12 November 2008

கவலை தின்னி


நாள்பட நாள்பட

கவலைகளில் தின்பதில்

ஒரு சுகம்

உண்டாகி

மெல்ல மெல்ல

கவலை தின்னியாகிப்

போயிருந்தேன்.


முதலில்

கசக்கத்தான் செய்தது.

பின்பு

கசக்காமல் இருக்க

கற்பனைத்தேனை

குடித்துக் கொண்டேன்.


கவலைகளை

வெளிக்காட்டுவதில்

முகம்தான்

முதலில்

போட்டி போட்டு

ஜெயித்தது.


அதனால்.........


கண்களுக்கு

என்

கனவுகளை

தானமாய் கொடுத்தேன்.

இப்போது

பிரகாசமாய்..


உதட்டில்

சாயத்திற்கு

பதில் புன்னகை

பூசிக்கொண்டேன்

அவ்வப்போது

உலர்ந்தாலும்

நினைவுகளை வைத்து

ஈரப்படுத்திக்கொண்டேன்.


இருப்புகள்

இதயத்தை கனக்கச்செய்தாலும்

இன்சொல் பேச

நாவுக்கு

சொல்லிக்கொடுத்தேன்.



நான் தின்ற

கவலைகள்

இப்போது....

கவலைப்பட ஆரம்பித்துவிட்டன

இவள்

நம்மைப்பற்றி

பேசுவதேயில்லையென..


ஒரு நாள்

உற்ற தோழியை

சந்திக்கும் போது

உண்மையுரைத்தேன்

அப்போது

அவளும் சொன்னாள்

தானும்

வேஷதாரி”யாய்

போனதை.




7 comments:

அமுதா said...

அருமை...

/* பின்புகசக்காமல் இருக்ககற்பனைத்தேனைகுடித்துக் கொண்டேன்*/
நான் அடிக்கடி நினப்பதுண்டு "கனவுகள் கண்டு கண்டு நனவென்பதே மறந்து விட்டதென..."

Maddy said...

அய்யோ!!! கவலையில் இருந்து மீண்டு எப்படி எல்லாம் வரமுடியும் னு அழகா படிச்சிட்டே வந்த, கடைசியல வேசதாரின்னு சொல்றீங்களே. ஆனால் பல நேரங்களில் உண்மை அதுவாக தான் இருக்கும் இல்லே!!!

கவலைதின்னி!!! ஒரு புதிய சொல் தமிழில்

Unknown said...

//நாள்பட நாள்பட
கவலைகளில் தின்பதில்
ஒரு சுகம்
உண்டாகி
மெல்ல மெல்ல
கவலை தின்னியாகிப்
போயிருந்தேன்.//

ம்ம்ம் ஆமாம் அக்கா :((

//முதலில்
கசக்கத்தான் செய்தது.
பின்பு
கசக்காமல் இருக்க
கற்பனைத்தேனை
குடித்துக் கொண்டேன்.//

ஹை சேம் பின்ச் ;))

//கவலைகளை
வெளிக்காட்டுவதில்
முகம்தான்
முதலில்
போட்டி போட்டு
ஜெயித்தது.//

இந்த கலைதான் என் கைவரவே இல்லை...:(( முதல்ல என் மூஞ்சி காட்டிக்கொடுத்துடும்... :(((

//அதனால்.........

கண்களுக்கு
என்
கனவுகளை
தானமாய் கொடுத்தேன்.
இப்போது
பிரகாசமாய்..//

வாவ் இது சூப்பர் ஐடியா.. :))

//உதட்டில்
சாயத்திற்கு
பதில் புன்னகை
பூசிக்கொண்டேன்
அவ்வப்போது
உலர்ந்தாலும்
நினைவுகளை வைத்து
ஈரப்படுத்திக்கொண்டேன்.//


Ultimate... :))))

//இருப்புகள்
இதயத்தை கனக்கச்செய்தாலும்
இன்சொல் பேச
நாவுக்கு
சொல்லிக்கொடுத்தேன்.//

ம்ம்ம் ஆமா இது ரொம்ப முக்கியம்.. :))

//நான் தின்ற
கவலைகள்
இப்போது....
கவலைப்பட ஆரம்பித்துவிட்டன
இவள்
நம்மைப்பற்றி
பேசுவதேயில்லையென..//

ஆமா அக்கா கவலைய ஒரு அழையா விருந்தாளியாதான் ட்ரீட் பண்ணனும் அப்பதான் திரும்ப வராது.. :))

//ஒரு நாள்
உற்ற தோழியை
சந்திக்கும் போது
உண்மையுரைத்தேன்
அப்போது
அவளும் சொன்னாள்
தானும்
“வேஷதாரி”யாய்
போனதை.//

இதுக்கு பேர் வேஷதாரியா?? நல்லா இருங்க.. :))

குடுகுடுப்பை said...

சூப்பர் கவிதை, எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க எப்படி எழுதறதுன்னு

தமிழ் அமுதன் said...

கசக்காமல் இருக்க

கற்பனைத்தேனை

குடித்துக் கொண்டேன்.

.......நல்ல வரிகள்


கவலைகளை

வெளிக்காட்டுவதில்

முகம்தான்

முதலில்

போட்டி போட்டு

ஜெயித்தது.



கண்கள் தான் கவலையை காட்டி கொடுக்கும் என்பார்கள்

நல்ல ரசிக்கும் படியான கவலை! ஸாரி கவிதை!

Arasi Raj said...

Romba azhaga irukku kavithai...

varthai jaalam arumai....ungalukku oru "O"..

ellam irukakttum...enga irunthu ungalukku ivlo time kidaikkuthu....

ungalai follow seyyurathunala, thinam oru puthu pathivu pottu ennai yamatruvathe illai neenga

Anonymous said...

கலக்கல்...!!!!!!

செந்தழல் ரவி