகாலை அவளும் அவளின் அப்பாவும் எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். வழக்கமாய் அவளை கொஞ்சிக்கொண்டே இருந்த அவர், திடீரென அம்மு, அந்த பாக்ஸ் எங்கடா, உன் கையை நசுக்குச்சே அந்த பாக்ஸ் என்று கேட்டாள், சட்டென திரும்பியவள் மீண்டும் சொன்னாள் : த்தோ, அத்தோ என்று கதவருகே கை நீட்டி.
அவரும், நானும் புன்னகைத்துக்கொண்டோம் புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து.
28 comments:
குழந்தைகளின் சின்னச் சின்ன அசைவுகளும் இனிமைதான்.
நல்ல பதிவு.
சாந்தி
/*புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து.*/
வாழ்த்துக்கள். அமித்து ஃபோட்டோவும், குரலும் ஒரு நாள் போடுங்க...
Choooooo chweet... :))))))))
புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து
//
அவங்க அம்மா மாதிரி :))
பாப்பா விவரம் தான் :)
சூப்பர்! இன்னும் நெறைய சொல்லுங்க!
ஒன்னு விடக்கூடாது! ஆமா!
பிறந்த நாள் கொண்டாட்டம் பத்தி
ஒன்னும் சொல்லல?
அத்தோ!
ஹய்ய்
நல்லா இருக்கே!
//வந்தது வந்துட்டீங்க, ஏதோ உங்க மனசுல நெனச்சத சொல்லிட்டுப்போங்க.//
நெறையா இருக்குங்க பாஸ் !
முதல்ல எல்லாத்தையும் மாத்தணும் பாஸ்!
நிலாவுக்கு போய் நிலாகூட போட்டோ எடுத்துக்கணும் கிட்டத்தில நின்னு (அப்ப இன்னும் ப்ரைட்டா தெரிவேணாம்ல)
அப்புறம்
அப்புறம்
அப்புறம்
ம்ம் ஞாபகப்படுத்தி திரும்ப வந்து ஒண்ணு ஒண்ணாச்சொல்றேன் பாஸ்!
குழந்தைங்க செய்வது ஒவ்வொன்றுமே மிக அழகான காட்சி..
அவங்க அழுவது கூட ஒரு விதமான அழகு தாங்க..
பார்க்க கொடுத்து வைத்திருக்கணும்..
அதை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..
நானும் கூட என் செல்ல மகன் செய்யும் வால் தனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்..
அவனைப் பற்றி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் உங்கள் ஆதரவில்..
வெறும் 3 மதங்கள் தான் ஆனால் அவன் செய்யும் குறும்புகள் அப்பப்பா:):))
ரொம்ப வேவேரமான பொண்ணுதான். கேட்கவே சந்தோஷமா இருக்குது
ஆகா...நல்லாருக்கு!
உண்மையில் அவர்களின் அப்சர்வேஷன் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறது இல்லையா! இன்னும் இன்னும் அமித்து உங்களை அசத்த வாழ்த்துக்கள்!
:-)))...
குழந்தைகள் எல்லாத்தையும் மறந்துருவாங்க. வலியெல்லாம் கொஞ்ச நேரம்தான்.
'அமித்து வளர்கிறாளே அம்மா!’
\\அவரும், நானும் புன்னகைத்துக்கொண்டோம் புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து.\\
cool.
குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் தாய்க்கு ஆச்சரியம்தான்!!
அத்தாய், தான் எப்படி வளர்ந்தோம் என்பதை அறிவாளா? அத அவ அம்மாட்டதான் கேக்கணும்!
சொல்லப் போனா நம்மள விட இக்காலக் குழந்தைகள் நல்ல வெவரமானவைகள்தான்...அமிர்துவையும் சேத்து!!
போனமுறை கொடுத்த லிங் வேலை செய்யலைனு சொன்னீங்க. இப்ப சரியாத் தர்றேன். நேர்மிருந்தா படிச்சுட்டுச் சொல்லுங்க.
http://9-west.blogspot.com/2008/04/blog-post_19.html
அமித்துவின் அழூகையும், சிரிப்பும் என் போன்ற மழலை சொல்
கேட்காதவர்களின் காதுகளுக்கு என் குழந்தை போன்றே பிரமிப்பு
ஏற்ப்பட்டது.
வாழ்துக்கள்.
காவேரி கணேஷ்
நல்ல பதிவு.
உங்க பதிவை படிக்கும் பொழுது என்னுடைய குழந்தை செய்ததும் எனக்கு ஞாபகம் வந்தது.
குழந்தையின் சின்ன் சின்ன் அசைவு
கூட ஒரு கவிதை தான்.
//புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து//
வாழ்த்துக்கள்.
இதுக்கு நான் ஒரு எதிர்பதிவு போடரேன்.
அப்புரம் டப்பாவை அடிச்சி குழந்தைய சமாதானப்படுத்துவது குழந்தைக்கு பழிவாங்கும் உணர்ச்சியை கொடுக்கும். அதற்கு பதில் மாற்று வழிமுறையில் சிரிக்க வையுங்கள்.(உம்: முற்றிலும் வேறு சூழ்நிலைக்கு எடுத்து செல்லுதல் , கிளுகிளுப்பை ஆட்டுதல்,சும்மா குழம்பு கதை)
கொஞ்சம் சீரியஸ் அட்வைஸ், பரவாயில்ல அடுத்த பதிவில சிரிக்கவைக்கிரேன்
சூப்பரு :-)
அம்மணி டெம்ப்ளட் அருமை. அப்படி இப்படி எல்லாம் :-)
ம் இன்னும் இருக்குங்க விவரம்!
பெரிசாகட்டும்
நம்ம மாட்டும் போதுதான் தெரியும்?
:)
இதே போல நிறைய ஆச்சரியங்கள் காத்து இருக்கின்றன. அமித்துவின் ஒவ்வொரு அசைவும் உங்களை அசத்தும்.
நன்றி முதல் வருகைக்கு சாந்தி
நன்றி அமுதா
நன்றி ஸ்ரீமா
நன்றி புதுகை அண்ணா, ம்க்கும், சரியா புரிஞ்சிக்கிட்டீங்க
வாங்க ஆகாய நதி, பொழிலன் எப்படியிருக்காரு.
வாங்க ஜீவன், பிறந்தநாள் பெரிசா கொண்டாடலைங்க.
நன்றி ஆயில்ஸ் அண்ணா
அமித்துவின் சேட்டைகளை என்னோடு ரசித்த அனைவரின் வருகைக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.
குடுகுடுப்பை said...
இதுக்கு நான் ஒரு எதிர்பதிவு போடரேன்.
அப்புரம் டப்பாவை அடிச்சி குழந்தைய சமாதானப்படுத்துவது குழந்தைக்கு பழிவாங்கும் உணர்ச்சியை கொடுக்கும். அதற்கு பதில் மாற்று வழிமுறையில் சிரிக்க வையுங்கள்.(உம்: முற்றிலும் வேறு சூழ்நிலைக்கு எடுத்து செல்லுதல் , கிளுகிளுப்பை ஆட்டுதல்,சும்மா குழம்பு கதை)
கொஞ்சம் சீரியஸ் அட்வைஸ், பரவாயில்ல அடுத்த பதிவில சிரிக்கவைக்கிரேன்
நன்றி குடுகுடுப்பை அண்ணே உங்க் அட்வைசுக்கு, நானும் நெனச்சேன் “பழிவாங்கும் உணர்ச்சியை ” கொடுக்கும் என்று,
மாத்திக்கிறேன்.
SK said...
அம்மணி டெம்ப்ளட் அருமை. அப்படி இப்படி எல்லாம் :-)
எல்லாம் உங்கள மாதிரி பெரியாளுங்களோட நட்பு கெடச்சதுதான்.
Post a Comment